19 அக்., 2012

அழகு...

கல்லும் 
சொல்லும் 
கைவண்ணத்தில்...
===================
இடையிடையே 
சிரிக்கும் சிரிப்புமும் 
உன் இடையும்...
====================

தவழும் மழலையும்
காற்றோடு மழையும் 
பார்க்க பார்க்க...

15 அக்., 2012

வாழ்க்கை...


தலைமுறை 
வரைமுறை 
சொல்லும் வாழ்க்கை...

மழலை
இளமை 
முதுமை என்று 
பிரித்து காட்டும் 

அன்பை அனைத்து 
பாசத்தை நுழைத்து 
காதலை விதைத்து 
இன்பம் துன்பம் 
இரண்டும் தந்து 
மரணத்தை தரும்...

தணிக்கை அறிந்து
தனிமை உணர்ந்து 
திருமணம் கண்டு 
இருமனம் 
இரவு குணமறிந்து 
மழலை பெற்று...

இடக்கை அறியா வண்ணம் 
வலக்கை கொடுக்க...



நம்பிக்கைக் கொண்டு 
வாழும் நிலையே 
இந்த  வாழ்க்கை...




11 அக்., 2012

காதல் மாற்றம்














காதல் 
தோல்விக்கு காரணமாய் 
தாடி...
======================
காதல் தோல்வி 
ஆணுக்குவரலாறு 
பெண்ணுக்கு தகராறு...
=======================
தனக்காய் சொன்ன போது 
காதல் இனித்தது 
தங்கைக்கு யாரோ 
சொன்னபோது கொதித்தது
========================

பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான 13 பஸ்கள் பறிமுதல்: தனிப்படை போலீசார் இன்று நடவடிக்கை

மதுரை, அக். 11- 

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கிரானைட் மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பழனிச்சாமி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட கிரானைட் அதிபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். 

கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் ஏற்கனவே சோதனை நடத்தி கிரானைட் தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

பி.ஆர்.பழனிச்சாமிக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

இந்த நிலையில் இன்று காலை மாட்டுத்தாவணியில் உள்ள பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 13 பஸ்களை உடனடியாக பறிமுதல் செய்தனர். 

மேலும் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையில் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரானைட் ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தா வேஜூக்களை கடத்தவும் இந்த பஸ்களை பயன்படுத்தியதாக தெரிகிறது. 

இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 13 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.-மெயில் அனுப்பினால் 3 ஆண்டு சிறை: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

புதுடெல்லி, அக். 11-

பெண்களை ஆபாசமாக சித்தரித்து எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் அனுப்பினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்போருக்கு தண்டனை வழங்கும் வகையில் கடந்த 1986ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. 

தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். இ-மெயில் மூலம் ஆபாச படங்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர் தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

இதையடுத்து இந்த சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால், பெண்களுக்கு ஆபாச மெயில் அனுப்பும் குற்றச்செயலில் ஈடுபடும் நபருக்கு அதிகபட்சம் 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும். மேலும் முதல் முறையாக இக்குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்ச அபராதம் 2000 ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். ஒரு முறை தண்டனை பெற்று இரண்டாவது முறையும், இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்படலாம். இதேபோல் அபராதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விதிக்கப்படலாம்.

10 அக்., 2012

வன்முறையின் தலைமுறை














இடி இடித்து 
மின்னல் வெட்டி 
புயல் அடித்து 
மேகம் முட்டி 
மழை கொட்ட...

கரைகளை உடைத்து 
மரங்களை சாய்த்து 
மின்சாரம் தடுத்து...

வெள்ளத்திலும் 
இருளிலும் 
பூமி நிலைமாறி...


வன்முறையின் 
தலைமுறை 
இயற்கையாய் 

ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம்

புதுடெல்லி, அக்.10-

டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இந்த சட்டத்தை மேலும் வலுவாக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது. அரசு ஊழியர்களின் நேர்மைத்தன்மையை மிகவும் சிறப்பாக பேணும் வகையிலும், ஊழல் தடுப்பு சட்டத்தை திருத்த அரசு திட்டமிட்டுள்ளது.

அவநம்பிக்கை மற்றும் எதிர்மறையான தன்மைகளுக்கு எதிராக கவனம் செலுத்தவில்லை எனில், ஊழல்களை தடுக்க நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்காது. மக்கள் மத்தியில் அரசு ஊழியர்கள் மீதான நம்பிக்கையின்மை மேலும் அதிகரித்து விடும்.
 மாலைமலர்  

9 அக்., 2012

தாயகம்...













தண்ணீரே உடையாய் 
உறவாடிய இடம் 
தாயகம் 

பஸ்சில் ஓட்டை: மழையில் நனைந்த பயணிகள் நடுவழியில் இறங்கி போராட்டம்

கொடுமுடி, அக். 9-

ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8.40 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பஸ் புறப்பட்ட சில நிமிடங்களில் மழை கொட்டியது. இதையடுத்து பஸ்சின் மேற்கூரையில் இருந்த ஓட்டைகள் வழியாக மழை தண்ணீர் ஒழுக தொடங்கியது. பயணிகள் லேசான ஒழுக்குதானே பின்னர் சரியாகிவிடும் என நினைத் தனர். ஆனால் ஈரோட்டில் மழை வெளுத்து கட்டியதால் ஒழுகுவது இன்னும் அதிகமானது. பயணிகளின் உடைகள், இருக்கைகள் முழுவதும் நனைந்து விட்டது. எங்கும் உட்காரவோ, நிற்கவோ இயலவில்லை.

இதைத்தொடர்ந்து பயணிகள் தங்கள் உடமைகளை தலைமீது வைத்து பஸ்சுக்குள் பயணம் செய்தனர். இந்த நிலையில் பஸ் 9.45 மணிக்கு கொடுமுடி வந்தது. அப்போதும் மழை நின்றபாடில்லை. இதனால் வெறுத்துபோன பயணிகள் பஸ்சைவிட்டு கீழே இறங்கினர். பின்னர் பஸ் முன்பு நின்று கொண்டு கண்டக்டரிடம் டிக்கெட் பணத்தை திருப்பி கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

அப்போது கண்டக்டரும், டிரைவரும் கரூர்வரை வாருங்கள் அங்கு எங்கள் டெப்போ பஸ் வரும். அதில் ஏற்றி விடுகிறோம் என்று சொன்னதால் சமாதனம் அடைந்து மீண்டும் ஏறினர். கரூர் சென்ற பின்னர் பயணிகளை கண்டக்டர் வேறு பஸ்சில் ஏற்றி விட்டார். பயணிகளின் திடீர் போராட்டத்தால் கொடுமுடியில் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி மாலைமலர் 

8 அக்., 2012

மாயமே இந்த உலகம்...











பயணத்தின் நோக்கம் 
சேருமிடம்
பிறப்பின்  நோக்கம்
மரணமாகும்
இரண்டுக்கும் இடையில் 
நானா, நீயா போராட்டம்...

மனித ஒப்பனைக்குள் 
மறைந்த மதமும்

ஜாதிக்குள் 
ஜதிப்போட்டு நடனம் 

எல்லாமே சம்மதம் 
வெற்று   வார்த்தையாகும்
அடுத்த ஜாதி,மதத்தைப் 
பார்த்து வசைப்பாடும் 
மனம்...


மாயமே இந்த உலகம்

ஒருவருக்கு ஒருவர் 
நடிக்கும் நாடகம்...

7 அக்., 2012

நீதி மற்றும் சிறைத்துறை தொடர்பான முகவரிகள்




தலைவர்
மாநில மனித உரிமை ஆணையம்
கிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை – 600 028.
அலுவலகம் : 24951495, 24951486

மாண்புமிகு நீதிபதி
சட்டப் பணிகள் ஆணையம்
100, வடக்குக் கோட்டை சாலை,
உயர்நீதிமன்றம், சென்னை – 600 104.
அலுவலகம் : 25342834, 25343144

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
11வது தளம், லோக் நாயக் பவன்,
கான்மார்கெட், புதுடில்லி – 110 003.

இயக்குநர்
தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம்
2வது தளம், பிளாக் – 5
சாஸ்திரி பவன், சென்னை – 600 006.

உள்துறைச் செயலாளர்
தலைமைச் செயலகம்
சென்னை – 600 009.
அலுவலகம் : 25671555
பொதுத்துறை : 25671622
உள்துறை : 25671113
தொலை நகல் : 044-25670596

காவல்துறைத் தலைமை இயக்குநர்
காமராசர் சாலை,
மயிலாப்பூர், சென்னை – 600 004.
தொலைநகல் : 044-28447755

தலைமை நீதிபதி
உயர்நீதி மன்றம்
சென்னை – 600 101.
அலுவலகம் : 25340410 – 25340416
தொலை நகல் : 25332301

மதுரை உயர்நீதி மன்றம்
அலுவலகம் : 2433036 – 2433038

National Human Reights Commission
Foridkot House,
Coperinicus Marg,
New Delhi – 110 001
Office : 011 – 23382514

சிறைத் துறை தொடர்புகள் :

சிறைத்துறை இயக்குநர்,
தாளமுத்து நடராசர் மாளிகை,
எண். 1, காந்தி இர்வின் சாலை,
சென்னை – 600 008.
தெ.பே.எண். 044-28521306, 28521512.
தொலை நகல் : 28522803

கூடுதல் சிறைத்துறைத் தலைவர்

சென்னை மண்டலம் - அலு. 044-28521306, 28521512
தொலை நகல் : 28522803

திருச்சி மண்டலம் - அலு. 0431 2420366
தொலை நகல் : 2422065

மதுரை மண்டலம் - அலு. 0452-2603302
தொலை நகல் : 2603402

கோவை மண்டலம் - அலு. 0422 – 2383625
தொலை நகல் : 230 3500

சிறைகள் : புழல் I அலு. 044 - 26590200
தொலை நகல் : 26590615


புழல் II அலு. 044 - 26590350
தொலை நகல் : 044 – 26590410

வேலூர் அலு. 0416 - 220003
தொலை நகல் : 0416 – 233472

திருச்சி அலு. 0431 - 2333212
தொலை நகல் : 0431 – 2333643

கடலூர் அலு. 04142 - 2335027
தொலை நகல் : 2335714

மதுரை அலு. 0452 - 2602131
தொலை நகல் : 0452 – 2602160

பாளையங்கோட்டை அலு. 0462 - 2521845
தொலை நகல் : 0462 – 2532080

கோவை அலு. 0422 - 2303062
தொலை நகல் : 0422 – 2302466

சேலம் அலு. 0427 - 2403551
தொலை நகல் : 0427 – 2403426

சிறுவர் பள்ளி புதுக்கோட்டை அலு. 04322 - 222220
04322 – 225417

வேலூர் பெண்கள் சிறை அலு. 0416 - 220035
தொலை நகல் : 0416 – 233473

திருச்சி பெண்கள் சிறை அலு. 0431 - 2333809
தொலை நகல் : 23332567

சென்னை பெண்கள் சிறை அலு. 044 - 26590320

நன்றி கீற்று 

18 மணி நேர மின்வெட்டால் கடும் அவதி: திருச்சியில் நள்ளிரவில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்சி, அக். 7-

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதாவது ஒரு மணி நேரம் மின்சார விநியோகம் இருந்தால் அடுத்த 3 மணி நேரத்திற்கு மின்சாரம் தடைபட்டு வந்தது. இதனால் சிறு, குறுந்தொழில்கள் முற்றிலும் முடங்கின.

மேலும் வீடுகளில் மக்கள் எந்த ஒரு பணியும் மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இந்த மின்தடை நேற்று மேலும் அதிகரித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று இரவு கீழப்புலிவார்டு ரோடு, இ.பி.ரோடு, அந்தோணியார் கோவில் தெரு, அண்ணா நகர், விறகுபேட்டை, கருவாட்டுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின்வெட்டை கண்டித்து இ.பி.ரோடு துணை மின்நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் மின்வெட்டுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டனர்.

ஆனால் முறையான பதில் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அப்போது கடுமையான மின்வெட்டை எதிர்த்தும், அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மறியல் காரணமாக இ.பி.ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த லாரியின் கண்ணாடியை பொதுமக்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்ததும் கோட்டை சரக உதவி போலீஸ் கமிஷனர் சேகர், இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மின்சார விநியோகம் சீரானால் மட்டுமே இந்த இடத்தை விட்டு செல்வோம் என்று உறுதியாக கூறினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார், தாசில்தார் காதர்மொய்தீன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அருள்தேவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மின்சாரம் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சாலை மறியலால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி மாலைமலர் 

6 அக்., 2012

மடமை...














கவலையை  உண்டு 
வசதி எதுக்கு?
கடன் வாங்கி
கார் யாருக்கு?



யாருக்காக இந்த கவலை 
வறுமை 
வந்துவிடாமலிருக்கவா?
இல்லை 
வளரும் வாரிசுக்கா...?

இருக்கும் வரை நீ 
பொதி சுமக்கும் 
கழுதை
இறந்த பின்னும் 
தொடரும் உன் மடமை 

விலை நிலங்கள்...













நீருக்கு கையேந்தும் 
நிலை
மழைக்கும் 
வானத்தை பார்க்கும் 
வண்ணமாய்...

மனதை மாற்றி 

விலை நிலங்கள் 
வீட்டுக்காக 
விலைக்கு...

இருக்கும் வரை 
சோறு ஊட்டியது
மாறிய பின்னும் 
இருக்க இடமாய்...
----------------------------------------
விலை நிலங்கள்

விலாசமாறிய 
வண்ணத்தில்...

======================





காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை, அக் 6-காவிரி பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்-
பொன்.ராதாகிருஷ்ணன்

பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பாரதீய ஜனதாவில் இணையும் விழா மேற்கு மாம்பலத்தில் இன்று நடந்தது. திருச்சி, தஞ்சை, விருது நகர், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க., தே.மு.தி.க.வை சேர்ந்த 200 பேர் பாரதீய ஜனதாவில் சேர்ந்தனர். விடுதலை சிறுத்தை முன்னாள் செய்தி தொடர்பாளர் ஆர்வலனும் அந்த கட்சியில் இணைந்தார். அவர்களை மாநில பாரதீய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து வருகிற 15-ந்தேதி முதல் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை தொடர் பிரச்சாரங்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர் தரக் கூடாது என்று அங்குள்ள சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மாநில அரசு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் உரிமையை நிலை நாட்டவும், சுமூக தீர்வு காணவும் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன், செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், கே.பி. ராகவன், ரவிச்சந்திரன், டால்பின் ஸ்ரீதர், தென் சென்னை மாவட்ட செயலாளர் திருப்புகழ், ஆறுமுகராஜ், செய்தி தொடர்பாளர் எஸ்.எஸ். பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி மாலைமலர் ...

கருத்து உங்கள் ஆட்சி நடக்கும் மாநிலத்தில் நீங்களே நேரில் பேசி வாங்கி  தரவேண்டியது தானே...

5 அக்., 2012

புலம்பல்...


இன்று நான் நாளை நீ 
பதவி போன 
மாஜி மந்திரி....
==================================
நேற்று ஆளும் கட்சியில்  இருந்தாய் 
இன்று ஆளும் ஆட்சியில் சேர்ந்தாய் 
நாளை மீண்டும்...
===================================


இன்னும்...



கலைந்த கூட்டு குடும்பத்தை 
காகத்தின் வாழ்க்கை 
குத்திக்காட்டியது 
==========================
கொடுத்து உண்டது காகம் 
பறித்துக்கொண்டான் 
மனிதன்...
=========================
மனிதன் மறந்த 
மனித நேயம் இன்னும் 
பறவைகளிடம்...

வாஷிங்டன்,அக்.4-


வரும் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி அன்று அமெரிக்க ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தொலைக்காட்சி மூலம் மக்களை சந்திக்கும் விவாத மேடை நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த முறை தொலைகாட்சி விவாதத்தில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளரான அதிபர் பராக் ஒபாமா, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் மிட் ரோம்னியை சந்தித்தார்.

வரிகள், பற்றாக்குறை மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகிய தலைப்புகளின் மீது 90 நிமிட காரசார விவாதம் நடந்தது. இடையே இதுகுறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எதிக்கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி 46.67 சதவிகிதம் வாக்குகள் பெற்று, 22.25 சதவிகிதம் வாக்குகள் பெற்ற அதிபர் வேட்பாளரான பராக் ஒபாமாவை தோற்கடித்தார்.

இந்த தலைப்புகளின் மீது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிட் ரோம்னி கம்பீரமாக பதிலளித்துள்ளார். ஆனால் அதிபர் பராக் ஒபாமா பதிலளிக்க தயங்கினார் என்று தொலைக் காட்சி நடுவர் கூறினார்.

இந்த தொலைக்காட்சி விவாதத்தின் பிரதிபலிப்பு, நடைபெறவுள்ள தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. மொத்தம் நான்கு முறை இந்த விவாதம் நடைபெறவுள்ளது. முதல் முறை நடந்த இந்த தொலைக்காட்சி விவாதத்தில் அதிபர் பராக் ஒபாமா தோல்வியை தழுவியுள்ளார்.
நன்றி மாலைமலர் 

மோசடி வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி துரைதயாநிதி மனு: விசாரணை தள்ளிவைப்பு



துரைதயாநிதி மீது போடப்பட்ட கிரானைட் மோசடி வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில், துரைதயாநிதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சுந்தரேஷ் முன்பு வந்தது.

விசாரணையில் துரைதயாநிதி தரப்பில் வழக்கறிஞர் வீரகதிரவன் ஆஜராகி, இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துக்காக போடப்பட்ட பொய் வழக்கு. இந்த வழக்கில் புகார் கொடுக்க வேண்டியது கனிம வளத்துறை. அதற்கு மாறாக வருவாய் துறை அதிகாரியான விஏஓ ஒருவர் கொடுத்திருப்பது முரணானது. இந்த வழக்கில் நியமன பங்குதாரராக மட்டுமே மனுதாரர் இருந்தார். அதுவும் 2008ல் ராஜினாமா செய்துள்ளார். ஆக இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

மேலும் மனுதாரர் தரப்பில், விசாரணை என்ற பெயரில் போலீசார் குடும்ப உறுப்பினர்களை கெடுபிடி செய்கிறது. அதை நிறுத்த உத்தரவிடவேண்டும் என்றும் கூறப்பட்டது.

அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியனோ, விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கூடாது. மேலும் மனுதாரர் சம்மந்தப்பட்ட கம்பெனியில் மொத்தம் 11 பேர் குற்றவாளிகளாக இருக்கின்றனர். இதில் 2 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் தலைமறைவாக இருக்கின்றனர். இந்த வழக்கில் மேலும் பலரை விசாரணை செய்ய வேண்டியிருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கூடாது. முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறோம். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்களையும் அனுமதித்துள்ளோம் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
=================================================
பொன்முடி முன்ஜாமீன் மனு மீது ஐகோர்ட்டில் தீர்ப்பு
சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம் சிகாமணி மற்றும் உறவினர் ராஜாமகேந்திரன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், வானூர் தாசில்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் எங்கள் மீது செம்மண் அள்ளியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சட்டத்தின் அடிப்படையில் உரிமம் பெற்றுள்ளதால் தாது பொருட்களை திருடியதாக குற்றம் சாட்ட முடியாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தொடரப்பட்ட வழக்கு இது. எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க கூடாது அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுக்கள் மீது 5-ந் தேதி (நாளை) தீர்ப்பளிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
நன்றி நக்கீரன் 





மின் துறை மந்திரி பங்கேற்ற விழாவிற்கு மின் திருட்டு செய்து வெளிச்சம் ( படங்கள் )


















திண்டுக்கல் மாவட்ட நாடாளுமன்ற அதிமுக தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்.பி.சீனிவாசன் தலைமையில் இக்கூட்டம் நடை பெற்றது . இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் விஸ்வநாதன், மற்றும் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், முனுசாமி உள்பட எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட பொருப் பாளர்கள் பங்கேற்றனர்.


இந்த விழாவிற்காக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன. இதற் கெல்லாம் திருட்டுத்தனமாக மின்சாரம் எடுத்து உபயோகம் செய்யப்பட்டது. கண்துடைப்புக்காக 2 ஜெனரேட்டர் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.


மின்சார தட்டுப்பாடு இருக்கும் நிலையில் இப்படி மின் துறை மந்திரி ஊரிலேயே அவர் பங்கேற்ற விழாவிற்கே திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர்.
நன்றி நக்கீரன் 

4 அக்., 2012

குளிர் நிலவு...














இரவு மௌனத்தில் 
குளிர் நிலவு
தழுவிய  நிலையில் 
தம்பதிகள் 
குலைக்கும் 
தெரு நாய்கள்
எல்லாம் மறந்த 
நிலையில் 
தூங்கும் நகரம்...

3 அக்., 2012

பரபரப்பான சூழ்நிலையில் சோனியா காந்தி இன்று குஜராத் செல்கிறார்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ராஜ்கோட், அக்.3-

பரபரப்பான சூழ்நிலையில் சோனியா காந்தி இன்று குஜராத் செல்கிறார்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப்பயணம், மருத்துவ சிகிச்சை தொடர்பாக அரசு பணம் ரூ.1,880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக, பத்திரிகை செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி வெளியிட்டுள்ள தகவலால் சர்ச்சை எழுந்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், தான் கூறிய தகவல் தவறானது என்று காங்கிரஸ் நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயார் என்று மோடியும் கூறியுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சோனியா குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகருக்கு இன்று (புதன்கிழமை) காலை 10 1/2 மணிக்கு செல்கிறார். விமான நிலையத்திலிருந்து நேராக மகாத்மா காந்தி தன் பள்ளிப்பருவத்தில் தங்கியிருந்த காந்தி சுமிருதிக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து ராமகிருஷ்ணர் ஆசிரமம், பாலபவனுக்கும் சோனியா செல்கிறார்.

பின்னர் அவர் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடக்கிற விவசாயிகள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

சோனியாவின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு படையினர் (கறுப்பு பூனை படையினர்) ஏற்கனவே ராஜ்கோட் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். நகர் முழுவதும் உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரேஸ் கோர்ஸ் மைதான பகுதியில் மட்டுமே ஆயிரம் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சோனியா செல்லும் பாதையில் எல்லாம் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிர வாகன தணிக்கை, கண்காணிப்பும் நடந்து வருகிறது.
நன்றி மாலைமலர் 

சாவில் மர்மம்: யாசர் அராபத் உடலை மீண்டும் தோண்ட முடிவு


சாவில் மர்மம்: யாசர் அராபத் உடலை மீண்டும் தோண்ட முடிவு

லண்டன், அக். 2-

பாலஸ்தீன முன்னாள் அதிபர் யாசர் அராபத். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனது 75-வது வயதில் அவர் மரணம் அடைந்தார். பிரான்ஸ் சென்று இருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது அவரது உயிர் பிரிந்தது.

அவர் எய்ட்ஸ் நோய் அல்லது மர்ம நோயினால் இறந்து இருக்கலாம் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. அராபத்துக்கு இஸ்ரேல் உளவாளி காபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது வலுத்து உள்ளது.

எனவே, அவரது உடலை சமாதியில் இருந்து மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பாலஸ்தீனத்தில் ரமல்லா நகருக்கு பிரான்சை சேர்ந்த 3 நீதிபதிகள் அடுத்த வாரம் வர உள்ளனர்.

அவர்கள் முன்னிலையில் சமாதி உடைக்கப்பட்டு யாசர் அராபத் உடல் மீண்டும் பிரரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.
நன்றி மாலைமலர் 

லிபியா: கடாபியை கொன்றது பிரான்ஸ் உளவு பிரிவினர்தான் என்ற தகவலால் பரபரப்பு

லண்டன்,அக்.2- லிபியா: கடாபியை கொன்றது பிரான்ஸ் உளவு பிரிவினர்தான் என்ற தகவலால் பரபரப்பு

லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்தவர் முயாம்மர் கடாபி (69). துனிசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று லிபியாவிலும் கடாபி பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆப்பிரிக்க கூலிப்படையினரை வைத்து போராட்டக்காரர்களை கொன்று குவித்தார் கடாபி. இதன் காரணமாக, அதிபர் கடாபியின் வெளிநாட்டு கணக்குகள் முடக்கப்பட்டன.

இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், லிபியா மீது பொருளாதாரத் தடை விதித்தன. ஒரு கட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி அரசுப் படைக்கு எதிராக சண்டையிட்டனர். கடாபியின் மகனை சிறைப் பிடித்தனர். அப்போதைய நிலைமையை சமாளிக்க அரண்மனையிலிருந்து ஓடி தலைமறைவானார் கடாபி.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ம்தேதி, தனது சொந்த ஊரான சிர்டியில், கால்வாய் ஒன்றில் மறைந்திருந்த போது, நேட்டோ படைகளின் உதவியுடன் கிளர்ச்சியாளர்கள், கடாபியை சுற்றி வளைத்தனர். கடாபி சரணடைய முன்வந்த போதும், அவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் பிரான்ஸ் அதிபராக இருந்த நிக்கோலஸ் சர்கோசியின் உத்தரவின் பேரில், கடாபியை சுட்டுக்கொன்றது, பிரான்ஸ் நாட்டு உளவு பிரிவினர் என்பது தற்போது தெரிய வந்து உள்ளது. இதுபற்றிய செய்தியை "டெய்லி மெயில்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
நன்றி மாலைமலர் ...

2 அக்., 2012

அழகாய்...














நிலவின் வெளிச்சம் 
நிலவு இன்னும் 
அழகாய்...
======================
இரு நிலவுகள் 
நித்திரையை தொலைத்த
மனிதர்கள்...
=======================
உருண்ட நிலவு 
உருகியது 
உன் அழகில்....
=======================

காந்தியைப் போல 520 மாணவ மாணவிகள் வேடம் அணிந்து உலக சாதனை!










திருச்சி ஜெகன்மாதா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 520 மாணவ மாணவிகள் காந்தியடிகளைப் போல் வேடம் அணிந்து உலக சாதனைப் படைத்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் நிர்வாகி கூறும்போது,
இந்தியத் தாய்திருநாட்டின் மீது அண்ணல் காநதியடிகள் கொண்டிடருந்த பற்றி, இந்திய மக்களின் மீது கொண்டிருந்த அன்பு, அஹிம்சை முறையில் அவர் நடத்திய அறவழிப் போராட்டம், இன்றும் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் குறிப்பிடப்படும் கத்தியின்றி ரத்தமின்றி, வாங்கப்பட்ட இந்திய சுதந்திரம் என்று எண்ணிலடங்கா அவருடைய நற்செயல்களை மாணவ மாணவிகளின் மனதில் பதிய வைக்கவும், அவருடைய வரலாறு மற்றும் நற்பண்புகளை அனைவரும் பின்பற்றும் நோக்கத்துடன் 520 மாணவ மாணவிகளை அண்ணல் காந்தியடிகளைப் போல் வேடம் அணியச் செய்து இந்த விழாவில் உலக சாதனையைப் படைத்துள்ளோம்.


ஒரே நேரத்தில் 520 பேர் தோன்றி மேடையில் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை தொடர்ச்சியாகப் பாடி உலகிலேயே மிக அதிகமானவர்கள் காந்தியடிகளைப் போல வேடமணிதல் எனும் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளோம். இந்த புனிதமான உலக சாதனை நிகழ்விற்காக கடந்த 4 மாத காலம் காந்தியடிகள் பற்றியும் அவர் நம் தேசத்திற்கு ஆற்றிய தொண்டுகளையும் எடுத்துரைத்து, அவர் பின்பற்றிய அஹிம்சை வழியையும் மாணவ மாணவிகளுக்கு உணர்த்தியுள்ளோம்.

அண்ணலின் பண்புகளை உணர்ந்து அவர் கருத்துகளால் ஈர்ப்பு ஏற்பட்ட மாணவ மாணவிகள் 520 பேரில் 58 பேர் அவரைப்போல் தோன்றுவதற்காக உண்மையாகவே தங்களுடைய தலைமுடியைக் காணிக்கையாக்கினார்கள்.

விழாவின் முடிவில் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு எலைட் உலக சாதனை நிறுவனம், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய 3 உலக சாதனை நிறுவனங்களின் சான்றிதழ்கள் காந்தியடிகள் வேடம் புனைந்த 520 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. உடன் பள்ளியின் சார்பில் அனைவருக்கும் அண்ண-ன் வாழ்க்கை வரலாறு சத்திய சோதனை புத்தகத்தை வழங்கி அதை துணை பாடமாக சேர்க்கப்படவுள்ள தகவலும் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது என்றார்.
நன்றி நக்கீரன் 

பேதமில்லை...



















மழைக்கும் 
மழலைக்கும் 
பேதமில்லை...


திருமணம்...














நேற்று நீ யாரோ
நான் யாரோ
யென்று இருந்த உள்ளங்கள்
உறவுக்குள் இணைந்து
கலந்தன
புதிய விடியலுக்கு...

நாட்களுக்குள் பேதமில்லை...



















இறைவன் வகுத்த
நாட்களுக்குள் பேதமில்லை
மகாத்மா பிறப்பு
சகாப்தம் இறப்பு...!

1 அக்., 2012

வாலாஜாவில் ஜீவனாம்சம் கேட்டு மகன்கள் மீது பெற்றோர் வழக்கு: 6 மகன்களும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

ராணிபேட்டை, அக்.1-வாலாஜாவில் ஜீவனாம்சம் கேட்டு மகன்கள் மீது பெற்றோர் வழக்கு: 6 மகன்களும் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 83) விவசாயி. இவரது மனைவி யசோதம்மாள் (75). இவர்கள் இருவரும் வாலாஜா ஜே.எம்.1 கோர்ட்டில் தங்களது மகன்கள் மீது ஜீவனாம்ச வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு அசோகன், கிருஷ்ணமூர்த்தி, ரங்கநாதன், தயாளன், வேல்முருகன், வரதராஜன் என 6 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்ததுடன், ஒவ்வொரு மகனுக்கும் தலா ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை சரிசமமாக பிரித்து 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி கொடுத்து விட்டோம்.

இவர்கள் 6 பேரும் திருப்பாற்கடலில் தனித்தனியாக வசதியாக வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சம்பாதிக்கின்றனர். கஷ்டப்பட்டு 6 பிள்ளைகளையும் படிக்க வைத்துநல்ல நிலைக்கு அவர்களை உருவாக்கி, சொத்துக்களுடன் வாழ வழிவகை செய்துள்ளோம். ஆனால், பெற்றோரான எங்களை சாப்பாட்டுக்கே வழியின்றி அனாதையாக்கி விட்டனர். எனவே, எங்களுக்கு மாதம் தோறும் ஆகும் மருத்துவச்செலவு, உணவு மற்றும் இதர செலவுகளுக்காக ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

இந்த வழக்கை மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஸ்ரீதரன் ஆஜராகி தாக்கல் செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட வாலாஜா பேட்டை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் (பொறுப்பு) அனுசுயா, இந்த வழக்கு தொடர்பாக 6 மகன்களையும் வரும் அக்.5ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
நன்றி மாலைமலர் 

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மேலும் ஒரு வழக்கில் கைது

ஓசூர்,அக்.1-குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மேலும் ஒரு வழக்கில் கைது
பெரியார். தி.க. பிரமுகர் பழனி கொலை வழக்கில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்,அவரது அண்ணன் வரதராஜன், மாமனார் லகுமய்யா உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் அனுமதி இல்லாமல் கிரானைட் வெட்டி எடுத்த வழக்கு, அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்கிய வழக்கு உள்பட அடுத்தடுத்து பல வழக்குகள் ராமச்சந்திரன். வரதராஜன், லகுமய்யா ஆகியோர் மீது பாய்ந்தன. இதனால் இவர்கள் 3 பேரும் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேர் மீதும் மேலும் ஒரு வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் செயலாளரும், தற்போதைய அ.தி.மு.க. பிரமுகருமான நாகராஜரெட்டி என்பவர் கடந்த மே மாதம் 16-ந் தேதி தளி அருகே நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த போது வழிமறித்து தாக்கப்பட்ட வழக்கில் இவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரும் இன்று காலை 10-25 மணிக்கு சேலம் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டனர். நாகராஜரெட்டி தாக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே குட்டிநாகா, முனிராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி மாலைமலர்