31 டிச., 2011

ராக்கிங் பண்ணுகிறான் வில்லன்.


வில்லன்:

நான் அடிச்சா தாங்க மாட்டே 
நாலு வருஷம் தூங்க மாட்டே ...

கதாநாயகன்:

டைரக்டர் சார் 
புதுசா நடிக்கும் என்னை 
ராக்கிங்   பண்ணுகிறான் வில்லன்.
===========================
டைரக்டர் வில்லனிடம் 


மேலே அடிப்படாமல்
கதாநாயகனை நீ அடிக்கும் போது
பார்த்து அடிப்பா 


டைரக்டர் கதாநாயகனிடம் 


உங்கள் கை உடையாமல் 
இருக்க 
வில்லானை அடிக்கும் போது 
பார்த்து அடிங்க 
================================

2011 ம் ஆண்டுக்கு விடை


இதோ போகிறது 
இறந்த காலமாய் 
2011 ம் ஆண்டு...

இன்பங்களை 
இழப்புகளை
இன்னல்களை 
தந்தும்...


இறந்தகாலமாய் 
போகும் 
நிகழ்காலத்தில் 
இருக்கும் 
இந்த ஆண்டுக்கு 
நன்றி சொல்லி 


இன்று தான் 
கடைசி 
வரும் காலத்தை 
நேசி 
என்று வாசிக்க 
யோசிக்க வைத்த 
2011 ம் ஆண்டுக்கு 
விடைக்கொடுப்போம் 

வலிகள் அற்ற 
வரும் புது ஆண்டுக்கு 
வழிக்கொடுப்போம்

வீரத்தாய்க்கு சமர்ப்பணம்...

தாயே!
வீரத்திற்கும்,
விடுதலைக்கும்
மறு பெயரே 
நீயோ...

எத்தனை 
இன்னல்கள் வந்தாலும்,
தன் மண்ணியில்
மாற்றானுக்கு 
இடமில்லை...

வந்தாலும் தடுக்க
தன் உள்ளத்திலும்
உடலிலும்
வீரமில்லாமில்லை
என்று வீரம் கொண்டு
தடுக்கும் தாயே!

உன் வீரம் 
கண்டு சிலிர்த்தேன்.
எனது தமிழ்த் தாய்
முறத்தால் 
புலியை விரட்டினாள்...

நீயோ
உன் புஜத்தால் 
மனித
மிருகத்தை தடுக்கிறாய்.

விடுதலை தேடி 
உன் உள்ளம்
வீராங்கனையாய்
விசுவருபம்...

காலமும் ,களமும் 
கைக்கொடுக்கும் 
இதோ
உன் விடுதலையும்
உன் கைத்தொடு தூரம்...

எனது கவிதை இந்த
வீரத்தாய்க்கு 
சமர்ப்பணம்!

30 டிச., 2011

போலிச்சாயம் பூசி...

என் பெயர் ஜனநாயகம்...
தெருக்கோடியில் 
கொடிகள் ஏற்றி 
தன்னை அடையாளமிட்டு 

வேட்பாளராய் நின்று
வெற்றி பெற்றேன்,
நானும் கோடியில் வளர.

படிக்காமலே
நானும் கல்லுரி கட்டினேன்
கல்வியை 

வியாபாரமாக நினைத்து.

மருத்துவம் படித்தேன்
மருத்துவம் 

செய்து பணத்தை
கொள்ளை அடிக்க...

அதிகாரத்தை 

துஷ்பிரயோகம் செய்து 
என் இஷ்டப்படி 
சட்டத்தையே 
வளைத்தேன் 

லஞ்சமே 

என் மூலதனம்,
வாங்குவது 

மட்டும் சட்டமாகும்.

மந்திரிகளுக்கும்

பணக்கார ஜாதிகளுக்கும்,
நான் அடிமை....
இருப்பிலும் 

நான் சொல்லுவேன்...

இது தான் 

ஜனநாயகம் என்று
போலிச்சாயம்
பூசி...

29 டிச., 2011

காதலை கொல்!


காதலர்களே நில்லுங்கள்!
என் கேள்விக்கு பதில்
சொல்லுங்கள்!

வாங்கும் சம்பளத்தில்
தனக்கு என வாங்காமல்,
உங்களுக்கு 

வாங்க மறக்காமல்,
இருக்கும் உங்கள் தந்தை!

நீங்கள்  
தும்மினாலும்
துடித்துப் போகும் 
உங்கள் தாய்!

பாசத்தை கரைத்து
உங்கள் மீது பூசும் 
உங்கள் அக்காள்,
தங்கைகள்...

இப்படி அன்போடு வாழும்
இல்லத்தை விட்டு,
எப்படி ஓடிப்போக 

எண்ணம் உங்களுக்கு...

காதல் கொண்டு 
கறைகளோடு வாழ்க்கை 
எதற்கு...

காலம் காலமாய் 
உங்கள் குடும்பத்துக்கு 
வேண்டுமா இழுக்கு...

அப்படி என்னதான் 
காதலில் ஈர்ப்பு 

 
கண்கள் சொல்லும் 
போலிக் காதலைவிட 
உங்கள் இதயத்தை விட 
உங்கள் இல்லம் சிறப்பானது!

உங்கள் இருவருக்கும் 
இல்லமிருக்கு
அங்கும் இதயமிருக்கு...
காதல் கொள்!

இதுதான் 
உண்மைக் காதல்
என்பதை புரிந்துக்கொள்!

உண்மையை 
உணர்ந்துக்கொள் 
குடும்பத்தை 
நினைத்துக்கொள் 
இளமையில் 
காதலை கொல்!

28 டிச., 2011

மழையின் காதலுக்கு...
மழையின்
காதலுக்கு
எழுதிய கவிதைகள்
தூறலாய் தூறப்பட்டன 

பூமிக் காதலிக்கு!
=============================

இடியின் துணையோடு,
மின்னலில் பூவெடுத்து
பூமிக்காதலிக்கு 
சூட்டப்பட்ட
மாலையே 
இந்த மழை!

========================

மேகத்தின் மோகத்தில்,
மழை காமம் கொள்ள,
கர்ப்பம் தரித்தாள்
பூமிக்காதலி !
தாவர குழந்தைகளை
பெற்று யெடுத்தாள்!


=====================

மழை காதலனுக்கும்
பூமிக்காதலிக்கும்,
சண்டையாம்,
மழையின் அழுகை
வெள்ளமாய் ஓடியது!

============================

பூமியின் மேல் கொண்ட
மழையின் காதலுக்கு,
கறுப்புக்குடை பிடித்து,
எதிர்ப்புத் தெரிவித்து
ஒதிங்கினர்
மனிதர்கள்!
=============================

கிட்டினியை வேலைக்கு :சிரிக்க மட்டும்டாக்டர்:


உங்கள் இரண்டு கிட்னியில் 
ஒன்று வேலை செய்ய வில்லை 


நோயாளி :


என் கிட்டினியை தான் 
வேலைக்கு நான் 
அனுப்பவில்லையே
எப்படி வேலை செய்யும் 


டாக்டர் :


ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்

=====================================
தோஷம் இருப்பதால் எனது மகளுக்கு 
கல்யாணம் தள்ளிப் போகுது ....

கவலை  வேண்டாம்  
கல்யாணம் ஆகிவிட்டா 
உங்கள் மாப்பிள்ளை 
சந்தோசம் தள்ளிப்போகும்...
=====================================
என் கணவர் எப்போதும் நான் 
சொல்லுவதை தான் கேட்பார் ?

என் கணவர் வேலைக்காரி 
சொல்வதை தான் கேட்பார் ...
==============================

ஆயுதம் தூவிய மழை!மதத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
ஜாதியின் பெயரால் 
நாட்டின் பெயரால்
ஆயுதம் தலைமை
ஏற்க...


பொறாமையும் 
சூழ்ச்சியும் 
இணைத்துக் கொள்ள 
நிறுத்திக் கொல்ல
சிறுபான்மை மக்களை 
தாக்க
விசுவருபம் எடுத்தது
ஆயுதம்!


ஆயுதமே ஆட்சி பிடிக்க,
மனிதன் மறந்தான் 
மனிதத்தை
அறத்தை அழித்து
அகம் மகிழ 
அணுவும் 
விண்ணில் பறக்க
ஆயுதம் தூவியது மழை...


ஆயில் ஒன்றுக்கு 
அடிமையாய் ஆகி 
சுயநலம் கொண்டு 
அணுவின் மழையில
தன்னை தானே அழித்து

மிருகமாய் மாறினான்

மனிதநேயம் 
பேசியப் படியே 
மனிதநேயத்தை
மனிதனே  கொன்றான்....

வடிவேலு:பஞ்ச் வெடி :சிரிக்க மட்டும்

சினிமாவில் 
தேர்தலுக்கு முன் பாஸ்மார்க் 

அரசியலில் 
தேர்தலுக்கு பின் டாஸ்மார்க் 

=================================
கோடிக்கு கோடு போட்டு 
அதில் ரோடு  போட்டு 
இந்த சிங்கத்தை சாச்சு புட்டான் 
சிங்கமுத்து 
====================================
வடிவேலு:
வாங்க சார் ,உங்கள் லொள்ளு
இந்த மருந்துக் கடையில் செல்லாது ..
பார்த்திபன் :
எல்லா மருந்தும் கிடைக்குமா ?
வடிவேலு :
இங்கிலீஷ் மருந்து, நாட்டு மருந்து 
எல்லாம் கிடைக்கும் என்ன வேண்டும் ?
பார்த்திபன் :
மூன்று பொட்டலம் துபாய்நாட்டு மருந்தும் 
ABCD இங்கிலீஷ் மருந்து 
இரண்டு பாட்டிலும் கொடு 
வடிவேலு :
என்ன வித்தாலும் இவன் தொல்லை 
தாங்க முடியவில்லை 

========================================
வடிவேலு :

எல்லா கம்பெனி கார்டும் 
கிடைக்கும் 

பார்த்திபன் :

உண்மையாவா ?

வடிவேலு :

ஆமா உனக்கு எந்த கார்டு வேண்டும் ?

பார்த்திபன் :

எனக்கு ரேஷன் கார்டு வேண்டும் .

வடிவேலு :
என்ன கொடுமை என்ன கொடுமை  என்ன கொடுமை என்ன கொடுமை

27 டிச., 2011

மறதி டாக்டர் :சிரிக்க மட்டும்நண்பன் 1
மாப்பிளை என் பல்லு ஆடுதுடா .
நண்பன் 2
எந்த பாட்டுக்கு ஆடுது !
நண்பன் 1
மண்டையில் அடிவிழும் மண்டையில் அடிவிழும்
=============================
பல்லுக்கு பல் பணம் வருது இவருக்கு ?

எப்படி ?

அவர் தான் பல் டாக்டர் ஆச்சே...
என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை
==================================
மறதி டாக்டர் :
நர்ஸ் நான் பல்லு புடுங்கிய நோயாளி 
எப்படி இருக்கார் ?


நர்ஸ் :
பல் செட்டு இல்லாமல் இருக்கார் .

மரமில்லா உலகமோ ...


வரமாய் கிடைத்த 
மரத்தை
மறந்தான் 
மனிதன்.

பசுமையாய் இருந்த
உலகத்தை இழந்தான்
அரசியலுக்கும்
தலைவருக்கும்
மரத்தை வெட்டி
வளத்தை தொலைத்தான்

தன்னை அழித்தாலும்,
பலன் தரும் 
மனம் மரம்
மறந்தாலும்
மன்னிக்கும்
மனமே மரம்.

மனிதனுக்கு 
உயிர் காக்கும் 
உறவாய் மாறும் 
உயிர் வாழ 
விறகாகும் 
இறந்தால் 
எரிக்க
மரமே துணையாகும்

பழத்தை தந்து 
பலம் சேர்க்கும்
வரமும் மரமாகும்.
மரமில்லா உலகமோ
சூனியமாகும்...

26 டிச., 2011

யாருக்கு இந்த வியாதி ?சிரிக்க மட்டும்

நோயாளி:
டாக்டர் எனக்கு இரண்டு இரண்டா தெரிகிறது 

டாக்டர் :
வந்த  மூன்று  பேரில் யாருக்கு இந்த  வியாதி ?


நோயாளி:
பயம் பயம்பயம் பயம்


===========================================
தலைவரை ஏன் கைது பண்ணுகிறார்கள் ?


அரைக் கூவல் செய்வேன் என்றதை 
வாய் தவறி அறைக்கு கூப்பிடுவேன் என்று 
சொன்னார் அதுக்கு தான் இந்த கைது ...

சிறுகதை புதுக்கவிதையில்.

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு


அழகியத் தோட்டத்தில்,
அமைதியான வீடு
காற்று கவிப்படும்
சோலை அந்த வீடு
மரங்கள்
குடைப் பிடிக்கும்


நிழல் பேசும்,

நிஜமான வீடு.
இந்த மரத்தால்
குப்பை 

வருவதைக்கண்டு,
துடித்தது உள்ளம் ஒன்று.


நாளுக்கு நாள்

கோபம் கொண்டு
மரங்களை 

எதிரியாகவே  நினைத்தார்!
அதை வெட்ட முற்ப்பட்டார்...


வீட்டின் பெரியவர்
தடுத்தவர்களை,எல்லாம்
கோபப்பார்வை கொண்டு
தன் பார்வையாலே எரித்தார்.


மரங்களும் 

வெட்டப்பட்டன
நிழல் விரட்டப்பட்டன
அழகு குறைக்கப்பட்டன
வெப்பம் ஏற்கப்பட்டன.


தவறை 

எண்ணி வருந்துகிறார்.
அவசரக்காரனுக்கு புத்தி மட்டு
என இன்று உணர்கிறார்...


அவசரத்தின் நிலை 

நம்மை
காலக்காலமாய்

கலங்கவைக்கும்
மன அமைதியை கெடுக்கும்
கோபத்தோடு எதுவும் செய்யாதே!
செய்தால் அது நன்மையா இருக்காதே!

சிறுகதை புதுக்கவிதையில்.

சொர்க்கம் கண்டுசிறுத் துளி 
விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா 
தற்கொலை எண்ணம்!


அவசரம் தாண்ட 
உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா 
உன் உடன்படிக்கை,
இதனால் தானா
உன் தற்கொலை?


சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? 
இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை 
விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே அழித்தாளா?


உன் ஆற்றல் 
தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை 
வெல்ல முடியும்.
மேல் நோக்கி 
பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்த
உன் தாய் !


அன்பாய் 
அதன் உருவமாய்,
கவியாய்,நீஅழைத்தால்,
உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் 
தடுமாறும் மனம்


வளம் ,வலம் 
வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.


வாழப் புறப்படு
வாழும் போதே
சந்தோஷமாய் 
இருந்திடு 

சொர்க்கம் காண 
முனைந்திடு 
சொர்ர்க்கத்தில் 
வாழ்ந்திடு 

25 டிச., 2011

சமாதானப்புறாக்கள்

பூமிவுடைய 
சமஸ்தானத்தில்
சமாதான இனத்தின்
முகவரிகள் நாங்கள்.

ஆயுதம் தாங்கிய
மனிதர்கள் முன்னால்
எங்கள் இனத்தின் 
சமாதானம்
சபை ஏற மறுக்கிறது
பகையோடும்
பயத்தோடும் 
திரும்பிகிறது.

சமாதானத்துக்காக
நாங்கள் தொடுத்த 
பூமாலைகள் கூட
ஜாதிவாரியாய் 
பேசப்படுகிறது
பூக்களுக்குள்ளே
சண்டைப் போடுகிறது.

ஜாதிகளும் 
மதங்களும்
கட்சிகளும்
மனித நேயத்தை 
கொன்றுவிட்டதால்,
எங்களை
நேசிக்க யாருமில்லை

இன்றோ
மனித நேயம் போல
சமாதானப்புறாக்கள்
என்ற பெயரில் 
வலம் வரும் 
வெறும்
பறவைகள் 
நாங்கள்!

தேனீக்களின் ஆதங்கம்.பூக்களின் 
முத்தங்களை 
எல்லாம் திரட்டி 


இந்த வங்கியில்
இனிப்பாய் சேமிப்பது
எங்களுடைய பழக்கம்.


அதை மிச்சமில்லாம்
கொள்ளையடிப்பது
மனிதர்களின் வழக்கம்.

கைபேசிகையேடு 
கைபேசி
உறவாடி
மனம் 
நாடிப் போனது
தேடி வரும் 
அழைப்புக்கு
உணர்வாகிப் போனது
இந்த கைபேசி..


கதை பேச 
படித்து ரசிக்க
என வாலிப உள்ளத்தை
வசியம் செய்து 
வலம் வருது


தூக்கத்திலும்
தூது போகும்!
தூக்கம் கலைத்து 
விசாரிக்கப்படும்!


வகை வகையாய் 
கைபேசி
வாலிப தேசத்தின் 
தேசியக் கொடி!


கடல் கடந்து வாழும்
கரை சேரா காமத்துக்கும்
சத்தம் முத்தம் தந்து 
மகிழும் 


அன்றாடும் வாழ்க்கைக்கு
நிஜமாகி போகி 
இதயமாய்   இருப்பதும் 
இந்த கைபேசி 


நாளைய கனவுகளை
காதுவழியே சேர்ப்பதும்,
சேகரித்து வைத்திருக்கும்,
இன்பத்தினை 
இளைப்பாறவும்...


விற்ப்பனைக்கு 
விலாசமாய் 
கைக் கொடுத்தும்


நாம் வாசித்து 
நேசித்து 
பேசி சிரித்து 
நமக்குள் ஒன்றாகி 
உயிராகிப்போனது
கைபேசி...

24 டிச., 2011

தபாலின் நிலைதபால்
நேற்று வரை என்
மதிப்புக்குரிய 

உறவுமுறை..

தபால் வரும் வரை

அமைதியில்லை
தூக்கமில்லை

இந்த நிலை
மலர்ந்த முல்லை...

தலை முறை
மாற்றிய லீலை
இன்றோ 
தபாலுக்கோ 
அவலனிலை

கேட்பாரில்லை
பார்ப்பதுமில்லை
எழுதுவதுமில்லை 
படிக்க நாட்டமில்லை
தபாலுமில்லை 

கணினி வந்த வேளை
வேலையோடு வேலை
பார்ப்பது 

கேட்பது 
பேசுவது 
சிரிப்பது 
எங்கள் வேலை

கூந்தல் தந்த துளிப்பாக்கள்!கார்மேகம் 
இந்த பெண்ணோடு
உறவாடுதா இல்லை
இடையோடு 
கொஞ்சிப்பேசுகிறதா
================================

காரிகை 
காற்றில் சிரித்து
உன்னை 
உரசிப்பார்க்கும்போது
பொறாமை தான் எனக்கு.

============================

கார்குழலை 
பெண்ணின்
தலைக்கு கிரீடமாய்
வைத்துப்போனவர் யார் ?

============================

ஒரு கருப்பு 
நீர்விழ்ச்சி,
காற்றில் 
கவிப்பாடியதை
இன்று தான் பார்க்கிறேன்.

=============================

காற்றே என்னவளின்
கருப்புக் கவிதைகளை
கலைத்து விடாதே...

வீட்டுப் பிள்ளை...


நான் உங்கள் 
வீட்டுப் பிள்ளை என்றார் 
தொகுதி வேட்பாளர்.
நிலங்களும்
மனைகளும் 
வீடும்...

அவர் பெயரில் 
மாறிய பிறகே
அறிந்தோம்
அவரே 
வீட்டுப் பிள்ளை என்று.

23 டிச., 2011

கணவன் மனைவி சூத்திரம்...உடல் தரும் மாற்றம்
இதை கண்டு 

வாலிபம்  தடுமாற்றம்.
காமம் எனபது 
உணர்வாகும்...
கண் சிமிட்டும் 
நேரத்தில் நம்மை 
வந்து தாக்கும்...

அமைதிக் காக்கும் 
வழிகள் தெரிந்தாலும்
திருமணம் 
என்ற உறவாகும்
அவமானம் 
காணாத வழியாகும்...

தன்மானம் 
காக்கும் நிலையாகும் 

விபரிதம் 
போக்கும் உறவாகும் 
கணவன் மனைவி  
சூத்திரம் 
அன்பைக் காட்டும் 
பல்கலைக்கழகம் 

விவாகம் 
ஒன்றே சிறந்ததாகும்.
நோய்கள் போக்கும் 
மருந்தாகும்

வரும் தலைமுறையை 
காக்கும் ...

அடிக்கடி கோபம் வருது... சிரிக்க மட்டும்

நிருபர் 

மேடம் உங்களுக்கு ஏன் 
அடிக்கடி கோபம் வருது ?

தலைவி 
இந்த மாதிரி 
முட்டாள் தனமான வேள்விகளை 
கேட்க உள்ள விட்டவர்களை 
என்னால் அடிக்க 
முடிலே அதனால் தான் 
அடிக்கடி கோபம் வருது...

நிருபர் 

அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.
===========================
நம்ம தலைவி அடிக்கடி 
அமைச்சரவையை ஏன் 
மாத்துறாங்க தெரியுமா ?

எதுக்கு ?

தலைவி ஆட்சிலே எந்த 
மாற்றமும் இல்லே என்று 
சொல்லாம இருக்கத்தான்.
==========================

ஜனநாயகம் கண்ணீரோடு ...

எண்ணங்கள் 
விழித்துக்கொள்ள 
வரும் தேர்தலுக்கு 
காத்திருந்தது 
எனது கனவுகள்...


சத்தமில்லாமல் 
விளம்பரமில்லாமல் 
வந்தது...
பொதுத் தேர்தல்...


கருத்து மோதல்கள் 
இலவச அறிவிப்புக்கள் 
போட்டிப்போட்டன 
வேட்பாளரைப் போலவே...


எல்லாம் சரியாதான் 
போனது 
தேர்தல் முதல் வரை 


ஓட்டுகள் பேரம் 
பேசப்பட 
ஜாதி 
ஓட்டு வங்கிகளும் 
ஒட்டிக்கொள்ள 


ஜனநாயகம் 
கண்ணீரோடு 
சொனனது!


ஜனநாயகத்தை 
விலங்கினங்களும் 
பறவைகளும் 
கற்றுக் கொண்டதால் 


மனிதன்
கற்க நாளாகும் 


உன் கனவுகள் 
நிஜமாக இன்னும் 
காலமிருக்கு...


நீயும் நானும் 
உயிரோடு 
இருந்தால் பார்ப்போம் 
என்று............

22 டிச., 2011

தனிமையில்...பணத்தை தேடி 
ஒரு பயணம் 
தேடலின் போது
இளமைகளும் 
விலகிப் போக


வந்த பாதை 
மறந்து போக
மனமும் 
உடம்பு 
மரத்துப்போக 


மரணங்களும் 
பிறப்புகளும் 
தொலைபேசியில் 
அறிந்துக்கொள்ள...


கடிதத்துடன் 
கைப் பேசிகளுடன்
குடும்பம் 
நடத்தப்படுகிறது...


தேடல் இன்னும் 
தொடர்கிறது 
தனிமையில்...

ஒருக்கால் 
எனது மூச்சு 
நின்றுபோனால்...


ஒருக் காலோடு
எனது மரணமும் 
தனிமையில்...

மழைத்துளிசூரியக்காரனை 
மறைத்த வண்ணம் 

மேக தாத்தாக்கள் 
கருத்த முகத்துடன் 
அங்கும் இங்கும் 
அலைபாய 


இடியும் 
மின்னலும் 
கைக்கோர்க்கவே 


பயத்துடன் 
முன் ஜாமீன் 
பெற்ற மக்கள் 
குடைக்குள்ளும் 
வீட்டுக்குள்ளும்...


ரோஜாக்களை 
தழுவிய மகிழ்ச்சியில் 
மரத்திலும் 
மண்ணிலும் 
விழுந்து 
மரணமாகாத 
மறுபிறவியாய்
மழைத்துளி....


உணவாய்
கனியாய் 
கறியாய்
பூவாய் 
நீராய்....

கின்னஸ் ரிக்கார்ட்


தலைவர் பெயரு கின்னஸ் ரிக்கார்டில் 
வந்துவிட்டது தெரியுமா ?

அப்படியா நம்ம தலைவர் செய்த 
சாதனை என்ன ?

ஒரு வருடத்தில் 52 தடவை மந்திரி சபை 
மாற்றி அமைத்ததுக்கு தான் ..

====================================

தலைவருக்கு உலக அறிவு என்பதே இல்லே .

எதுக்கு இப்படி சொல்லுறே ?

கின்னஸ் ரிக்கார்ட் என சொல்லுறாங்களே 
அதில் காதல் பாட்டு இல்லை சோகப்பாட்டா
இல்லை குத்துப்பாட்டா எது  இருக்கும்  என்று 
கேட்கிறார் ....
==========================================

இது என்ன கோட்பாடு?

கடவுளை வணங்காதே
கடவுள் இல்லை என்று
நாத்திகவாதிகள்
சொல்வது உண்டு.

தங்களது 
மறைந்த தலைவனுக்கு
சிலை வைத்து
மாலை
மாரியாதை என்று
வணங்கி வருவதுமுண்டு!


காட்சிகள் 
மட்டுமே இங்கு
மாற்றம்.
சொன்ன செயல்களில்
தடுமாற்றம்!நம்பிக்கை எனபது 
அவரவர்  விருப்பம் 
உன் வார்த்தைகள் தந்ததோ
ஏமாற்றம்!
பகுத்தறிவுவாதியே
ஏன் இந்த மாற்றம்
குழப்பம்...?

21 டிச., 2011

குங்குமப்பூ!


மணம் வீசி 
வர்ணத்தை 
கொடுத்து 
மனதை 
கொள்ளைக்கொண்டு 
அழகாய் மாற்றும் 
குங்குமப்பூ!


காஷ்மீரின் 
கனவுக் கன்னி
இந்த குங்குமப்பூ !


மலையை தாண்டி 
வந்தாலும்,
காரமும் மனமும்,
மாறாத ஜாதிப் பூ...


நோய் தீர்க்கும் 
மருந்தாகவும்,
அழகான
நிறத்துக்கு 
வரமாகவும்...


பூவையர்கள் 
சுடாத பூவாகவும்
உட்கொள்ள
மறுக்காத பூ 
குங்குமப்பூ!


பூவோடு மணக்கும் 
நாருப்போல.
தாய் உட்கொண்டால்..
பிறக்கும் குழந்தைக்கும்,
அழகூட்டும்,
குங்குமப்பூ!


பன்னீர் ரோஜா
கல்கண்டு
தேன் குங்குமப்பூ
கூட்டணிகள் சேர்ந்தால்


தாதுக்கும்
பெண்களின் மாதவிலக்கும்
அரும் மருந்தாகும்...


உன் உடலுக்கும்
பளபளப்புக்கும்
தூணாயிருக்கும்

20 டிச., 2011

சிரிக்க வாருங்கள்...

அவசர உலகத்தில் 
உங்கள் 
அவதாரத்தை 
கொஞ்சம் 
இறக்கிவைத்து 
சிரித்துப் பாருங்கள்...

சிரிக்க இதோ 


புது அவதாரமாய் பொய்...பொய் யென
நினைத்தால் 
பெய்யும் பொய் 

கண்களால் 
கண்டதும் 
காதால்
கேட்டதும் 
பொய்யென்று 
தெரிந்தாலும் 

தீர சேகரித்து 
மெய் யென சொல்லும் 
பொய்.


பொய்க்கு 
வார்த்தைகள் 
கோர்த்து 

பலப் பல
வண்ணமிட்டு
புன்னகை தொடுத்து 
புது அவதாரமாய்...

ஒப்பனை செய்து
நிஜமாக்கிக் 
கொள்கிறோம்.
உண்மையை 
கொல்கிறோம்

மனிதத்தையே 
குழித் தோண்டி 
புதைக்கிறோம்...


அனுதினம் 
சொல்லும் சில 
பொய்களும்...

19 டிச., 2011

கபாலி கிட்ட சொல்லி ...சிரிக்க மட்டும்

தேர்தலில் நிற்கணும் அதுக்கு என்னென்ன 
செய்யணும் சொல்லுங்கள்...
ஜோதிடர் :
அதுக்கு ஓட்டர் லிஸ்ட்டில் உங்கள் பெயர் 
இருக்குதா என்று பாருங்கள் 
ஓட்டர் ஐ டி எடுத்துவிடுங்கள் ...

இந்த பரிகாரம் செய்தால் நான் 
ஜெயித்து விடுவேனா ?
ஜோதிடர் :
=====================================
ஜோதிடர் :
உங்களுக்கு ராகும் ,கேதும் 
வெவ்வேறு வீட்டில் இருப்பதால் 
பிரச்சனை தான் ....

ஜோதிடம் பார்ப்பவர்:
அப்ப நம்ம கபாலி கிட்ட சொல்லி 
ஒரே வீட்டில் இருக்க செய்துவிட்டால் 
போச்சு..
=================================

நாம ராசிக்கு ...சிரிக்க மட்டும்


உங்க தலைவர் மேல் உங்களுக்கு 
விசுவாசமிருக்கலாம் 
அதுக்காக அவர் ரிப்பன் கட்பண்ணிய பிறகுதான் 
நான் ஆப்ரேஷன் செய்யணும் என்று 
சொல்லுவது சரியில்லை 
=====================================
தலைவர்:
தேர்தல் வரும் நேரம் ,செண்டிமெட் 
வருவது போல நல்ல புதுசா 
கேலே வருவது போல வியாதி பெயர் 
வையுங்கள்...
அப்பத்தான் நாம ராசிக்கு சரியா வேலை 
செய்யும்...

டாக்டர் 
பத்து வருஷமா உங்களை காப்பாற்ற 
இருக்கிற வியாதிகளை சொல்லி 
வாய்தா வாங்கியாச்சி ,இனி என்னால் 
சொல்ல வியாதியே  இல்லே...

==================================
தலைவர்:
என்னத்த வாயில வைக்கிறீர்கள் ?

டாகடர்:
ஜுரத்தை காட்டும் தர்மா மீட்டர் 

தலைவர்:
அப்ப சரி ஊழலை கண்டுபிடிக்கும் 
கருவியோ  என்று பயந்துவிட்டேன்...
=================================

18 டிச., 2011

அதிசியம்


உன் இருக் கண்கள்
பட்டு உடைந்தது
கண்ணாடி மட்டுமா ?
முன்னாடி இருக்கும்,
நானும் தான்!


தள்ளாடி விழுத்த
கண்ணாடி சொன்னது,
உன் விழிகள்
செய்த மாயம்
இந்த காயம்!


சூரியனுக்கு
போர்வை
போர்த்தி


கண்ணுக்குள்
நிலவை நிறுத்தி..


போராட்டம் 
தொடுத்தல்
எனது இதயம்
என்ன செய்யும்


மலைக்குள்
மலர்   பூக்கும்
அதிசியம்
உருவாகும்...


உங்கள் கண்கள் 
செய்த மாயம் 

உடற்பயற்சி செய்றாங்க ...சிரிக்க மட்டும்


பலத்த போலீஸ் பாதுக்கப்பு இருக்கே 
கடற்கரையில் மரத்தான் போட்டியா 
நடக்குது ,இவ்வளவு பேரு ஓடுறாங்க...

அட நீங்க ஒன்னு 
முதல்அமைச்சர் 
குடும்பம் உடற்பயற்சி 
செய்றாங்க 

=====================================
தொண்டன் 1 
இப்பயெல்லாம் நம்ம கட்சிக் கூட்டதுதுக்கு 
நிறைய பேரு வராங்க சந்தோஷமா இருக்கு 


தொண்டன் 2 


தலைவர் தன் குடும்பத்தை கண்டிப்பா
கலந்துக்கொள்ள சொல்லிவிட்டார்