30 ஜூலை, 2011

கேள்வி (படக்கவிதை )

இரு இதயத்தின் இலக்கணம்...!

பல முகம் கண்டு 
அறம் முகம் சொன்ன ,குறள்
தந்த குரல், இரு வரி பாடம்!

இல்லறத்தில் இணைந்த
இரு இதயத்தின் இலக்கணம்,
நல்லறம் காணும்!

இயற்கை (படக்கவிதை )

திறமையின் திறவுகோல்!(படக்கவிதை )

28 ஜூலை, 2011

பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!மூட்டைகள் போல 
திணிக்கப்பட்ட மனிதர்கள்
அரசு பேருந்து!

==================

பழைய காதலை,
                                                தூசித்தட்டி சொன்னது,
கல்லூரி பேருந்து!
==================


அழுது,அடம்பிடிக்க,
அமுக்கப்பட்ட நிலையில்,
பள்ளிப் பேருந்து!

===================


சர்க்கஸ் ஆட்டத்துடன்,
திரைப்பாடல்கள் ஒலிக்க
புழுதியோடு கிராமத்து பேருந்து!

=========================
27 ஜூலை, 2011

காய்கறியே, கன்னியான அற்புதம்.


காய்கள் எல்லாம்
கனியாகும்,
இங்கு காய்கறியே,
கன்னியான அற்புதம்.

பெண்ணின் முழு உருவம்,
கோஸோடு எழுதிய வண்ணம்,
பார்க்கும் கண்கள் வியக்கும் !

முட்டகோஸில்,
பெண்ணின் முகவரி.
படைத்தவனின் ,
கற்பனையை கவனி!

கோஸ் க்குள் சத்துக்கள்
சாந்தமாயிருக்கு!
சாதுக்களும் மயங்கும்
சூத்திரம்,பெண்ணுக்குள்
மறைந்து யிருக்கு!

சேலைக்குள் ஆயுதம்!


பெண்கள் வீட்டின் கண்கள் 
என்றனர் அன்று!
சேலைக்குள் ஆயுதம்,
மறைத்தனர் இன்று!


37 சதவிகித ,இடஒதிக்கீடு  
கேட்டு கேட்டு ,ஏமாற்றமே 
மகளிருக்கு !


அடங்கியது போதும்...
அருவாளும் வேண்டும் என 
பொங்கியதால் இந்த நிலையா ?
வெறுத்தால் அருவாளும் எடுப்பாரோ ?

மனிதா!எங்களை பார்த்து புரிந்துக்கொள்!மத ,சாதி சண்டைகளில்,
மொழி வெறியிலும்...
முழுகி கிடக்கும்,மனிதா!
எங்களை பார்த்து 
புரிந்துக்கொள்!
உதவி செய்ய 
கற்றுக்கொள்!

மனிதன் என்ற போர்வையில்!

ஒரு லிட்டருக்கு 
குறையாகவே ஊற்றப்படும்,
மண்ணெண்ணெயை!

பிழையாகவே  விற்கப்படும் 
கள்ள எண்ணையை,
நல்ல எண்ணெய் என்று!
பிழையாகவே கொடுக்கப்படும்,
தொளாயிரம் கிராமை.
ஒரு கிலோயன்று!

கூட்டறவு பண்டக சாலை,
கூட்டுக்கொள்ளை என்று 
உண்மையாகவே சொல்லலாம்!

இங்கு பிழைகள் எல்லாம் 
கள்ள சந்தையில் விற்கபடுகிறது,
மனிதன் என்ற போர்வையில்!