11 ஜன., 2015

முதிர் கன்னிகள்

புண்பட்ட மனதுக்கு 
கை பட நேரமில்லை ..
சொல் பட்டு வாழும் மனதுக்கு 
மாற்றமேஇல்லை..!
முதிர் கன்னிகள்..!

அதிகாலை கனவு 
மட்டும்
எங்களுக்கு பலிப்பதே இல்லை...!

6 ஜன., 2015

பாதக்கவிதை..

கடற்கரை மண்ணில்
நீ எழுதிய 
பாதக்கவிதையை இன்னும் 
ரசித்த வண்ணமாய் நான்...!

ஒளியை தேடி....!

நேற்று
இறந்து விட்ட துக்கத்தில்
நாம் இருக்கவில்லை.
நாளை
பிறக்க போகும் மகிழ்விலும்
நாம் துடிக்கவில்லை.
இன்று
வாழும் நிஜமான
நம் வாழ்க்கை
ஒளியை தேடி....!

நான்...


முரண்...

தந்திரமும்
மந்திரமாய்
வாலிப பருவத்தில்...!
கலக்கமும்
பயமும்
முதுமை நிலையில்...!
இந்த
மூன்றெழுத்தின்
முரண்...