14 மார்., 2014

பொம்மையாய் மனம்...!

கணினியோடு ஒப்பந்தம் 
மனைவி கூட குடித்தனம்
பிள்ளைகளுடன் அரட்டை
எல்லாமே இன்று 
பேஸ் புக்கில் இருக்க ...
பொம்மையாய்
மனம்...!

அப்பாவி தான் என்று...!

அவர்கள் வாக்கு நம்பி 
எனது வாக்கை
அந்த  கூட்டணிக்கே 
வாக்களித்தேன்....
எனது விரல் மை 
அழியும் முன்னே
கூட்டணி மாறிவிட்டனர்...!

என்னை பார்த்து 
எனது வாக்கு சீட்டு 
சிரித்தது...
என்றுமே நீ
அப்பாவி தான் என்று...!
===========================
கரை சேர்ப்பார்கள் என்று 
எண்ணிய படி
காத்திருக்கும் விரல்கள் 
கறை பட...!

10 மார்., 2014

தீக்குச்சிகள்..!

பயபக்திவுடன்
மணம் வீசிய பயணம் 
அகர்பத்திகள்..!

இருளை போக்க 
அவதாரம் 
மெழுகுவத்திகள்..! 

இரண்டுக்கும் 
உறவாய் ஆனது 
தீக்குச்சிகள்..!

9 மார்., 2014

மதிக்கப்படவில்லை...

நாங்களும் மனிதர்களாய் 
பிறந்து இருந்தாலும்...
இன்னும் மதிக்கப்படவில்லை
மனிதர்களால்...!