பயணத்தின் நோக்கம்
சேருமிடம்
பிறப்பின் நோக்கம்
மரணமாகும்
இரண்டுக்கும் இடையில்
நானா, நீயா போராட்டம்...
மனித ஒப்பனைக்குள்
மறைந்த மதமும்
ஜாதிக்குள்
ஜதிப்போட்டு நடனம்
எல்லாமே சம்மதம்
வெற்று வார்த்தையாகும்
அடுத்த ஜாதி,மதத்தைப்
பார்த்து வசைப்பாடும்
மனம்...
மாயமே இந்த உலகம்
ஒருவருக்கு ஒருவர்
நடிக்கும் நாடகம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக