31 ஜன., 2012

இயற்கையோடு...


இயற்கை இங்கு
கதிரவனின் 
காதல் கண்டு
சிவந்து விட்டது!

மரத்திற்கும்
மலருக்கும்,
இலவச மின்சாரமாய்,
கதிரவனின் சேவை!

பார்க்கும் கண்கள் எல்லாம்,
மயங்கவைக்கும் அழகு,
இயற்க்கை சொல்லும் பாங்கு!

யார் அங்கே?
கொஞ்சம் எல்லாம் தள்ளி வை...
இயற்கையோடு 
உன் உள்ளத்தை
இணைத்துவை!

இயற்கையோடு 
உன் இருக்கையை 
படுக்கையை
இருக்குமாறு மாற்றிவை!

அவசர உலகத்தில் 
சற்று இளைப்பாற
இயற்கையோடு 
இணைந்துக்கொள்...

உலகத்தின் 
மாசுக்கு விடைக்கொள்
புதிய மரத்தை 
விதைக்க 
கற்றுக்கொள்....

27 ஜன., 2012

மருதாணி...தாவணிகள் எழுதும்
கவிதையே மருதாணி!

இலைகளை மைய அரைத்து,
கைகளில் கோலமிட்டால்,
மணப்பெண்ணின்,
அழகுக்கு .அழகு சேர்க்கும்,

திருமண,பண்டிகை 

காலத்திலும்
புடவைக்கும்

தாவணிக்கும்...

மருதாணியே 

தனி அழகூட்டும்
மனதை ஈர்க்கும்!

தலை நரைக்கும்,
கால் ஆணிக்கும் 

மருந்தாகும்!

தூக்கம்,மறந்த 

துக்கத்திற்கும்
பூவையர் போலவே....

மருதாணி பூவும்

தலையணையாய்
மாறினால் தூக்கம் வரும்!

மறுதோன்றி

அழவணம்
 ஐவணம்
மெகந்தி 
என்ற 
துணைப் பெயர்கள் கொண்ட,

மருதாணி ஒரு 

கிருமி நாசினி,
மறுக்காமல் 

நீ வளர்க்க யோசி!

26 ஜன., 2012

மனசு ஒரு ஹார்டிஸ்க்!
ஆசைகளை அடிக்கி
நினைவுகளை 

சேமித்து வைத்த 
மனசு ஒரு
ஹார்டிஸ்க்!

தேவைகளையும்
தேவதைகளையும்,
தேக்கி வைத்து 
தேடும்போது...

தட்டிப் பார்த்தால்
வந்து நினைவாடும்
நிழலாடும்...

பல வைரஸ்கள் 
தாக்கிருந்தலும் 
நம்பிக்கை கொண்ட 
ஆண்டி வைரஸ்கள் 
சுழலுதுவதால் 
இன்னும்....

25 ஜன., 2012

வெற்றிலை....வெற்றிலை
இதன் முகவரி மலேசியா!
இது ஒரு மருத்துவ மூலிகை!


தமிழர்களின் 
கலாச்சாரத்தோடு
இணைந்து
மங்கள காரியத்தில்,
முகமலர்ச்சியோடு
வரவேற்பதில்
இதன் முக்கிய நிலை!


விதைகள் இல்லாத 
கொடித்தாவரமே 
இந்த வெற்றிலை!
இதன் காம்புகளை
வெட்டி பதியம் போட்டாலே 
வளரும் இந்த இலை !


கரும் பச்சையை 
ஆண்ணென்றும்,
இளம் பச்சையை
பெண்ணென்றும்,
வெற்றிலைக்கு 
உறவுண்டு...
இல்லற நல் உறவுக்கும்
இதில் பங்குண்டு!


கால்சியம்
இரும்பு 
நீர்சத்து,புரதம்,
கொழுப்பும் 
கலந்திருக்கு...

சவிக்கால் 
என்ற வீரியமும்
நிறைந்து இருக்கு...


வெற்றிலையோடு 
பாக்கும்,
சுண்ணாம்பும் 
கலந்தால்,
வாய் சிவக்கும்
நாற்றத்தை விரட்டும்
உண்ட உணவு
 
ஜீரணமாகும்!


வெற்றிலை .
இது வெற்றி இலை
மருத்துவத்தில்
மகத்துவம் கொண்ட,
உறவுனிலை 
இந்த வெற்றிலை !


கும்பகோணம் வெற்றிலை
உலகப் பெயர் பெற்றது
இதை அறிய
சுவைத்து பார்த்து
சொன்னால் 
எனது கவிதைக்கு
நீங்கள் தரும் 
வாழ்த்து மாலை!

பெண்ணின் நிலை...


பிஞ்சுக் குழந்தைகளும் 
பெண்ணாயிருப்பதால்
நாசம் செய்யும் உலகமடா !

பாவி மகள் சமைந்த பின்னாலே,
அவள் வந்து சேரும் வரை பயமடா.

சேலை கொஞ்சம் விலகினாலும்,
காமப் பார்வை கொல்லுதே

கோலம் போடா குனிந்தாலும்
போகும் வண்டியும் நிற்குதே!

வேலை செய்கிற நேரத்திலும்,
புடவை மேலே பார்வை 
மேய்கிறதே 

ஆணின் வக்கிர பார்வைக்கு
பலியாகும் பெண்ணின் மார்பகமே !

24 ஜன., 2012

திருடியது...சிரிக்க மட்டும்


அரசியல்வாதியை கட்டிக்கிட்டது 
தப்பா போச்சு ...

ஏண்டி ?

கூட்டத்தில் போட்ட மாலை
எல்லாம் கொண்டுவந்து  
எனக்கு போடுகிறார்...
==============================
என்னங்க நீங்க தந்த நெக்லஸ் 
மேல MKSயில்  திருடியது என போட்டு இருக்கே...

அந்த கடையில் தானே திருடியது 
வேற எப்படி போடுவான்...
==================================

23 ஜன., 2012

உள்ளத்தின் பதில் !மனமே!
உன்னோடு பேசலாமா?
சில
கேள்விக்கு 
பதில் வேண்டும்.
சொல்வாயா?

சிலசமயம் சோகமும் ,
சிலசமயம் கோபமும்,
சிலசமயம் இன்பமும்
பெறுகிறேன்.

நீ ஒருவன் தான்
உனக்குள் ஏன்
இந்த வேறுபாடு ,
இது என் ஐயப்பாடு?

என் நண்பா
பதில் தரட்டுமா .
சோகம் என்பது
உன்னை சுற்றி
இருப்பதை 
காணும் போதும்...

இறக்கும் போதும்
தொலைத்தப் போதும்
நீ உண்டாக்கிக்கொள்வது!

கோபம் எனபது
உன்னால் முடியாமல்
போகும்போதும்...

உன் தவறை,
சுட்டிக்காட்டும் போதும்,
காதல் கிடைக்காமல்
வாடும் போதும்...

வறுமையை நீ
உணரும் போதும் ,
உன் பேச்சை
கேட்காமல்
நடக்கும்  போது
நீ உருவாக்கிக்கொள்வது.

இன்பம் என்பது
உன் உடல் கொண்டது
உன் கண்கள் சொல்வது
உதவி செய்வதிலும்
உன்னை புகழம்போதும்
உறவுக்கொள்ளும்போதும்
நீ வாங்கிக்கொள்வது.

இதில் எனக்கு
என்ன வேலை!
நான் எங்கே இருக்கிறேன்...

என்னை நீ 
அறியவேண்டுமா...
உனக்குள் நான்
என்பதை போக்கி,
எனக்குள் நீ என
ஆகவேண்டும்...

அமைதி பெரு முதலில்.
தியானம் செய் தினமும்.
மேல உள்ள அனைத்தும்
விலகும்.
விடியல் பிறக்கும்.

என்னை நீ அறிவாய்
என்னை...
உள்ளம் 
என்பது தெளிவு
அறிவு 
என்பது அழகு.
முறையாய் நீ பழகு.
என்னை நீ 
உணர்ந்து வாழு...!

22 ஜன., 2012

வேறுபாடுகள் !

மதம் நம்பிக் கொல்வதால்
உலகில் இறந்தது
மானிடம்!


மனம் நம்பிக்கை
கொள்வதால
இன்னும் மனிதம்!

போலிச் சாமியார்...
போலிச் சாமியார் இவர்.
சாமி வேடம் போடுவார்.
மறு அவதாராம் என்பார்.
மதிக்கெட்ட சிலபேர்,
கையெடுத்து வணங்குவார்.
சொல்வதை வேதம் 

என்றேக்கொள்வர்...

தாரம் இல்லா வாழ்விதனை 
சுகம் என சொல்வார்.
தனியே தரங்கெட்ட 
உறவுகளுடன் கூடி மகிழ்வார்...

இதை அறியாமலே 
சிலர் இவரை நாடிப்போவார்
நினைப்பது எல்லாம் 
நடக்கணும் 
என வேண்டிக்கொள்வார் 

தனிமனித 
வழிப்பாடுகளை 
கைப்பற்றிக்கொள்வார்...

கீதை
குரான்
பைபிள்
சொல்லாததையா 
சொல்வார்!

எல்லா வேதமும் 
நம் மொழிகளில் இருக்கு
படித்துவிட்டால் 
அறிந்துக்கொண்டால்
புரிந்துக்கொண்டால் 
புத்தி தெளியும் உனக்கு

21 ஜன., 2012

நாய் குரைக்குது ...சிரிக்க மட்டும்

இதோ பாருங்க நான் பாடும்போது எல்லாம் 
உங்கள் நாய் குரைக்குது ...

ஏன் நீ குரைக்குது என்று நினைக்கிறே
பின்னனி இசை கொடுக்குது என நினை...

   
=============================================
நான் வெற்றி பெற்றா நன்றி 
உள்ள நாயா இருப்பேன்...

தோற்றால் என்னவாய் இருப்பீர்கள் ? 

வெறி நாயா கடிப்பேன்.... 

அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.
==============================================

கொலை...வேடிக்கை பார்க்கும
கைகளுக்கு
பட்டாசு
கிடங்கில் வேலை.

ஊசி வெடி, 

யானை வெடி ,
என சொல்வதுவுண்டு.
அத்தனையும் இந்த
பிஞ்சுகள் 

செய்வது வருவதுண்டு

ஏழ்மை இங்கு
ஏக்கத்தோடு பார்க்க ...
பட்டாசு பரிதாபத்தோடு
பார்க்க...


தீயோ வெறியோடு பார்க்க...
பாதுகாப்பு

இல்லாத வாழ்க்கை...

வறுமை கொண்ட 
வாழ்க்கை
ரொம்ப கொடுமை. 
வாழனும் என்பதற்கு
செய்யும் வேலை


கந்தகம் வெடித்தால் 

உடல்கள் 
சிதறும் நிலை...


இது ஒரு வகை 
வறுமை செய்யும் 
கொலை...

நீ மாறவேயில்லை...சிரிக்க மட்டும்


காதலி:
உங்ககிட்ட பேசிக்கொண்டு இருந்தாலே 
நேரம் போவதே தெரியவில்லை...
காதலன்:
ஆமா..ரொம்ப நேரமாச்சு 
வீட்டில் எனது மனைவி  தேடுவா 
காதலி:
எனது புருஷனும் தேடுவார் ...
நான் வரேன்...!

========================================
காதலன்:
இனிக்கு என்ன ரொம்ப அழகாய் 
இருகிறாய் புது டிரஸ் சூப்பர்...
காதலி:
நன்றி :எங்கள் கல்யாண நாள் 
எனது கணவர்  வாங்கி தந்தது...
=========================================
காதலன்:
இருபது வருடம் ஆகியும் 
இன்னும் நீ மாறவேயில்லை...

காதலி:
ஆமா அதே வீடு தான்,அவருக்கு சம்பளம்  குறைவு...

காதலன்:
    
===============================================

20 ஜன., 2012

தூக்கு தண்டனையே....சிரிக்க மட்டும்நம்ம தலைவர் ஏன் அந்த ஆளுக்கு 
எப்போதும்  பயப்புடுகிறார் 

தலைவர் நடிக்கும் போது 
அவர் தான் மேக்கப் மேன்

அப்போ  தலைவரோடு உண்மை முகம் 
தெரிந்தவர் என்று சொல்லு..
======================================
நீங்கள் செய்த ஊழல் நிருபிக்கப் பட்டதால் 
உங்கள் தலைவர் நடித்த படத்தையும் 
உங்கள் கட்சி தொலைகாட்சி 
நிகழ்சிகளையும் ஒன்று விடாமல் 
தினமும் தனியா பார்க்கணும்...

ஐயா இந்த தண்டனைக்கு 
தூக்கு தண்டனையே 
கொடுத்திருக்கலாம்...
=======================================

இங்கிலிஷில் பேரு...சிரிக்க மட்டும்


அரசியல் தோசை என்றால் என்னப்பா ?

எல்லா மாவும் கலப்படம் 
கொண்ட தோசை சார்..
சாப்பிட ருசியா இருக்கும்     
=============================================
சாப்பிட என்ன இருக்கு 

சூடா இந்திய பீசா இருக்கு 

புதுசா இருக்கே எப்படி  இருக்கும் 

 தோசைக்கு இங்கிலிஷில் பேரு சார்.

    


==================================================

காதல் இலக்கியம்...


வரலாறுகளை 
வாய்க்கு வந்தபடி 
எழுதுவதும் 
பாடுவதும் 
இவ்வுலகத்தில் 
இருக்கு...

பொய்யை 
உண்மையாய் 
உருமாற்றி 
அழகுபடுத்தி 
சொந்தம் 
கொண்டாடுவதும்...

உள்ளதை 
உலகிற்கு 
கற்பனை கலந்து 
கதை விடுவதும் 
கை வந்த கலையாய்
இங்கு...

இதற்கு 
தாஜ்மஹாலும் 
விதி விலக்கா
இல்லை...

இதற்கும் 
கதைகள் பல 
சொந்தம் 
கொண்டாடும்...
உண்மையை
மறைக்க

திசைத் திருப்ப...

இருந்தாலும்
இன்னும்
பேசப்படுகிறது
கட்டிட அழகு
ரசிக்கப்படுகிறது
காலத்தால் அழியாத
அதிசியமாய்...

உறவுக்கும்...
இல்லறத்துக்கு
இணங்கிய
இரு உயிர்களின்
காதல் இலக்கியம்
என்றே...

நாமும் அரவணைப்போம்...
குழந்தை 
தொழிளார்களுக்கு
சட்டமுண்டு
இருந்தும் 
வேலைக்கு 
சேர்ப்பதுக்கண்டு
கோவம் வருவதுண்டு 


பிச்சை எடுப்பதை 
தடுக்க நினைப்பதுண்டு 
இருந்தும்
இப்படி குழந்தைகளை 
கண்டால் மனதில் 
இறக்கம் கண்டு 
கொடுப்பதுமுண்டு 


கையேந்தும்
குழந்தைகளுக்கு
அரவணைக்க யாருண்டு...


பிள்ளை இல்லாத
பெற்றோர்களும்,
இவர்களை தத்து எடுக்க
தயங்குவதுண்டு


பெற்ற பெற்றோர்களும் 
வயிற்றுக்கு
பிச்ச எடுக்க
பிள்ளைகளை
அனுப்புவதுண்டு


இதை தொழிலாகவே
செய்வதுண்டு
இதற்காக குழந்தைகளை 
கடத்தும் கூட்டமுண்டு 


எல்லாம் அறிந்தும் 
தெரிந்தும் 
இவர்களை 
அரவணைக்க 
யாருண்டு....


பெற்றால் தான்
பிள்ளையா ...
என்ற கேவியோடு 
உதவும் கரங்கள் 
இருப்பதை போல


நாமும் அரவணைப்போம் 
இல்லாமை தடுப்போம் 
கல்வியை கொடுப்போம் 

19 ஜன., 2012

நகைசுவை நூறு....

டாக்டர் :

உங்களுக்கு பத்து மணிக்கு 
ஆபரேஷன்...கடைசி 
ஆசை ஏதாவது இருந்தால் 
சொல்லுங்கள்....

நோயாளி:

இதுவே உங்களுக்கு கடைசி 
ஆப்ரேஷனாய் இருக்கட்டும்..

டாகடர்:
    
==================================
தலைவருக்கு இருந்தாலும் இந்த நக்கல் 
கூடாது....

எதுக்கு சொல்லுறே?

எதிர் கட்சி தலைவருக்கு 
படை,சொறி வந்தததை 
சுட்டிக்காட்டி இந்த படை 
போதுமா இன்னும் கொஞ்சம் 
வேணுமா என்று சொல்லுகிறார்...

==================================

நானும் என் மனைவியும் 
காதலித்து கல்யாணம் செய்தவர்கள்

எனக்கு தெரியும் ?

எப்படி... யாரு சொன்னா ?

அடிக்கடி உங்கள் மனைவி 
காற்றுவாங்க போனேன் 
வரும் வழியில் ஒரு கழுதையை 
அழைத்துவந்தேன் என்று 
பாடுவதை கேட்டது உண்டு....

======================================
டாகடர் :

உங்களுக்கு என்ன வியாதி ?

நோயாளி :

நான் நோயாளி இல்லே 
நன்கொடை வாங்க வந்தவன்...

டாகடர் :

அப்படியா அப்ப
சின்ன  அபரேஷன் பண்ணிவிட்டால் 
எல்லாம் சரியாகிவிடும்...

நோயாளி :
அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.அய்யோ நான் இல்லை.