28 பிப்., 2010

இந்த பேனா ,விழியாகி போனது!
என் எண்ணங்களை
எழுத்தாக்கி,
அதை தமிழ்
மொழியாக்கி,
எளிய நடையில்
கவிதையாக்கி,
காதல் சொல்ல
வழியாக்கி ,
இந்த பேனா
விழியாகி போனது.
எழுதுவற்கு 
உயிரானது.
என் வாழ்க்கையில்
பேனா ஒன்றானது.
சுகமானது.


மரணத்தில் அடங்கும்!

உலகத்தின் உதயம்
கதிரவனுக்கு உரிமம்.


உண்மையின் உதயம்
தாய்மையில் தொடங்கும்.


அன்பின்   உதயம்
மனதுக்கு புரியும்.

நட்பின் உதயம்
கஷ்டத்தில் அறியும்.

இனிமையின்  உதயம் 
மனைவியிடம் கிடைக்கும்.

தலைமுறையின் உதயம்,
பிள்ளைகளாய் வளரும்.

சந்தோசத்தின் உதயம்,
பேரப்பிள்ளைகளாய் மாறும்.

வாழ்வின் உதயம்
மரணத்தில் அடங்கும்.

நிலவே இன்று....நிலவே!
உன்னை தேடிப் பார்த்தேன்
எங்கு ஓடி ஒழிந்தாய்?

இரவின் ஒளியாய்
கவிதைக்கு ஒலியாய்
காதலுக்கு விழியாய்
உறவுக்கு வழியாய்
வலம் வந்தவளே!

இன்று உனக்கு விடுமுறையா ?
அம்மாவாசை என்னும்
வழிமுறையா ?
இதுதான் விதிமுறையா .

உன்னை காணமல் எனக்கு
இன்று தூக்கம் துக்கம் தான்.


நாளை வளர்பிறையாய்
வந்து விடு.


மீண்டும் புதுக்கவிதை
சொல்லிவிடு!                                    


உலகம் பார்க்கும் வியப்போடு!

உன் விரல்கள் ஐந்தும் மூலதனம்-என்று
உன் செயல்கள் அமையும் வண்ணம் உழைத்திடு!
உன்னால் முடியும் என்ற எண்ணம் -தோன்ற
உலகத்தில் வெற்றிக் கொடி ஏற்றிடு!

உழைப்பு என்றும் உன்னோடு -என்ற
உதிக்கும் கிழக்காய் இருந்திடு!
உண்மை பேசும் உறுதியோடு-வாழ்ந்தால்
உலகம் பார்க்கும் வியப்போடு!

மனித நேயம் வளர வேண்டும் !

வீட்டுக்கு வீடு, வெளிச்சத்தில் வாழ்கிறோம்.
உள்ளத்தை  இருட்டாக்கிக் கொள்கிறோம்.


சீண்டல், கிண்டல், கொண்டு மகிழ்கிறோம்.
அடுத்தவரின் துன்பத்தைக் கண்டு ரசிக்கிறோம்.


நம் வாழ்க்கையை, இப்படியே கழிக்கிறோம்.
நன்மைகளை செய்யவே, மறுக்கிறோம்.


நல்லதை சொன்னால் சிரிக்கிறோம். 
நெருப்பாய் தானே பார்க்கிறோம்!

இந்த நிலை மாறவேண்டும்!
நமக்குள் மாற்றம் வேண்டும்!


அடுத்தவர் நிலை அறியவேண்டும் !

அல்லல் போக்க உதவவேண்டும்!

புறம் பேசுவதை நிறுத்தவேண்டும் !
மத வெறியை புதைக்க வேண்டும் !மனித நேயம் வளர வேண்டும் !
மனிதனாய் மீண்டும் மாறவேண்டும்.

உலகம் உன்னை சபிக்கும்.

பயன் தரும்
வாழ்க்கை எனக்குள் இருக்க
இருக்கைகள் துடுப்பாய் பார்க்க
எதிர் நீச்சல் போடா எனக்கென்ன
பயம்.

இருப்பதை கொடுத்து
ஈகையில் வாழ்வேன்.
வருவதை கொண்டு
வளமுடன் வாழ்வேன்.


நேற்றய உலகமும்,
இன்றைய உலகமும்,
என்னோடு இருக்க.
நாளைய கனவுகள் எதற்கு?

நன்கு திசைகளும்
எனக்குள் அடக்கம்.
சூரியன் உதிக்கும்
திசையோ
என் வீட்டில் துவக்கம்.

பயன் தரும்
வாழ்க்கை

எனக்குள் இருக்க
ஏழ்மை என்னை கண்டு
நடுங்கும்.


முன்னேறும்  வாழ்க்கை
முகவரியாய்  இருக்க...
கையந்தி நீ நின்றால் 

உலகம் உன்னை சபிக்கும்.
உன் கைகளில் வாழ்க்கை உண்டு.இதோ உன் கைகளில் வாழ்க்கை உண்டு.
இருக்கும் போது அதை எதிர்க்கொண்டு,
இனிதே முனேறு, உருண்டு, புரண்டு ,
இவ்வுலகம் வலம் வரும் உண்டோடு !

இல்லை இனி பழைய சோதனை!
இன்று நடக்கும் புதுப் போதனை!
இன்பம் கொள்ளும் வாழ்வினை!
இணைத்துவிடும் உன் சாதனை!இனிமை என்னும் படகில் நீ இருக்க 
இருக்கைகளும் துடுப்பாயிருக்க 
இனில்லை  ,இல்லை தோல்வியில்லை
இருக்கும் வரை உனக்கு வெற்றியின் மாலை.


காற்றில் கலப்படம்.
நச்சுகளை வெளியிடும்
தொழிற்சாலைகள்...

இவர்களுக்கு பெயர்
தொழிலதிபர்கள்.
தண்ணீரில் கலப்படம்.

சாயப்பட்டரை கழிவுநீர்
ஆற்றில் கலக்கல்.
இவர்களுக்கு பெயர்
முதலாளிகள்!கடலுக்குள் 
கப்பல் முழுகியது...
கடல்  நீரும்  எண்ணெய்...
மாசுபடுத்தும் இவர்கள் 
ஆதிக்கவாதிகள்!

ஆதிவாசிகள் வாழ்கையே 
இன்று அவசியம்,
உலகத்தை மாசுபடுத்தாமல் 
மனித இனம் வாழும் !


மண்ணியில் மறைய போகும் வாழ்க்கையில்...உள்ளத்தில் ஒன்று , உதட்டில் ஒன்று  என பேசுகையில்
சொந்தம், பந்தம் ,தனித்து வாழும் நிலையில்,
என்றோ ஒரு நாள் ,தொடரும் உறவில்,
தன்மையில் ,வெறுமையில்,இருக்கையில்,
பாட்டில்,இணையத்தில்,மாறிய காலத்தில்,
பெருமையில், பகட்டியில்,பொறாமையில்,
சொல்லில்,செயலில்,நடக்கையில்,
இந்த வாழ்க்கை, எத்தனை நிறத்தில்,
இருப்பதை பார்க்கும் ,நேரத்தில்,
வீண் பேச்சில் வெற்று கூச்சலில்
இன்னும் தொடர்கிறோம் வீண் விளையாட்டில்,
மண்ணியில் மறைய போகும் வாழ்கையில்,
ஏழைகள் கையேந்தும் நிலையில்,
கந்தல், கிழிந்தல்,பார்க்கையில்,
இன்னும் இறக்கம் வரவில்லை உள்ளத்தில்,
இல்லாமை , இல்லமால் போகும் வகையில்,
இனிதே இணைத்துவிடுவோம் ஈகையில்!

வீசும் ஜாதி வலைகள்...!ஜாதிகள் இல்லை என
வாயளவில் சொல்வது உண்டு.
தேவையனில் ஜாதியை
சொல்லி கருனைக்கப்பதுமுண்டு!

6 க்கும் 60 க்கும்
ஜாதி சண்டைகள்.
விதியாய் வந்த
ஜாதிப் பிணிகள்.

இன்று ஒன்று, நாளை ஒன்று
வரும் ஜாதி சங்கங்கள்.
இதை பார்க்கும் அரசும்
தடுக்காத சங்கதிகள்.

ஒட்டு கேட்பதற்கே
வீசும் ஜாதி வலைகள்
உழலை மறைக்க
அரசிவாதிகளின் வழிகள்.

மதத்தின் பெயரால் 
சண்டைகள்.
வேண்டும் என்று 
செய்கிறது 
சில தலைகள்!

காந்தி தேசம்,
ஜாதி, மத கரைகளோடு...
இருந்தாலும் 
இன்னும் மனிதம் நேயம் 
இருக்கு நம்மோடு !

26 பிப்., 2010

முருங்கை கீரை அரும் மருந்தாகும்.முருங்கை கீரை
அதன் மகத்துவம் 
அறிவீரோ!


தாது பலத்துக்கும்
தூதுவாகும்.


ரத்த அழுத்தமும்
குணமாகும்!


கொழுப்புகள் கூட
கரைந்து போகும்.
சக்கரை நோயும்
குறைந்துபோகும்!


கண் பார்வை தெளிவாகும்.
நீ உணவாய் உண்டால்
நலமாகும்!


முருங்கை கீரை
அரும் மருந்தாகும்.
நம் வீட்டில்
முருங்கை வளர்த்தால்,
சில நோய்கள்
பயந்து போகும்!

இளகிய மரம்
காற்றுக்கு இணங்கிடும்.
நம் உடலுக்கு
பலம் தரும்
இதன் தந்திரம்.

உடலுக்கு முறுக்கு
தந்திடும் முருங்கை .
உடல் முழுதும்
பாய்ந்திடும் வேங்கை.


இரவுக்கு இது இனிப்பு
இந்த முருங்கையே
ஆண்மைக்கு உகப்பு 
இதன்  சிறப்பு...

சச்சின் சாதனைனின் மந்திரம்!


சரித்திர நாயகனே !
சாதனைத் திலகமே!

சாதனையை முறியடிப்பதில் 
முதல்வனே!

உனக்கு நீயே சாதனை.
சாதனை செய்வதே
உன் வேலை !

சாதிக்க பிறந்தவனே
சந்தித்த பந்துகள் எல்லாம்
உன் சரித்திரத்தில்
சாதனையை சொல்லும் .

மீண்டும் அந்த
சாதனையை நீயே
முறியடிப்பாய் என்பது
எங்கள் எண்ணம்!

உன் உள்ளத்தின் எண்ணம் 
உறுதியாயிருப்பதால்
உறுத்தும் பந்துகளும் 
உன் அடிக்கு உடைந்து தானே போகும்!

களமிறங்கினால் போதும்..
சாதனையின் மந்திரம் 
சாதிக்க துவங்கும் !

அப்பப்பா அழுகை போதும் நிறுத்தப்பா.

அழகு கொண்ட
உன் முகத்தில்
அழுகை கொண்டால்
தப்பப்பா.
செல்லப்பா
செவி சாய்த்து
கேளாப்பா.
முத்தப்பா என் முகத்தை
கொஞ்சம் பாரப்பா.
உன் அப்பாவை
பார்த்து பயமாப்பா?
அவரும் இங்கு
குழந்தையப்பா.
அப்பப்பா அழுகை
போதும் நிறுத்தப்பா.

வெங்காயம் !

என் பெயரை
அடிக்கடி
சொன்னவர் பெரியார்!


என்னை பார்த்தல்
எரிச்சல் உண்டாகி
கண்ணீர் வரும்.
இப்பினும் என்னை
வெறுப்பவர் யாருமில்லை.

நானில்லாமல்
எந்த உணவும் ருசிப்பதில்லை.
என்னை உரித்தால் ஒன்றுமில்லை.


என்னை
அறிந்தோருக்கு சுவையாவேன்!
நானோ அணைப்புக்கு
ஆண்மையாவேன்


மாம்பழம்.எனது பூர்விகம் 
இந்தியாதான்.
முதலில் என்னை 
புரிந்துக்கொள்ளுங்கள்!

என்னை சூடு என
ஒதிக்கி வைக்காதே!
என் பலனை 
அறிய மறவாதே!

எனக்குள் இருப்பது
ஏ,சி,வைட்டமிகள்
தோலோடு உண்டால்
ஓசியாக கிடைக்கும்,
ஆரோகியங்கள்!


என் கொட்டைகளில்
கால்சியம் ,கொழுப்பும்
இருப்பதை அறியுங்கள்.


அல்போன்சா,பகனபள்ளி,
ராஸ்புரி நீலம்,ஒட்டு
மல்கோவா,என எனக்கு
உடன்பிறப்புக்கள்.


எங்களை ரசித்து
உண்ணுங்கள்

இயற்கையாய் கிடைக்கும்
சத்துக்களை சாப்பிட்டு
பழகுங்கள்,
உங்கள் உடலுக்கு உதவுங்கள்.


முக்கனிகளில் ஒன்று பலா!

முக்கனியில் ஒன்று
இந்த பலா.

பெண்ணின் இதழை விட
சுவை இந்த பலா.

மூளைக்கும் ,உடலுக்கும்
பலம் சேர்க்கும் பலா .

ரத்தத்தை விருத்தி
செய்யும் இந்த பலா .

முள்ளாயிருந்தாலும்
சுவை தரும் பலா .

எதிர்ப்பு சக்தி தரும்
பழமாய் வலம் வரும்
இந்த பலா!

பழத்தில் பலா,
இது ஒரு நிலா.


பட்டாசு.
வேடிக்கை பார்க்கும்,
கைகளுக்கு
பட்டாசு
கிடங்கில் வேலை.

ஊசி வெடி, யானை வெடி ,
என சொல்லுவதுண்டு 
அத்தனையும் இந்த
பிஞ்சுகளே  செய்வதுண்டு!

ஏழ்மை இங்கு
ஏக்கத்தோடு பார்க்க .

பாட்டாசு பரிதாபத்தோடு
பார்க்க...

தீயோ வெறியோடு பார்க்க...
பாதுகாப்பு இல்லா
வாழ்கையை இது !

வாழனும் என்பதற்கு
செய்யும் வேலை.

வறுமை கொண்ட
வாழ்க்கை!

மரணத்தோடு ...
ரொம்ப கொடுமை.

மறப்பது மனிதனின் வர்க்கம்.


நான்
தாயுள்ளம் கொண்டவள்
என் பெயர் மரம்.


நீ மறந்தாய் என்னையே.
உக்கார இடம் தந்தேன்
முக்காலியாய்
நாற்க்காலியாய்...!


உன் வீட்டுக்கு
தென்றல் வர வழித்தந்தேன்,
ஜன்னலாய்.


நீ இளைப்பாற தொட்டிலாய்,
உன் வீட்டுக்கு காவல் காக்க
கதைவுகளாய்...
நீ அமைதி பெற குடையாய்...


கொடையாய்
பயன் தந்த என்னை,
மறந்தாய்!


இன்று நீயும்
ஒரு சுயநலவாதி!
மரத்தை மறந்தாய் 
அனைத்தும் இழந்தாய்!

பயன் தருவது
என் எண்ணம்
அதனை மறப்பது ,மறுப்பது 
மனிதனின் வர்க்கம்.

வேர்கடலை.


கடற்கரையில் ,
டீக் கடையில் 
கடலை போடும்
காளைகளே!
வேர்கடலையோடு
கடலை போடுங்களே.

கடைகளில் எளிதாக
குறைந்த விலையில்
கிடைக்கும் முட்டை இது.

ஏழைக்கு சத்து தரும்
வேர்கடலை இது!

மண்ணுக்குள் முளைக்கும்
ஏழை வைரமிது!

முழு பலன் கொடுக்கும்
கடலை இது!

கால்சியம் ,இரும்பு
வைட்டமின் ஈ நிறைந்த
மருந்து இது.

நம்ம காந்தி தாத்தா
தினம் கொறித்தக் கடலைஇது
நாமும் கொறித்தால்
பலன் தரும் கடலை இது

கொலைகாரன் இவன்
தனக்கு தானே
கொன்று ,
பிறரையும்
கொல்லும் 
புகைக்காரன் 
இந்த கொலைக்காரன் புகை பிடிக்க 
அதன் கைப் பிடித்து
மரணத்தின் கிணற்றை
எட்டிப்பார்த்து 
தானும் விழுந்து,
நண்பனையும் சேர்த்து
கொலை செய்யும்
கொலைகாரன் இவன்.


இவன்  பெயரோ 
புகைபிடிப்பவன்.
தானும் கேட்டு 
தன்னோடு வாழும் 
பிறரையும் கொல்லும்
நய்வஞ்சக்காரன் 
இந்த புகைப்பிடிப்பவன்!

சோம்பேறியின் சொல்.நேற்று
நினைத்தேன்
நாளை
செய்யல்லாம்
என்று.

இன்று
நினைக்கிறன்
நாளை
பாக்கலாம் என.

இன்று
இருப்பதையே
நான் மறந்தேன்!


தள்ளிப்போடும்  நிலையோடு
இருந்தால் எல்லாம் பாழாகும்


எடுக்கும் வேலையை
அன்றே முடித்தால் வெற்றியாகும்.

சுறுசுறுப்பாய் இருந்தாலே
சோம்பேறித்தனம் விலகும்.

ஆப்பில் ஒரு பார்வை.ஆப்பில்!
உலகத்தின்
தோற்றத்திருக்கும்,
ஐஸக் நியூட்டனுக்கு
புவி ஈர்ப்பு சக்தியை
அறிமுகம் செய்ததும்.
இந்த ஆப்பில் தான்.

தினம் ஒரு ஆப்பில்
சாப்பிட்டால்
உடலுக்கு நல்லது,
உடலோ மருத்தவரை
நாடாது.

கர்ப்பக் காலத்தில்
ஆப்பில் பெண்ணுக்கும்
உகந்தது,சிறந்தது.

ஆப்பில் தான்
மனிதனின் பழகினத்தை
உணர்த்திய முதல் பழம்
ஆரோக்கியத்தின் அடித்தளம்.
உலகின் அஸ்த்திவாரம்

இலந்தப்பழம்.இலந்தப்பழம்...
இளமை கொண்ட
இனியக்காலம்,
இன்று
இலைவுதிர்காலமாய்
இருக்கும் கோலம்.

ஏழைக்கு கிடைத்த
பழம் ஒன்று ,
சிகப்பு நிற
சின்ன ஆப்பில்
என்று
கூறுக்கட்டி
கூவியக்காலம்
போனது எங்கு?


பள்ளிக்கு முன் 
அளந்து தரும் 
பாட்டிம் போனது எங்கு!

இன்னும் சுவை 
மனதுக்குள் 
நினத்துப்பார்தாலே
சுகமாயிருக்கு!


கைக்கு அடக்கமாய் 
கடித்து துன்ன வாட்டமாய் 
இழுக்குது ..என்று 
பட்டி தொட்டில் எங்கும் 
கலக்கிய பாட்டு
கேட்டாலே இழுக்கும்!


இழந்த பலத்தை துன்ன 
துடிக்கும்!

இலந்தப்பழம்.
இந்த தலைமுறை 
இழந்தப்பழம்.
இனி கிடைக்குமா
இந்த
ப் பழம் ?

24 பிப்., 2010

பெரியார் சாமி !

வெட்டு ஒன்னு,
துண்டு இரண்டு
என பேசிய
ஈரோட்டுகாரர்...


நடுரோட்டில்
சிலையாக உள்ளார்!நாத்திகம் பேசும்
ஆசாமிகளுக்கு
சாமியாகி போனார்!

முரண்பாடுகள்.!
தீக்குப் பிடிப்பதே இல்லை!
தீ பிடித்து எரிந்ததுமில்லை!

தலைவர் கைது
தொண்டன் தீக்குளிப்பு!
ஆட்சிக் கலைப்பு
தொண்டன் தீக்குளிப்பு!

எந்த தலைவர்,
தலைவி,
வீட்டுப் பிள்ளைகளையும்

தீ பிடித்தாய் செய்தியில்லை
இவர்களை இந்த...
தீக்குப் பிடிப்பதே இல்லை.
தீ பிடித்து எரிந்ததுமில்லை!

அகதியின் ஆதங்கம்!

நாங்கள்
அடிமைகள் அல்ல
அகதிகள் !


ஒன்று தெரியுமா ?
நேற்றைய அதிபதிகளே...
இன்று  நாங்கள்   அகதிகள்!

உங்கள் நாட்டிற்கு வந்தது
அதிகாரத்தில் பங்கு
கேட்டு அல்ல!உங்கள் அன்பான உறவுகளை
கேட்டு வந்திருக்கிறோம்.இன்றைய நிலைக்கொண்டு ,
எங்க ஏழ்மையை கண்டு ,
எங்கள் வாழ்க்கையை
ஏலம் போடாதிர்கள்!


சோற்றுக்கு கையேந்தும்
பிறவிகள் அல்ல நாங்கள்.


எங்கள் சோகத்திருக்கு
வரலாறு உண்டு .


விடியலை நோக்கும்
விடுதலைக் கதிர்கள் நாங்கள்!


எங்களுக்காக எங்களையே
இழப்பதற்கு  தயங்காதவர்கள்.


எங்கள் இறப்புக்கூட
மற்றவர்களை காயம்படுத்தக் கூடாது
என்ற எண்ணம் கொண்டவர்கள்.


எங்கள் எண்ணம் எதிரியை நோக்கி...
அப்பாவி மக்களை அல்ல.


நாங்கள் தீவிரவாதி இல்லை!
பலமைவாதியும் அல்ல.
சீர்திருத்தவாதியும் அல்ல!


விடியலை நோக்கி
மண்ணுக்காக போராடும்
விடுதலைவாதி!


முன் ஜாக்கிரதை !


என் இதயம்
உன் பெயரைத்தான்
சொல்கிறது என
கவிதைக்கு தான்
சொன்னேன்.


அதுக்காக இப்படி
சோதித்து பார்ப்பது சரில்லை.


நீ முன் ஜாக்கிரதை பேர்வழி
என்றாலும் அம்மாடி 
அதுக்காக இப்படியா ?

22 பிப்., 2010

புதிய பிறப்போடு!வேலை கிடைக்கவில்லை.
வாழ்கையின் வெறுப்போடு ,

சலிப்போடு, உள்ள வர

வருத்தமும், கோபமும்,

கைகுலுக்கியது !


இன்னும் அப்பாவின்

அர்ச்சனையும் சேர ,

நண்பனின் உயர்வு

பொறாமை கொள்ள ,

தற்கொலை,எண்ணம்,

தலைக்கேறியது


எடுத்தேன் மாத்திரையை,

இன்னும் சிலமணி நேரம்

என்ற எண்ணம் மேலோங்க,

ராசா என்ற மொழிக்கேட்டன்.

தாய்மையின் குரலாய்!


யாரது என கேட்டேன்

நான் தான் தன்னம்பிக்கை

என்றது !முழித்தேன்.

தன்னம்பிக்கை  பேசியது,
தற்கொலையோடு ஏன்
உடன்பாடு !
நம்பிக்கை உறுதியோடு...

இன்னல்கள் இணையும் போது 
இருக்கைகள் இருக்கு பாரு.
இனியுமா தற்கொலை எண்ணத்தோடு 
இறக்கணுமா கேள்வியை கேளு 

தன்னம்பிக்கை நான்

இருக்கிறேன் உன்னோடு .

என எண்ணியே  புறப்படு

புதிய பிறப்போடு!
நாளை எதற்கு ?உன்னை தந்த நேற்றும்
நம்மை சேர்த்த இன்றும்

இனிமையாய் இருக்கும்போது

நாளை எதற்கு ?

காலமும்  ,களமும்,
வெற்றிக்காக காத்திருக்க,
நாணயமும் ,நேர்மையும்...
நமக்குள் இருக்க  கவலை எதற்கு?

உண்மையும் உழைப்பும் 
நம்மோடு இணைந்து இருக்க 
உள்ளம் கொள்ளும் அமைதி 
தந்து மகிழும் இன்று போதும் நமக்கு!

கிழக்கும் மேற்கும் துணைக்கு 
அழைத்து, புதிய உலகம் படைத்து,
உதிக்கும் மனம் நமக்குள் இருக்க 
இனி நாளை எனபது எதற்கு?


இரவே இனிமையானது.வெண்ணிலவுக்கு
ஒளியானது.

மனித வாழ்வுக்கு
முறையானது.


புதிய உறவுக்கு
உறவானது.இரு உடலுக்கு 
இனிமையானது

மனதுக்கு
நிறைவானது .
மனதை மயக்கும்...

இரவே 
பெண்ணானது 
இணைக்கும் பாலமானது.

இந்த இரவே உறவுக்கு
இனிமையானது.


சிறப்பு!
எனது
பார்வைகள்  சில

பாவைகள் மீது

விழுந்தாலும் ...

நான் பாவியாய் 
மாறாமலும்...
என் கற்பு

களங்கப்படாமல்

இன்னும் இருக்க...


இல்லறம் நல்றமாய்
இருப்பதே அதன்
சிறப்பு!

முறைப்பு!அன்பே!
நீ தானே சொன்னாய்
முத்தத்தின்  சிறப்பை
அதை
உன்னிடம் முயற்சி
பார்த்தால் ஏனடி ,
முறைப்பு!

தடுப்பு இல்லாத இனிப்பு 
கேட்டால் ஏனடி விறைப்பு!
முத்தத்தோடு 
உன் முகவரியை இணைத்து 
இல்லறத்துக்கு இணங்கு !

வெறுப்பு!உன்னை பார்க்காத
ஒவ்வொரு 
நாட்டகள் மீதும் 

உன்னை 
பார்த்துவிட்டால் 
வேகமாய் ஓடும் 
மணித்துளிகளை 
நினைத்தும்...

நீ என்னை 
நெருங்கி வந்து 
விலகும் போதும் 

எனக்குள் ஒரு ....
படம் சொல்லும் கவிதை!நீ ஊமை இல்லை
எனபது தெரியும்

இன்னும் ஏன் மௌனம் ?


உன் மௌனத்தின் அர்த்தம்

தெரியவில்லை.உனது இந்த வழி எனக்கு 
புரியவில்லை 

என் காதலை

உண்மை என

கொள்!


ஊமையாய் 

வேஷம் போடாமல்
உன் இதழ் திறந்து

பதில் சொல்!
பூனையாய்...
என் காதலி ,
நான் தந்த முத்தத்தில்

பூனையாய் இருந்தவள்
புலியாய் மாறினாள்.


நானோ,
அவள் தந்த முத்தத்தால்

புலியாய் இருந்தவன்

பூனையாய் போனேன்!

புளியாய் கரைந்தே  போனேன்!

எனது நிலை !


கிழிந்த புடவையோடு 
எனது வேலை


தோட்டத்தை காக்கும் 
வேலியாய் எனது வேலை 


வேலை முடிந்தால் 
வேலைக்கு ஒரு பிடி 


உணவுக்கே எனது 
கைகள் அடிக்கடி 


அடித்து பின்னும் 
சேலை கவனாய் இருக்குதடி


மனத்தை மறைக்க 
மட்டுமே இங்கு...


இருப்பதை இழக்காமல் 
வாழும் நிலையடி 


எங்கள் புடவை நெய்தல் 
வேளையடி...

மண்கோட்டை :


என் மனக்கோட்டையில்
வைத்து அழகு பார்த்தேன்
பிடிக்கவில்லை அவளுக்கு!

சொந்த கோட்டை
கட்டவேண்டும் என
எதிர்பார்ப்பு!

இந்த கட்டை
வாழ்வதற்க்கே வழியில்லை
நான் எங்கே போவேன்
எனது ஏழ்மையை சொல்ல...
என் காதல் கோட்டையை
தகர்த்துவிட்டால்.


இப்போது என் மனக்கோட்டை 
காற்றுக்கும், மழைக்கும்,
நிறம் மாறும்
மண் கோட்டையாய் போனது .


தொடர்ச்சியாய் முத்தங்கள்!முதல் முத்தம்.
தாயிடம் .


பாசத்தின் முத்தம்

தந்தையிடம்.


வெற்றியின் முத்தம்

ஆசானிடம் .


தோழன்மை முத்தம்,

நண்பனிடம்.


உணர்ச்சியின் முத்தம்,

மனைவிடம்.


தலைமுறை முத்தம்

மகனிடம்.


வாழ்கையின் முத்தம்

வாழும் முறைலும்.


கடைசி முத்தம்

மரணத்திலும் .

ஒவ்வொரு காலகட்டத்திலும்,
தொடர்ச்சியாய் முத்தங்கள்!

முத்தத்தின் சத்தங்கள்...
நாம் பெற்ற பாக்கியங்கள்!

குற்றத்தை ...வாழைபழத்தை
உண்டபின்
தோலை நடுரோட்டில்
தூக்கிஎறிவதில்
ஒரு சுகம் கண்டேன்.

தவறு என்றவர்களை
தலைக்கனத்தோடு
சிரித்து மனமகிழ்ந்தேன்,
அன்று!

அதே தோலால்
நான் விழுந்தபோது
வலி அறிந்து இன்று!

தலை குனிகிறேன்
குற்றத்தை உணர்ந்து!

விடை சொன்னவன்...

  என் இதயப் புத்தகம்.
  குப்பையாய் கிடக்க 
  என்னை

  கூட்டி,கழித்து
  பெருக்கி..

  உன்னையே
  உருக்கி
  புத்தகமாய் தந்து,

  விடை சொன்னவன் 

  நீ அல்லவோ!


  கரு!  என் தந்தை எழுதிய
  கவிதைக்கு நானே
  கருவானேன்!


  இந்த பூமிப்போல!  தாயே!
  இந்த உயிர்
  நீ தந்தது.

  உடலும்

  நீ தொகுத்தது.

  பாசமென்னும் 
  புத்தகத்தை 
  வாழும் காலத்தில் 
  உதிரத்தால் 
  எழுதியவளே...


  காலத்தால் 
  அழியாத 
  தாய்மையை 
  கொண்டவளே...

  உன் சிறப்பு 

  எக்காலத்திலும் 
  நிறம் மாறாது.
  பாசமும் குணம்
  மாறது...

  உனது அன்பு 
  என்னும்
  புத்தகத்தை 

  பார்த்தாலே போதும் 
  மனதில் பதியும்  நான் இருக்கும் வரை 

  இறக்கும் வரை...
  உன் நினைவுகளும் 
  நிழலாய் தொடரும் 
  நிஜமாய் வாழும் 


  நீ தந்த என் உயிரும்
  உன்னையே சுற்றிவரும்.
  இந்த பூமிப்போல!

  ஒரு அழகின் திமிர்!

  என் கல்லறையில்
  காதல் கடிதம்
  கொடுக்க இத்தனை
  காதலர்களா ?


  நான் கல்லாகி
  கரைந்துப் போனாலும்...

  காளையர்கள்
  காதல் கடிதம்
  கொடுக்காமல்
  விடுவதில்லை.

  இன்னும் நான்
  இவர்களுக்கு
  காவிய நாயகிதான்!


  இவர்கள்!

  பெற்றுயேடுத்தவள்
  என் தாய்!

  தத்துயேடுத்தவள்

  என் மனைவி!


  வாழ்வுக்கு விழித்தந்தவள்

  தாய்!


  புதிய வாழ்வுக்கு  வழித்தந்தவள்

  மனைவி!


  மொழியைத்தந்தவள்

  தாய்!


  தலைமுறை  தந்தவள்

  மனைவி!


  வாழ்வின் புத்தங்கள்

  இவர்கள்


  வாழ்கையின் அர்த்தங்கள்

  இந்த உறவுகள் 

  வாழும்போதே கிடைத்த

  சொர்க்கங்கள்,


  புதுப்புது சுகம்...

  கடல் அலைகளோடு 
  அனைத்துக் கொண்டு 
  குளிப்பதில் ஒரு சுகம்..

  கடற்கரை
  மண் மீது உறங்குவது
  ஒரு சுகம் .

  மண் மீது காதலி
  பெயரை எழுதுவது ,
  ஒரு சுகம்.

  சூரியனோடு உறவாடுவது
  ஒரு சுகம் .

  மனைவியோடு கைக்கோர்த்து
  நடப்பது ஒரு சுகம் .

  மனைவியின் மடிமீது
  தலைவைத்து படுப்பது
  ஒரு சுகம் .

  கடற்கரை காற்று
  ஒரு சுகம் .


  காலத்தின் மாற்றமும் 
  கற்று தரும் பல சுகம்!

  சுகம் நம்  வாழ்கையின்
  அங்கம்.

  நம் முகம் மலர
  மனம் மாறவேண்டும் தினம் .
  புதுப்புது சுகம் 

  காண வேண்டும்.

  _______________________________________________

  20 பிப்., 2010

  உயிரின் நிலை இதுதான்.


  பொறாமை ,பெருமை,
  உனக்குள் எதற்கு!

  இருக்கைகள் இணைத்து 
  வாழ பழகு 
  வஞ்சம்,கோபம்

  மறந்து வாழு.


  புரிந்து கொண்டால்

  உன்னை நீ அறியலாம் பாரு.

  காற்றுள்ள போதே

  கொடுத்து உதவு.


  காற்று போன பின்

  நீ வெறும் உடம்பு!

  கற்பு !  கற்பு என்றால் என்ன,
  என கேட்டேன்.

  கற்பு என்றால்
  பெண்மைக்குள்ள
  சிறப்பு என்றார்கள்.
  அந்த சிறப்புரியவர்
  அறிவிர்களா என கேட்டேன்.

  இலக்கியத்திலும் ,
  புராணத்திலும்
  வரும் பெயரை சொன்னார்கள்.

  ஒருவரும் தன் தாயை ,
  மனைவியை ,சகோதரிகளை

  சொல்லமறந்தார்கள்!  கற்பு என்பது தமிழ் பண்பாடு 
  காலம் காலமாய் இந்த கோட்பாடு..
  பெண்களுக்கு மட்டுமே உடன்பாடு !


  கற்பு பற்றி  பேசும் இவர்கள் 
  கற்பும் ஆண்களுக்கு உண்டு 
  என்பதை மறந்தே போனார்கள்!