31 மார்., 2012

வாய் மை...!




இயற்கைக்கு இரவல் தரும் 
வண்ணமே இந்த வர்ணம்.
இது வாய்மையல்ல 
வாய் மை...!


இதன் தன்மை உணமையல்ல
அழகுக்கு வலிமை சேர்க்கும் 
தனிலை மறக்க  
தீட்டும் ஓவியம்...


இதழ் ஓரம் தீட்டிய  வண்ணம்
போதை தரும் இந்த வர்ணம்,
பார்க்கும் போது ஈர்க்கும் 

பாவைகளுக்கு அழகுசேர்க்கும்.


திருடியது மின்சாரத்தை...




டேய் கபாலி நீ திடுடிய பொருளை மரியாதையா கொடுத்துவிடு 




எஜமா நான் திருடியது மின்சாரத்தை...

 ஆச்சரியம்ஆச்சரியம்ஆச்சரியம்ஆச்சரியம்ஆச்சரியம்

===========================================================
மாமியார்:
எங்க வீட்டில் புதுசா நாய் வாங்கி உள்ளோம் வந்து பாருங்க ...


மருமகள்:


அதை தான் தினமும் பார்த்து ,பேசும்போது தனியா வேறவா 
வரணும்...


மாமியார்:
கன்னத்தில் அறைகன்னத்தில் அறைகன்னத்தில் அறைகன்னத்தில் அறை
=========================================================

30 மார்., 2012

கூந்தல்... துளிப்பாக்கள்!





காற்றே என்னவளின் 
கருப்புக் கவிதைகளை 
கலைத்து விடாதே!
======================



கார்குழலை பெண்ணின் 
தலைக்கு கிரீடமாய் 
வைத்துப்போனவர் யார் ?

========================


காரிகை காற்றில் சிரித்து 
உன்னை உரசிப்பார்க்கும்போது 
பொறாமை தான் எனக்கு.


=========================


பேய்க்கு கால் உண்டா...சிரிக்க மட்டும்,




பேய்க்கு கால் உண்டா இல்லையா ?

மச்சான் கொஞ்சம் தள்ளி நில்லு பார்த்து சொல்லுகிறேன் 


 உருட்டுக்கட்டைஉருட்டுக்கட்டைஉருட்டுக்கட்டைஉருட்டுக்கட்டை
=========================================
மனைவி 
ஏங்க பேயை பார்த்து இருக்கிறீகளா ?

கணவன்:
அதுகூடதானே 
கிட்டத்தட்ட முப்பது வருடமா வாழ்ந்து வருகிறேன்..


மனைவி:
 மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்
========================================== 

29 மார்., 2012

கலங்கரை விளக்கு







கரை சேர அழைக்கும். 
கடற்கரையை காட்டும்
அன்றும், இன்றும், என்றும்,
விளக்காய் எரிந்து
விளக்கம் சொல்லும்...


வழிகள் அறிய
தூணாய் துணை நிற்கும் 
காலம் கடந்தாலும்
கரையோடு இருக்கும்.
பழைய நினைவுகளை 
படம் பிடித்து காட்டும்.


வாழ்க்கைக்கு வழிக்காட்டி 
குடும்பத்தை கரைச் சேர்க்கும் 
அப்பாவை நினைவூட்டும் 
கலங்கரை விளக்கு...
நம் வாழ்கையின் அங்கம்.


பங்காளிகள் தான்... சிரிக்க மட்டும்,


தலைவர் மட்டும் நம்ம கிரிக்கெட் டீமில் இருந்தார் என்றால் தோல்வியே 
வாராது...


எப்படி சொல்லுறே...

தலைவர் பேசும் கூட்டத்தில் வரும் கற்கள் ,தக்காளி, முட்டையை எல்லாம் 
மிஸ் பண்ணாமல் கேச் பிடிப்பார் என்றால் பார்த்துக்கொள்...


=============================================================
தலைவர் பேசும் கூட்டத்தில் எல்லாம் ரொம்பவே கூட்டம் 
அலைமோதுதே எப்படி...


எல்லாம் சொந்த பந்த பங்காளிகள் தான்...  
===============================================================

உலகில் பரந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை


உலகில் பரந்து வாழும் தமிழர்களின் எண்ணிக்கை (அந்நாடுகளின் மொத்த சனத்தொகை அடைப்புக்குறிக்குள்)


1. அங்கோலா – Angola -10 (மொத்த மக்கள் தொகை 18,498,000)
2. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் – United States of America – 200,000 (மொத்த மக்கள் தொகை 314,659,000)
3. அயர்லாந்து – Ireland 2,000 (மொத்த மக்கள் தொகை 4,515,000)
4. அர்ஜென்ரினா – Argentina 100 (மொத்த மக்கள் தொகை 40,276,000)
5. அல்ஜீரியா – Algeria 100 (மொத்த மக்கள் தொகை 34,895,000)
6. அன்ரிகுவா-பார்புடா – Antigua and Barbuda 1,000 (மொத்த மக்கள் தொகை 88,000)
7. ஆப்கானிஸ்தான் – Afganistan 100 (மொத்த மக்கள் தொகை 28,150,000)
8. ஆர்மினியா – Armenia 300 (மொத்த மக்கள் தொகை 3,083,000)
9. ஆஸ்திரியா – Austria 1,500 (மொத்த மக்கள் தொகை 8,364,000)
10. ஆஸ்திரேலியா – Australia 100,000 (மொத்த மக்கள் தொகை 21,293,000)
11. இத்தாலி – Italy 5,000 (மொத்த மக்கள் தொகை 59,870,000)
12. இந்தியா – India 81,000,000 (மொத்த மக்கள் தொகை1,198,003,000)
13. இந்தோனீசியா – Indonesia 300,000 (மொத்த மக்கள் தொகை 229,965,000)
14. இலங்கை – Sri Lanka 6,000,000 (மொத்த மக்கள் தொகை 20,238,000)
15. இஸ்ரேல் – Israel 100 (மொத்த மக்கள் தொகை 7,170,000)
16. ஈராக் – Iraq 1,000 (மொத்த மக்கள் தொகை 30,747,000)
17. ஈரான் – Iran 500 (மொத்த மக்கள் தொகை 74,196,000)
18. உகண்டா – Uganda 100 (மொத்த மக்கள் தொகை 32,710,000)
19. உக்ரெயின் – Ukraine 500 (மொத்த மக்கள் தொகை 45,708,000)
20. உஸ்பெகிஸ்தான் – Uzbekistan 300(மொத்த மக்கள் தொகை 27,488,000)
21. எகிப்து – Egypt 1,000 (மொத்த மக்கள் தொகை 82,999,000)
22. எதியோப்பியா – Ethiopia 100 (மொத்த மக்கள் தொகை 82,825,000)
23. எமிரேட்ஸ், ஐக்கிய அரபு – United Arab Emirates 200,000 (மொத்த மக்கள் தொகை 4,595,000)
24. எரித்திரியா – Eritrea 100 (மொத்த மக்கள் தொகை 5,073,000)
25. எல்சால்வடோர் – El Salvador 100 (மொத்த மக்கள் தொகை 6,163,000)
26. எஸ்ரோனியா – Estonia 500 (மொத்த மக்கள் தொகை 1,340,000)
27. ஐஸ்லாந்து – Iceland 25 (மொத்த மக்கள் தொகை 323,010)
28. ஓமான் – Oman 50,000 (மொத்த மக்கள் தொகை 2,845,000)
29. கம்பூசியா – Cambodia 1,000 (மொத்த மக்கள் தொகை 14,805,000)
30. கயானா – Guyana 10,000 (மொத்த மக்கள் தொகை 762,000)
31. கனடா – Canada 300,000 (மொத்த மக்கள் தொகை 33,573,000)
32. கஸாக்ஸ்தான் – Kazakhstan 100 (மொத்த மக்கள் தொகை 15,637,000)
33. காட்டார் – Qatar 10,000 (மொத்த மக்கள் தொகை 1,409,000)
34. கானா – Ghana 500 (மொத்த மக்கள் தொகை 23,837,000)
35. கியூபா – Cuba 100 (மொத்த மக்கள் தொகை 11,204,000)
36. கிர்கிஸ்தான் – Kyrgyzstan 100 (மொத்த மக்கள் தொகை 5,482,000)
37. கிரிபாத்தி – Kiribati 25 (மொத்த மக்கள் தொகை 98,000)
38. கிரேக்கம் – Greece 10,000(மொத்த மக்கள் தொகை 11,161,000)
39. கினீயா – Guinea 1,000 (மொத்த மக்கள் தொகை 10,069,000)
40. கினீயா பிஸ்ஸாவ் – Guinea-Bissau 100 (மொத்த மக்கள் தொகை 1,611,000)
41. குரோசியா – Croatia 100 (மொத்த மக்கள் தொகை 4,416,000)
42. குவாதமாலா – Guatemala 100 (மொத்த மக்கள் தொகை 14,027,000)
43. குவைத் – Kuwait 10,000(மொத்த மக்கள் தொகை 2,985,000)
44. கென்யா – Kenya 300 (மொத்த மக்கள் தொகை 39,802,000)
45. கொங்கோ சயர் – Congo – Zaire 25 (மொத்த மக்கள் தொகை 66,020,000)
46. கொமொறொஸ் – Comoros 100 (மொத்த மக்கள் தொகை 676,000)
47. வட கொரியா – North Korea 100 (மொத்த மக்கள் தொகை 23,906,000)
48. தென்கொரியா – South Korea 500 (மொத்த மக்கள் தொகை 48,333,000)
49. கொலம்பியா – Colombia 500 (மொத்த மக்கள் தொகை 45,660,000)
50. சமோவா – Samoa 100 (மொத்த மக்கள் தொகை 179,000)
51. சவூதி அரேபியா – Saudi Arabia 50,000 (மொத்த மக்கள் தொகை 25,721,000)
52. சாம்பியா – Zambia 2,500 (மொத்த மக்கள் தொகை 12,935,000)
53. சான் மறினோ – San Marino 25 (மொத்த மக்கள் தொகை 31,000)
54. சிங்கப்பூர் – Singapore 300,000 (மொத்த மக்கள் தொகை 4,737,000)
55. சிம்பாப்வே – Zimbabwe 250 (மொத்த மக்கள் தொகை 12,523,000)
56. சியாரா லியோன் – Sierra Leone 1,000 (மொத்த மக்கள் தொகை 5,696,000)
57. சிரியா – Syria 500 (மொத்த மக்கள் தொகை 21,906,000)
58. சிலி – Chile 100 (மொத்த மக்கள் தொகை 16,970,000)
59. சீசெல்சு – Seychelles 9,000 (மொத்த மக்கள் தொகை 84,000)
60. சீனா – China 5,000 (மொத்த மக்கள் தொகை 1,353,311,000)
61. சுரினாம் – Suriname 130,000 (மொத்த மக்கள் தொகை 520,000)
62. சுலோவாக்கியா – Slovakia 100 (மொத்த மக்கள் தொகை 5,406,000)
63. சுலோவேனியா – Slovenia 100 (மொத்த மக்கள் தொகை 2,020,000)
64. சுவாசிலாந்து – Swaziland 5,000 (மொத்த மக்கள் தொகை 1,185,000)
65. சுவிற்சர்லாந்து – Switzerland 60,000 (மொத்த மக்கள் தொகை 7,568,000)
66. சுவீடன் – Sweden 12,000 (மொத்த மக்கள் தொகை 9,249,000)
67. சூடான் – Sudan 100 (மொத்த மக்கள் தொகை 42,272,000)
68. செக் – Czech 100 (மொத்த மக்கள் தொகை 10,369,000)
69. செர்பியா – Serbia 200 (மொத்த மக்கள் தொகை 9,850,000)
70. செனகல் – Senagal 25 (மொத்த மக்கள் தொகை 12,534,000)
71. சைப்ரஸ் – Cyprus 500 (மொத்த மக்கள் தொகை 871,000)
72. சோமாலியா – Somalia 25 (மொத்த மக்கள் தொகை 9,133,000)
73. டென்மார்க் – Denmark 15,000 (மொத்த மக்கள் தொகை 5,470,000)
74. தஜிக்கிஸ்தான் – Tajikistan 100 (மொத்த மக்கள் தொகை 6,952,000)
75. தாய்லாந்து – Thailand 10,000 (மொத்த மக்கள் தொகை 67,764,000)
76. தான்சானியா – Tanazania 250 (மொத்த மக்கள் தொகை 43,739,000)
77. துர்க்மெனிஸ்தான் – Turkmenistan 50 (மொத்த மக்கள் தொகை 5,110,000)
78. துருக்கி – Turkey 500 (மொத்த மக்கள் தொகை 74,816,000)
79. துனீசியா – Tunisia 100 (மொத்த மக்கள் தொகை 10,272,000)
80. தென் ஆபிரிக்கா – South Africa 750,000 (மொத்த மக்கள் தொகை 50,110,000)
81. தைவான் – Taiwan 100 (மொத்த மக்கள் தொகை 25,300,000)
82. நமீபியா – Namibia 25 (மொத்த மக்கள் தொகை 2,171,000)
83. நவுறு – Nauru 100 (மொத்த மக்கள் தொகை 10,000)
84. நியுசிலாந்து – New Zealand 30,000 (மொத்த மக்கள் தொகை 4,266,000)
85. நெதர்லாந்து – Netherlands 12,000 (மொத்த மக்கள் தொகை 16,592,000)
86. நேபாளம் – Nepal 500 (மொத்த மக்கள் தொகை 29,331,000)
87. நைஜர் – Niger 25 (மொத்த மக்கள் தொகை 15,290,000)
88. நைஜீரியா – Nigeria 2,500 (மொத்த மக்கள் தொகை 154,729,000)
89. நோர்வே – Norway 15,000 (மொத்த மக்கள் தொகை 4,812,000)
90. பராகுவே – Paraguay 25 (மொத்த மக்கள் தொகை 6,349,000)
91. பல்கேரியா – Bulgaria 200 (மொத்த மக்கள் தொகை 7,545,000)
92. பனாமா – Panama 500 (மொத்த மக்கள் தொகை 3,454,000)
93. பஹ்ரெயின் – Bahrain 7,000 (மொத்த மக்கள் தொகை 791,000)
94. பஹாமாஸ் – Bahamas 200 (மொத்த மக்கள் தொகை 342,000)
95. பாகிஸ்தான் – Pakistan 1,000 (மொத்த மக்கள் தொகை 180,808,000)
96. பாபுவா-நியுகினீயா – Papua-New Guinea 500 (மொத்த மக்கள் தொகை 6,732,000)
97. பார்படாஸ் -Barbados 1,000 (மொத்த மக்கள் தொகை 256,000)
98. பாலஸ்தீனம் – Palestine 200 (மொத்த மக்கள் தொகை 3,336,000)
99. பிரான்ஸ் – France 50,000 (மொத்த மக்கள் தொகை 62,343,000)
100. பிரிட்டன் – United Kingdom 300,000 (மொத்த மக்கள் தொகை 61,565,000)
101. பிரெஞ்சு கயானா – French Guyana 1,000 (மொத்த மக்கள் தொகை 170,000)
102. பிரேசில் – Brazil 100 (மொத்த மக்கள் தொகை 193,734,000)
103. பிலிப்பைன்ஸ் – Philippines 200 (மொத்த மக்கள் தொகை 91,983,000)
104. பின்லாந்து – Finland 3,000 (மொத்த மக்கள் தொகை 5,326,000)
105. பிஜி – Fiji 125,000 (மொத்த மக்கள் தொகை 849,000)
106. புர்கினோ பாசோ – Burkina Faso 100 (மொத்த மக்கள் தொகை 15,757,000)
107. புறுணை – Brunei 1,500 (மொத்த மக்கள் தொகை 400,000)
108. பூடான் – Bhutan 100 (மொத்த மக்கள் தொகை 697,000)
109. பெர்முடா – Bermuda 100 (மொத்த மக்கள் தொகை 63,000)
110. பெரு – Peru 100 (மொத்த மக்கள் தொகை 29,165,000)
111. பெல்ஜியம் – Belgium 12,000 (மொத்த மக்கள் தொகை 10,647,000)
112. பொலிவியா – Bolivia 1,000 (மொத்த மக்கள் தொகை 9,863,000)
113. பொற்சுவானா – Botswana 1,000 (மொத்த மக்கள் தொகை 1,950,000)
114. போர்த்துக்கல் – Portugal 500 (மொத்த மக்கள் தொகை 10,707,000)
115. போலாந்து – Poland 500 (மொத்த மக்கள் தொகை 38,074,000)
116. மசிடோனியா – Macedonia 100 (மொத்த மக்கள் தொகை 2,042,000)
117. மலாவி – Malawi 500 (மொத்த மக்கள் தொகை 15,263,000)
118. மலேசியா – Malaysia 2,250,000 (மொத்த மக்கள் தொகை 27,468,000)
119. மால்ரா – Malta 100 (மொத்த மக்கள் தொகை 409,000)
120. மாலி – Mali 250 (மொத்த மக்கள் தொகை 13,010,000)
121. மாலை தீவு – Maldives 2,000 (மொத்த மக்கள் தொகை 309,000)
122. மியான்மா – Myanmar 600,000 (மொத்த மக்கள் தொகை 50,020,000)
123. மெக்சிகோ – Mexico 3,000 (மொத்த மக்கள் தொகை 109,610,000)
124. மொல்டோவியா – Moldovia 25 (மொத்த மக்கள் தொகை 3,604,000)
125. மொறிசியசு – Mauritius 126,000 (மொத்த மக்கள் தொகை 1,288,000)
126. மொறித்தானியா – Mauritania 100 (மொத்த மக்கள் தொகை 3,291,000)
127. மொறொக்கோ – Morocco 100 (மொத்த மக்கள் தொகை 31,993,000)
128. மொனாகோ – Monaco 50 (மொத்த மக்கள் தொகை 33,000 )
129. யப்பான் – Japan 200 (மொத்த மக்கள் தொகை 127,156,000)
130. யேமன் – Yemen 500 (மொத்த மக்கள் தொகை 23,580,000)
131. ரஷ்யா – Russia 5,000 (மொத்த மக்கள் தொகை 140,874,000)
132. ரினிடாட்-ரொபாகோ – Trinidad and Tobago 100,000 (மொத்த மக்கள் தொகை 1,339,000)
133. லக்செம்போர்க் – Luxembourg 1,000 (மொத்த மக்கள் தொகை 486,000)
134. லற்வியா – Latvia 500 (மொத்த மக்கள் தொகை 2,249,000)
135. லாவோஸ் – Lao 1,000 (மொத்த மக்கள் தொகை 6,320,000)
136. லிதுவானியா – Lithuania 100 (மொத்த மக்கள் தொகை 3,287,000)
137. லிபியா – Libya 500 (மொத்த மக்கள் தொகை 6,420,000)
138. லெசொத்தோ – Lesotho 500 (மொத்த மக்கள் தொகை 2,067,000)
139. லெபனன் – Lebanon 5,000 (மொத்த மக்கள் தொகை 4,224,000)
140. லைபீரியா – Liberia 500 (மொத்த மக்கள் தொகை 3,955,000)
141. வங்காள தேசம் – Bangladesh 1,000 (மொத்த மக்கள் தொகை 162,221,000)
142. வத்திக்கான் நகர் – Vatican City 20 (மொத்த மக்கள் தொகை 1,000)
143. வியற்னாம் – Viet Nam 3,000 (மொத்த மக்கள் தொகை 88,069,000)
144. ஜமைக்கா – Jamaica 30,000 (மொத்த மக்கள் தொகை 2,719,000)
145. ஜிபுற்றி – Djibouti 1,000 (மொத்த மக்கள் தொகை 864,000)
146. ஜெர்மனி – Germany 40,000(மொத்த மக்கள் தொகை 82,167,000)
147. ஜோர்டான் – Jordan 4,000 (மொத்த மக்கள் தொகை 6,316,000)
148. ஜோர்ஜியா – Georgia 25 (மொத்த மக்கள் தொகை 4,260,000)
149. ஸ்பெயின் – Spain 500 (மொத்த மக்கள் தொகை 44,940,000)


நன்றி 
தகவல் : பிபிசி தமிழோசை!

காட்டுக்குள்!ஹைக்கூ







28 மார்., 2012

நடைப் பயிற்சி



தினம் தினம் 
நடைப் பயிற்சி
ஒருவித 
உடற்பயிற்சி
உனது 
உடலுக்கு எழுச்சி




நடைப் பயணம்
கொழுப்பைப் 
பார்த்து குறைக்கும்
தொப்பையை 
கரைக்கும்...


நடப்பது நடக்கட்டும் 
நடந்து நடந்து 

இனி இளமை 
தொடர வழிப்பிறக்கட்டும்.



இரவல் கேட்டால்...சிரிக்க மட்டும்




எதை எதை இரவல் கேட்கிறது என்று விவஸ்த்தையே இல்லை 


அப்படி என்ன தான் கேட்டார் அவர் ...


தினமும் பத்திரிகையை இரவல் கேட்பது போல 
எனக்கு வந்த குற்றப்பத்திரிகையை படிக்க இரவல் கேட்டால் 
என்ன சொல்லுவது..
===============================================
தலைவருக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லே


எதுக்கு சொல்லுறே இப்படி 


எங்க கட்சியில் மகளிர் அணியே இல்லே உங்க கட்சி 
மகளிர் அணியை இரவல் கொடுங்க என்று கேட்கிறார்...
=========================================================

27 மார்., 2012

சிரிக்கலாமே




என்ன தலைவர் தேர்தலில் சீட்டு 
கேட்பவர்கள் கையை தடவி பார்க்கிறார்?

ஆட்சி பிடித்துவிட்டால் தலைவர் பெயர் 
சொல்லும் போது யெல்லாம் மேஜை சத்தமா 
தட்டனுமாம் அதுக்காத்தான்...


=======================================
தலைவர் கலந்துக் கொண்ட கூட்டத்தில் 
கூட்டத்தை கூட்டி கபாலி சும்மா அசத்திபுட்டே...


பின்னே சும்மாவா தலைக்கு ஆயிரம் தந்துள்ளே இருக்கேன்..

இசை...



உதடுகள் எழுதும் 
காற்றுக் கவிதை 
இசை...





காற்றுக்கும் காதலாம் 
மூங்கில் எழுதிய கடிதம் 
புது இசையாய்...


உதடுகள் பேசிய 
காற்றின் மொழியே 
இசை...


உதடுகள் தந்த முத்தம் 
காற்றில் கலந்து பிறந்தது 
ராகமாய்...



கவிதைகள்...




தமிழோடு கொண்ட உறவு 
வார்த்தைகளோடு 
பொய்கள் கலந்து
பிறக்கும் குழந்தை கவிதை!


எண்ணங்களை பாத்திக்கட்டி 
ஏக்கத்திற்கு
வடிக்கால் தந்து
நான் விதைத்த 
விதை கவிதை!


கடற்க்கரை மண்ணில் 
கவிதையோடு
கைப்பிடித்து 
காதலி நினைவை 
அசைப்போட்டு
வருகின்ற எண்ணத்தின் 
அழகு கவிதை...


கவிதைக்கு பொய் 
பொழிந்தால் பொலிவு
எண்ணத்தை வடித்தால் 
கவிதையின் நிலை...


காண்பதும்
காண்பதை ரசிப்பதும் 
ரசித்ததை எழுதுவதும் 
கவிதை...
கவிதை ...

கிரெடிட் கார்டு ஒரு பார்வை ...கட்டுரை


கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்..!


கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...


நினைவில் நிறுத்துங்கள்


கிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பதும் கிரிமினல் குற்றம் அல்ல! (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)


நீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது. கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. 


காவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு) 


கடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


கிரெடிட் கார்டு வசூல் நடைமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வங்கிகளின் வசூல் முகவர்களுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும். வசூல் முகவர்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றாமல் தவறுகளை செய்தால், அந்த முகவர்கள் மட்டும் அல்ல, அவர்களை கண்காணிக்காத வங்கிகளும் சட்டததின் முன் குற்றவாளிகளே!


நீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.


வங்கிகள், அவற்றின் கடன் வசூல் முகவர்கள் ஆகிய எவரொருவரும் கடன் வசூல் நடவடிக்கைகளின்போது , கிரெடிட் கார்டு நுகர்வோர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றவர்களை வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. அதேபோல பொது இடத்தில் அவமானப்படுத்துதல், தனிமையை குலைத்தல், தொலைபேசி மூலம் அடையாளமற்று மிரட்டுதல், தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களை அளித்தல் ஆகியவையும் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கையின் பிரிவு 7 (ii) c திட்டவட்டமாக கூறுகிறது. இந்த நடவடிக்கைகள் இந்திய தண்டனை சட்டத்தின்படியும் குற்றமென கூறப்பட்டுள்ளது.


உங்கள் அனுமதியின்றி வீட்டில் நுழைவதே குற்றம்!


உங்கள் வீட்டில் வங்கிப்பணியாளர்களோ, வசூல் முகவர்களோ உங்கள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தால் இ.த.ச பிரிவு 441ன்படி குற்றம். வேறு ஒருவரின் உடமையில் இருக்கும் ஒரு சொத்தினுள், அதன் உரிமையாளரை மிரட்டும், அவமானப்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அல்லது குற்றம் செய்யும் கருத்துடன் நுழைகிற, அல்லது இதற்காக அங்கேயே சட்ட விரோதமாக தங்கியிருக்கிற எவரொருவரும் “குற்றமுறு அத்துமீறல்” புரிந்ததாக கூறப்படுவார்.


இவ்வாறு குற்றமுறு அத்துமீறல் புரியும் எவரொருவருக்கும் மூன்று மாதம் வரை சிறைக்காவலோ அல்லது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் என்று அதே சட்டத்தின் பிரிவு 447 கூறுகிறது. வீட்டினுள் அத்துமீறல் என்ற குற்றத்தை செய்ய உடல் உறுப்புகளில் எந்த பாகத்தையாவது வீட்டினுள் புகுத்தினாலே அத்துமீறல் குற்றத்தை செய்வதாகும். (பிரிவு 442) ஒருவருக்கு காயம் விளைவிப்பது, தாக்க முனைவது, முறையின்றி தடை செய்வது, இக்குற்றங்களை செய்வதற்கென்று வீடு புகுந்தால், அதற்கு ஏழாண்டுகாலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். (பிரிவு 452)


அவதூறாக பேசுதல்! 


உங்கள் நற்பெயரை கெடுக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் எவரேனும் செயல்பட்டால் அதுவும் சட்டப்படி குற்றமே. ஒருவருடைய நற்பெயரை பங்கப்படுத்தி கெடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு ஏற்படும் என்று அறிந்திருந்து அல்லது நம்பக்காரணம் பெற்றிருந்து பேச்சால், எழுத்தால், அடையாளங்களால் அல்லது காட்சிப்பொருள்களால் அவரைப்பற்றி பழி சாட்டுதல் எதனையும் செய்கிற அல்லது வெளியிடுகிற எவரொருவரும், அவதூறு செய்ததாக சொல்லப்படுவார். (பிரிவு 499)


இன்னொருவருக்கு அவதூறு செய்கிற எவரொருவருக்கும் இரண்டாண்டுகள் வரை வெறுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 500)


அச்சுறுத்தல், நேரடியாக, தொலைபேசி, கடிதம் வழியாக மிரட்டுதல்! 


கடனை வசூலிக்க முகவர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் அனைவரும் செய்யும் அனைத்து செய்கைகளும் குற்றச்செயல்களே. ஒருவருடைய அல்லது அவர் அக்கறை காட்டும் மற்றொருவருடைய உடலுக்கு, உடமைக்கு அல்லது நற்பெயருக்கு தீங்கிழைக்கப்படும் என்று அவருக்கு பீதியை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது சட்டப்படி ஒரு செயலை செய்ய உரிமையற்று இருந்தபொழுது அதைச்செய்யவோ அல்லது சட்டப்படி ஒரு செயலைச் செய்யவோ உரிமை பெற்றிருந்தபொழுது அதைச் செய்யவிடாமல் விட்டுவிடும்படி வற்புறுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரை அந்த மிரட்டலுக்கு இணங்கி, அவர் செயல்படுமாறு செய்வதற்காக மிரட்டுவதை குற்றமுறு மிரட்டல் எனலாம். (பிரிவு 503) 


குற்றமுறு மிரட்டல் செய்பவர்களுக்கு 2 வருடங்கள் சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். பிரிவு 506 அநாமதேயக் கடிதத்தின் மூலம் அல்லது யார் மிரட்டுகிறார்கள், எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்ற விவரம் மற்றவருக்கு தெரியாத வண்ணம், மறைந்திருந்து மிரட்டுவோருக்கு, முன்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை சிறைக்காவல் தண்டனை அதிகப்படியாக விதிக்கப்படும். 


பெண்களை அவமதித்தல்! 


ஒரு பெண்ணின் கற்புநெறியை அவமதிக்கும் வண்ணம், அப்பெண் காணும்படி அல்லது கேட்கும்படி யாரேனும் ஏதேனும் ஒரு சொல்லைக் கூறுவதும், ஒலியெழுப்புவதும் சைகை காட்டுவதும், அல்லது அந்த பெண்ணின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதும் குற்றமாகும். இதற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 509)


அரசுப் பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல்! 


அரசுப் பணியாளர்களை அவர்களது வேலை நேரத்தில் எவ்வாறு தொந்தரவு செய்தாலும் குற்றம்தான். அரசுப் பணியாளர் ஒருவரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்கும் எவரொருவரும் குற்றவாளியே. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ, 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 186)


ஆட்கடத்தல் மற்றும் அடைத்து வைத்தல்!


கிரெடிட் கார்டு கடனை வசூலிப்பதற்காக எவரையேனும் கடத்துவதும் இந்த சட்டத்தின்படி தவறுதான். ஒரு இடத்திலிருந்து செல்லும்படி ஒருவரை வன்முறையாலோ அல்லது வஞ்சனையான முறைகளாலோ கட்டாயப்படுத்துவது ஆட்கடத்தல் ஆகும். (பிரிவு 362)


ஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல உரிமை பெற்றுள்ள ஒரு நபரை அத்திசையில் செல்லவிடாமல் தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவது முறைகேடான தடுப்பு எனக் கூறப்படுகிறது (பிரிவு 339)


ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட எல்லையை மீறிச் செல்ல முடியாத வகையில், எவரையேனும் முறைகேடாக தடுப்பதை முறைகேடான சிறை வைத்தல் என்பர். (பிரிவு 340) 


மறைவாகவும், முறைகேடாகவும் சிறைவைக்கும் கருத்துடன் ஆளைக்கவர்தலும், ஆளைக்கடத்தலும் குற்றமாகும். அதற்கு 7 ஆண்டுக்காலம் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 365) 


முறைகேடான தடுப்பு செய்பவருக்கு ஒரு மாதம் சிறையோ, அல்லது 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 341) 


முறைகேடான சிறைவைத்தல் புரியும் எவரொருவருக்கும் ஒராண்டு வரை சிறைக்காவலோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் (பிரிவு 342)


தாக்குதல்!


கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் தாக்க முயற்சிப்பதே தவறுதான். எந்த ஒருவரின் மீதாவது வன்முறையை கருத்துடன் பயன்படுத்துதல்; அத்தகு வன்முறை அந்நபரின் சம்மதமின்றி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அத்தகு வன்முறை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும், 


(i)ஒரு குற்றத்தை செய்வதற்காக, அல்லது (ii)அந்நபருக்கு கேடு அச்சம் அல்லது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அவை அநேகமாக விளையக்கூடும் என்று அறிந்திருந்து, அத்தகு வன்முறையை பயன்படுத்துதல் குற்றமுறு வன்முறை எனப்படும் (பிரிவு 350) 


ஒருவர், தம் முன்னுள்ள மற்றொருவரின் மீது குற்றமுறு வன்முறையை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு சைகையோ அல்லது ஒரு ஆயத்தமோ செய்தால், அது தாக்க முனைதல் ஆகும் (பிரிவு 351). 


குற்றமுறு வன்முறையைப் பயன்படுத்தி தாக்கும் நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 352). 


வங்கி அதிகாரிகளும் குற்றவாளிகளே! 


வசூல் முகவர்கள் செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் தப்ப முடியாது. அவர்களும் குற்றவாளிகள் என்று சட்டம் கூறுகிறது. 


குற்ற உடந்தை: ஒன்றினை செய்வதற்கு ஒருவர் எப்பொழுது உடந்தையாகி இருக்கிறாரென்றால், அவர்... முதலாவதாக : அச்செயலை செய்ய எவரையேனும் தூண்டுதல், அல்லது இரண்டாவதாக : அச்செயலைப் புரிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் சதியில் ஈடுபடுதல்: அச்சதியின் விளைவாக ஒரு செயலோ அல்லது சட்ட விரோதமான ஒரு செயல் தவிர்ப்போ நிகழ்த்தி அச்செயலைச் செய்தல் அல்லது மூன்றாவதாக : செய்கை அல்லது செயல் தவிர்க்கை ஏதேனுமென்றால் அந்தச் செயலை செய்வதற்கு கருத்துடன் உதவி செய்தல் - ஆகியோர் குற்ற உடந்தை புரிந்தோராக கருதப்படுவர். (பிரிவு 107) 


எந்தக் குற்றம் நடைபெற உடந்தையாக இருக்கிறாரோ அந்தக் குற்றத்திற்கு தண்டனைத் தொகுப்பால் கூறப்பட்டுள்ள தண்டனையை குற்ற உடந்தையாளர் அடைய வேண்டும் என்று பிரிவு 109 கூறுகிறது. 


தற்காப்புரிமை! 


கிரெடிட் கார்டு கடன் வசூல் என்ற பெயரில் குண்டர்கள் அராஜகம் செய்யும்போது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க சட்டம் உங்களுக்கு பல உரிமைகளை அளிக்கிறது. 


உடல் தற்காப்புரிமை - தற்காப்புரிமையை பயன்படுத்தும்பொழுது செய்யப்படும் எதுவும் குற்றமில்லை. (பிரிவு 96)


முதலாவதாக, தனது உடலையும், மற்றவர்கள் உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துத்கொள்ள உரிமை. இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. (பிரிவு 97) 


உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதைக் குற்றமாக கருதமுடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.


1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத் தக்கதான ஒரு தாக்குதலின்போது, 2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்பொழுது, 3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்போது, 4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்துகொள்ளும் கருத்துடன் தாக்கும்போது, 5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்பொழுது, 6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில் ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்போது,


மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதலில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்தச் சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயங்களை விளைவிப்பதோ குற்றமாவதில்லை என்று பிரிவு 101 கூறுகிறது. எனினும், பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கே தற்காப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும், அதைவிட அதிகமாகக்கேடு விளைவிக்கும் வகையில் தற்காப்புரிமையை பயன்படுத்தக்கூடாது என்றும் பிரிவு 99 உட்பிரிவு 3 எச்சரிக்கிறது.


கிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் குண்டர்கள் மிரட்டினால் என்ன செய்வது?


கிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அந்தப் புகாரில் வசூல் முகவர்களுடன் மற்றும் வங்கி அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல்படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.


காவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக்கொண்டதற்காக ரசீது ஒன்றை அளிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.


அப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.


மிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள். கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை.


கடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம். 


(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் பாதுகாப்பு தகவல்களுக்கு http://www.creditcardwatch.org/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்) 




நன்றி நன்றி நன்றி...
தகவல் தந்த  
- சுந்தரராஜன் ( sundararajan@lawyer.com)
(நன்றி: மக்கள் சட்டம்)

நிறத்தை கழற்றி...



பச்சை செடி
தன் நிறத்தை கழற்றி
புது வண்ணத்தை காட்டியது
பூக்களாய்...

26 மார்., 2012

ஒன்பது கேஸு ...சிரிக்க மட்டும்

 



நோயாளி:


டாக்டர் நான் பொழைப்பேனா?


டாக்டர்:
எனக்கு பத்தாவது எண் ராசி..இதுவரை 
பத்து கேஸுலே ஒன்பது கேஸு புட்டுகிச்சி 
பத்தாவது கேஸ் பிழைத்துவிடும் சோ 
நிச்சியமா உங்க உயிருக்கு  நான் உத்தரவாதம் தருவேன்..

நோயாளி:
  அடபாவிங்களாஅடபாவிங்களாஅடபாவிங்களா

===========================================
தலைவர் ஏன் சோடா பாட்டிலை வைத்து வித்தை காட்டுகிறார்...?

எப்போதும் பழைசை எல்லாம் மறக்கக் கூடாதாம் 
====================================================

மிருகம் மனிதனாய்...



மனிதன் மிருகமானதால் 
மனித நேயம் 
கொலையானது...


ஆறுக்கும் 
ஐந்துக்கும் 
போட்டியில்

மனித நேயம் காண
அவதரித்தது இங்கு 
மிருகம் மனிதனாய்...!

25 மார்., 2012

தேர்தல் அஜண்டாவில்..சிரிக்க மட்டும்

 



ஹோட்டல் வைத்ததை இன்னும் தலைவர் 
மறக்கவில்லை போலும் 


எதுக்கு  சொல்லுகிறாய் ?


நம்ம தேர்தல் அஜண்டாவில் 
இந்த தேர்தல் அஜண்டா 'கோ பா' கட்சியில் 
திருடியது என்று போட்டுவுள்ளார்..

23 மார்., 2012

தூங்காமல் இருக்க...சிரிக்க மட்டும்





அப்பா:

ஏன்டா  ஓட்டப் பந்தயத்தில கலந்துக்கொண்டால் என்ன?

மகன்:

பரிசுக்காக ஓடும் பழக்கமில்லே.பரிசு என்னை தேடி ஓடி வரணுப்பா

======================================
ஆசிரியர்:


மாணவர்களே நீங்கள் சாதித்துக்காட்டனும்...


மாணவன்:


நானும் தினம் முயற்சி செய்து தோற்று வருகிறேன் சார்...


ஆசிரியர்:


அப்படி என்ன செய்து வருகிறாய் ?


மாணவன்:


உங்க வகுப்பில் தூங்காமல் இருக்க தான் சார் 


ஆசிரியர்:


உருட்டுக்கட்டை உருட்டுக்கட்டைஉருட்டுக்கட்டைஉருட்டுக்கட்டை

கட்சி கூட்டத்துக்கு...


என்ன கபாலி நீ கூட்டத்துக்கு அழைத்துவந்த ஆட்கள் எதிரி கட்சி
பெயரை சொல்லி இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று சொல்லுறாங்க


நேற்று அந்த கூட்டத்துக்கு போய்வந்த மப்பு இறங்கவில்லை தலைவரே மன்னிக்கணும்....

---------------------------------------------------------------------------------------
தொண்டன்:

எங்க கட்சி கூட்டத்துக்கு பத்தாயிரம் பேரு வேண்டும் ...

கபாலி 

எந்த தேதிக்கு?

தொண்டன்:

28  தேதிக்கு....

கபாலி 

அந்த தேதிக்கு வேற கட்சி புக் பண்ணிட்டார்கள் ...நீங்க வேற தேதி மாத்தி 
வைங்க 

தொண்டன் 

  தலைசுற்றுதாதலைசுற்றுதாதலைசுற்றுதா

வானம் பார்த்தபடி



வானம் பார்த்த
பூமியை நினைத்து
மழைக்கு வேண்டி
கண்ணீர் வடித்தான்
விவசாயி...

மழைக்கு ஈரம்
இல்லையா...
மழை பொழிய
நேரம் வரவில்லையா ?


இரக்கமில்லாத
மனித வர்க்கம் போல
மழையுமா?

இன்னும் நம்பிக்கையோடு
வானம் பார்த்தபடி
விவசாயி...
கையேந்திய நிலையில்...

21 மார்., 2012

சிரிக்கலாம் வாங்க





தலைவருக்கு ஓட்டு போடும் போது 
ஏன் கையெல்லாம் நடுங்கியது 

அவர் பெயரில் போட்ட 
முதல் ஓட்டு இது 
அதனால் தான் கொஞ்சம் பயம்...
-------------------------------------------------------
காக கட்சி தலைவருக்கு பழசெல்லாம் 
மறக்காது  போலும் 


எதுக்கு அப்படி சொல்லுறே ...


ஓட்டு போட்டு வந்தவுடன் 
உங்கள் கட்சிக்கு தான் ஓட்டு போட்டேன் 
பணம் கொடுங்க என்று அவங்க கட்சி ஆளுங்க 
கிட்ட கேட்கிறார்...


==================================






20 மார்., 2012

நாலு இடத்தை விசாரித்து



 



தலைவர் அடிக்கடி எல்லா கட்சிகளையும் 
விசாரித்துக்கொண்டே இருக்கிறாரே ஏன் ?

அவர் எப்போதும் நாலு இடத்தை விசாரித்து தான் 
சேருவார்.. அதுக்கு தான்...

===========================================

டாக்டர் பட்டம்:சிரிக்க மட்டும்





என்ன தலைவர் செல்போன் ஒழிப்பு 
போராட்டம்  தொடங்கியிருக்கார் ?


செல் என்றால் சிறைசாலை நினைப்பு வருதாம் 
அதனால் தான் இந்த போராட்டம் 
=========================================
தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது 
தப்பா போச்சு ?


ஏன் ?


தனியா ஒரு கினிக் தொடங்கி வைத்தியம் 
பார்க்க ஆரம்பித்துவிட்டார் ....
---------------------------------------------------------------

எண்ணங்கள்!




காலத்தோடு பயிர் 
செய்யப்படுகிறது 
எண்ணங்கள்!


அவ்வப்போது உண்டாகும் 
தவறான எண்ணத்தை
கழைந்தாலும் 
எண்ணம் கொஞ்சமாய் 
மாறும் பின் தடுமாறும்!


சூரியனோடு சூடாகி 
அமர்க்களப்படுத்தும் 
காலையில் முழிக்கும் 
எண்ணம்.


குளிக்கவும் உடுத்தவும் 
உண்ணவும் அவசரத்தை 
அணைத்துக்கொள்ளும்.


எண்ணம் அலைமோத 
அவசரம் தலை தூக்க 
எல்லாமே மறந்துபோகும்...


எண்ணிய 
எண்ணமெல்லாம் 
காணாமலே போகும் 
மறதி வந்து ஒட்டிக்கொள்ளும்.




போகும் வழிகளில் 
அவசரப் பயணத்தில் 
எல்லாம் தடைப்படும்...


அவசரமே தவறு செய்ய 
உறுதுணையாகும்.
தாமதம் வந்து சேர 
மேலாளர் திட்டவும் 
எண்ணத்தில் கோபம் பிறக்கும் 


இன்று யார் முகத்தில் 
முழித்தேன் என்று 
யோசித்து காலை 
நேரப்பக்கங்கள் புரட்டப்படும்.




புரட்டிய பக்கத்தில் 
வந்தவர்கள் மீது 
கோபம் மீண்டும் விஸ்வரூபம் 
எடுக்கும்...


எண்ணம் தன் தவறுகளை 
மறைத்து நீதி பேசும் 
தன் மீது தவறே இல்லை 
என்று சத்தியமிடும்.


பாழாய் போன எண்ணம் 
தப்புக்கும் தவறுக்கும் 
உற்ற நண்பனாயிருந்து 
நம்மை ஆட்டிப்படைக்கும்.


எண்ணமே எல்லாமாய் 
வாழ்க்கையில் அங்கமாய்...
புதுப்புது அவதாரமாய்... 



நான் ரெடி நீங்க ரெடியா ?சிரிக்க மட்டும்...


மன்னா! ஆராய்ச்சி மணியை ஏன் 
ஒரு தடவை மட்டும் இந்த இரவு நேரத்தில் 
அடித்தீர்கள்...

அரசிக்கு ஜஸ்ட் மிஸ்டு கால் ...
----------------------------------------------------------
வடிவேலு:


அமைச்சரே வர வர ஆராய்ச்சி மணி
இருந்து ஜஸ்ட் மிஸ்டு கால் தான் 
வருது...

பார்த்திபன்:

சிஸ்டம் சரியில்லை மன்னா...
வேற வாங்கணும்...
இல்லை வழக்கம்போல திருடிக்கிட்டு 
வரணும்...நான் ரெடி நீங்க ரெடியா ?

வடிவேலு :

சரிங்க பாஸ் சரிங்க பாஸ்சரிங்க பாஸ்