30 மே, 2012

மம்மி என்றால் பிணம்...




அம்மா என்றால் உறவுக்கும் 
உணர்வுக்கும் அர்த்தம் புரியும்.
மம்மி என்று சொன்னால் 
பிணத்தை அல்லவா குறிக்கும்!


நன்றிக் கடன் மறந் நீயோ 
அந்நிய நாட்டின் 
ஆங்கில மொழிவுமா கடன்...?


கடன் நடப்பை முறிக்கும்,
அந்நிய மொழியோ உன் 
தாய்மொழியை அழிக்கும்...


கற்பது தவறில்லை.
கற்றாலும் தமிழ் மொழியில் 
பேசுவதில் தவறில்லை.


மம்மி என்றால் பிணம்,
அம்மா என்றால் பாசம்
சொல்லிப்பழகு உனக்கு புரியும்.


மற்ற மொழியும் கற்று கொள்
தமிழை பேசிக்கொள்.

ரீ சார்ஜ்...சிரிக்க மட்டும்,




காதலி 


நம்ம காதல் எங்க அப்பாவுக்கு தெரிந்து போய் 
ரொம்ப கோபம் பட்டார்...


காதலன்:


ஒன்னும்பிரச்சனை இல்லையே 


காதலி:



நீங்கள் அவர் மொபைலுக்கு ரீ சார்ஜ் பண்ணுகிற வரை 
கோபம் இருக்க தான் செய்யும்..

காதலன்:


ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்
====================================
காதலி::


எனக்கு உங்களால் என் அப்பாகிட்ட மானம் போச்சு 



காதலன்:

நான் ஒன்னும் தப்பு செய்யவில்லையே...

காதலி:

என்னை நீங்கள் காதலித்து ஐந்து மாதம் பத்து நாளாகி 
இன்னும் அவர் மொபைலுக்கு 
ரீ சார்ஜ் பண்ணவே இல்லையாம்...


காதலன்:

தலைசுற்றுதா தலைசுற்றுதா 
தலைசுற்றுதா


கைபுள்ளே...சிரிக்க மட்டும்,


கைபுள்ளே எனது பயந்த சுபாவத்தை படம் பிடித்து 
காட்டிபுட்டான்களே 

=================================================



தலைவர் என்ன குளிக்கும் போது பிடித்துகொண்டு 
குளிக்கிறார்?


எதிர் கட்சி சதி பாத்ரூம் வரை வந்தாலும் வரலாம் 
என்று ஒரு எச்சரிக்கைக்கு தான்...
================================================

மரணம்...!



சுவாசம் நிற்கும் போது
மட்டுமல்ல
மரணம்...


நேசிக்க மறுக்கப்படும்போது
ஜாதி பெயரை  
மதத்தின் பெயரை சொல்லி
கிண்டல் செய்து அழைக்கும்போது


உதவிகள் தடுக்கப்படும்போது
சில தோல்விகள் வரும் போதும்
ரணங்கள் கொண்ட வாழ்கையில்
அவ்வப்போது 
மரணம் நிகழ்வதுண்டு 

29 மே, 2012

வருங்கால... சிரிக்க மட்டும்,



அப்பா கொஞ்சம் நிறுத்துப்பா ...

ஏன்டா?

நான் கேட்ட பணம் தரலே உன்கிட்ட 
லைசன்ஸ் இல்லே என்பதை அந்த 
போலீஸ் கிட்ட சொல்லிபுடுவேன்....

என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது
===================================
ஆளும்கட்சி கொடியை கட்டிக்கிட்டு வந்தால் 
நோ பார்கிங்லே பாதுகாப்பு இருக்கும் 
என்று சொன்னப்போ நம்மாமல் சிரித்தாய்
 இப்ப பார்த்தியா....
=====================================

நல்லவனப்பா...சிரிக்க மட்டும்,



அப்பா நீ ரொம்ப நல்லவனப்பா 


எதுக்கு சொல்லுறே ?


அம்மா எடை மிஷினியில் ஏறியவுடன் கத்திகிறது 
அம்மா உன்னை அடிக்கும் போது எல்லாம் நீ கத்தியதே 
இல்லையே நீ ரொம்ப நல்லவனப்பா 
============================================
என்னங்க மிஷின் எடையை காட்டாமல் மெசஜ் சொல்லுது...

அட ஆமா !இப்படி குண்டா இருந்தால் நாட்டுக்கும் 
வீட்டக்கும் தாங்காதாம்...


காசுப் போட்டு கமென்ட் வாங்கியவள் நானாகத்தான் 

இருப்பேன்...என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது
=============================================

28 மே, 2012

விலைவாசி...ஹைக்கூ கவிதைகள்,

நஷ்டத்தை அறியாமல்
இலவச அரசி 
விற்கப்படுகிறது ...
=======================
இலவசம் ஈர்க்க 
 
விலைபோனது 
ஜனநாயகம்...
========================
பால் குடித்த வண்ணம் 
பேருந்தில் ஏறியது 
விலைவாசி...
=======================
\

ஊதி ஊதி..சிரிக்க மட்டும்,

காளை மாடு வாங்கிய கடன் இன்னும் 
அடைக்கவில்லை...

இன்னும் கன்று போடவில்லை சார்...

என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது
================================
சின்ன வயது அனுபவம் 
தலைவர் சின்ன விஷயத்தைக்கூட 
ஊதி ஊதி பெரிசாக்கிடுவார்...


எப்படி ?


சின்ன வயதில் பலூன் கடை வைத்து 
பலூனை ஊதி ஊதி பெருசாக்கிய 
அனுபவம் தான்...
=========================================

மரங்களாய்...



பாரம்பரிய வீடுகள் 
மறைந்து போக 
தென்னக் கிற்று வீடுகள் 
எரிந்து போக,


ஓட்டு வீடுகள் 
அழிந்து கிடக்க,
மெத்தை வீடுகள் 
இடித்து போக,


அவசர வீடுகள் 
சுற்றுலாவில் முளைக்க
விந்தையான வீடு 
விளக்கம் சொல்ல...


எல்லாம் சரிதான் 
நானும் கொள்ள 
உற்றுப் பார்த்தேன் 
உண்மை தெரிந்தது...


வீடுகள் முளைக்க 
மரங்கள் அழிந்தது
வீடுக்கு வீடு 
வீதியில் இருக்க
அந்த வீடுகளில் 


மரங்களாய் மனிதர்கள்...

27 மே, 2012

தவளை...ஹைக்கூ கவிதைகள்,


மழைவிட்ட நேரம் 
இன்னிசை தொடர்ந்தது 
தவளை...
======================
மழையின் வருகை 
கத்தி மகிழ்ந்தது
தவளை
========================
இடியுடன்  காற்று மழை 
பயமறியவில்லை 
தவளை...
=========================

தியானம் கொள்க...



உன் விழிகள் பார்க்கும் பார்வைக்கும்
உலகமே உன்னுள் இருப்பத்தாக நினைக்கும்
உன்னிடம் தீயவை காதல் கொள்ளும் 
உனக்குள் ஒரு பூகம்பமே நடக்கும்
உண்மையில் இது ஒரு நாடகம்...




உணராமல் நீ போனால் வதைக்கும் 
ஊசிப் போல உன் மனதை குத்தும் 
உன் வினையே உன்னை கொல்லும்
உனக்குள் இருப்பது மன அழுத்தம்...

இதைப் போக்க மனதில்உறுதிவேண்டும் 
உனக்குள் வேண்டும் உன் ஆதிக்கம்
இதை தவிர்க்க  தியானம் கற்றால் புரியும்
தெளியும்,கோபம் மறையும்,காமம் விலகும்...


தனி நிலை காண உன் நிலை மற.
கண் முடி தியானம் தினம் கொள்க!


கண்டபடி எண்ணம் வரும் முதலில்,
கலங்காதே,கரை சேர்வாய் சில நாளில்


ஒரு நிலை கண்டுவிட்டால் உள்ளத்தில் 
புதிய ஜோதி வந்து சேரும் அந்த இடத்தில்...

இவளை...ஹைக்கூ கவிதைகள்



இவளை 

அணைத்துக்கொண்டது 
அடைமழை
========================
மழைச் சாரலில் 
பூத்துக்குலுங்கியது 
இளமை...
======================
பருவமழையில் 
மங்கையின் நடனம்
ஈர்த்தது...
---------------------------------------

பவர் போன...சிரிக்க மட்டும்,


நிருபர்:

உங்கள் ஆட்சியில் பவர் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு 
உங்கள் பதில்?

தலைவர் 

பவர் போன தலைவர்கள் எல்லாம் எங்கள் ஆட்சியில் 
பவர் இல்லை என்று சொல்லுவது  வேடிக்கை...
==============================================
பெண்வீட்டார்:

எனது சொத்தை பாத்துகாக்க வீட்டோட மாப்பிளை 
வேண்டும்...

தரகர்:

அப்ப திருடனை பார்க்கட்டுமா ?

பெண்வீட்டார்:

அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ
====================================================

26 மே, 2012

வகுப்பு அறையில்...ஹைக்கூ கவிதைகள்,



ஜாதிகள் இல்லாத 
நாளைய ஜனநாயகம் 
வகுப்பு அறையில்...
-------------------------------------------
பள்ளி சீருடையில் 
மதங்கள்  அறியாத 
மனிதர்கள்...
---------------------------------------------
வகுக்கப் படமால் கழித்துவிடாத
பெருக்கல் கூட்டலுடன்
புதுக்கணக்கு விடலை(டை)கள் 

=============================

மடிப்பு தானே வரும்...சிரிக்க மட்டும்,

உங்கள் முதல் ஓட்டம் நினைவு இருக்கா ?

என் மனைவியை பொண்ணு பார்க்க போனபோது 
பாட சொல்லி கேட்டு  ஓடிய ஓட்டம் தான் 
முதல்  ஓட்டம்...ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்
===========================================
நிருபர்:

உங்களை நடிக்க தெரியாத நடிகை என்று சொல்லுறாங்க...

நடிகை:

எனக்கு கிடைப்பதோ ஒரு குத்து பாட்டு அங்கு நடிப்பு எப்படி வரும் 
மடிப்பு தானே வரும்...

நிருபர்:
ஆமோதிக்கிறேன்ஆமோதிக்கிறேன்ஆமோதிக்கிறேன்

25 மே, 2012

ஏமாற்றம்...ஹைக்கூ கவிதைகள்,


பிரிந்தவர்கள் பார்த்துக்கொண்டார்கள் 
பேசவேயில்லை பிறந்த இடத்தை 
புதைக்கும் வரை...
===================================
கருவறை ஒன்றாய் இருந்தும் 
சண்டையிட்டுக்கொண்டனர் 
வீடு உனக்கா,எனக்கா...
===================================
பிள்ளைக்கு என்று வாழ்ந்த வாழ்க்கை 
இன்னும் தொடர்கிறது 
முதியோர் இல்லத்தில்...
=====================================
இடியுடன் கூடிய மழை 
இன்னும் சிலமணிநேரத்தில் 
வானம் பார்த்த பயிர்கள்...
=======================================

இரண்டு பந்திலும்...சிரிக்க மட்டும்,


தம்பி நான் ,உன்னை போன பந்திலும் பார்த்தேன் 
இந்த பந்திலும் பார்க்கிறேன்...

எனக்கு மாப்பிளை வீட்டாரும்,பெண்வீட்டாரும் சொந்தம் 
ஒரு வீட்டில் சாப்பிட்டு மற்ற வீட்டில் சாப்பிடாமல் போனால் 
மனவருத்தம் வரும் அதுக்காத்தான்...

ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்
====================================
உண்மையான உண்ணா விரதம் என்று போட்டு 
உண்ணாவிரத பந்தலில் கம்பி வேலி  போட்டு அடைத்து  இருக்கு...

கட்சி ஆட்கள் மேலே தலைவருக்கு நம்பிக்கை இல்லையாம்
யாரும் எதுக்கும் வெளியே போகக்கூடாதாம்...
=======================================