26 ஜன., 2013

இன்னும் இன்றும்...

கழுதை குதிரையாய் 
மாறினாலும் 
இன்னும் இன்றும்
சில மனங்களில் 
எங்கள் நிறங்கள் 
பதியவில்லை...

13 ஜன., 2013

எங்கள் புதிய LULU கடை திறப்பு விழா...


எங்கள் புதிய LULU கடை திறப்பு விழா புகைப்படம் உங்கள் பார்வைக்கு....
உங்கள் வேண்டுதலும் வாழ்த்துக்களும் நாடிய வண்ணம் ...

ஜீர் & வஜீர் ...

11 ஜன., 2013

நாங்கள்...


பறக்கவும் இல்லை 
படியில் பயணிக்கவும் 
தயார்...

ஆணுக்கு ஒன்றும் 
நாங்கள் 
சளைத்தவர்கள் அல்ல...
=====================

10 ஜன., 2013

சாலை விதிகளை

சாலை விதிகளை 
காக்க இங்கு 
போராட்டம் ...
=====================

நொடியில் மரணம் 
காணவே 
படியில் பயணம்....
==========================


7 ஜன., 2013

கண்கள்...

மையும் பொய்யும் 
கலந்த கவிதை 
கண்கள்...
================
ஒரு நொடி பார்த்தாய் 
தப்பாய் போனது 
பாதை ....
==================
கணக்கு பார்க்கும் 
கண்களுக்கு 
காதல் புரியாது 

காதல் சொல்லும் 
கண்களுக்கு 
வாழக்கை தெரியாது ...
=======================


5 ஜன., 2013

மூடியது அலைகள்...
நாங்கள் பிடிக்கும் 
வலையும் 
நாங்களும் இன்று 
தண்ணீர் வலைக்குள்...


===================

மீனவன் என்று 
பாராமலே 
மூடியது அலைகள் 
=======================

4 ஜன., 2013

புதிய வண்ணத்தோடு
வண்ணத்தை 
பூசிக்கொண்டன 
இலைகள்...
==================
இலைகளும் 
மருதாணி 
பூசிக்கொண்டதோ
====================

காதல் எண்ணத்தில் 
புதிய வண்ணத்தோடு 
இலைகள்...
=====================

தென்றல்...

தென்றலை கண்டதும் 
மழை 
வரவேற்றது...
=====================
மழை மீது 
தென்றலுக்கு கோபம் 
குடைபிடித்து 
வெளிநடப்பு...
=====================
மழையின் ஆசை அறிந்து 
தென்றல் குடைப்பிடித்து 
ஊர்வலம்.....
=========================

இடை நனைக்க
இடி 
மின்னல் 
மழையோடு சேர 
இடை மறைத்தது 
குடை....


3 ஜன., 2013

ஏக்கத்ததில்...

காமத்துப்பாலில் பிறந்து 

முலைப்பாலுக்கு வழியில்லாமல் 
மடிப்பால் கிடைக்குமா 
ஏக்கத்ததில்...

1 ஜன., 2013

வெக்கமே இல்லாமல்...
உலகம் அழிவதாய் 
சொன்னார்கள் மேதவிகள்...
கணிக்கப்பட்ட நிலையில் 
ஜோதிடமும் சொன்னார்கள் 

எல்லாம் பொய்யாய் 
போனது...
மீண்டும் சொல்லுவார்கள் 
பல பொய்களை இவர்களே 
வெக்கமே இல்லாமல்...