23 மார்., 2013

ஐந்து அறிவுகளிடம்...
முதியோர் இல்லங்கள் 
இல்லாத இனம்..

மண் வளம் கண்டு 
வாழும் குணம்...

நீர் நிலங்கள் கண்டு 
கூடும் கூட்டம் 

எல்லாமே இதோ 
ஐந்து அறிவுகளிடம்...19 மார்., 2013

சவப்பெட்டி...


அசையாத 
உடம்பு சொன்னது 
மரணத்தை...

மரணத்தை 
வீட்டுக்கு வெளியே 
சவப்பெட்டி உறுதி செய்தது...

எனது கடைசி 
உறவாய் 
என்னை சுமந்து செல்ல...

எனது 
கடைசி பயணத்தின் 
துணையாய்...

18 மார்., 2013

பெண்ணின் நளினம்...மகளியாரை கண்டதால்
காற்றும் 
உருவம் பெற்றதோ?
====================
குளிக்கவே பயம் 
தடுமாறும் மனம் 
தண்ணீரில் கண்டம்...
===================================

பெண்ணின் நளினம் 
நகத்தோடு 
நடனம்...

அசைந்து இசைத்து 
வளையல்களோடு 
ஆடும் ...

9 மார்., 2013

எல்லாம் உன்னால்...

நீ வீசிய காதல் வலையில் 
மாட்டிய காதலனாய் 
நான்...

நீ பார்க்கும் பார்வையில் 
பூக்கும் மலராய் 
மாறினேன்...

நீ சிரிக்கும் அழகில் 
சிலிர்த்தே போகிறேன் 
நான்....

எல்லாம் உன்னால் யென்றால் 
மௌனத்தால் 
மறைக்கிறாய்...

_________________

எதிர்ப்பார்க்கிறேன்...

நானும் எதிர்ப்பார்க்கிறேன் 
புதிய மாடலாய் மாறும் ...வரும் 
பாவாடை தாவணி...
=====================

மறக்க முடியவில்லை 
உன் காதலையும் 
பாவாடை தாவணியும்...

======================

சாரிக்கு சாரி 
சொன்னது 
ஜீன்ஸ் டாப்ஸ்...
======================

4 மார்., 2013

நிலவு சுடுகிறது...
நிலவு சுடுகிறது
காமத்திலும்
நடு ஜாமத்திலும்...

நெருக்கத்திலும் 
இணக்கத்திலும் 
இரவாய் பகல் 
மாறினாலும் 

நிலவு சுடுகிறது 

2 மார்., 2013

பெண்மை...


பெண்மை 
பொம்மையாய் 
இன்று...

பார்க்க ரசிக்க 
மட்டுமே...

பெண்மைக்கும் 
மனசு இருப்பதை 
மறந்த நிலையில் 
மானிடம்...

மானாய் போனது 
மனிதரிடம் 
பெண்மை...

பிரபலம்

சாலை எங்கும் பலமாய் 
கூட்டம் 
பிரபலம்...
=========================
தும்மல்,இருமல் 
பேசப்பட்டன 
பிரபலம்...
==========================
மறைக்க நினைத்த காதல் 
மறைக்க முடியவில்லை 
பிரபலம்...
===========================
வரலாறு பேசும் 
தோல்விகள் 
பிரபலம்...
============================
ஆணவமும் அடி பணியும் 
சொன்னதும் இல்லை என்றே மாறும் 
பிரபலம்...
===========================
பாலமாய் 
பலம் 
பிரபலம்...
========================================