31 ஆக., 2012

எல்லாம் சரிதான்



வயது ஐம்பது
எட்டி பார்த்தால்...

நோய் அழைக்காத
விருநதாளியாய்
உள்ளே வரலாம்...

குடும்ப வியாதிகளை
தள்ளிப்போடலாம்
தவிர்க்க முடியாது

உடற்பயிற்சியாய்
தினம் நடக்க கற்றுக்கொள்...

உணவு முகவரியை 
முறையாய் மாற்றி
சரியான நேரத்தில்
உடலுக்குள் அனுப்பு...

காய்கறிகளை உண்ண 
பழகு...

மருந்துக்கு விடைத்தந்து
உணவுக்கு விண்ணப்பம்
கொடு...

வயற்றில்
மூன்றியில்  ஒரு
பங்கு உணவு
ஒரு பங்கு  தண்ணீர்
மிச்சத்தை காலியாய்
இருக்கட்டும்...

எல்லாம் சரிதான் 
வயதான பெற்றோர்களுடன் 
இருக்கும் வரை 
இறுக்கத்தை போக்கி 
நெருக்கத்தை ஏற்படுத்து...

அவர்கள் இறப்புக்கூட 
இலகுவாய் இருக்கும்...


30 ஆக., 2012

குளம்...!



தண்ணீர் வேண்டி 
ஏக்கத்தோடு பார்வை 
குளம்...!
-------------------------------------
இன்று தான் 
ஆழத்தை அறிந்தோம் 
வற்றிய குளத்தில்...
--------------------------------------



மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி, ஆக. 30-

மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப விதிக்கப்பட்ட தடை நீக்கம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு 
அசாம் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடக்கலாம் என செல்போன்கள மற்றும் இணையதளங்கள் மூலம் வதந்தி பரவியது.

இதையடுத்து வேறு மாநிலங்களில் தங்கியிருந்து வேலை பார்த்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக திரும்பினார்கள். இதையடுத்து செல்போன் மூலம் வதந்தி பரவுவதை தடுப்பதற்காக, மொத்தமாக எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 17-ம் தேதி தடை விதித்தது.

ஒரே நேரத்தில் 5 தகவல்கள் மட்டுமே அனுப்ப முடியும் என்பது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. மேலும் சமூக வலைதளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் வடகிழக்கு மக்கள் மீதான தாக்குதல் பீதி ஒரளவு குறைந்தபின்னர், 20 எஸ்.எம்.எஸ். வரை மொத்தமாக அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டது.தற்போது அந்த கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது. மொத்தமாக எஸ்.எம்.எஸ்.களை அனுப்ப விதிக்கப்பட்ட தடை முழுவதும் நீக்கப்படுவதாகவும், இந்த தடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நன்றி மாலைமலர் 

சென்னை சென்ட்ரல் முன்பு பா.ஜ.கவினர் திடீர் மறியல்: 100 பேர் கைது





சென்னை, ஆக. 30-

மார்த்தாண்டத்தை அடுத்த நித்திரவிளையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்த எட்வின்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட பா. ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைக் கண்டித்து இன்று மார்த்தாண்டத்தில் பாரதீய ஜனதா கட்சியினர், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தடையை மீறி மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று மாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு பா.ஜ.க. சார்பில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு குவிந்தனர். அவர்கள் அங்கு மறியல் செய்ய முயன்ற போது போலீசார் கைது செய்தனர்.

இதில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், பிரகாஷ் உள்ளிட்ட அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, ஆக. 30-


பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபகாலமாக அமைதியான சூழ்நிலை இருப்பது போன்று தோற்ற மளித்தாலும் ஆங்காங்கு மதமாற்ற நடவடிக்கைகளும், இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தில் சம்பந்தமே இல்லாமல் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைக் கண்டித்து இன்று நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குள் காவல் துறையினர் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி மாலைமலர் 

29 ஆக., 2012

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் மீது கொலைவெறித்தாக்குதல்






கடந்த  25.8.2012  அன்று இரவு மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் ஒரு இளைஞரை யாரோ கொலை செய்து விட்டுள்ளனர். இது தெரிந்தவுடன் அப்பகுதி மக்கள் கும்பலாக கூடி நின்றிருந்துள்ளனர். அங்கு வந்த மதுரவாயல் போலீசு நிலைய துணை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் விசாரணை எதுவும் இன்றி அங்கு நின்றிருந்த மக்களை விரட்டியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் சிலரை கைது செய்து போலீஸ் வண்டியில் ஏற்றியுள்ளனர். அதில் பு.மா.இ.மு உறுப்பினரின் தம்பியும் ஒருவர். அப்போது அங்கு வந்த பு.மா.இ.முவின் அப்பகுதி இளைஞர் கிளையைச் சார்ந்த தோழர்கள் திவாகர், குமரேசன் இருவரும் போலீஸ் துணை ஆய்வாளரிடம் தங்களை அமைப்புத் தோழர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டு எதுவும் தெரியாத அப்பாவி மாணவர்களை கைது செய்ய வேண்டாம் என்று அவர்களை விடுவிக்கக் கோரியுள்ளனர்.

இதை எதையுமே காதில் வாங்காத துணை ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீசார் எதற்கெடுத்தாலும் அமைப்புனு வந்திடுறீங்க என்று கத்திக்கொண்டே தோழர்கள் இருவரையும் அடித்து இழுத்து கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மதுரவாயல் போலீஸ் ஆய்வாளர் தோழர்களை போலீசு வேனில் வைத்து கடுமையாகத் தாக்கி அழைத்துச் சென்றுள்ளார்.
இத்தகவல் தெரிந்ததும் சென்னைப் பகுதி பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்ட தோழர்களைப் பார்த்து விசாரிக்க மதுரவாயல் போலீஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கு தோழர்கள் இல்லை. போலீசாரிடம் விசாரித்தற்கு எவ்விதபதிலும் இல்லை.

ஆய்வாளரிடம் போனில் பேசும்போது உங்கஆளுங்க எங்கஎஸ்.ஐயை அடித்திருக்காங்க அதனால கைது செய்திருக்கிறோம் என்றுள்ளார். அவர்களை பார்க்க வேண்டும் என்றதற்கு பதில் இல்லை. அன்று இரவு முழுவதும் முயன்றும் தோழர்களை காட்டவில்லை.

சிறையிலடைத்ததாகவும் தெரியவில்லை. காலையில்  போலீசு உதவி ஆணையர் சீனிவாசனிடம் பேசும்போது முதலில் 30 நிமிடம் கழித்துகாட்டுவதாக சொன்னார். பின்னரும் தோழர்களை எங்குவைத்திருக்கிறோம் என்று சொல்லவும் இல்லை,  காட்டவும் இல்லை.

இப்படி முதல் நாள் இரவிலிருந்து அடுத்த  நாள் வரை அலைகழிக்கப்பட்டும் தோழர்களை பார்க்க முடியவில்லை, அவர்களிடம் நடந்தது பற்றிவிசாரிக்கவும் முடியவில்லை. அவர்களை சிறையில டைத்தாகவும் தெரியவில்லை.

தோழர்கள்கைதும்,அதைப்பற்றியானதகவல்களும் மறைக்கப்படுவதால்  இதைப் பற்றியான உண்மைத் தகவல்களை தெரிந்துகொள்ளும் வகையில் 26.8.2012 அன்று மதியம் சுமார் 1மணியளவில் பு.மா.இ. முதோழர்கள் பகுதிமக்களுடன்  இணைந்து மதுரவாயல்போலீசுநிலையம் சென்றுவிசாரிக்கமுயன்றனர்.

 போலீசு ஏ.சி தோழர்கள்கைது பற்றி பேசமறுத்துவிட்டுஉங்கள் அனைவரையும் கைதுசெய்வேன் என்றுமிரட்டியுள்ளார். தோழர்கள் இதைஎதிர்த்து  முழக்கமிட்டுள்ளனர். தயாராக  நிறுத்திவைக் கப்பட்டிருந்த போலீசுகும்பல்ஏ.சிசீனிவாசன் தலைமையில் தோழர்கள்,பகுதிமக்கள்  அனைவரையும்கொலைவெறியுடன்தாக்கியது.

தலைவர்களை 10,15சேர்ந்துபோலீசார்குறிவைத்துதாக்கினார்கள்.பெண்தோழர்களை அடித்து ரோட்டில் கீழேதள்ளிபூட்ஸ்காலால்மிதித்துள்ளனர். சிலபெண் தோழர்கள் உடையைவக்கிரமாகபிடித்து இழுத்து கிழித்து தாக்கியுள்ளனர். 

சில மாணவித்தலைவர்களையும், இளைஞர் தலைவர்களையும் தனியாக போலீசுநிலையத்திற்குள் இழுத்துச்சென்று காட்டுமிராண்டித்தனமாகதாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.

நாகூசத்தக்க வார்த்தைகளால் அவமானப்படுத்தியுள்ளனர். சிலசிறுவர்களை  தூக்கி கீழே  எறிந்துள்ளனர். இப்படி போலீசு கும்பல்கொலைவெறியுடன் தாக்கியதில்அனைத்துத்தோழர்களும் கடுமையாகபாதிக்கப்பட்டனர்.8 தோழர்கள் ( மணிகண்டன், கிருஷ்ணகுமார்,விவேக் , பிரேம், வெங்கடேஷ்,ராஜா, பாபு, வீரா,  ) படுகாயம்அடைந்தனர். இதில்கிருஷ்ணகுமார், விவேக்இருவருக்கும்கை, கால்களில் பலத்த அடிபட்டதால் இன்றுவரை அவர்களுக்கு மருத்துவமனையில் மருத்துவம்பார்க்கப் படுகின்றது.
மற்றவர்களில் பெண்தோழர்கள் 14 பேர்உள்படமொத்தம் 64 பேர்கள் மீது பொய்வழக்குப் போட்டு கைது போலீசார் செய்தனர். இவர்களில் பெண்தோழர்கள் 14 பேரை மட்டும் அன்று இரவே (26.8.12 இரவுசுமார் 2 மணிக்கு)   பிணையில் விடுவித்தனர்.  ஆண்தோழர்கள் 50 பேரைஅடுத்தநாள் (27.8.12) வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

இவர்களை சிறையிலடைக்க நீதிமன்றம் அழைத்து வந்த நேரத்தில்தான் , முதலில்  25 ந்தேதி இரவு அடித்து இழுத்துச் சென்று மறைத்து வைத்திருந்த தோழர்கள்திவாகர், குமரேசன் இருவரையும் சிறையிலடைக்க நீதிமன்றம் அழைத்துவந்தனர். அதுவரை அவர்கள் இருவரையும் வேவ்வேறு இடங்களில் அடைத்து வைத்துதாக்கியுள்ளனர்.

உழைக்கும் மக்கள் பகுதியில் இளைஞர் அமைப்பைக் கட்டி செயல்படும் புமாஇமு இளைஞர்களின் கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் இளைஞர்களை , மக்களைத் திரட்டி போர்க்குணமாக போராடிவருகின்றது. 

அந்தவகையில் மதுரவாயல் பகுதியிலும் அதைச் சுற்றிய பகுதிகளிலும் உழைக்கும் மக்கள்கோரிக்கைகளுக்காவும் , அப்பகுதியில் போலீசின் அராஜகங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகின்றோம். 

இதனால் போலீசின் கட்டப்பஞ்சாயத்துக்கள் பலதடைபட்டுள்ளன. இதற்கு முன்னர் மதுரவாயலில் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மாணவர்கள், இளைஞர்களை கேள்வி கேட்பாரின்றிதாக்கும், பொய்வழக்குகள் போட்டு கைதுசெய்து இழுத்துச்செல்லும் போலீசு தற்போது பு.மா.இ.மு இளைஞர் அமைப்புக் கட்டி வேளை செய்யத் தொடங்கிய பின்னர் அத்தைகைய அராஜக நடவடிக்கைகளை அனாவசியமாக செய்ய முடியவில்லை.

சமீபத்தில் அதே ஏறிக்கரைப் பகுதியில் சென்னை பேக்கர் என்ற நிறுவனத்தின் தெர்மால் ரசாயன தொட்டி பாதுகாப்பு இன்றி திறந்து கிடந்ததால் அதில் அப்பகுதி சிறுவன் ஒருவன் விழுந்து இறந்து விட்டான் .

இதை அந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மூடிமறைக்கப் பார்த்தது போலீசு. இதணை அம்பலப்படுத்தியும், நீதிகேட்டும் ஏறிக்கரை பகுதிமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்திய போது அதற்கு தலைமை தாங்கியது பு.மா.இ.முதான்.
 இப்படிப்பட்ட போர்க்குணமான செயல்பாடுகளை பார்ர்த்து வந்த போலீசார் தற்போதைய சம்பவத்திலும் தங்கள் அராஜக செயல்பாடுகள் மீது கேள்வி எழுப்பியதும் அதைப்பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். 

இதனால் எல்லாம் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கிவிட முடியாது, போர்க்குணத்தை மழுங்கடிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் போலீசின் இந்த அராஜகங்களையும், பொய்வழக்குகளை எதிர்த்தும்,தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு  ரவுடி கும்பலை கைது செய்து சிறையிலடைக்கவும் பு.மா.இ.மு தோழர்கள் தோழமை அமைப்புகளுடன் இணைந்து மக்கள் பலத்துடன் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

நன்றி நக்கீரன் 




என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் : நடிகர் பார்த்திபன் அறிக்கை

 

நடிகர் பார்த்திபன் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், ''சில தினங்களுக்கு முன், `தில்லுமுல்லு' பட தொடக்க விழாவில் நான் பேசிய நகைச்சுவையான பேச்சு வெளியாகியிருந்தது.


அந்த பேச்சு பிரச்சினைக்குரியதாக ஆக்கப்பட்டு, முற்றுகை போராட்டம் என்று பூதாகரமாகி விட்டது. நான் திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சம்பந்தப்பட்டவர்களை வாழ்த்தவும், பார்வையாளர்களை மகிழ்விக்கவும் மட்டுமே. அதற்கு ஓட்டை காலணாவைக் கூட சன்மானமாக பெறுவதில்லை.


யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு துளியும் இல்லை. அதை பயன்படுத்தி யாரை திட்டும் திட்டமிடுதலும் இல்லை.


கடவுள் விருப்பு-மறுப்பு என்பது அவரவர் ஏற்பு. அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. ஆனால் ஒருவரின் நம்பிக்கை, அது விருப்போ-மறுப்போ அதை புண்படுத்த எவருக்கும் அதிகாரமில்லை.


சிவனே சிவனேன்னு இருக்க முடியாது என்று நான் நகைச்சுவையாகத்தான் பேசினேன். அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பின்னர் வருத்தப்பட்டேன். அந்த பேச்சின் மூலம் யார் மனம் புண்பட்டி ருந்தாலும், அவர்களுக்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


மனம்தான் கோவில். அதில் உள்ள நல்லெண்ணங்களே தெய்வம். அதன் மீது கல்லெறிவது என்னைப் பொருத்தவரை அது தெய்வ குற்றம். நான் கடவுள் நம்பிக்கை மிகுந்தவன். அந்த கடவுள் காட்சிப்படுத்த முடியாதது. எந்த கட்சிக்குள்ளும் கட்டுப்படுத்த முடியாதது.


ஆண்பால்-பெண்பால், உருவம்-அருவம் என்று எதற்குள்ளும் கட்டுப்படாத மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு அண்டம். விவரிப்பிற்கு அப்பாற்பட்ட விஸ்தீரம். அதை நான் உள்ளொளியாய் வழிபடுகிறேன்.


நாம் அனைவரும் உடனடியாக போராடி தீர்க்கப்பட வேண்டியது, (ஊழல்) வளர்ச்சி அடைந்துள்ள இந்தியாவில், வறுமையால் ஒரு சிறு வயிறும் வாடாமல் இருப்பதே. மனிதம் வளர்ப்பது தெய்வத் திருப்பணியே’’ என்று கூறியிருக்கிறார்.
நன்றி நக்கீரன் 

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்


தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சிறுதி சுருதி உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, இன்று தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, புதிய விதிமுறைகளைத் தாக்கல் செய்ய ஏற் கனவே இரண்டு முறை கால அவகாசம் கேட்ட தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குறைஞர் நவநீத கிருஷ்ணன், மேலும் அவகாசம் கோரினார்.

அதற்கு, தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்னும் கூட வில்லை என்றும், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதில் ஒப்புதல் வாங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பள்ளி வாகன பாதுகாப்பு விதிமுறைகளை உருவாக்குவதில் தமிழக அரசு அதிக மெத்தனம் காட்டுகிறது. எத்தனையோ விஷயங்களுக்கு அவசரமாக அமைச்சரவை கூடி விவாதிக்கும் போது, மிக முக்கியமான விஷயத்துக்கு ஏன் இதுவரை அமைச்சரவைக் கூடவில்லை. இது முக்கியமான விஷயமாக தமிழக அரசுக்குத் தெரியவில்லைய என்று கேள்வி எழுப்பினர்.

தற்போது உள்ள பிரச்னைகளிலேயே மிக முக்கியப் பிரச்னையாக இதனைக் கருதி, விரைவில் வரைவு விதிமுறைகள் அமைச்சரவையில் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று வழக்குறைஞர் நவநீத கிருஷ்ணன் உறுதி அளித்தார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அன்றைய தினம் கட்டாயமாக வரைவு விதிமுறை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றி நக்கீரன் 

சென்னை ;சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்



சென்னை ;சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மோதல்


சென்னை அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடம் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 15 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரான அய்யப்பன் சட்டக் கல்லூரிக்குள் செவ்வாய்க்கிழமை நண்பகல் வந்தாராம். இதைப் பார்த்த கல்லூரி விடுதியைச் சேர்ந்த மாணவர்கள் அவரிடம் தகராறு செய்தனராம். இதில் அய்யப்பனுக்கு ஆதரவாக ஆசிக், அரவிந்த், சல்மான் ஆகியோர் பேசியதாகத் தெரிகிறது.


இதில் தகராறு முற்றவே, இரு தரப்பு மாணவர்களும் மோதிக் கொண்டனராம். பின்னர் விடுதி மாணவர்கள், கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், சஸ்பெண்ட் செய்யப் பட்ட மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற வேண்டும், ஜூலை மாதம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் கல்லூரி மாணவர்களிடம் முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் சமாதானமடைந்த மாணவர்கள், தங்களது போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

இந்நிலையில் இச் சம்பவம் குறித்து இரண்டாம் ஆண்டு மாணவர் இளையபெருமாள் என்ற மாணவர், தன்னை அரவிந்தன் என்ற மாணவர் மிரட்டியதாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி நக்கீரன் 

"இறந்த தங்கள் குழந்தையின் முகத்தை எலி கடித்து குதறியுள்ளது'

சென்னை: பணியில் அலட்சியமாக இருந்ததால், சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையின், நிலைய மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ.,), பணியில் இருந்த டாக்டர் பார்த்திபன் உள்ளிட்ட ஒன்பது பேரை, அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. சென்னை, திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில், குறை பிரசவத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு, அவசர கிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் உடல்நிலை மோசமாகவே, கடந்த 26ம் தேதி, மாலை 5.45 மணிக்கு, சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.இத்தகவல் குழந்தை யின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் உடலை மறுநாள் காலையில் பெற்றுக் கொள்வதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து, அன்றிரவு, சிகிச்சை அளிக்கப்பட்ட வார்டிலேயே குழந்தை யின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் :

நேற்று முன்தினம் காலை, குழந்தையின் உடலை பெறச் சென்ற அதன் பெற்றோர், குழந் தையின் இடது கன்னத்தில், ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி யடைந்தனர். குழந்தையின் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த அவர்கள், "இறந்த தங்கள் குழந்தையின் முகத்தை எலி கடித்து குதறியுள்ளது' எனக் கூறி, தங்கள் உறவினர்களுடன், மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின் அவர்கள், போலீசில் அளித்த புகாரின் காரணமாக, இறந்த பச்சிளம் குழந்தையின் உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. "பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் துறையின் திசு பரிசோதனை முடிவுகள் வந்த பின்தான், குழந் தையின் கன்னத்தில் எலி கடித்ததா அல்லது சிறுநீரக கோளாறு காரணமாக, இவ்வாறு ஏற்பட்டதா என்பது தெரிய வரும்' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

விசாரணை:
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச் சம்பவம் குறித்து, மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு, மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரி வித்தது. உடனே, மருத் துவக் கல்வி துணை இயக்குனர் முத்துராஜன் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழு, மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ., - செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரிடம், நேற்று முன்தினம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.நேற்று காலை 10 மணிக்கு, சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சென்ற, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்,

குழந் தைகள் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார். அதன்பின், மருத்துவமனை அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.



அதிரடி:


ஆலோசனை முடித்து அமைச்சர் கிளம்பிய சிறிது நேரத்தில், திருவல்லிக்கேணி, கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ., ரமேஷ், சம்பவத்தின்போது பணியிலிருந்த டாக்டர் பார்த்திபன் மற்றும் ஏழு மருத்துவப் பணியாளர்களை, அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தது.மருத்துவமனையில் இருந்த குழந்தையை, எலி கடித்து குதறும் அளவிற்கு, தங்கள் பணியில் அலட்சியாக இருந்ததால், டாக்டர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க முடிவு தான். ஆனால், அரசுமருத்துவமனைகளின் வளாகங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், இதேபோன்ற அதிரடி நடவடிக்கையை, போர்க்கால அடிப்படையில் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

உணவகங்கள் மூடல்:

இச்சம்பவம் தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம்: *மருத்துவமனை விதிகளின்படி, பிரேதப் பரிசோதனை தேவைப்படாத இனங்களில், இறந்தவர் உடலை உடனே உரியவரிடம் ஒப்படைப்பதை மருத்துவ நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு வழங்க இயலாத நிலையில், உடலை சவக்கிடங்கில் மட்டுமே உரிய பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.
* அரசு மருத்துவமனை வளாகங்களில் நாய், பூனை, எலி முதலியவை வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை முனைப்புடன் எடுக்கவும், அதற்குத் தேவையான கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
*எலிகளை பிடிப்பதில் பழக்கமுள்ள இருளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
*மருத்துவமனைகளில் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள், மருத்துவமனைகளிலேயே உணவு அருந்துவதால், நாய், பூனை, எலி தொல்லைகள் ஏற்படுகின்றன. எனவே, மருத்துவமனை வளாகத்தில் உணவு அருந்துவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
*மருத்துவமனைகளுக்குள் இயங்கும் நடமாடும் உணவகங்கள் உடனே மூடப்படும்.

உணவகங்களிலேயே உணவு அருந்துவது கட்டாயமாக்கப்படும்.*பார்வையாளர் நேரங்களில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.


ஐகோர்ட்டில் மனு :

அரசு மருத்துவமனைகளில் எலி தொல்லை குறித்து சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞர் ஒருவர் முறையிட்டார். தனது மனுவை அவசரமாக எடுத்து விசாரிக்கக் கோரினார்.தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி ஆறுமுகசாமி முன் நேற்று வழக்கறிஞர்ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜராகி, "அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையை எலி கடித்து குதறியுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியாகியுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு தான் காரணம். இதுகுறித்து தாக்கல் செய்யும் மனுவை, அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்' என்றார். அதற்கு, "மனுத் தாக்கல் செய்யப்பட்டு விட்டதா?' என நீதிபதிகள் கேட்டனர். "மனு தயாராக இருக்கிறது. தாக்கல் செய்ய வேண்டும்' என்றார் வழக்கறிஞர்.இதுகுறித்து நேதாஜி போக்குவரத்து தொழிலாளர் பாதுகாப்பு தொழிற் சங்கத்தைச் சேர்ந்த நடத்துனர் சடையன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "மருத்துவமனைகளில் நாய், பூனை, எலிகள் தொல்லை உள்ளது. நோய் பரவாமல் தடுப்பதற்காக, மருத்துவமனைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் இருக்கும் போது, அவர்களை மருத்துவர்கள், ஊழியர்கள் அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தான் ஏழை எளியவர்கள், நடுத்தர மக்கள் சிகிச்சைப் பெறுகின்றனர். அவர்கள் மத்தியில் ஒரு பய உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளை சுத்தமாக வைத்திருக்கவும், எலி, நாய், பூனைத் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமலர் 

28 ஆக., 2012

அரசியல் அங்கதம்

இலவசம் அது 
உங்கள் வசம் 
கொடுப்பதே 
எங்கள் நவரசம்...!

=====================
நல்லது செய்வதாய் 
நேற்றும் சொன்னோம் 
இன்றும் சொல்கிறோம் 
நாளையும் சொல்வோம் 
நம்பிவிடாதீர்கள்...
சொல்லுவது மட்டும் 
எங்கள் வேலை...
=======================
அந்த நேர அட்சய் 
பாத்திரமாய் மாறுவோம்
மாற்றுவோம் 
எங்களுக்காக 

நாடக நடிகராக இருந்து டைரக்டர் ஆனேன்: ஷங்கர்

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த ‘அந்நியன்’ படம் மெகா ஹிட்டானது. இப்படத்தையடுத்து இவர்களின் கூட்டணி மீண்டும் இணைகிறது. இவர்கள் இணையும் புதுப்படத்திற்கு ‘ஐ’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘ஐ’ என்றால் அழகு, அரசன், குரு, ஆச்சர்யம், பலவீனம் என பல அர்த்தங்களை கூறியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இரண்டாவது முறையாக சந்தானம் விக்ரமுடன் இணைகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், முக்கியமான வேடத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியும், நடிகர் பிரபுவின் அண்ணனுமான ராம்குமாரும் நடிக்கின்றனர். முதல்முறையாக சினிமாவுக்கு நடிகராக அறிமுகமாகிறார் ராம்குமார்.

இப்படத்தின் இசையமைப்பை ஏ.ஆர்.ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். இவரது இசையில் ஏற்கனவே ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சவுண்ட் எபெக்ட்ஸை ஹாலிவுட்டில் ஹாரிபார்ட்டர் படங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலிய நிறுவனமான ரைசிங் சன் பிக்சர்ஸ் மேற்கொள்ளவுள்ளது.

மிகப் பிரம்மாண்டமான செலவில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு இப்பொழுதிலிருந்தே ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. வரும் ஜூலை 15-ம் தேதி முதல் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.
---------------------------------------------------------------------
விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமன்குமார், ரீமா சென், பிந்து மாதவி பியா நடிக்க மீண்டும் ரீமேக் ஆகிறது.

வடபழனியில் நடந்த இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் பங்கேற்று பேசியதாவது:-

சினிமாவில் நான் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. அப்படி சாதித்ததாக யாரேனும் கருதினால் அந்த பெருமை எஸ்.ஏ.சந்திரசேகரையே சாரும். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக சேரும் முன் நாடக நடிகராக இருந்தேன். சில மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது நான் பெரிய சோம்பேறி.

எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் நடிக்க வாய்ப்பு கேட்டுப் போனேன். ஆனால் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டேன். சுறுசுறுப்பு, ஒழுக்கம் , நேரம் தவறாமை அனைத்தையும் அவரிடம்தான் கற்றேன். என்னை போல் பல இயக்குனர்களை எஸ்.ஏ. சந்திரசேகரன் வளர்த்து விட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் விமலாராணி, படத்தின் இயக்குனர் சினேஹா பிரிட்டோ மற்றும் தமன்குமார், ரீமாசென், பிந்து மாதவி பங்கேற்றனர்.

26 ஆக., 2012

மாலையாய்












மணம் வீசும் 
மலர்களும் 
வண்ண மலர்களும் 
மாலையாய் 
ஈர்த்தன...

ஜாதி பார்க்கும் 
மனிதனை பார்த்து 
சிரித்தன...

நீயே!














அச்சமில்லை
அச்சமில்லை
உன் வாழ்விலே!

வரும் தோல்வியெல்லாம்
பறந்து போகுமே
நீ துணிந்து நின்றால்...

வஞ்சமில்லை
வஞ்சமில்லை
காணும் வாழ்விலே!

வஞ்சம் கொண்ட உள்ளமெல்லாம்
நடுங்கி ஓடுமே
நீ எதிர்த்து போரிட்டால்
வெற்றி உன் வசமாகுமே

பயமில்லை
பயமில்லை
வாழும் வாழ்விலே!

மலையென
எரிமலையென
எழுந்தால்
உன் வெற்றியை
அடைவாய் நீயே!

தர்பூசணி...கவிதை













மனிதனுக்கும் 
பழத்துக்கும்
ரத்த உறவுகள்,
சத்து உறவுகள், 

என...
உறவாட 

உரிமைவுண்டு!

இந்த தர்பூசணிக்கும்
பங்குவுண்டு!
சிட்ருலின் என்னும்,
சத்து பொருள்
இருப்பதைக் கண்டு ,
உண்டால் பலனுண்டு

தர்பூசணி உண்டால்
சிட்ருலின்
வேதியல் பொருளாய்
அர்ஜினைன் மாறும்

தன் வேலை செய்யும்.

ரத்தத்தோடு கலந்து
நம் உறுப்புகளை
சுறுசுறுப்பு தந்திடும்.
இன்னும் தர்பூசணி
சுவைத் தந்திடும்...

தர்பூசணி வெள்ளை
பகுதியோ
ஆண்மைக்கு அழகு
சேர்க்கும்!


தர்பூசணியை...
ருசித்துப் பார்த்தால்
உடலும் அறிந்திடும்
உண்மை புரிந்திடும்!

யாரங்கே...



இணையத்தில் இதயங்கள் 
இணைந்து  போனதால் 
காதல் காதல் என்று 
கவிதை பாடுகிறதோ?

திரும்பும் திசை எங்கும் 
காதல் பேச்சு 
முச்சு....

சொல்லாத காதலுக்கும் 
சொன்ன காதலுக்கும் 
வென்ற காதலுக்கும் 
தோற்ற காதலுக்கும் 
இணையம் தான் 
ஆறுதல்...

எழுதி கிழிக்காத 
கவிதையாய் 
காதல் இங்கு...

யாரங்கே...
வந்தது தான் வந்துவிட்டீர்கள் 
கொஞ்சம் காதல் கவிதையை 
படித்து விட்டு தான் போங்க 
எழுதிய உள்ளங்கள் 
மகிழ்ச்சியில் குதிக்கட்டுமே...

அணில் திருடன்...



















எனது வீட்டு 
மரத்தில் 
மாங்காய்
கொய்யா
என
ஒன்றுவிடாமல் 
திருடி 
தின்றுவிட்டு போகிறது 
அணில் திருடன்....



========================
நாளை பறிக்கலாம் 
என்ற அலட்சியம் 
அபகரித்துக்கொண்டது 
அணில்...
========================
நான் நட்ட 
மரத்தில் 
கூடு கட்டி 
சொந்தம் கொண்டாடுகிறது...
====================================

காணவில்லை...














நான் குளித்து 
மகிழ்ந்த காவேரியில் 
தண்ணீர் காணவில்லை 

கபடி விளையாடிய 
ஆற்றில் 
மணல் காணவில்லை...



வேறுபாடுகள்...













தூரமாய் உள்ள
வானம் தொடும்
தூரம் தான்
பக்கத்தில் இருக்கும்
வர்ணம் இன்னும்
தொடாத தூரமாய்...

நடிகை மனோரமா ஆஸ்பத்திரியில் அனுமதி


 
நடிகை மனோரமா மூச்சுத் திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மனோரமா ஏற்கனவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். சில மாதங்களுக்கு முன் ஓட்டல் அறையில் வழுக்கி விழுந்தார். இதில் அவர் காலில் முறிவு ஏற்பட்டது.

ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து காலை குணமாக்கினர். பின்னர் வீடு திரும்பி ஓய்வு எடுத்து வந்தார். சில வாரங்களுக்கு பின் மீண்டும் உடல் நிலை பாதித்தது.

ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். செயற் கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்தார். பிறகு குணமாகி வீடு திரும்பினார்.

இன்று திடீரென மனோரமாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர் பிரேம் குமார் தலைமையி லான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நன்றி நக்கீரன் 

ஆசிரியர் தகுதித் தேர்வு,வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி ...!

சென்னை:ஜூலை 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய, 6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு செய்ய நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு தேர்வை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம் வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும் தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 204 பேர் பங்கேற்றனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டுமே கடினமாக இருந்ததாகவும்; போதிய அளவிற்கு நேரம் வழங்கவில்லை எனவும், தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.அதற்கு தகுந்தாற்போல், நேற்று வெளியான தேர்வு முடிவும் அமைந்தது. தேர்வு எழுதிய 6.72 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 0.36.

தலைவர் பேட்டி:

தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி வெளியிட்டார்.அப்போது, நிருபர்களிடம் அவர்

கூறியதாவது:முதல் தாள் தேர்வில், 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பத்திலும், விடைத்தாளிலும் கேட்கப்பட்ட அடிப்படை விவரங்களை சரிவரச் செய்யாத தேர்வர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், இரு தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி., தேர்வில் பங்கேற்க, ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வில், 685 பேருக்கும்; இரண்டாம் தாள் தேர்வில், 1,547 பேருக்கும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, உரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இரு தேர்வர், தங்கள் அசல் விடைத்தாள் நகலை ஒப்படைக்காததால், அவர்களுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தரமானதேர்வு:
தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்., 3ல் மீண்டும்...:

அத்துடன், 60 சதவீத மதிப்பெண் பெறாத தேர்வருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், மற்றொரு டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்., 3ம் தேதி, அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்.இதன் முடிவு, அக்., இறுதிக்குள் வெளியிடப்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாத தேர்வர் மட்டுமே, இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.இந்தத் தேர்வுக்காக, தனியாக விண்ணப்பிக்கவோ, தேர்வுக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. புதிய, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படும்; அதில் குறிப்பிடும் மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதினால் போதும்.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேர அவகாசம் வழங்கவில்லை என, கடும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அக்., 3ல் நடக்கும்,முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தேர்வுக்கும், தலா 3 மணி நேரம் வழங்கப்படும்.

மாற்றம் இல்லை:


கேள்வித்தாள் கடினமாக இருந்தது என, அனைவரும் கூறினர். ஆனால், இந்தத் தேர்விலும், இத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது?கேள்வித்தாள் அமைப்பை புரிந்து, தேர்வுக்கு முழுவதுமாக தயாரானால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். அடுத்து நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது. ஏற்கனவே இருந்த அதே தரம், தொடர்ந்து கடைபிடிக்கப்படும். கேள்வித்தாள் தரத்தில், சமரசம் கிடையாது.இதுவரை, 13 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்., இறுதிக்குள், மேலும், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி முடிவடையும்.இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.
நன்றி தினமலர் 

25 ஆக., 2012

அப்பா...

அம்மா இறந்தாள் 
சுமங்கலியாய் 
பிள்ளைகளுக்கு 
அப்பா இனி 
சுமையாய் ...!
======================

அம்மா இறந்த பின் 
ஒதுக்கப்பட்ட 
ஜடமாய் அப்பா...!

======================

அம்மா இறப்பு 
பேசி பேசி 
கடைசியில் அப்பாவுக்கு 
இடம் முதியோர் இல்லம் 

=======================
கைப்பிடித்து நடை பழகிய 
மகன் சொன்னான் 
கை தடியை நான்றாய் 
பிடித்து நடந்தால் என்ன...!

ஞாபகம் ....


என் மகன் செயல்களில்
எனது இளம் 
வயது செயல்கள் 
எனது அம்மாவுக்கு 
ஞாபகமாய்   வந்து போகிறது...
--------------------------------------------
எனது மகனின் 
சின்ன சின்ன தவறுகளை 
கண்டிக்கும் பொழுது 
நீயும் அப்படிதான் செய்தாய் 
என்று சொல்லும் போது 
என்னை உணர்கிறேன்...
==========================
தினம் பூக்கும் நிலவு 
ஞாபகம் படுத்தும் 
அம்மாவின் உணவை...
======================

மின்வெட்டால் 'அம்மா' என கதறும் குழந்தைகளின் கதறல் 'அம்மா'விற்கு கேட்கவில்லையா? சேலத்தில் போராட்டம்!

தமிழகமெங்கும் மின்வெட்டு பிரச்சனையை புயலை கிளப்ப சேலத்திலோ அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 13 மணிநேரம் மின்வெட்டு ஆகிறது. அதிலும் ஆறு மணி நேரத்திற்கு மேல் இரவிலேயே அமுலாகிறது.

இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நூதன போராட்டம் செய்தது. இரவு எட்டு மணிக்கு மேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள நாட்டாண்மை கழக கட்டிடத்தின் முன் பாய் தலையணையோடு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் அங்கேயே விரித்து படுக்க தொடங்கினர்.

     
எங்க வீட்ல எல்லாம் நைட் ஆனா கரண்ட் கட் ஆகுது. இங்க தான் கவர்மென்ட் ஆபிஸ் முன்னாடி கரண்ட் (தெரு விளக்கு) இருக்கு அதனால நாங்க இங்கயே படுக்கலாம்னு வந்தோம்' என்றனர். பின் மின்வெட்டை கண்டித்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் முழக்கமிட்டனர். அதன் பின் நம்மிடம் பேசிய மாநகர செயலாளர் தோழர் பிரவீன்,

'இரவு தூங்க முடியவில்லை குறிப்பாக கை குழந்தை வைத்துருக்கும் குடும்பங்கள் பெரும் அவதிபடுகின்றனர். இதில் மழை விடாமல் பெய்கிறது அதனால் கொசு தொல்லை இன்னும் அதிகமாகிவிடுகிறது. இதனால் குழந்தைகள் இரவில் தூங்காமல் அழ தாயுள்ளங்கள் துயரம் தாங்காமல் கதறுகின்றனர். மின்வெட்டால் 'அம்மா' என கதறும் குழந்தைகளின் கதறல் 'அம்மா'விற்கு கேட்கவில்லையா?

பகல் பொழுதிலும் நினைத்த நேரத்திற்கு மின்வெட்டு நடக்கிறது தொழில் செய்ய முடியவில்லை அனைத்தும் பாதிக்கப்படுகிறது ஆனால் இரண்டு இடத்தில் மட்டும் 24 மணி நேரமும் மின்வெட்டு இல்லை அது, ஆட்சியர் மகரபூசனம் பங்களா உள்ள இடம் மற்றொன்று உள்ளூர் மந்திரி எடப்பாடி பழனிசாமி வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் ஏரியா. அவர்கள் இருப்பதால் அங்கு மின்வெட்டு இல்லை தடையில்லாமல் மந்திரி வீட்டுக்கு மின் விநியோகிக்கப்பட்டால் தான் தடையில்லாமல் மின் ஊழியர்கள் பணி புரிய இயலும் போல!

இந்த மின்வெட்டை உடனே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டம்' என்றார் உணர்வுப்பூர்வமாய்....       
நன்றி நக்கீரன்                                                     

24 ஆக., 2012

மழையின் நடனம்



ஒதுங்கி  நடந்து 
மழையோடு போராட்டம் 
நனைத்தது பண்டிகையை 
உடையை...
=========================

குடைக்கு கொண்டாட்டம் 
சொன்னவிலைக்கு 
விலைப்போனது
மழைக்காலம்...

==========================
வறுமை  பூமிககு 
அன்ன தானம் 
மழை...!
=======================
இடி ஓசையோடு 

காற்று கவிதை பாட 

மின்னல் வெளிச்சத்தில் 
மழையின் நடனம் !


முரண்பாடு...



எதிரியின் 
வெற்றிக்கு மட்டும் 
எல்லாம் நேரம் 
என்ற சொல்லோடும்...


விபத்துகளும்
தோல்விகளும் 
தோன்றும்போது...

நேரம் சரியில்லை 
நேரம் காட்டும் 
கடிகாரத்துக்கு...