30 செப்., 2012

மெடிக்கல் டீ போடுங்க...சிரிக்க மட்டும்,


எனக்கு சாதா டீ ,மச்சானுக்கு மெடிக்கல் டீ போடுங்க...

அது என்ன மெடிக்கல் டீ ?

மச்சானுக்கு இனிப்பு நீர் , சக்கரை இல்லாத டீ தான் 
மெடிக்கல் டீ...
=============================================
தலைவர் இப்ப எல்லாம் மோதிரத்தில் கூட 
கல் வைக்காமல் தான் போடுகிறார் 

ஏன் 

அதையும் கிரானைட் கல் என்றும் சொல்லிவிடுவார்கள் 
என்று பயம் தான்...
===============================

29 செப்., 2012

அவர் ராசிக்கு...சிரிக்க மட்டும்,


கட்சியை விட்டு செயலாளர் ,தலைவர் இருவரையும் நீக்கி விட உத்தரவுவிடுகிறேன்...

தலைவரே உப தலைவர் என்று சொல்லாமல் தலைவர் என்று 
தவறா சொல்லிவிட்டீர்கள் 
=======================================
ஏன் தலைவர் கட்சிலிருந்து யாரையாவது தினம் நீக்கி 
பின் மன்னித்து விட்டேன் என்று சேர்த்து  வருகிறார் ?

அவர் ராசிக்கு நீக்கி பின் சேர்க்கனுமாம் அதான்...
==========================================

தமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா

சென்னை, செப். 29-

சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் டி.ஜெயக்குமார். முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சராக பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு மே மாதம் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது சட்ட சபை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இன்று காலை ஜெயக்குமார் தனது சபாநாயகர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் துணை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார்.

இதையடுத்து ஜெயக்குமாரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் ராஜினாமா தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)-வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 16-ந்தேதி ஜெயக்குமார் சபாநாயகராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி ஜெயக்குமார் தலைமையில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. பிறகு ஜூன் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜெயக்குமார் நடத்தினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரைக்கான கூட்டத்தை ஜெயக்குமார் நடத்தினார். கடந்த பிப்ரவரி தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை அவர் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார். அடுத்த மாதம் (அக்டோபர்) தமிழக சட்டசபை வைர விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென பதவியில் இருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

நன்றி நக்கீரன் 

28 செப்., 2012

இலவசமாய் கனவு...


 

பேருந்து பயணத்தில்
சின்ன தூக்கம்
இலவசமாய் கனவு...

==================
கட்டணத்தில் காரமாய் 
எட்டாத பழமாய்
மின்சாரம்...
-------------------------------------------
காத்திருப்பு தருணங்களில்
அறிய தரும் 
வாழ்க்கை
=======================

தமிழ்நாடே இருளில் மூழ்கியுள்ளது! டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு!



சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வடசென்னை திமுக சார்பில், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வ- யுறுத்தியும், சென்னை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். குறிப்பாக வியாசர்பாடி, மூலக்கடை ஆகிய மேம்பாலங்களை உடனே கட்டி முடிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றிய பிறகு, சென்னை முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகள், கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. சென்னையில் எங்கு பார்த்தாலும் காலரா பரவி வருகிறது. ஆனால் ஆளும்கட்சியினர் சென்னையில் காலரா இல்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாதிக்கப்படுவது மக்கள்தான். ஆகவே மக்களின் நலன் கருதி, சுகாதார பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாடே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. மின்சாரம் சீராக கிடைக்காததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குக்காக என்றும் பாடுபடக் கூடிய இயக்கம் திமுகதான் என்றார்.

நன்றி படம்: அசோக்...நக்கீரன் 

26 செப்., 2012

மண்ணில் உடலை புதைக்கும் போராட்டம்: வைகோ பங்கேற்பு

இடிந்தகரை,செப்.26-


கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் இல்லாத இடங்களில் கல்லறைக்குள் குடிபுகும் போராட்டமும் நடத்தினர்.

இன்று இடிந்தகரையில் மக்கள் மண்ணுக்குள் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திரளான ஆண்களும், பெண்களும் இடிந்தகரை கடற்கரையில் கூடி கடல் மணலில் உடலை புதைத்து போராட்டம் நடத்தினர்.இடிந்தகரை ஆலயம் முன்பு ஒரு பகுதியினர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மதியம் 12 மணிக்கு இடிந்தகரை வந்தார். இடிந்தகரையில் போராட்ட குழுவினரை அவர் சந்தித்து பேசினார். அப்போது உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டோரும் அங்கு வந்தனர். அவர்களுடன் ஆலோசனை நடத்திய வைகோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்தியில் பேசினார்.

பின்னர் வைகோவும் ம.தி.மு.க தொண்டர்களுடன் மண்ணில் உடலை புதைக்கும் போராட்டத்தில் பங்கேற்றார். உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.

நன்றி மாலைமலர் 

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு: கடைகளில் கறுப்பு கொடி

சென்னை, செப். 25-

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றப்படும் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலையில் வியாபாரிகள் தங்களது கடைகளில் கறுப்பு கொடிகளை ஏற்றினர்.

சென்னையில் வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோயம் பேட்டில் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் எழும்பூரில் சங்க நிர்வாகிகளுடன் கடை கடையாக சென்று கருப்பு கொடி ஏற்றினார்.

இதில் பொதுச்செயலாளர் மோகன், பாண்டிய ராஜன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் மாரித் தங்கம், சாமுவேல், கே.சி. பாபு, ராஜா உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் விக்கிரம ராஜா பேசும்போது, அன்னிய முதலீட்டை ஒருபோதும் நுழைய விடமாட்டோம். இதற்காக ஒவ்வொரு வியாபாரிகளும் கடுமையாக போராடுவார்கள். இதன் முதல் கட்டமாக தமிழ் நாட்டில் உள்ள 20 லட்சம் வியாபாரிகள் கறுப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர் என்றார்.

பின்னர் விக்கிரமராஜா சென்னை முழுவதும் சென்று ஒவ்வொரு கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றினார்.

ஆலந்தூரில் பேரமைப்பு துணை தலைவர் ஆலந்தூர் பி.கணேசன் வீதி வீதியாக நிர்வாகிகளுடன் சென்று கறுப்பு கொடி ஏற்றினார். இதல் கதிரேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

கொரட்டூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மாநில துணை தலைவர் கொரட்டூர் ராமச்சந்திரன் கொடி ஏற்றினார். இதில் தலைவர் முருகேசன், செயலாளர் கோபால் ராஜ், பொருளாளர் வெங்கடேசன், கார்மேகம் பங்கேற்றனர்.

வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தலைவர் ஜெயபால் தலைமையில் அம்பத்தூரில் கறுப்பு கொடி ஏற்றும் நிகழ்ச்சியை மாநில பொதுச் செயலாளர் மோகன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் முகமது, பொருளாளர் தங்கதுரை, முகமது ஷெரீப், காசிராஜன், காவேரிமீரான், பிச்சைமணி, விஜயகுமார் பங்கேற்றனர்.

ஆவடி பெருநகராட்சி வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் 1000 கடைகளில் கறுப்புகொடி ஏற்றப்பட்டது. கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே.எம்.துரைராஜன், பொதுச் செயலாளர் அய்யன் பவன் அய்யாதுரை, பொருளாளர் மனோகரன், மாவட்ட பொருளாளர் தங்கதுரை, திருமாறன், முத்து, வெள்ளானூர் மாறன், ரமேஷ், மாதவன், சீனிவாசன் பங்கேற்றனர்.

தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன், பல்லாவரம், கந்தன்சாவடி, குன்றத்தூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, கண்ணகிநகர், ஒக்கியம் பேட்டை, கொட்டிவாக்கம், அடையார் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளில் கறுப்பு கொடி ஏற்றினார்.

பல்லாவரத்தில் ராமச்சந்திரன், ஜெயபாண்டியன், செல்வராஜ், ராஜ்பத்ம நாபன், ரமேஷ், கோமஸ் பங்கேற்றனர்.

குன்றத்தூரில் சீனிவாசன், சி.எம்.சாமி, ரத்னவேல், அடையாறில் பாஸ்கர், செந்தில் ஆறுமுகம், பாலசுப்பிரமணி, பி.டி.சேகர் ஆகியோரும், கந்தன் சாவடியில் கோவிந்தராஜ், சண்முகம், வின்சென்ட், கார்த்திகேயன் ஆகியோரும், ஆதம்பாக்கத்தில் செல்வ குமார், தேசிகன், சின்னவன் ஆகியோரும், கொட்டி வாக்கத்தில் முத்துமாலை, ஹிலால், கணேஷ் பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கண்ணகிநகரில் மைக்கேல்ராஜ், காமராஜ், முனுசாமி ஆகியோரும், மீனம்பாக்கத்தில் ராம்ராஜ், கிறிஸ்துவராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

25 செப்., 2012

சென்னையில் மின்வெட்டை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 25-

தமிழகத்தில் மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, கூட்டுறவு சங்க தேர்தலில் போலியாக உறுப்பினர்களை சேர்ப்பது, செயல்படாத நிலையில் இருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்து இருந்தது.

அதன்படி தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் சேப்பாக்கத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்வெட்டை கண்டித்தும், மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும் சென்னையில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி காலத்தில் தொழில்வளம் பெருகியது. அதற்காக மின் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக சென்னை தவிர மற்ற இடங்களில் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின் தடை இருந்தது உண்மை. ஆனால் அதையே காரணம் காட்டி, தான் ஆட்சிக்கு வந்தால் தடையில்லாத மின்சாரம் வழங்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் இன்று வெளி மாவட்டங்களில் 10 முதல் 16 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கிறது.

சென்னையில் தற்போது 1 மணி நேரம் மின்வெட்டு அமலில் இருக்கிறது. நாளை முதல் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்போவதாக கூறுகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் வேகம் காட்டவில்லை. தி.மு.க. ஆட்சியில் போது மின் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசுடன் பேசி 1000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்பட்டது. ஆனால் இப்போது கவுரவ பிரச்சினையாக கருதி வாங்க தயங்குகிறார்கள்.

சென்னைநகர் முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. கூட்டுறவு சங்க தேர்தலுக்காக அ.தி.மு.க.வினரையே உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள். இவற்றை தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், பகுதி செயலாளர் தனசேகரன், அன்புதுரை, வேலு, மகேஷ்குமார், மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம். காமராஜ், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், ஜெ.கருணாநிதி, சேப்பாக்கம் சுரேஷ்குமார், உதயசூரி யன், கே.கே.நகர் ஏ.எம்.வி. பிரபாகர்ராஜா, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பிரியதர்ஷினி எம்.ஜி. சுரேஷ்குமார், சேலம் சுஜாதா, தாயகம் கவி, வி.எஸ்.ராஜ், சுப.முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி மாலைமலர் 

இ.கம்யூ எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் எம்எல்ஏ ராமச்சந்திரன். பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளரான பழனிச்சாமி கடந்த ஜுன் 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராமச்சந்திரன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரண் அடைந்த ராமச்சந்திரன் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஓசூர், தளி போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக கிரானைட் குவாரிகளை நடத்தி கற்களை வெட்டி கடத்தியதாக, இவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் தொழிலதிபர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ராமச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை அவர் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே பழனிச்சாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராமச்சந்திரனின் சகோதரர் வரதராஜன், மாமனார் லக்குமையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ராமச்சந்திரன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.அசோக் குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமச்சந்திரனிடம் இதற்கான உத்தரவை காண்பிப்பதற்காக போலீசார் விரைந்தனர். 

அதிமுக ஆட்சி வந்தபிறகு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் எம்எல்ஏ ஒருவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜெ.வை சந்தித்த தா.பாண்டியன், ராமச்சந்திரன் விவகாரம் குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், அதிமுக தோழமைக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராமச்சந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது, இன்று பிறந்த நாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த நாள் வாழ்த்து சொல்லும்போது, தா.பாண்டியனை அதிமுக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமாதானப்படுத்துவார் என்று கட்சியினர் தெரிவித்தனர்
நன்றி .
நக்கீரன் 

விஞ்ஞானிகள் குடியிருப்பில் பெண் உளவாளி சிக்கினார்



பெங்களூர் : பெங்களூர் இஸ்ரோ விஞ்ஞானிகள் குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பெண் உளவாளியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய விண்வெளி ஆய்வுமைய(இஸ்ரோ) விஞ்ஞானிகளின் அலுவலகம் மற்றும் விருந்தினர் மாளிகை பெங்களூர் எலகங்காவை அடுத்த பழைய ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ளது.

கடந்த 21ம் தேதி இந்த அலுவலகத்திற்கு வந்த மர்ம பெண், தன்னை இஸ்ரோ விஞ்ஞானி என்றும், இங்கு விஞ்ஞானிகள் ஆய்வு குழு கூட்டத்தில் பங்கேற்க வந்ததாக வும் கூறினார். இருப்பினும் அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட ஊழியர்கள் அவரது அடையாள அட்டையை ஸ்கேன் செய்தபோது, அவர் இஸ்ரோ விஞ்ஞானி இல்லை என்பது தெரியவந்தது.

அதிகாரிகள் விசாரணையில் அப்பெண் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதைத் தொடர்ந்து இஸ்ரோ பாதுகாப்பு அதிகாரி லட்சுமிகாந்த், ஜீவன் பீமாநகர் போலீசில் புகார் அளித் தார். அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட பெண் கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த பியூலா எம்.ஷாம் (40) என்பது தெரியவந்தது. இவரது கணவர் அலக்ஸ் அகமதாபாத் தில் ஆசிரியராக உள்ளார். 2 குழந்தை உள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது’’ என்றார்.

மனநலம் சரியில்லாதவரா?

பியூலாவின் கணவரிடம் நடத்திய விசாரணையில், பியூலாவுக்கு மனநலம் சரியில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், அப்படியுள்ளவர் ஐடி கார்டு தயாரிக்கும் அளவுக்கு எப்படி துணிச்சலுடன் செயல்பட்டார், 2 நாட்கள் யாருக்கும் சந்தேகம் வராத அளவுக்கு விஞ்ஞானியாக நடித்தார் என்பது ஆச்சர்யமாக உள்ளது. பியூலாவின் செல்போன்கள், ஈமெயில் ஆகியவை ஆய்வு செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் பியூலாவுக்கு உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்னர். ராணுவ குடியிருப்பில் உளவு பார்த்ததாக வேலூரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பியூலாவின் கைது அவர் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினகரன் 

24 செப்., 2012

காலத்தின் மாற்றம்...

















களத்தில் புதிய தோற்றத்தில் 
காலத்தின் மாற்றம் 
பெண்கள்...
=======================
நடை உடை 
மாறிப்போனது 
காலத்திற்கு ஏற்ப...
--------------------------------------------
இடைக்குள் 
இருப்பிடம் 
கைப்பேசி...
=========================

என் வீட்டுக்கே தண்ணீர் வர்றதில்ல...


என் வீட்டுக்கே தண்ணீர் வர்றதில்ல... நான் எங்கப்போய் சொல்றது... பெண்களிடம் கெஞ்சி தப்பித்த அமைச்சர்






வேலூர் மாநகரத்திற்க்குட்பட்ட சின்ன அல்லாபுரத்தில் 23ந்தேதி புதிய ரேஷன் கடை திறப்பு விழாவில் கலெக்டர் சங்கர், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் கலந்துக்கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழா காலை 11 மணிக்கு என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டது. கலெக்டர் 11 மணிக்கு முன்பே வந்துவிட்டார். அமைச்சரோ 11.30 மணிக்கு சவகாசமாக வந்தார். அதுவரை கலெக்டர் மேடையில் அமர்ந்து செல்போன் வைத்துக்கொண்டு அதில் கவனம் செலுத்திக்கொண்டுயிருந்தார். மற்ற அலுவலர்கள் இதனால் என்ன செய்வது என தெரியாமல் பதட்டத்துடன் இருந்தனர்.
11.30க்கு விழாவுக்கு வந்த கலெக்டரை அப்பகுதி பெண்கள் சுற்றி வளைத்து எங்களுக்கு குடிநீரே வரவில்லை, இதுக்கு பதில் சொல்லுங்க என கேள்வி கேட்டனர். அமைச்சரோ என் வீட்டுக்கே இப்பயெல்லாம் 15 நாளைக்கு ஒருமுறை தான் குடிதண்ணீர் வருது. இத நான் எங்கப்போய் சொல்றது என சமாளிக்க முயன்றார். அப்போதும் பெண்கள் விடாததால் குடிதண்ணீர் பிரச்சனைய தீர்க்க நடவடிக்கைச் எடுக்கச் சொல்றேன் என்றார்.

நன்றி நக்கீரன் 

மின்சாரமே உனக்கு கண்ணீர் அஞ்சலி!









கடந்த ஒரு மாதங்களாக தமிழகம் எங்கும் சில மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் காலண்டுத் தேர்வுகளுக்கு படிக்க முடியவில்லை. தொழில் நிறுவனங்களில் தொழில் செய்ய முடியவில்லை. பொதுமக்கள் இரவு பக-ல் தூங்க முடியவில்லை.

இந்த நிலையில் இப்போது மின் வெட்டு நேரம் இன்னும் அதிகமாகி உள்ளது. டெல்டா பகுதியில் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் கொடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து 10 மணி நேரம் வரை கொடுத்தது. ஆனால் விவசாயம் தொடங்கும் இந்த நேரத்தில் 2 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கொடுக்கப்படுவதால் டெல்டா விவசாயிகள் பாவிய நாற்றை நடவு செய்ய தயங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு பரபரப்பு கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தொழில் போச்சு.. தூக்கம் போச்சு.. சென்னையில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அறந்தையில் 12 மணி நேரமா? என்று கேள்வியுடன் அறந்தாங்கி மண்டல போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சங்கம் இந்த போஸ்ட்டரை ஒட்டியுள்ளது. இவர்களே நாளை செவ்வாய் கிழமை உண்ணாவிரத போராட்டமும் அறிவித்துள்ளன...
நன்றி நக்கீரன் 

23 செப்., 2012

மேட்டுர் அணை திறப்பு




மேட்டுர் அணை திறப்பு 


காவேரி ஆறு 

சுத்தம்...
===============

சாதனையில் 
வெளிச்சம் 
மின் வெட்டு...
================
நல்ல நேரமும் 
மின்வெட்டு நேரமும் 
2013 வருட காலண்டரியில்...
===============

===================

சந்தனக்குடம்












கொடிகள் தெருக்களை 
அலங்கரிக்க...

மின்சார விளக்குகள் 
வழியெங்கும் வரவேற்க...

ஒலிபெருக்கியில் 
சினிமா பாடல் பாட ...

தெருவெங்கும் 
புதுக்கடையில் 
பிளாஸ்டிக் பொருளகள் 
இடம்பிடிக்க...

வீட்டுக்கு வீடு 
விருந்தாளிகள் 
வந்திருக்க...

தபஸ் குழுவினர்களுடன் 
சந்தனக்குடம் 
பவனி வர 
இளம் காளையர்களும் 
கூட்டமாய் சிரித்து 
எதையோ எதிர்ப்பார்த்து 
கண்கள் அலைப்பாய...

மறைந்து தான் போனது 
இருந்தாலும் 
மறக்காமல் தான் உள்ளது...





திரைவுலகம்...




எண்ணிய எண்ணத்தை 
கதையாய் மாற்றி 
ஏமாற்று வித்தையை 
படம்பிடித்து...

ஆட்டம் பாட்டம் 
நடுவில் 
பம்பரம்விட்டு...

ஆடை பாதி 
ஆள் பாதியாய் 
நடமாட விட்டு...

தமிழுக்கு 
தமிழே அறியாத 
தெரியாதவர்களை 
அழைத்து வந்து...

கொடி பிடிக்க 
திட்டம்போட்டு 
அதில் தோற்றும் 
வெற்றியும் பெற்று...

நிழலை நிஜமாக்கும் 
உலகமே திரைவுலகம்
இதை காண 
திரண்டு வரும் 


22 செப்., 2012

அவன் ஒரு தகப்பன்...

















காதல் கடிதம் 
கொடுத்தான் நண்பன் 
அடிதடி வெட்டு குத்து...

நண்பர்களும் 
காலமும் அவனை 
மறக்க செய்தது...

அவன் மகளும் 
காதலில் விழ 
அதே 
அடிதடி வெட்டு குத்து...

விசாரித்து பார்த்ததில் 
நண்பனின் முன்னாள் 
காதலி மகனாம்...


அவன் ஏற்கவில்லை 
காரணம் இன்று 
அவன் ஒரு தகப்பன்...


வழியும் வேதனையும் 
அவர் அவர்களுக்கு 

வந்தால் தான் தெரியும் 
என்று சும்மாவா  சொன்னார்கள்...


20 செப்., 2012

அமெரிக்கா தீவிரவாதம்...


கொன்று குவித்த 
பிணத்தின் மீது 
மனித நேயம் பேச்சு....

அணு உலை 
இருப்பதாய்   கூறி 
சண்டைகள்...

சமாதன புறாக்கள் 
மிஷல் உருவத்தில் 

திட்டமிட்டு நடக்கும் 
அமெரிக்கா   தீவிரவாதம்...


நாடுவிட்டு நாடு 
எரி பொருளுக்கு....


கைக்கட்டி பார்க்கும் 
உலகம்...


18 செப்., 2012

அறியாமலே அறியாமை ...













வரும் தேர்தல் 
அனைத்து தொகுதிகளும் 
வெற்றி
அனைத்துக்கட்சி
தலைவர்கள் பேச்சு 
வாக்காளர் கருத்து 
அறியாமலே 
----------------------------------------------
தீக்குளித்தான் ஒருவன் 
இரங்கல் தீர்மானம் 
கட்சி தலைவர்கள் 
படத்துடன் செய்தி...
==========================
இலவசம் தருவதாய் 
சொன்னார்கள் 
தலைவர்கள்...

ஆனந்தத்தில் 
ஒட்டு போட்டான் 
தனது வரிப்பணம் தான் 
அது என்று அறியாமலே 
வாக்காளன்...


17 செப்., 2012

சூழ்நிலை...











பொம்மை வியாபாரி 
பொம்மைகள் இருந்தும் 
வீட்டில் குழைந்தைகள்
விளையாட மனமிருந்தும் 
பார்க்க மட்டுமே அனுமதி...
--------------------------------------------------
பொறாமை
அழகான குழந்தை பார்த்தும் 
கொஞ்சமுடியாத நிலையில் ...
============================

நீண்ட கால பகையை 
மறக்க  செய்தது 
குழந்தை சிரிப்பு...

15 செப்., 2012

பிள்ளைங்களின் ஆதங்கம் ...




உயர் திரு பெற்றோர்களுக்கு 
உங்கள் குழந்தைகளின் 
கடிதம்...

நலம் நலம் அறிய ஆவா...
வேலையின் காரணமாய் 
உங்கள் பயணம் இன்னும் 
தொடர்கிறது 

அன்புக்காக எங்கள் 
உள்ளம் ஏங்குகிறது...

இருப்பதை விட்டு 
யாருக்காக இந்த 
ஓட்டம்...

உங்கள் கை பிடித்து 
நடந்து பழகியது போல 
நீங்கள் அமைதி பெற 
எங்கள்  கை பிடித்து 
நடக்க பழகிக்கொள்ளுங்கள்...

கொஞ்சம் எங்களுக்காக 
ஒதுக்குங்கள்
வாழ்க்கையை வாழ்ந்து 
பார்க்க...

தேடல்...













நகரத்திலிருந்து
கிராமத்திருக்கு
தூய அன்பை
தேடிய பயணம்

கிராமத்திலிருந்து
நகரத்திருக்கு
அன்பை தொலைத்து
வேலையை தேடிய
நிலையில்...

ஏதோ வண்ணத்தில்
தொடர்கிறது...

13 செப்., 2012

நாங்கள் மாடன் கேல்ஸ்...



















தடை போடவில்லை
உடைக்கு...

கொண்டை தேவையில்லை
கூந்தலுக்கு...

ஒப்பனைக்கும் பணம்...
ஓட்டி செல்ல
வாகனத்தின் சிலவுக்கும்
பணம்...

கொடையான வாழ்வுக்கு
உதவி செய்ய மனம் தானில்லை
வீட்டுக்கும் ஊருக்கும்
நாங்கள் மாடன் கேல்ஸ்...

சென்னை தி.நகரில் பொதுக்கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதிப்பு

சென்னை,செப்.12- 

சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியான தியாகராய நகர் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக ரங்கநாதன் தெரு அமைந்துள்ள உஸ்மான் சாலையில் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான வசதி இல்லாததால் பல வாகன ஓட்டிகள் சாலையோரத்திலும், தெருக்களிலும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர மாநகராட்சி சார்பில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களாலும் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தி.நகரின் பி.வி. ராஜமன்னார் சாலை மற்றும் வன்னியர் சாலையில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொதுமக்கள் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதனை ஆய்வு செய்த காவல்துறை பி.வி.ராஜமன்னார் சாலை, வன்னியர் சாலை ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்துள்ளது.

மேலும் இந்த சாலைகள் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனைகூட்டம் நடத்துவதற்கு தகுதியற்ற பகுதி என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

12 செப்., 2012

எதுவுமில்லை...




நீண்ட காலத்திற்கு பின்
தாயக பயணம்
மரணத்தாலும் 
காலத்தாலும்
தேவைக்கும் 
பகிர்ந்துக்கொள்ள 

பெற்றோர்களும்
ஆறு 
ஏரி 
குளம் 
தோட்டங்கள்...

பணத்துக்காக 
வாழ்ந்த
எனது மனதை போல்...

11 செப்., 2012

கந்தக மழையில்...


கந்தகத்தோடு 
ஏன் தீக்கு 
உடன்பாடு ....!

தொட்டவுடன் 
கோர தாண்டவத்தில் 
சிதறியது 
உடல்கள்...!

மரணத்தின் ஓலங்கள் 
ஒவ்வொரு வருடமும் 
இன்னும் பாதுகாப்பு 
தான் திட்டமிடப்படுகிறது...!
காலம் கடந்தால் 
மறக்கப்படுகிறது 

நிதி உதவிகள் 
இறந்த பின் கிடைத்தால் என்ன 
கிடைக்காமல் போனால் என்ன 

தேவை 
அச்சம் தீர்க்கும் நிலை 
வேலைக்கு உண்டான 
சம்பளம்...

மரணத்தின் பயம் 
போக்கும் நிலை 
போகுமா
போக்குமா...?

விடை தெரியாமல் 
கந்தக மழையில் 
நனைந்தப்படியே 
ஏழைகள்...!

கல்விக்கான உரிமைச் சட்டம்



டிசம்பர் 2002
அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 86ஆவது பிரிவு(2002) உட்பிரிவு சட்டம் 21ஏ (பிரிவு111)-ன்படி 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும் இலவச கட்டாயக் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும்,

அக்டோபர் 2003
மேற்குறிப்பிட்ட சட்டப்பிரிவின் முதல் அறிவிப்பு, அதாவது குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி வழங்குவது பற்றிய இந்தச் சட்ட மசோதா, 2003 மிகப் பெரிய அளவில் பொது மக்கள் கருத்து மற்றும் விமர்சனங்களுக்காக அக்டோபர் 2003 இணையதளத்தில் வெளியிடப்பட்டது,

2004
இந்த சட்ட நகலைப் பற்றி பெறப்பட்ட ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, இலவச கட்டாய கல்வி மசோதா 2004 என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய மசோதா தயாரிக்கப்பட்டு http://education.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

ஜூன் 2005
மத்திய கல்வி ஆலோசனை குழு 'கல்வி பெறும் உரிமை' என்ற மசோதாவை தயாரித்து மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதை திருமதி சோனியா காந்தி தலைமை வகிக்கும் தேசிய ஆலோசனை கமிட்டிக்கு அனுப்பி வைத்தது. தேசிய ஆலோசனை கமிட்டி அதை பிரதம மந்திரிக்கு பார்வைக்கு அனுப்பி வைத்தது.

ஜூலை 2006
மத்திய நிதிக்குழு மற்றும் ஆலோசனை குழு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்த மசோதாவை நிராகரித்தது. அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக மாநிலங்களுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது, (அரசியலமைப்பு சட்டத் திருத்தம் 86ஆவது பிரிவு தேசிய அளவில் நிதிப் பற்றாக்குறை என்று குறிப்பிடப்பட்ட மசோதா)
ஜூலை 19, 2006
சி.ஏ.சி.எல்., எஸ்.ஏ.எஃப்.ஈ., என்.ஏ.எஃப்.ஆர்.ஈ., சி.ஏ.பி.ஈ. போன்றவை ஐ.எல்.பி. மற்றும் பிற அமைப்புகளை பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விளைவுகளைப் பற்றியும் மாவட்ட அளவிலும் கிராம அளவிலும் செய்ய வேண்டியவை குறித்தும் ஆதரவு நடவடிக்கை மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டத்திற்காக அழைப்பு விடுத்துள்ளன.
==================================================================
இந்த சட்டம் பற்றிய பொதுவான கேள்விகளும், பதில்களும்



1. இந்த சட்டம் ஏன் இன்றியமையாதது?
அரசியல் அமைப்புச் சட்டத்திருத்த அமலாக்கத்தை உறுதிபடுத்துதற்கான திசையில் அரசின் முதல் நடவடிக்கை என்ற கோணத்தில் இந்த சட்ட மசோதா முக்கித்துவம் வாய்ந்தது. இதைப்போலவேஇந்த மசோதா மேலும்:
இலவச கட்டாய தொடக்க மற்றும் மேல்நிலை கல்வி வழங்குவதற்கான சட்டம்
எல்லா இடங்களிலும் பள்ளிக்கூடம் ஏற்படுத்தவது
பள்ளி கண்காணிப்பு குழு அமைப்பது _ முறையாக இயங்குவதைக் கண்காணிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்
6-14 வயது வரையிலான குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது என்பதை கண்காணிக்கிறது
இவை அனைத்தும் முறைசார்ந்த பொதுகல்வித்திட்டத்தை மேம்படுத்தி அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் உருவாவதை தடுப்பதற்கான அடிப்படை நடவடிக்கைகளை வழங்குகிறது.

2. இந்த சட்டத்தில் 6 முதல் 14 வரையிலான வயது தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பப் பள்ளி கல்வி முதல் மேல்நிலைப் பள்ளி கல்வி வரை கட்டாயக் கல்வி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதா, இந்த வயதில் வழங்கப்படும் கல்வி அவர்களுடைய எதிர்காலத்திற்காக போடப்படும் அஸ்திவாரமாக அமையும் என்ற கருத்தைக் கொண்டு உருவானது.

இந்த சட்டத்தின் முக்கியத்துவம் என்ன மற்றும் இதனால் நம் நாட்டுக்கு என்ன பயன்?

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க கணமாகும்.

குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.

உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலவச கட்டாய ஆரம்பக் கல்வி என்றால் என்ன?

6 முதல் 14 வயது வரையான அனைத்து குழந்தைகளும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை பெறுகிறார்கள்.

ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல்லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாட புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.

கல்விக்கான உரிமை நிலைநாட்டப்படுவதில், பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் பங்கு என்ன?

குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்பு மிக்க கணமாகும். இந்தியாவில் முதல் முறையாக, குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், குழந்தைகள் தங்கள் உரிமையான ஆரம்பக் கல்வி பெறுவதற்கு அரசு உத்திரவாதம் அளிக்கிறது.

உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே, குழந்தைகளின் முழுத் திறனும் வெளிப்படும் வகையில், குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்புக் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2009 ம் ஆண்டில், இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையான 8 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்லவில்லை என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவை தவிர்த்து விட்டு, 2015- க்குள் அனைத்து குழந்தைகளும் ஆரம்பக் கல்வி முடிக்கும் இலக்கை உலகால் அடைய முடியாது.

ஒவ்வொரு பள்ளியிலும் ஏற்படுத்தப்படும் பள்ளி நிர்வாகக் குழுவில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.பள்ளி நிர்வாகக் குழு, பள்ளிக்கான மேம்பாட்டு திட்டங்களை வகுப்பது, அரசு நிதியை முறையாகப் பயன்படுத்துவது மற்றும் ஒட்டுமொத்த பள்ளியின் சூழலைக் கண்காணிப்பது ஆகிய பணிகளை செய்யும். பள்ளி நிர்வாகக் குழுக்களில் 50 சதவீதம் பெண்கள் மற்றும் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதை இச்சட்டம் கட்டாயமாக்கி உள்ளது. சிறுவர் மற்றும் சிறுமியருக்கான தனித்தனி கழிப்பறைகளை ஏற்படுத்துவது, உடல் நலம், சுகாதாரம், மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து கல்வியை முழுமை பெற வைப்பது ஆகியவற்றில் இவ்வாறான சமுதாய பங்கேற்பு பெரிதும் உதவும்.

கல்விக்கான உரிமைச் சட்டத்தால் எவ்வாறு குழந்தைகள் விரும்பும் பள்ளிகளை உருவாக்க முடியும்?

நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த, அனைத்து பள்ளிகளும் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான நெறிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். ஆரம்பக் கல்வி நிலையில், ஒவ்வொரு 60 குழந்தைகளுக்கும் நன்கு பயிற்சி பெற்ற இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பள்ளிக்கு வருகை தருவது, பாடத்திட்டத்தை முழுமை செய்வது, குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறனை மதிப்பிடுவது, தவறாமல் பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்களை நடத்துவது ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். வகுப்புக்கு தகுந்தவாறு அல்லாமல், மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கை இருக்கும்.

குழந்தைகள் சிறப்பாகக் கற்பதை உறுதி செய்ய ஆசிரியர்களுக்கு தேவையான உறுதுணையை அரசு நிறைவேற்றும். பள்ளி நிர்வாகக் குழுவுடன் இணைந்து, பள்ளியின் தரத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதில் சமுதாயமும், பெற்றோரும் முக்கிய பங்காற்ற வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கல்வி உரிமைக் கனவை நனவாக்குவதற்கு தேவையான அனைத்து சட்ட வடிவங்களையும், ஏதுவான சூழ்நிலைகளையும் அரசு உருவாக்கும்.

இந்தியாவில், எவ்வாறு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கான நிதியைப் பெறுவது?

குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு இச்சட்டம் ஒரு துவக்கத்தை அளித்துள்ளது.

உலகிலுள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு தேவைப்படும் நிதியை, மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். மத்திய அரசு, தேவைப்படும் நிதியை கணக்கிடும்: மாநில அரசுகளுக்கு, இதிலிருந்து குறிப்பிட்ட சதவீதம் நிதியாக வழங்கப்படும்

கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றத் தேவையான கூடுதல் நிதியை மாநிலங்களுக்கு வழங்குவதை பரிசீலிக்கும்படி, மத்திய அரசு, மத்திய நிதிக் குழுவை (Finance Commission) கேட்டுக் கொள்ளலாம்.

சட்டத்தை நடைமுறைபடுத்த தேவைப்படும் மிகுதி நிதிக்கு மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். சமுதாய அமைப்புகள், மேம்பாட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் நிதிப்பற்றாக்குறையை போக்க முடியும்.

கல்வி உரிமையை அடைவதில் உள்ள தடைகள் யாவை?

ஏப்ரல் 1 முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. வரைவு விதிகள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் மாநிலங்கள் தங்களுடைய விதிகளை வடிவமைத்து, கூடிய விரைவில் அவற்றை வெளியிட வேண்டும்.

குழந்தைத் தொழிலாளர்கள், இடம் பெயர்ந்த குழந்தைகள், அதிக கவனம் தேவைப்படும் குழந்தைகள், அல்லது சமுதாயம், கலாச்சாரம், பொருளாதாரம், மொழி, வசிப்பிடம், பாலினம் போன்ற பிற அடிப்படைகளில் ஒதுக்கப்பட்ட மக்களை சென்றடையும் வகையில் சிறப்பு வழிமுறைகள் இச்சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. கல்வி உரிமைச் சட்டம், கற்பித்தல் மற்றும் கற்றலில் அதிக தரத்தை அடைய முயற்சிப்பதால், இதற்கு கூடுதல் முயற்சிகளும் தகுந்த சீரமைப்புகளும் தேவைப்படுகின்றன:
குழந்தைகள் விரும்பும் வகையிலான கல்வி கற்பிக்க தேவைப்படும் 1 மில்லியனுக்கு மேற்பட்ட புதிய மற்றும் ஏற்கனவே பணியிலுள்ள ஆசிரியர்களை அடுத்த 5 ஆண்டுகளில் பயிற்றுவிக்க, புதிய வகை அணுகுமுறைகள் மற்றும் முயற்சிகள் தேவை.
இன்றைய தேதியில் பள்ளியில் கற்க வேண்டிய 190 மில்லியன் குழந்தைகளில் ஒவ்வொருவருக்கும், அவர்கள் விரும்பும் வகையில் ஆரம்பக்கல்வி பெறுவதை உறுதி செய்ய, அவர்தம் குடும்பத்தினரும் சமுதாயமும், பெரிய அளவிலான பங்களிப்பைத் தரவேண்டும்.
சீரிய தரத்தையும், சமத்துவத்தையும் அடைய, தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும். முன்பள்ளிக்கல்வியில் முதலீடு செய்வது குறிக்கோள்களை அடையக் உதவக்கூடிய சிறந்த அணுகுமுறையாகும்.
பள்ளிக்குச் செல்லாத 8 மில்லியன் குழந்தைகளைப் பள்ளிக்கு வரவழைப்பது, அவர்களை பள்ளியில் இருத்துவது மற்றும் அவர்களை வெற்றியடையச் செய்வது போன்ற கடுமையான சவால்களை சமாளிக்க, இலகுத்தன்மை உடைய மற்றும் புதுமையான அணுகுமுறைகள் தேவைப்படுகின்றன.

கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?

இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும்.

ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷனகள் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்களை (Right to Education Protection Authority - REPA), ஏப்ரல் 1 முதல் ஆறு மாதங்களுக்குள் அமைக்க வேண்டும். குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக்கலாம்.

குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களால் மேல்முறையீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும். அவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.

கல்வி உரிமைச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும்? அது எவ்வாறு நனவாகும்?

சீரிய தரத்தையும் சமத்துவத்தையும் அடைய மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நீக்க, பெரிய அளவிலான முயற்சிகள் செய்வது முக்கியமாகும். அரசுகள், சமூக அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பிரபல புள்ளிகள் ஆகிய முக்கிய பங்குதாரர்களை ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெப் அமைப்பு ஒன்றுபடுத்தும்.தேவையான விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், பணிக்கான அழைப்பு விடுக்கவும், யூனிசெப் இப்பங்குதாரர்களை ஒருங்கிணைக்கும். சட்ட வடிவமைப்புகள் மற்றும் அவற்றின் செயலாக்கம், குழந்தைகளுக்குத் தேவையான முடிவுகளை எட்டுவதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தும். கல்வி உரிமைச் சட்ட நடைமுறைகளை கண்காணிக்கத் தேவையான மாநில மற்றும் மத்திய அளவிலான அமைப்புகளை வலுப்படுத்தவும் யூனிசெப் பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும்.

மூலம்: யூனிசெப்

நன்றி http://www.indg.in/

வரவேற்பாளரின் புலம்பல்...













அலைபேசி 
கணினிக்குள் 
போராட்டம்...

முகம் தெரியா 
நிலையில் அவசியம் 
சிரித்து பேசும் வேலை...

அழகுக்கும் 
சிரிப்புக்கும் தான் 
இங்கு சம்பளம்...

எனது உடைகள் கூட 
கவனிக்கப்படுகிறது...

மேய்ந்து திரியும் 
கண்களுக்கும் 
மொக்கைப் போடும் 
வாய்களுக்கும் 
இடையில் தான் 
வாழ்க்கை...

சிரித்து பேசி 
ரசிக்க வைக்கும் 
பொம்மையாய் 
நான்...


அட என்ன வாழ்வு 
என்று வெறுக்கும் 
போது 
வறுமை வந்து 
போகிறது...

வேற என்ன செய்ய 
வழக்கம் போல 
சிரித்தே எனது சோகத்தை 
சலவை செய்கிறேன்...!   

10 செப்., 2012

உதயகுமார் தலைமறைவு! வீடு வீடாக சோதனையிட்டது போலீஸ்!



கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை எதிர்த்து போராட்டக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இன்று அணுமின் நிலையத்தின் பின்புறமாக, கடல் வழியாக வந்து முற்றுகை போராட்டம் நடத்த முயன்றார்கள். முற்றுகையிட வந்த போராட்டக்காரர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று ஐ.ஜி.,ராஜேஸ்தாஸ் போராட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நேரத்தில் இதில் ஆவேசமுற்ற ஒரு சிலர் ஐ.ஜி.,யுடன் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவரை தாக்கினர்.'

அப்போது போலீசார் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இதனையடுத்து அவரை மீட்க போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. கண்ணீர் புகை குண்டுகள் வீசியது. போலீஸ் தடியடியை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கடலில் இறங்கினர். சிலர் கடலில் நீந்திச்சென்றனர்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் படகில் ஏறி தப்பிவிட்டார். ப்போராட்டத்தை தூண்டிவிட்டதாக அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.

இதையடுத்து உதயகுமாரை தேடி இடிந்தகரையில் போலீஸ் நுழைந்தது. இடிந்தகரை தேவாலயத்திற்குள் நுழைந்து தீவிர சோதனை நடத்தியது போலீஸ். மேலும் இடிந்தரையில் உள்ள அனைத்து வீடுகளிலும் நுழைந்து உதயகுமாரை தேடியது.


இதை தொடர்ந்து இடிந்தகரையில போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து தென் மாவட்ட கடலோர பகுதிகளில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உவரி, பழைய காவல், குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர், ஆத்தூர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறிய-ல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் அமைதியான முறையில் போராடிவரும் கூடங்குளம் மக்கள் மீது காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குலைக் கைவிட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கூடங்குளம் அணுமின் உலையில் எரிபொருளை நிரப்பக்கூடாது என்றும் அணுஉலையை இழுத்து மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அமைதியான முறையில் அறவழியில் மக்கள் கட்டுப்பாடாக இன்று போராட்டத்தில் பங்கேற்றனர். கடந்த ஓராண்டு காலத்தில் வன்முறைக்கு துளியளவில் இடம் கொடுக்காமல் அமைதி வழியில் போராடிவரும் மக்கள் மீது திடீரென்று சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடியடித் தாக்குதல் நடத்தியும் படகுகளை அடித்து நொறுக்கியும் காவல்துறையினர் பெரும் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அறவழியில் போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் தமிழக அரசு காவல்துறையை ஏவி அவர்களை மிரட்டுவதும் தாக்குவதும் கடுமையான கண்டனத்துக்குரியது. இதுவரை கூடங்குளம் அணு உலையைப் பார்வையிட வந்த அரசு இயந்திரத்தைச் சார்ந்த எவரும் மக்களைச் சந்தித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினர் மக்களுக்கிடையில் ஊடுருவி போராட்டத் தலைவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. இத்தகைய அணுகுமுறை ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்று என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக் காட்ட விரும்புகிறது.

அணுஉலைக்கெதிராக அமைதியான முறையில் போராடி வரும் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறையைக் கைவிட்டு அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மகத்தான பல மாற்றங்கள் மக்களின் தீவிரமான போராட்டங்களாலேயே சாத்தியமாகியிருக்கின்றன என்று வரலாறு சொல்லும் செய்தியை புறந்தள்ளிவிடாமல் அரசு உடனடியாக போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவேண்டும். குறிப்பாக போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் அவர்களுடன் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
நன்றி நக்கீரன்