தலைமுறை
வரைமுறை
சொல்லும் வாழ்க்கை...
மழலை
இளமை
முதுமை என்று
பிரித்து காட்டும்
அன்பை அனைத்து
பாசத்தை நுழைத்து
காதலை விதைத்து
இன்பம் துன்பம்
இரண்டும் தந்து
மரணத்தை தரும்...
தணிக்கை அறிந்து
தனிமை உணர்ந்து
திருமணம் கண்டு
இருமனம்
இரவு குணமறிந்து
மழலை பெற்று...
இடக்கை அறியா வண்ணம்
வலக்கை கொடுக்க...
நம்பிக்கைக் கொண்டு
வாழும் நிலையே
இந்த வாழ்க்கை...
அழகாக அருமையாக சொல்லிட்டீங்க சார்...
பதிலளிநீக்கு