25 டிச., 2011

கைபேசி



கையேடு 
கைபேசி
உறவாடி
மனம் 
நாடிப் போனது
தேடி வரும் 
அழைப்புக்கு
உணர்வாகிப் போனது
இந்த கைபேசி..


கதை பேச 
படித்து ரசிக்க
என வாலிப உள்ளத்தை
வசியம் செய்து 
வலம் வருது


தூக்கத்திலும்
தூது போகும்!
தூக்கம் கலைத்து 
விசாரிக்கப்படும்!


வகை வகையாய் 
கைபேசி
வாலிப தேசத்தின் 
தேசியக் கொடி!


கடல் கடந்து வாழும்
கரை சேரா காமத்துக்கும்
சத்தம் முத்தம் தந்து 
மகிழும் 


அன்றாடும் வாழ்க்கைக்கு
நிஜமாகி போகி 
இதயமாய்   இருப்பதும் 
இந்த கைபேசி 


நாளைய கனவுகளை
காதுவழியே சேர்ப்பதும்,
சேகரித்து வைத்திருக்கும்,
இன்பத்தினை 
இளைப்பாறவும்...


விற்ப்பனைக்கு 
விலாசமாய் 
கைக் கொடுத்தும்


நாம் வாசித்து 
நேசித்து 
பேசி சிரித்து 
நமக்குள் ஒன்றாகி 
உயிராகிப்போனது
கைபேசி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக