பணத்தை தேடி
ஒரு பயணம்
தேடலின் போது
இளமைகளும்
விலகிப் போக
வந்த பாதை
மறந்து போக
மனமும்
உடம்பு
மரத்துப்போக
மரணங்களும்
பிறப்புகளும்
தொலைபேசியில்
அறிந்துக்கொள்ள...
கடிதத்துடன்
கைப் பேசிகளுடன்
குடும்பம்
நடத்தப்படுகிறது...
தேடல் இன்னும்
தொடர்கிறது
தனிமையில்...
ஒருக்கால்
எனது மூச்சு
நின்றுபோனால்...
ஒருக் காலோடு
எனது மரணமும்
தனிமையில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக