சூரியக்காரனை
மறைத்த வண்ணம்
மேக தாத்தாக்கள்
கருத்த முகத்துடன்
அங்கும் இங்கும்
அலைபாய
இடியும்
மின்னலும்
கைக்கோர்க்கவே
பயத்துடன்
முன் ஜாமீன்
பெற்ற மக்கள்
குடைக்குள்ளும்
வீட்டுக்குள்ளும்...
ரோஜாக்களை
தழுவிய மகிழ்ச்சியில்
மரத்திலும்
மண்ணிலும்
விழுந்து
மரணமாகாத
மறுபிறவியாய்
மழைத்துளி....
உணவாய்
கனியாய்
கறியாய்
பூவாய்
நீராய்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக