25 டிச., 2011

சமாதானப்புறாக்கள்

பூமிவுடைய 
சமஸ்தானத்தில்
சமாதான இனத்தின்
முகவரிகள் நாங்கள்.

ஆயுதம் தாங்கிய
மனிதர்கள் முன்னால்
எங்கள் இனத்தின் 
சமாதானம்
சபை ஏற மறுக்கிறது
பகையோடும்
பயத்தோடும் 
திரும்பிகிறது.

சமாதானத்துக்காக
நாங்கள் தொடுத்த 
பூமாலைகள் கூட
ஜாதிவாரியாய் 
பேசப்படுகிறது
பூக்களுக்குள்ளே
சண்டைப் போடுகிறது.

ஜாதிகளும் 
மதங்களும்
கட்சிகளும்
மனித நேயத்தை 
கொன்றுவிட்டதால்,
எங்களை
நேசிக்க யாருமில்லை

இன்றோ
மனித நேயம் போல
சமாதானப்புறாக்கள்
என்ற பெயரில் 
வலம் வரும் 
வெறும்
பறவைகள் 
நாங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக