மதத்தின் பெயரால்
மொழியின் பெயரால்
ஜாதியின் பெயரால்
நாட்டின் பெயரால்
ஆயுதம் தலைமை
ஏற்க...
பொறாமையும்
சூழ்ச்சியும்
இணைத்துக் கொள்ள
நிறுத்திக் கொல்ல
சிறுபான்மை மக்களை
தாக்க
விசுவருபம் எடுத்தது
ஆயுதம்!
ஆயுதமே ஆட்சி பிடிக்க,
மனிதன் மறந்தான்
மனிதத்தை
அறத்தை அழித்து
அகம் மகிழ
அணுவும்
விண்ணில் பறக்க
ஆயுதம் தூவியது மழை...
ஆயில் ஒன்றுக்கு
அடிமையாய் ஆகி
சுயநலம் கொண்டு
அணுவின் மழையில
தன்னை தானே அழித்து
மிருகமாய் மாறினான்
மனிதநேயம்
பேசியப் படியே
மனிதநேயத்தை
மனிதனே கொன்றான்....
உண்மையே மனித நேயம் பேசிப் பேசியே மனிதத்தைக் கொல்கிறான் மனிதன். வாழ்த்துகள் சகோதரா.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நன்றி சகோதரியே .உங்கள் வாழ்த்துக்கு
பதிலளிநீக்கு