இதோ போகிறது
இறந்த காலமாய்
2011 ம் ஆண்டு...
இன்பங்களை
இழப்புகளை
இன்னல்களை
தந்தும்...
இறந்தகாலமாய்
போகும்
நிகழ்காலத்தில்
இருக்கும்
இந்த ஆண்டுக்கு
நன்றி சொல்லி
இன்று தான்
கடைசி
வரும் காலத்தை
நேசி
என்று வாசிக்க
யோசிக்க வைத்த
2011 ம் ஆண்டுக்கு
விடைக்கொடுப்போம்
வலிகள் அற்ற
வரும் புது ஆண்டுக்கு
வழிக்கொடுப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக