31 டிச., 2011

வீரத்தாய்க்கு சமர்ப்பணம்...





தாயே!
வீரத்திற்கும்,
விடுதலைக்கும்
மறு பெயரே 
நீயோ...

எத்தனை 
இன்னல்கள் வந்தாலும்,
தன் மண்ணியில்
மாற்றானுக்கு 
இடமில்லை...

வந்தாலும் தடுக்க
தன் உள்ளத்திலும்
உடலிலும்
வீரமில்லாமில்லை
என்று வீரம் கொண்டு
தடுக்கும் தாயே!

உன் வீரம் 
கண்டு சிலிர்த்தேன்.
எனது தமிழ்த் தாய்
முறத்தால் 
புலியை விரட்டினாள்...

நீயோ
உன் புஜத்தால் 
மனித
மிருகத்தை தடுக்கிறாய்.

விடுதலை தேடி 
உன் உள்ளம்
வீராங்கனையாய்
விசுவருபம்...

காலமும் ,களமும் 
கைக்கொடுக்கும் 
இதோ
உன் விடுதலையும்
உன் கைத்தொடு தூரம்...

எனது கவிதை இந்த
வீரத்தாய்க்கு 
சமர்ப்பணம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக