சிறுத் துளி
விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா
தற்கொலை எண்ணம்!
அவசரம் தாண்ட
உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா
உன் உடன்படிக்கை,
இதனால் தானா
உன் தற்கொலை?
சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ?
இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை
விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே அழித்தாளா?
உன் ஆற்றல்
தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை
வெல்ல முடியும்.
மேல் நோக்கி
பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்த
உன் தாய் !
அன்பாய்
அதன் உருவமாய்,
கவியாய்,நீஅழைத்தால்,
உருமாறும் உலகம்.
உனக்கு ஏன்
தடுமாறும் மனம்
வளம் ,வலம்
வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.
வாழப் புறப்படு
வாழும் போதே
சந்தோஷமாய்
இருந்திடு
சொர்க்கம் காண
முனைந்திடு
சொர்ர்க்கத்தில்
வாழ்ந்திடு
உன்னால் பூமியை வெல்ல முடியும்.மேல் நோக்கி பறக்க முடியும்.----சூப்பர் ரா இருக்குங்க அண்ணா கவிதை
பதிலளிநீக்கு