27 டிச., 2011

மரமில்லா உலகமோ ...


வரமாய் கிடைத்த 
மரத்தை
மறந்தான் 
மனிதன்.

பசுமையாய் இருந்த
உலகத்தை இழந்தான்
அரசியலுக்கும்
தலைவருக்கும்
மரத்தை வெட்டி
வளத்தை தொலைத்தான்

தன்னை அழித்தாலும்,
பலன் தரும் 
மனம் மரம்
மறந்தாலும்
மன்னிக்கும்
மனமே மரம்.

மனிதனுக்கு 
உயிர் காக்கும் 
உறவாய் மாறும் 
உயிர் வாழ 
விறகாகும் 
இறந்தால் 
எரிக்க
மரமே துணையாகும்

பழத்தை தந்து 
பலம் சேர்க்கும்
வரமும் மரமாகும்.
மரமில்லா உலகமோ
சூனியமாகும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக