எண்ணங்கள்
விழித்துக்கொள்ள
வரும் தேர்தலுக்கு
காத்திருந்தது
எனது கனவுகள்...
சத்தமில்லாமல்
விளம்பரமில்லாமல்
வந்தது...
பொதுத் தேர்தல்...
கருத்து மோதல்கள்
இலவச அறிவிப்புக்கள்
போட்டிப்போட்டன
வேட்பாளரைப் போலவே...
எல்லாம் சரியாதான்
போனது
தேர்தல் முதல் வரை
ஓட்டுகள் பேரம்
பேசப்பட
ஜாதி
ஓட்டு வங்கிகளும்
ஒட்டிக்கொள்ள
ஜனநாயகம்
கண்ணீரோடு
சொனனது!
ஜனநாயகத்தை
விலங்கினங்களும்
பறவைகளும்
கற்றுக் கொண்டதால்
மனிதன்
கற்க நாளாகும்
உன் கனவுகள்
நிஜமாக இன்னும்
காலமிருக்கு...
நீயும் நானும்
உயிரோடு
இருந்தால் பார்ப்போம்
என்று............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக