5 ஏப்., 2010

எங்கள் நிலைப்பாடு


விதை இருந்தாலும்
விதைத்தால் தான்
வருமானம்!



விதியோடும், 
விறகோடும்
தினம் போராடி,போராடி
வடிக்கும் கஞ்சிக்கு 

இந்தப் பாடு.

வறுமையோடு இருந்தாலும்
வருமானம், குறையோடு
தொடர்ந்தாலும் ...


தன்மானம் கரையாத
எங்கள் நிலைப்பாடு!



தலைமுறை பாரீர்!


அன்று
தாய்ப்பால் தந்து
மகிழ்ந்த உலகம்!

இன்றோ...
தாய்க்கே
பாலில்லாத  காலம்!

அன்று!
தாய்ப்பாலுக்கு இருந்த
மார்பகம்!

இன்று
அழகுக்கு அறுவை செய்யும்
கோலம்.

இன்று
தாய்ப்பாலுமில்லை,
புட்டிப்பாலுமில்லை.

குடியை கெடுக்கும் 
குடிபானம்...!

இது என்ன கலிகாலமா,
வளரும் பிள்ளையும் ஈர்க்கும?

பெற்றோரே!
வாழும் வாழ்கையில் வரும்  பிழைகளை,
வடித்து வாழ்ந்தால் ,மதிக்கும் நம் பிள்ளைகள்!

விதைத்த விதைதான் வளரும் 
உன் நிலையை நிழலாய்  பிள்ளைகள் தொடரும்.

வேண்டுமா ,இல்லை இனி நாடுமா 
குடியை கெடுக்கும் குடியை?

நாமே முன் மாதிரி 
எல்லாம் கைவிட்டப்படி...

குடி செழிக்க இவன் கைப்பிடி...
பூத்துக்குலுங்கும் தலைமுறை பாரீர்!



முதல் காவு


எங்கள் வீட்டுச் சுவர்கள்
வெள்ளையடித்து
எழுதப்பட்டன.


வண்ண சுவரொட்டிகள் 
ஒட்டப்பட்டன.
என்னைக் கேட்காமலே...!

உங்கள் ஒட்டு எங்களுக்கே 
என்ற வாக்கியத்துடன்!

வரும் தேர்தல் திருவிழாவுக்கு!
முதல் காவு என் வீடு சுவர்!



ஒன்றும் சொல்லாமலே 
பேச தெரிந்தும்  இங்கு ஊமையாய்...!




தமிழ்மகள் நீயோ!





மெல்லினத்தின் மேன்மையும்,
இடையினத்தின் அழகையும்,
வல்லியினத்தின் வல்லமையும்,
பெற்ற தமிழ்மகள் நீயோ!


பூமகள் இவள் என சான்றோர் மகிழும்,
அன்புமகள் நீயோ!
அழகி இவள் என

சின்ன உளி வடித்த,
அழகுசிலை நீயோ!



மரபுக்கும்,வெண்பாவுக்கும்,
வேராக உருமாறி...
காதல் பேசும் கவிதைக்கு,
கருவாகிப் போனாயோ!



இந்த குடிமக்கள்!

















குடி, குடியை கெடுக்கும்
என்று சொன்னால்...



 உன் குடியா...
என சொல்லி சிரிக்கிறார்கள்!


குடித்தால் குடலும்
கெடும் என சொன்னால்...


அதுக்குதான் குடலும்
சாப்பிடுகிறேன் என சொல்கிறார்கள்!



குடிப்பதே இவர்களது வாடிக்கை 
குடித்தபின் செய்வதோ வேடிக்கை!

வாழ்க்கை மறந்த குணங்களை 
மாற சொன்னால் மாறுமா ?

பிடிவாதத்தோடு
வாதம் செய்யும் இவர்களுக்கு 

பிடி வராண்டு வந்தாலும் 
குடிக்கும் மனம் விட்டுதான் விடுமா ?

இருப்பதில் குடிக்கவே குறைவில்லை 
குடித்தாலும் போதை போதவில்லை...

இருந்ததும்  போக ,வீட்டிலுள்ள பொருகளும்
விற்பனைக்கு தயார் இவர்கள் நிலை.

குடித்து குடல் வெந்து இறக்கும் இவர்களுக்கு 
தன் குடி ஒன்று இருப்பதே நினைக்கவில்லை!

குடி குடியை கெடுக்கும் என்றால் மட்டும் 
திருந்தி விடவா போகிறார்கள் ?

இந்த குடிமக்கள்!

கடிகாரம்.


நமது கைகளை அலங்கரிக்கும்
மணிக்கூண்டாய் விஸ்வரூபம்
எடுக்கும்!

ஓடி ஓடி உழைத்தாலும்,
ஓயவுயில்லை !

சுற்றி சுற்றி வந்தாலும் 
மயக்கமுமில்லை.

எட்டு மணிநேரம்,
உன் வேலை,
என பாட்டாளிக்கு
சொல்லும்,

இந்த உழைப்பாளிக்கு
விடுமுறையே இல்லை!

பட்டினி சாபம்....


இந்தியாவில்
இன்னும் பட்டினி
சாவுகள் குறையவில்லை!


இருப்பதை கொடுக்க 
இருப்பவர்களுக்கு மனமில்லை.

பட்டினி சாபம்
பத்தினி சாபம் போல
பலிக்கவில்லை.


சாபத்திலும் இங்கு வேறுபாடு 
பலிக்காமல் இருக்குதே 
இது என் ஐயப்பாடு!




நட்பு கவிதை!





இவ்வுலம் இறைவன் தந்தது.
இனிமையின் உதயம் நட்பு தருவது.



நீலவானமில்லாத உலகமில்லை 
நட்பு என்றும் மனதைவிட்டு மறைவதில்லை!

காலத்தின் ஓடத்தில் பிரிந்து இருந்தாலும் 
நினைவுகளில் என்றும் நாம் சங்கமம்!

எனது பலமும் ,பலகினமும் நீ!
எனது வாழ்க்கையின் பகுதி நீ !

இறப்பு வரை நீ இருந்தால் இழப்பில்லை,
இறக்கும் போது நீ இருந்தால் பயமில்லை.

நட்போடு வாழும் வரை மகிழ்வுக்கு பஞ்சமில்லை!
நட்பு அறியா வாழ்க்கையில், வாழ்வது அர்த்தமில்லை!

1 ஏப்., 2010

சொந்த மண்ணிலும்,















சொந்த மண்ணிலும்,
சோகத்தோடு சொந்தம்,
சொந்தம் எல்லாம் தூரம்,

பூமி பொது சொத்து
என சொல்வது உண்டு.
எங்கள் கதை அறிந்தால்,
சொன்னவரை கன்னத்தில்
அடிக்க தூண்டும்.இன்று .

கிரகங்கள் போய்
ஆராய்ச்சி செய்வதை விட்டு
எங்கள் நாட்டைக்
கண்டு, கண்டனம் செய்தால்
நன்மை உண்டு .

வானம் போல எண்ணமுமில்லை
பூமியில் வாழ்க்கையுமில்லை.
இது தானே எங்கள் நிலை!
இன்னும் உணர்வாருமில்லை,
இதை தட்டிக்கேட்க உறவுமில்லை


குடந்தையின் அழகை







குடந்தையின் அழகை
கர்வத்தோடு,நீ சொல்லும்
கவியோடு,அதன் நடையோடு,
கண்டேன்!

என்னை நானே மறந்தேன்!
பெரியக் கடை வீதியில்,
நானும் இந்த நேரம் நடைப்
பழகினேன்!என்னை மறந்தேன்!

மூடி இருக்கும் கற்பகம் திரை அரங்கமும்,
உன் கவியால் ..
என் முன்னால் வந்துப் போனது,
தேவி திரை அரங்கமும்,பரணிகாவாக,
மாறினாலும்,உன்னால் 
பழையப்பெயரும் நினைவூட்டியது
உன் கவியால் வந்தது .

மல்லிகை மனம் என் மனத்தை,
பதம் பார்க்க,மீண்டும் உன் கவியை,
நான் படிக்க மனதுக்குள்  ,
ஆனந்தம்.
நான் என்ன சொல்வேன்,
என் நினைவுகளை...!
என் மண்ணின் மைந்தன் தந்த
கவிதை,என்னை பழைய,

பழகிய,நாட்களுக்கு ,

அழைத்துப் போனது...
என் மனம்
இப்பொழுது

கும்பகோணத்தில் உள்ளது!

எல்லாம் உன் கவிதை தந்தது !


எங்கள் நகரம் கும்பகோணம்!





கோயில்களின் அணிவகுப்பு
எங்கள் நகரத்தின் சிறப்பு!

மகா மகக் குளமும்,
பொற்றாமரைக் குளமும்,
காவேரியுடன் ,வரவேற்கும்.

பள்ளிவாசல்களும்,சர்ச்களும்,
இணைந்து,அழகு சேர்க்கும் !

வெற்றிலைக்கு,

பெயர் பெற்ற நகரம்.
சிற்பத்தோடு,சிகரமிட்டு,
உலகம் முழுதும் புகழ் பாடும்.

வியாபார
ச்
சந்தையில்
முன்னின்று   வழி நடத்தும்,
குடந்தை என செல்லமாய்
அழைக்கப்படும் எங்கள் நகரம்...

தஞ்சையில் ஒரு அங்கம்.
இந்த கும்பகோணம்!
உண்மையில் சமத்துவபுரம்.

ஜாதி,மதம்,மொழிகள்
கடந்து ஒளிவீசும்,
புது வழிக்காட்டும்.

பட்டுக்கும் பெருமைச் சேர்க்கும்
எங்கள் நகரம் கும்பகோணம்
என்று சொன்னால்  ஆனந்தம் .


6 மார்., 2010

கையேந்தி நீ நின்றால்






பயன் தரும்
வாழ்க்கை எனக்குள் இருக்க ...


இருக்கைகள் துடுப்பாய் பார்க்க...
எதிர் நீச்சல் போடா எனக்கென்ன
பயம்!

இருப்பதை கொடுத்து
ஈகையில் வாழ்வேன்.


வருவதை கொண்டு
வளமுடன் வாழ்வேன்.


நேற்றய உலகமும்,
இன்றைய உலகமும்,
என்னோடு இருக்க.
நாளைய கனவுகள் எதற்கு?

நன்கு திசைகளும்
எனக்குள் அடக்கம்.
சூரியன் உதிக்கும்
திசையோ
என் வீட்டில் துவக்கம்.

உயர்வுத்  தரும்
வாழ்க்கை

எனக்குள் இருக்க...

ஏழ்மை என்னை கண்டு
நடுங்கும்!


பயன் உள்ள வாழ்க்கை
பக்கத்திலிருக்க...

கையேந்தி  நீ நின்றால்
உலகம் சபிக்கும்!

நனைத்தது!





நனைத்தது!
என் கன்னத்தை.
இல்லாமை இன்னும்,
இவ்வுலகில் இருப்பதைக் கண்டு!

நனைத்தது!
என் விழிகள் .
துறவம் என்ற போர்வையில்
வாழும் மிருகங்களை எண்ணி.

நனைத்தது!
என் அழுகை.
மழையின் வருகை
தள்ளிப்போனதைக் கண்டு!

நனைத்தது!
என் கண்கள்.
இருகண்களும் இல்லாமல்
இருப்பவர்களை கண்டு.


நெறி...!



















கண்டு , காணாமலும்,
போகிறோம்!

நமக்கு ஏன் இந்த வம்பு
என பேசுகிறோம்.

இது எங்கோ நடப்பதாக
நினைக்கிறோம்.

நம்மிடம் வந்தால் மட்டும்
துடிக்கிறோம்.


சமுகத்தில் நாமும்
ஒரு முகம்!

நமக்குள் வேண்டாமா
சின்ன சினம்!

ஒன்றாய் வாழ்ந்தால்
கூடும் பலம் !


புதுத்
துறவத்தை ஏற்காமல்,

அவனிடம்
என்றும் ஏமாறாமல்...

தனி மனிதனுக்கு என்றும்
அடிமையாகாமலும்...

வரும்
காலத்தோடு இணைந்து
நம்
கலாச்சாரத்தை மறக்காமலும்,

கண்ணுக்கு முன்
நடக்கும் அநியாங்களை
கண்டும், காணாமல், இல்லாது

ஒற்றுமை குலைக்கும்
வெறி கூட்டத்தை அழித்து

நன்னெறிக் கூட்டமாய்
ஒன்றாய் வாழுவோம் இங்கு!

விழிகளில் மழையாய்!





நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கும்
கணவன் மனைவியின் நிலை இந்த கவிதை!

ஊமை நாடகம் ஒன்று
பார்வையாலே நடக்குது இங்கு!
மௌனமே ஆசையாய்...


பூக்களின் கவிதையாய்,
அரங்கேற்றம் இன்று.

நான்கு பார்வைகள் கலந்து,
நலம் கேட்கும் பார்த்து ,
கேட்டதும்...


விழிகளில் மழையாய்,
அந்த துளிகளோ....
ஆசைகளின் மொழியாய்,
மாறிப்போகும் வேலை இது.



கனவுகள் எல்லாம் 
காட்சியாய் மாறும்  தருணம்.

கற்பனைக் காற்றுக்கள் 
அடிக்கும் நேரம்...

பிரிவு எனபது வேதனை தான்,
பிரிவுக்கு பின் கிடைக்கும் 
இன்பம், இனிய போதை தான்.







சொல்லிவிடு!





உனக்காக
நான் காத்திருந்ததால்
காதல் என்று கொள்ளலாம்.

எனக்காக
நீ அழுதால்
காதல் என சொல்லலாம்.

காதலை காதலிக்கும்
வாழ்க்கைக்கு
என்ன வென்று கூறலாம்?

உனக்காக
நான் உணவு உண்டால்
உனக்கு பசித்தீருமா ?

உண்மைக் காதல் எனபது
இல்லறத்தில் இணைந்து இருக்க...

பருவத்தில் நினைப்பது எல்லாம் 
காதலாய் மாறுமா,ஆகுமா ?

புதுமைப்பெண்ணாய் 
நீ மாறிவிடு 


காதல் என்று சொல்பவனை 
விட்டு விலகிவிடு!

காதலிக்கும் காலத்தை 
கொன்றுவிடு!

இங்கு காதல் கிடைக்காது 
என்றே சொலிவிடு!

 

வாழ்க்கையின் அர்த்தங்கள்!



















காதல் என்றால்
தோல்வித் தானா ?

காதலிக்கும் பிறவிகளுக்கு

இது தேவைத்தானா ?


 பெண் என்றால்
 ஆணுக்கு காதல் கொள்ளணுமா?
 உயிர்த் தோழி
 என சொன்னால் தவறாகுமா ?




மனதுக்குள் ஆயிரம் கனவுகள்,
கொண்டது வாலிபத்தின் நிலை.
அதில் வெற்றி என்பதை...
 உன் எண்ணத்தில் விதை!

காமத்தின் அழகு 
வாலிபத்தில் சிரித்து அழைக்கும்.அந்த உறவு   இல்லறத்திருக்கு 
மட்டுமே வேண்டும்!


இவை யாவும் நம் பழைய பரிமாணங்கள்!
துசித் தட்டி பார்த்தால் புரியும் 
வாழ்க்கையின் அர்த்தங்கள்!



வசந்தக்காலம் ,அது இறந்தக்காலம்!




இதோ இவர்கள் வாழ்ந்தக்காலம்,
வசந்தக்காலம்! ,அது இறந்தக்காலம்!
இனி வருவது அவசரக்காலம்!

கணினியோடு வாழும் நேரம்.
அதுப்போல் இருப்பது எக்காலம்?

வானம் தூவும் மழைக்காலம்,
வயல்களில் கதிர்கள் பேசும்.
காதலாய் காற்று வீசும்.
மீண்டும் வருமா அந்தக்காலம்!
மீட்டுத்தருமா வருங்காலம் ?
இதோ இவர்கள் வாழ்ந்தக்காலம்
வசந்தக்காலம் ,அது இறந்தக்காலம்!


அடுக்கு வீடுகளில் அடைந்தக்காலம்
அடுத்த வீடுக்கும் உறவுல்லா கலிகாலம்
ஆசைகளை துறந்தக்கோலம்
இதானே இன்றையக்காலம் .
மகிழ்ச்சியை மறந்தக்காலம்
நமக்கு இந்த நிகழ்காலம்
ஒரு இறந்தக்காலம்!
வருங்காலம் ??????????

வீட்டின் அகதிகள்!



நம் வீட்டின்
உயிரின் முகவரிகள்!
இவர்கள்!


பிள்ளைகளிடம்
ஆயுள் கைதியாய்
போனவர்கள்!



இணையத்திலும்
இல்லாளிடமும் பேசும்
பிள்ளைகள்...

பெற்றோர்கள் இருப்பதை
மறந்தே போனார்கள்
இன்றைய மகன்கள் .

தனிமைப்பட்ட
பெற்றோர்கள்!
வீட்டின் அகதிகள்!

காலமும் களமும் மாறும்,
நாமும் தனிமைக்கு
தள்ளப்படுவோம்!

அறிந்துக்கொள்...!
அன்புடன் நடந்துக்கொள்.
பெற்றோகளே சொர்க்கம் 
என, புரிந்துக்கொள்!

தீராத யழகின் ஜாதி!





வாளை விட
இதழே அடிபணியவைக்கும்!


வில்லைவிட
உன் இமைகளுக்கு
கூர்மை!

ஆயுதத்தை விட 
இளமையான உடலுக்கு
வலிமை!

நீயோ
தீராத யழகின் ஜாதி!

தீ பற்றும் வழி!
நானோ
தீவிரவாதி!
ஏன் இன்னும்
விலகி...



விடைச்சொல்லு அழகி!
தடையின்றி
இடைவெளி குறைத்து
செய்துவிடு என்னை
வதம்!
விட்டுவிடு
உன் பிடிவாதம்!

நமக்குள்
போட்டிகள் எதற்கு ?
போர் தொடுப்பேன்
இணங்கு.
போர்வையாய் நீ
எனக்கு!

அச்சமில்லை!அச்சமில்லையே!





அச்சமில்லை! அச்சமில்லை!
காணும்  வாழ்விலே!
வரும் தோல்வியெல்லாம்
இறந்து போகுமே!
நீ துணிந்து நின்றால்,
அச்சமில்லை! அச்சமில்லையே!

வஞ்சமில்லை வஞ்சமில்லை
காணும் வாழ்விலே!
வஞ்சம் கொண்ட உள்ளமெல்லாம்
நடுங்கி ஓடுமே!



பயமில்லை, பயமில்லை
வாழும் வாழ்விலே !
மலையென. எரிமலையென...
பார்த்தால் போதுமே.. .!

தோல்வியில்லை,தோல்வியில்லை...
நீ எதிர்த்து போரிட்டால் போதுமே..
தோல்வியும் ஓட்டமெடுக்கும்
வெற்றி உன் வசமே!



மழை!





மழை!
இறைவன் தந்த
இயற்கைக் குளியல் இது
நம்மோடு உறவாடும்
உறவு இது!

மழையில்
நனைந்து நடந்துச் சென்றால்
அதன்
அழகை அறிந்துக்கொள்வாய்.
மேகம் தரும்
குளியலை சுகம் என ஏதுவாய்
பூமிக் கொள்ளும்
மகிழ்வினை பார்த்துக்கொள்வாய்.

குடை பிடித்து
நீயும் மழையை மறைக்கவேண்டாம்.


பூமி நனையும் போது
நீயும் நனைய மறுக்கவேண்டாம்.


இறைவன் தரும் பரிசு
இனி நீயும் ஒதுங்க வேண்டாம்.


மழையை போலவே
ஒரு அழகுயில்லையே.


மழையை பற்றி...
சொல்ல வார்த்தையில்லையே!

மழலையாய் நீ மாறி 
மழையோடு கொண்ட  உறவு!

மனதுக்குள் வந்து போகும் 
புது உற்சாகத்தை பாரு !



தர்பூசணி பழத்தின் சிறப்பு!கவிதையோடு










மனிதனுக்கும் பழத்துக்கும்
ரத்த உறவுகள்...
சத்து உறவுகள்...
என உறவாட 
உரிமைவுண்டு!


இந்த தர்பூசணிக்கும்
இதில் பங்குண்டு.
சிட்ருலின் என்னும்,
சத்து பொருள்
இருப்பதைக் கண்டு ,
உண்டால் பலனுண்டு 


தர்பூசணி உண்டால்
சிட்ருலின்
வேதியல் பொருளாய்
அர்ஜினைன் மாறும்.
தன் வேலை செய்யும்.


ரத்தத்தோடு கலந்து
நம் உறுப்புகளை
சுறுசுறுப்பு தந்திடும்.
இன்னும் தர்பூசணி
சுவைத் தந்திடும்


தர்பூசணி வெள்ளை
பகுதியோ
ஆண்மைக்கு அழகு
சேர்க்கும்!


தர்பூசணியை...
ருசித்துப் பார்த்தால்
உடலும் அறிந்திடும்!
உண்மை புரிந்திடும்!




மனிதனாகவே சாகனும்!



உன் பணியை ஆற்று !
உனக்கு இல்லை மாற்று!
நீ தான் விடியும் கிழக்கு!
இன்னும் நல்ல திசைக் காட்டு!

காதலோடு என்னை சேர்க்காதே!
என் வீரத்தை புதைக்காதே !
தமிழ்ப் பேச மறுக்காதே!
மற்ற மொழிகள் கற்க தடுக்காதே!

மண்ணை நானும் நேசிக்கணும்!
மரியாதை தந்து பழகணும் !
மனசே நீ என்னை மாற்றனும்!
மனிதனாகவே நான் சாகனும்!


4 மார்., 2010

வளர்பிறை ,இந்த விடுமுறை!



பசங்களுக்கு சிரிப்பினை தரும் 
பள்ளிகளுக்கு விடுமுறை!


வீட்டுப்பாடமும் இல்லை என்ற நிலை 
விடலைகளுக்கு சொல்லும் 
விளையாட்டின் ஆவலை 


வேலை வேலை என்ற நிலை 
போக்கவே இந்த விடுமுறை .


தூக்கத்தின் வழிமுறை
சுறுசுறுப்பின் அடகுமுறை.


கேளிக்கையின் விழிமுறை.
வேலைகள் மறந்த விதிமுறை.


சந்தோசத்தின்  
உறவுமுறை
வசந்தமாய் வலம் வரும்வரை
வளர்பிறை ,இந்த விடுமுறை

இந்த எழுதுகோல்...




என் எண்ணங்களை
எழுத்தாக்கி
அதை தமிழ்
மொழியாக்கி
எளிய நடையில்
கவிதையாக்கி,
காதல் சொல்ல
வழியாக்கி...


சில வலிகள் 
போக்கவும் 
இந்த எழுதுகோல்
எனக்கு 
விழியாகி போனது.


எனது எழுத்துக்கு 
உயிரானது.
என் வாழ்க்கையில்
எழுதுகோல்
நண்பனாய் 
ஒன்றானது
சுகமானது.


இன்று 
எழுதுகோல்
கணினிக்குள் 
தட்டச்சு கருவிகளாய்
மறுபிறவி எடுத்தாலும் 


கையப்பமிட 
குறிப்புக்களை 
குறித்துக் கொள்ள
மறையாத நிலையில் 
எழுதுகோல் 
என்றும் நம்முடன்.


கைக்கு அடக்கமாய் 
வித வித நிறத்தில் 
விலை உயர்ந்த 
படைப்பில் 
சட்டைக்குள் 
மின்னும் விதத்தில் 
ஒன்றாய் 
இரண்டாய்....



மரங்களாய் மனிதர்கள்!


பாரம்பரிய வீடுகள்
மறைந்து போக
தென்னக் கிற்று வீடுகள்
எரிந்து போக...


ஓட்டு வீடுகள்
அழிந்து கிடக்க,
மெத்தை வீடுகளும் 
இடித்து போக...

அவசர வீடுகள்

சுற்றுலாவில் முளைக்க,
விந்தையான வீடு
விளக்கம் சொல்ல...

எல்லாம் சரிதான்

நானும் கொள்ள ,
உற்றுப் பார்த்தேன்
உண்மை தெரிந்தது!


அடுக்கு மாடிகளாய்
வீடுகள் முளைக்க...

மரங்கள் அழிக்கப்பட்டது.

வீடுக்கு வீடு

வீதியில் இருக்க,
அந்த வீடுகளில்
மரங்களாய் மனிதன்!






வாழ்வின் உதயம்...





உலகத்தின் உதயம்
கதிரவனுக்கு உரிமம்.


உண்மையின் உதயம்
தாய்மையில் தொடங்கும்.


காதலின் உதயம்
தாம்பத்தியத்தில் புரியும்.

நட்பின் உதயம்
கஷ்டத்தில் அறியும்.

இன்பத்தின்  உதயம்
மனைவியிடம் கிடைக்கும்.

வாழ்வின் உதயம்
மரணத்தில் அடங்கும்.

நிலவே...





நிலவே!
உன்னை தேடிப் பார்த்தேன்
எங்கு ஓடி ஒழிந்தாய்?

இரவின் ஒளியாய்
கவிதைக்கு ஒலியாய்
காதலுக்கு விழியாய்
உறவுக்கு வழியாய்
வலம் வந்தவளே!

இன்று உனக்கு விடுமுறையா ?
அம்மாவாசை என்னும்
வழிமுறையா ?
இதுதான் விதிமுறையா .

உன்னை காணமல் எனக்கு
இன்று தூக்கம் துக்கம் தான்.
நாளை வளர்பிறையாய்
வந்து விடு
மீண்டும் புதுக்கவிதை
சொல்லிவிடு.


ஜனநாயகம் விலைப் பேசப்படும்.





இடைத்தேர்தல்!
இறப்புக்கு பின்
வாசிக்கப்படும் இரங்கல்
தீர்மானம்!



கட்சி மாறினால்,
பெறப்பட்ட ராஜினாமா
சொல்லும்  இடைத்தேர்தல்.

இந்த நகரம்
அரசியல்வாதிகளால்
பார்க்கப்படும்,சுவாசிக்கபடும் 

எதிர் கட்சியா?
ஆளும் கட்சியா?
என பேசப்படும்.

அனாதையா
இருந்தவர்கள் எல்லாம்
சொந்தமாகிப் போவார்கள்.
சாதிகள்
மேடை ஏற்றப்படும்.

பொருளே இல்லாம்
பேரம் நடைபெறும்
புது வணிகம்
உருவாக்கபடும்.

ஜனநாயகம் இங்கு 
விலைப் பேசப்படும்.
ஓட்டுக்கு கூலி
தரப்படும்.


அகத்தினழகு முகத்தில் தெரியும்!


தாயின் முகம் கண்டால்
அன்பின் அலைகள் தெரியும்.


பாசம் கொண்ட முகத்தை கண்டால்
நேசம் கொள்ளச் சொல்லும்.


வாசம் கொண்ட பூக்களைப் பார்த்தால்,
நுகரச் சொல்லும்.


காதல் பருவம் வந்துவிட்டால்
கவிதை எழுதத் தூண்டும்.


அகரத்தின் ஒலியை கேட்டால்
தமிழை போற்றச் சொல்லும்


இருப்பதில் கொஞ்சம் கொடுத்துவிட்டால் 
அகத்தினழகு முகத்தில் தெரியும்.!


பெற்றோர்களுடன் இருந்துவிட்டால் 
அகத்தினழகு முகத்தில் தெரியும்.!


உண்மை பேசி வாழ்ந்துப்பார்த்தால் 
அகத்தினழகு முகத்தில் தெரியும்.!


உற்றார் ,உறவினருடன் நேசம்கொண்டால்,
அகத்தினழகு முகத்தில் தெரியும்.!








துபாய் வீழ்ச்சியின் அஸ்திவாரம்!



வண்ணவண்ண கனவுகள்
வாழ்க்கையில் தோன்றும்.
வந்த கனவுகள் எல்லாம்
வந்த பின் தொலைந்து போகும்.
தொடுத்த வண்ணங்கள்
வெளுத்து போகும்.

உன் உயரத்தை
தலை உயத்திப்
பார்த்தபோது
சிலிர்ப்பாய் இருந்தது,

இதனால் நான் அல்லவா
உலக பொருளாதாராம்,
என்ற பள்ளத்தில்
வீழ்ந்தது.

எத்தனை இதயத்தை
புதைக்கப்பட்டு
காட்டப்பட்ட கட்டிடம்.
பொருளாதாரா வீழ்ச்சியின்
முதல் அஸ்திவாரம்!

ஆறிலும் சாவு நூறிலும் சாவு.



பிறந்ததே இறப்பதற்கு   தான்.
இருப்பதே நீ சாதிக்கத்தான்!
உலகம் இருப்பதும் உனக்காகத்தான்.

சாவை கண்டு அஞ்சாதே!
பெண்ணுக்கும்,பொன்னுக்கும் சாகாதே!
மண்ணுக்கும்,இனத்துக்கும் சாகத் தயங்காதே!

வீரத்தோடு உறவாடு
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
இந்த உறுதியோடு வாழ்ந்து பாரு.

இறந்த பின்னும் புகழோடு,
இருக்கவே...
இறக்கும்  வரை போராடு!


சாதிகள் உள்ளதடி பாப்பா!





சாதிகள் உள்ளதடி
பாப்பா!


குலம் உயர்த்திச் சொல்வது
இங்கு கூடும்.


கடைநிலை
இடைநிலை
உயர்நிலை

இதுவே
இதன் வாய்ப்பாடு 
புதிய
அரசியல் வழிப்பாடு!

அன்று!
சாதிக்கு ஒரு நீதி
வேண்டும் என்ற கோட்பாடு ...

இன்று
சாதிக்கு ஒரு நீதிபதி
வேண்டும் என சொல்லோடு
சாதிச் சங்கங்கள் கூப்பாடு...

தேர்வு எழுத போனாலும்
வேலை தேடிச் சென்றாலும்
சாதிச் சான்றிதழ் வேண்டும்
என்ற நிலைப்பாடு...

மீண்டும்
சாதிகள் உள்ளதடி
பாப்பா!


குலம் உயர்த்திச் சொல்வது,
இங்கு கூடும்.
இதுதான் இன்றைய நிலையின்
வெளிப்பாடு...


போலிச் சாமியார் இவர்!















போலிச் சாமியார் இவர்.
சாமி வேடம் போடுவார்.

மறு அவதாராம் என்பார்.

மதிக்கெட்ட சிலபேர்,

கையெடுத்து வணங்குவார்.

சொல்வதை வேதம் என்றேக்கொள்வார்!

தாரம் இல்லா வாழ்விதனை, சுகம் என சொல்வார்.

தனியே ,தரங்கெட்ட உறவுகளுடன் கூடி மகிழ்வார் .

இதை அறியாமலே சிலர் இவரையைத் நாடிப்போவார்

நினைப்பது எல்லாம் நடக்கணும் என வேண்டிப் போவார் ,

தன்னை வாங்குவதை கண்டு மகிழ்வார்...

கீதை,குரான்,பைபிள்,சொல்லாததையா சொல்வார்!


எல்லா வேதமும் நம் மொழிகளில் இருக்கு!
படித்துவிட்டால் புத்தி தெளியும் உனக்கு!



எட்டுத் திசைகளும் உனக்குளிருக்கு,
இன்னுமா விடியவில்லை கிழக்கு?

அன்றும், இன்றும்.





சைவ உணவுகள்
மறுக்கப்பட்டன
பாஸ்ட் பூட் வருகையால்.


இட்லி,தோசை
மறைக்கப்பட்டன
பிசாவின் மோகத்தால் .


கேசரியும்,இடியப்பமும்,
புதைக்கப்பட்டன
நூடுல்ஸ் ஏற்க்கப்பட்டதால்.


இளநீரும் ,மோரும்
தடுக்கப்பட்டன
அடைக்கப்பட்ட குளிர்பானத்தால்.

தக்காளி நீண்ட ஆயுளின் வழி!





தக்காளி!
தடையின்றி கிடைக்கும்,
இதை சாப்பிட்டால்
தடையின்றி ரத்தம் ஓடும்.

ஆஸ்பிரின் மாத்திரையின்

மறுஅவதாரம்.
தினமும் உண்டால்
பசியின்றி போகும்.

குண்டுயாகாமல் உன்

எடையை தடுக்கும்.
முகம் அழகாகும்.


அஜீரணத்துக்கு மருந்து.
தக்காளி சாறு நீ அருந்து.

தினம் உணவுவோடு,

நீ சேர்த்துக் கொண்டு,
நீண்ட ஆயுளை அதிகப்படுத்து.

தோல்விக்கு பதில் சொல்!




தோல்வி வரும்போது நினைத்துக்கொள் 
வெற்றிக்கு முனோட்டம் என எண்ணிக்கொள்!
கற்க இன்னும் இருக்கு என அறிந்துக் கொள்.
தோல்வி நிரந்தரம் இல்லை என்று உணர்ந்துக்கொள்.

வெற்றியின் நேரம் வந்துவிட்டது என புரிந்துக்கொள்.

தோல்வியே வெற்றின் அறிகுறி என மனதில் கொள்.

உனக்குளிருக்கும் விவேகத்தை வளர்த்துக்கொள்!
உன்னால் முடியும் என்பதை விளங்கிகொள்!
உன் வீரத்தை விதைக்க கற்றுக்கொள்!
உனது வீரியத்தை வெளிப்படுத்த தெரிந்துக்கொள்!
உன் வெற்றியால் தோல்விக்கு பதில் சொல்!

முத்தத்தின் முகவரி பெண்களே!





முத்தத்தின் முக்கியத்துவம்
ஆண்கள்   கொடுப்பதில்லை
அறிவதுமில்லை 

பெண்களின் முகவரியாய்
முத்தம் 

இருப்பது பொய்யில்லை!


முத்தத்தின் வண்ணம்

பல வகைப்படும்.
காதலில் தொடங்கி
காமத்தில் சேர்க்கும் பாலம்!

ஆணுக்கும் பெண்ணுக்கும்
தேவைப்படும்...
முத்தமிட்டால் போதும் 
எல்லாம் அணைந்துப்போகும்

முத்தமே அங்கமாகிப் போகும்
அவசியமாகிப் போகும்...
முனிவனும் அடங்கிப்போக 
முத்தமிட்டால் போதும்...

காதலை அர்த்தப்படவும்,

நீண்ட கால பிரிவை

புதுபித்துக் கொள்ளவும்,
முத்தம் தேவைப்படும்...

தன்னிலை அறியவும் 

தூரத்தை
சரி செய்துக் கொள்ளவும்,

துணையாகிப் போகும்

இதழ் முத்தமே ...

ஆண்களுக்கோ

முத்தம் அடையாளமாகவும் 

காமத்தின் போது

முன்னுரையாகவும்,

கவிதைகளுக்கு வரிகளாகவும்
வகைப் படும்...



முத்தத்தின் முகவரி

பெண்களுக்கே சொந்தம்.

முத்தத்தை கேட்டு 

பெறுவதில் சற்று கூச்சம்.


வஞ்சமில்லா முத்தம்

வாசிக்கப்படும்.நேசிக்கபடும்.

கொடுக்கல் வாங்கல்

முத்தத்தோடு நடைபெறும்.

மருத்துவத்தின் உண்மை மாதுளை!




மாதுளை!
இனிப்பும்,புளிப்பும் ,
கொண்ட வகைகள்,
வலம் வருவதுண்டு!




இனிப்பு மாதுளையோ,
இதயத்திருக்கும்...
மூலைக்கும்...
ஆற்றலை தருவதில்
அக்கரைவுண்டு!


பித்தத்தை போக்கி
இருமலை, நிறுத்திவிடுவதில்
மாதுளை ஒரு அணிந்துரை!




புளிப்பு மாதுளையோ...
வயிற்றுக் கடுப்பு
நீக்கி,
இரத்த பேதியை
நிறுத்தி,
வயிற்றின் புண்ணை
ஆற்றிவிடும்.


தடைப்பட்ட சிறுநீரும்
தடையின்றி வெளியேறும்.
மாதுளம் விக்கலுக்கு
விடை சொல்லும்!


தாகம் தீர்க்கும்
பானமாகும்,
கோடைக்கு
இதமாகும்.


மாதுளை 
தினம் அருந்திவந்தால் 
உடம்பில் தோன்றும் 
வெள்ளை படலத்தை 
அகற்றும்!


மாதுளை சாற்றில்
கற்கண்டு கரைத்து குடித்தால்
உஷ்ணம் உடலை விட்டு ஓடும்!


புது உற்சாகம் தோன்றும்.
மாதுளை சாற்றில்
தேன் கலந்து குடித்தால்
உடலில் மாற்றம் வரும்!
சோம்மல் முறிந்து போகும்.


மருத்துவத்தின் மாமருந்து 
இந்த  மாதுளை!
உண்டுப்பார்த்தால் 
புரியும் உண்மை !