இடைத்தேர்தல்!
இறப்புக்கு பின்
வாசிக்கப்படும் இரங்கல்
தீர்மானம்!
கட்சி மாறினால்,
பெறப்பட்ட ராஜினாமா
சொல்லும் இடைத்தேர்தல்.
இந்த நகரம்
அரசியல்வாதிகளால்
பார்க்கப்படும்,சுவாசிக்கபடும்
எதிர் கட்சியா?
ஆளும் கட்சியா?
என பேசப்படும்.
அனாதையா
இருந்தவர்கள் எல்லாம்
சொந்தமாகிப் போவார்கள்.
சாதிகள்
மேடை ஏற்றப்படும்.
பொருளே இல்லாம்
பேரம் நடைபெறும்
புது வணிகம்
உருவாக்கபடும்.
ஜனநாயகம் இங்கு
விலைப் பேசப்படும்.
ஓட்டுக்கு கூலி தரப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக