தாயின் முகம் கண்டால்
அன்பின் அலைகள் தெரியும்.
பாசம் கொண்ட முகத்தை கண்டால்
நேசம் கொள்ளச் சொல்லும்.
வாசம் கொண்ட பூக்களைப் பார்த்தால்,
நுகரச் சொல்லும்.
காதல் பருவம் வந்துவிட்டால்
கவிதை எழுதத் தூண்டும்.
அகரத்தின் ஒலியை கேட்டால்
தமிழை போற்றச் சொல்லும்
இருப்பதில் கொஞ்சம் கொடுத்துவிட்டால்
அகத்தினழகு முகத்தில் தெரியும்.!பெற்றோர்களுடன் இருந்துவிட்டால்
அகத்தினழகு முகத்தில் தெரியும்.!
உண்மை பேசி வாழ்ந்துப்பார்த்தால்
அகத்தினழகு முகத்தில் தெரியும்.!
உற்றார் ,உறவினருடன் நேசம்கொண்டால்,
அகத்தினழகு முகத்தில் தெரியும்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக