மாதுளை!
இனிப்பும்,புளிப்பும் ,
கொண்ட வகைகள்,
வலம் வருவதுண்டு!
இனிப்பு மாதுளையோ,
இதயத்திருக்கும்...
மூலைக்கும்...
ஆற்றலை தருவதில்
அக்கரைவுண்டு!
பித்தத்தை போக்கி
இருமலை, நிறுத்திவிடுவதில்
மாதுளை ஒரு அணிந்துரை!
புளிப்பு மாதுளையோ...
வயிற்றுக் கடுப்பு
நீக்கி,
இரத்த பேதியை
நிறுத்தி,
வயிற்றின் புண்ணை
ஆற்றிவிடும்.
தடைப்பட்ட சிறுநீரும்
தடையின்றி வெளியேறும்.
மாதுளம் விக்கலுக்கு
விடை சொல்லும்!
தாகம் தீர்க்கும்
பானமாகும்,
கோடைக்கு
இதமாகும்.
மாதுளை
தினம் அருந்திவந்தால்
உடம்பில் தோன்றும்
வெள்ளை படலத்தை
அகற்றும்!
மாதுளை சாற்றில்
கற்கண்டு கரைத்து குடித்தால்
உஷ்ணம் உடலை விட்டு ஓடும்!
புது உற்சாகம் தோன்றும்.
மாதுளை சாற்றில்
தேன் கலந்து குடித்தால்
உடலில் மாற்றம் வரும்!
சோம்மல் முறிந்து போகும்.
மருத்துவத்தின் மாமருந்து
இந்த மாதுளை!
உண்டுப்பார்த்தால்
புரியும் உண்மை !
விஷயமுள்ள நல்ல பதிவுகள். பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருண்!உங்கள் பாராட்டுக்கும்,வருகைக்கும் நன்றி.
பதிலளிநீக்கு