குடி, குடியை கெடுக்கும்
என்று சொன்னால்...
உன் குடியா...
என சொல்லி சிரிக்கிறார்கள்!
குடித்தால் குடலும்
கெடும் என சொன்னால்...
அதுக்குதான் குடலும்
சாப்பிடுகிறேன் என சொல்கிறார்கள்!
குடிப்பதே இவர்களது வாடிக்கை
குடித்தபின் செய்வதோ வேடிக்கை!
வாழ்க்கை மறந்த குணங்களை
மாற சொன்னால் மாறுமா ?
பிடிவாதத்தோடு
வாதம் செய்யும் இவர்களுக்கு
பிடி வராண்டு வந்தாலும்
குடிக்கும் மனம் விட்டுதான் விடுமா ?
இருப்பதில் குடிக்கவே குறைவில்லை
குடித்தாலும் போதை போதவில்லை...
இருந்ததும் போக ,வீட்டிலுள்ள பொருகளும்
விற்பனைக்கு தயார் இவர்கள் நிலை.
குடித்து குடல் வெந்து இறக்கும் இவர்களுக்கு
தன் குடி ஒன்று இருப்பதே நினைக்கவில்லை!
குடி குடியை கெடுக்கும் என்றால் மட்டும்
திருந்தி விடவா போகிறார்கள் ?
இந்த குடிமக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக