அன்று
தாய்ப்பால் தந்து
மகிழ்ந்த உலகம்!
இன்றோ...
தாய்க்கே
பாலில்லாத காலம்!
அன்று!
தாய்ப்பாலுக்கு இருந்த
மார்பகம்!
இன்று
அழகுக்கு அறுவை செய்யும்
கோலம்.
இன்று
தாய்ப்பாலுமில்லை,
புட்டிப்பாலுமில்லை.
குடியை கெடுக்கும்
குடிபானம்...!
இது என்ன கலிகாலமா,
வளரும் பிள்ளையும் ஈர்க்கும?
பெற்றோரே!
வாழும் வாழ்கையில் வரும் பிழைகளை,
வடித்து வாழ்ந்தால் ,மதிக்கும் நம் பிள்ளைகள்!
விதைத்த விதைதான் வளரும்
உன் நிலையை நிழலாய் பிள்ளைகள் தொடரும்.
வேண்டுமா ,இல்லை இனி நாடுமா
குடியை கெடுக்கும் குடியை?
நாமே முன் மாதிரி
எல்லாம் கைவிட்டப்படி...
குடி செழிக்க இவன் கைப்பிடி...
பூத்துக்குலுங்கும் தலைமுறை பாரீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக