பசங்களுக்கு சிரிப்பினை தரும்
பள்ளிகளுக்கு விடுமுறை!
வீட்டுப்பாடமும் இல்லை என்ற நிலை
விடலைகளுக்கு சொல்லும்
விளையாட்டின் ஆவலை
வேலை வேலை என்ற நிலை
போக்கவே இந்த விடுமுறை .
தூக்கத்தின் வழிமுறை
சுறுசுறுப்பின் அடகுமுறை.
கேளிக்கையின் விழிமுறை.
வேலைகள் மறந்த விதிமுறை.
சந்தோசத்தின் உறவுமுறை
வசந்தமாய் வலம் வரும்வரை
வளர்பிறை ,இந்த விடுமுறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக