5 ஏப்., 2010

நட்பு கவிதை!





இவ்வுலம் இறைவன் தந்தது.
இனிமையின் உதயம் நட்பு தருவது.



நீலவானமில்லாத உலகமில்லை 
நட்பு என்றும் மனதைவிட்டு மறைவதில்லை!

காலத்தின் ஓடத்தில் பிரிந்து இருந்தாலும் 
நினைவுகளில் என்றும் நாம் சங்கமம்!

எனது பலமும் ,பலகினமும் நீ!
எனது வாழ்க்கையின் பகுதி நீ !

இறப்பு வரை நீ இருந்தால் இழப்பில்லை,
இறக்கும் போது நீ இருந்தால் பயமில்லை.

நட்போடு வாழும் வரை மகிழ்வுக்கு பஞ்சமில்லை!
நட்பு அறியா வாழ்க்கையில், வாழ்வது அர்த்தமில்லை!

2 கருத்துகள்:

  1. ''....நட்போடு வாழும் வரை மகிழ்வுக்கு பஞ்சமில்லை!
    நட்பு அறியா வாழ்க்கையில், வாழ்வது அர்த்தமில்லை...''
    நட்பு இல்லா வாழ்விலும் அர்த்தமில்லை . இது மனிதனோடு தானென்பதும் தேவையில்லை. உயிரினங்களுடன், இயற்கை எதுவாகவும் இருக்கலாம். வாழ்த்தகள் அன்புறவே.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வருகைக்கும்,
    கருத்துக்கும் ,நன்றி உறவே!

    பதிலளிநீக்கு