13 ஆக., 2013

முத்தமிடதானா...?




பனியும்
மழையும் 
கரைந்து நதியாய் 
உருமாறி 
கடலை முத்தமிடதானா...?

8 ஆக., 2013

அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...



பசி வந்தால் அனைத்தும் 
பறந்து போகும் இது பழமொழி 

ரமலான் வந்தால் 
ரஹ்மான் அருளால்
பசியே பறந்து போகும் 
இது நபி வழி...

கறையை போக்க 
பிறை சொன்னது நோம்பினை 
நோற்று அறிந்தோம் 
அதன் மாண்பினை...

ஏகன் அருளிய மறையை 
அதன் கிருபையை அறிந்தோம்
நன்றி சொல்லவே 
பசியை மறந்தோம்...

புத்தாடை உடுத்தி 
உள்ளதில் கொடுத்து 
உள்ளம் மகிழ்ந்து...

பிறை கண்டு நோற்றோம் 
பிறை கண்டே பெருநாளை 
ஏற்றோம்...

இருக்கும் காலம் வரை
இருப்பதில் கொடுத்து வாழு 
இறைவனை மட்டும் வணங்கு....

அனைவருக்கும் எனது 
ரமலான் பெருநாள் நல் 
வாழ்த்துக்கள்...

1 ஆக., 2013

தாங்க்ஸ் வருகை....




தாங்க்ஸ்  வருகை 

ஒதுக்கப்பட்டது 
நன்றி...


================

நன்றி மறந்த கூட்டம் 
கொக்கரித்தது 
தாங்க்ஸ்...

=================
கலாச்சார தொற்று 
அரை குறை ஆடை 
மொழி...!
==================


படிப்பே அறியாதவனும் 
சொல்லுகிறான் 
தாங்க்ஸ்...!
======================

வண்டுகளின் மோதலில்...

வண்டுகளின் மோதலில் 
உதிர்ந்து போனது 
இலைகள்...

சுகம் கண்ட 
மலரும் களங்கவில்லை 
உதிர்ந்த இலையை கண்டு...

=================
வண்ணத்தில் பிறந்து 
காற்றில் தவழ்ந்து 
சிரிக்கும் அழகுக்கு 
மலர் யென்று பெயர் 
மனதை ஈர்க்கும் 
அதிசியத்தின் உருவதுக்கு 
மலர் யென்று பெயர்....


பந்தமாய்...

மலர்கள் திருமண பந்ததுக்கும் 

மரணத்துக்கும் பந்தமாய்...

ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில் 
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய் 

வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும் 
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது 

நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள் 
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும் 

நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய் 
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும் 

மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை 
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...

இணக்கமாய் மலர்...

பூக்களில் ஆனவமில்லை 
பூக்க மறுத்த செடிகளுமில்லை...
மனிதா அறிந்துக்கொள் 
பூக்களை பார்த்து புரிந்துக்கொள்...


மனமும் மணமும் 
மயக்கும் குணமும் 
ஒன்றாய் மலருக்கு...


இரவுக்கும் 
இறப்புக்கும் 
இணக்கமாய் மலர்...


உதிரிய மலர் எருவாய்
உருமாறும் 
வண்டுக்கு கொடுத்து 
தேனாய் இனிக்கும்...



வருடங்கள் உனக்கு வரலாறு 
சொல்லும் 
பூக்களோ இருக்கும் வரை 
அழகை சொல்லும் 
இல்லறத்தை வளர்க்கும் 
இருக்கும் 
இடத்தை அலங்கரிக்கும்...

27 ஜூலை, 2013

வேண்டுமா காதல் ?



வாலிப தேசத்தில் 
காதலே கொள்கை...


உனக்கு இல்லை என்றாலும் 
எனக்கு காதல் என்னை காதலி 
இல்லை...



கொலையாய் தற்கொலையாய் 
மாறும் அபாயம்...


தனி மனிதனின் காயங்களுக்கு 
சாதி ,மத சாயங்களை
பூசப்பட்டு ஊர்வலம்...


திட்டமிட்டும் நடக்கிறது 
சில காதல்
காய்ப்பட இல்லை அவமானப்பட 
செய்யவே...


யெல்லாம் அறிந்தும் 
தெரிந்தும் ஏனடா 
இந்த காதல் உனக்கு...


உன்னை நீயே அழித்துக்கொள்ள 

26 ஜூலை, 2013

அறியாமை...

நோயின் தொடக்கம் 
தொண்டர்கள் படை சூழ
நடைப்பயணம் 
====================
மறந்த வாக்காளருக்கு 
நினைவூட்டல்
போராட்டம்...
====================
விதவை குறிக்கீடு 
விபரீதம்
நம்பிக்கை இல்லாதவன்...!

இன்றைய காதல்...














வரமாய் நினைத்தேன் 
வதமாய்
மாறும் வரை...


============================
காதல் வந்தால் 
கவிதை வரும் என்றார்கள் 
நானும் தினமும் 
பார்த்துக்கொண்டுதான் 
இருக்கிறேன் 
கவிதை வரும் யென்று...
 
நான்கு திசை பார்த்து பார்த்து 
என் கழுத்தில் 

வலி  வந்தது தான் மிச்சம் ...


மனம் மாற்றம்...




நல்வரவு 
நாய்கள் ஜாக்கிரதை 
மனிதர்கள்...!
===================
ஆளும் கட்சி எதிர் கட்சியாய்
எதிர் கட்சி ஆழும் ஆளும் கட்சியாய்
காட்சிகள்...
===================================
கட்சி மாற்றம் 
வரவு சிலவு கணக்கு 
அரசியவாதிகள்...!
===================================


24 ஜூலை, 2013

எதுகை மோனை...
















அச்சதோடு பயணம் 

மழை வருமோ என்று
பயத்தில் ஒரு பக்கம்...

வெப்பத்தின் நெருக்கடியில் 
தப்பிக்க 
மழை வராத என்ற
ஏக்கத்தில்...

15 ஜூலை, 2013

காமராஜ் நினைவு ...!(கவிதை)

படிக்க மறந்த 
குலத்தை 
குலத் தொழில் தான் 
செய்யனும் யென்ற 
வழக்கத்தை 

மத்திய உணவு மூலம் 
உடைத்தெறிந்த 
உத்தமன் நீ...

உதிரம் சிந்தி 
உயர்ந்தவன் நீ...
உள்ளதை உள்ளபடி 
சொன்னதும் நீ...
உள்ளதை உள்ளபடி 
பேசியவேணும் நீ...

அளவு எடுத்த 
சட்டையும் 
அளவு எடுத்த 
பேச்சும் அறியாதவன் நீ...

ஏழையின் நிஜத்தை 
அறிந்தவன் நீ...
ஏழு விழுக்காடு இருந்த 
படிப்பை...
உயர்த்தியவன் நீ...

நாங்கள் உன்னை தோற்க 
செய்தாலும் 
தோல் கொடுத்த 
தோழன் நீ...

குலத் தொழில் மறைய 
சூழுரைத்தவன் நீ...

நீ மறைந்தாலும் 
நாங்கள் மறக்கவில்லை...

உன்னையும் 
உன் செயல்களையும்...

இன்னும் ஏக்கத்தோடு 
உன் ஆட்சியியை 
எதிர்பார்க்கும்...
தமிழர்கள்....


 

13 ஜூலை, 2013

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம்
சாதித்து விட்டோம்..!

11 ஜூலை, 2013

விரிசல் பட்ட













                                                               காதல் சின்னமாய் 
                                                               இதயம் இடமாற்ற 
                                                               சின்ன சின்ன காயகளுக்கு 
                                                               விரிசலாய்....
காதல் தோல்வி 
இதயம் விரிசல் 
மருந்தாய் மாறியது 
பெற்றோர்கள் 
பாசம்...
                                                                எல்லாம் அவனக்கு 
                                                                இல்லை அவளுக்கு 
                                                                சொன்னது காதலர்கள் 
                                                                இதயங்கள்...

                                                                விரிசல் பட்ட பெற்றோர்களின் 
                                           இதயத்தைப் பார்த்து.

30 ஜூன், 2013

காதலே சிறப்பு....











நேசிப்பு இருபக்கமும் 
இருந்தால் உகப்பு 
இல்லையென்றால் ஏனடா இறப்பு...?


தப்பு தப்பு நீ செய்வது தப்பு 
இழப்பு இழப்பு யாருக்கு யென்று 
பார்த்தால் புரியும் உனக்கு...!


காதல் தான் வாழ்க்கை யென்றால் 
ஏனடா உன் பிறப்பு 
திருமணம் ஆனவுடன் வரும் 
காதலே சிறப்பு....


படிப்பு படிப்பு 
யென்று தொடங்கு 
நீ படியேற அது தான் விளக்கு...


காதல் காதல் யென்று 
எழுதுவதை நிறுத்து 
உன்னை  நீ அறிந்து 
உன் காலத்தை நகர்த்து...

6 ஜூன், 2013

மணல் வீடு...















மணல்  வீட்டை..
அலைகள் அழித்து 
அழதது...
======================
ஒவ்வொரு மனிதனுக்கும் 
அழியாமல் இன்னும் 
மனதில்...
========================


19 மே, 2013

தீராத தீவிரவாதம்....










மனித  நேயம்  மறந்த 
மனிதர்கள் 
கையில் இருக்கும் 
ஆயுதம்...


பிடிவாதத்தின் மறு பெயர் 
தீவிரவாதம்...


ஆயுதம் விற்க 

அறிமுகம் ஆகிறது 
தீவிரவாதம்...

பிடித்தவர்கள் செய்தால் 

போர்க்களம் 
பிடிக்காதவர்கள் 
செய்தால் 
தீவிரவாதம்...

இந்த வாதமே 

உலகத்தின் குரலாய் 
ஒலிக்கிறது...

மெலிந்தவனுக்கு 
அவன் குரலே 
தீவீரவாதாமாய் 
ஆட்சியாளருக்கு...


தீவிர வாதத்தை 
ஆட்சியாளர்கள் 
எடுத்தால்
வாதமாய்...

பாதிக்கப்பட்டவன் 

எடுத்தால் 
அவன் வாழ்வே வதமாய்...






17 மே, 2013

அமிலத்தில் ஆடிய அனிச்சம்




சுமை தாங்கியாய்
பாலித்தீன் பைகள்...

போக்குவரத்து
சுமையை குறைக்க
எரி வாயு  வாகனங்கள்

வீட்டை அலங்கரிக்க
சாயங்கள்...
இருட்டை போக்க
அணு மின்நிலையங்கள்...

காதலிக்க
மறுத்தாலும்
தன்னை
வெறுத்தாலும்
அமிலத்தில்
வெந்தது முகங்கள்...

வாளரும் நாடுகளின்
நாடகத்தில்
நாமும் ஒரு அங்கங்கள்


இது தானோ
நமக்கு நாமே
தோண்டிய குழிகள்...


போதைச் சேற்றில் மனித நாற்றுகள்



கோயில் பக்கமும் 
பள்ளிகள் பக்கமும் 
அக்கம்பக்கமாய் 
டாஸ் மார்க் கடைகள்...

தடுமாறும் நடையில் 
நாளைய தலைமுறைகள் 
போதையோடு 
நிர்வாணமாய் 
முதிர்ந்த வயதினர்கள்...

தெளித்து விடப்பட்ட
போதை நீரில் 
வளரும் பயிர்கள் 
வாடிப்போக...

போலிகள் என்றாலும் 
சரி 
போதை வேண்டும் 
என்ற நெறி...

சிலர்  பூட்டு போடா 
போராட்ட்டம்...
இரவு நேரத்தில் 
போதையோடு 
நடமாட்டம்...

போதையோடு 
நகரும் நகரம்
நாடகமாய் போனது 
உலகம்...

தவறாய் போன நிலையில் 
மறக்க குடிகிறேன் 
போதை தேடி 
குடி மகன் சொன்னான் 
சிரித்தபடி...

குடலும் வெந்தப்படி 
குடிக்கும் குடி 
இவன் அறிந்த படி 
குடிக்கும் குடியடி 
இவனை என்ன 
சொல்லுவதடி...?






20 ஏப்., 2013

நீயா நானா
பலப் பரீச்சை
மதங்களை
பார்க்கும் தருணம்

13 ஏப்., 2013

மழை...
















உழைத்து களைத்த 
உழைப்பாளின் 
வியர்வைத்துளி...
==================
ஒவ்வொரு துளியும் 
புதிய தலைமுறைக்கு 
உதயம்...
====================

9 ஏப்., 2013

மனிதநேயம்...

இரக்கம்
இறங்கி
இறப்பு...
==============

நேற்றுக்கூட 
இரக்கப்பட்டேன்
புகழ்ச்சிவுடன்...

================

நேரமில்லை 
அடிபட்ட உடலை 
பார்த்து...

================

23 மார்., 2013

ஐந்து அறிவுகளிடம்...
















முதியோர் இல்லங்கள் 
இல்லாத இனம்..

மண் வளம் கண்டு 
வாழும் குணம்...

நீர் நிலங்கள் கண்டு 
கூடும் கூட்டம் 

எல்லாமே இதோ 
ஐந்து அறிவுகளிடம்...











19 மார்., 2013

சவப்பெட்டி...










அசையாத 
உடம்பு சொன்னது 
மரணத்தை...

மரணத்தை 
வீட்டுக்கு வெளியே 
சவப்பெட்டி உறுதி செய்தது...

எனது கடைசி 
உறவாய் 
என்னை சுமந்து செல்ல...

எனது 
கடைசி பயணத்தின் 
துணையாய்...

18 மார்., 2013

பெண்ணின் நளினம்...















மகளியாரை கண்டதால்
காற்றும் 
உருவம் பெற்றதோ?
====================
















குளிக்கவே பயம் 
தடுமாறும் மனம் 
தண்ணீரில் கண்டம்...
===================================

















பெண்ணின் நளினம் 
நகத்தோடு 
நடனம்...

அசைந்து இசைத்து 
வளையல்களோடு 
ஆடும் ...