கோயில் பக்கமும்
பள்ளிகள் பக்கமும்
அக்கம்பக்கமாய்
டாஸ் மார்க் கடைகள்...
தடுமாறும் நடையில்
நாளைய தலைமுறைகள்
போதையோடு
நிர்வாணமாய்
முதிர்ந்த வயதினர்கள்...
தெளித்து விடப்பட்ட
போதை நீரில்
வளரும் பயிர்கள்
வாடிப்போக...
போலிகள் என்றாலும்
சரி
போதை வேண்டும்
என்ற நெறி...
சிலர் பூட்டு போடா
போராட்ட்டம்...
இரவு நேரத்தில்
போதையோடு
நடமாட்டம்...
போதையோடு
நகரும் நகரம்
நாடகமாய் போனது
உலகம்...
தவறாய் போன நிலையில்
மறக்க குடிகிறேன்
போதை தேடி
குடி மகன் சொன்னான்
சிரித்தபடி...
குடலும் வெந்தப்படி
குடிக்கும் குடி
இவன் அறிந்த படி
குடிக்கும் குடியடி
இவனை என்ன
சொல்லுவதடி...?
கொடுமை...
பதிலளிநீக்குதானாக தான் திருந்த வேண்டும்...