19 மே, 2013

தீராத தீவிரவாதம்....










மனித  நேயம்  மறந்த 
மனிதர்கள் 
கையில் இருக்கும் 
ஆயுதம்...


பிடிவாதத்தின் மறு பெயர் 
தீவிரவாதம்...


ஆயுதம் விற்க 

அறிமுகம் ஆகிறது 
தீவிரவாதம்...

பிடித்தவர்கள் செய்தால் 

போர்க்களம் 
பிடிக்காதவர்கள் 
செய்தால் 
தீவிரவாதம்...

இந்த வாதமே 

உலகத்தின் குரலாய் 
ஒலிக்கிறது...

மெலிந்தவனுக்கு 
அவன் குரலே 
தீவீரவாதாமாய் 
ஆட்சியாளருக்கு...


தீவிர வாதத்தை 
ஆட்சியாளர்கள் 
எடுத்தால்
வாதமாய்...

பாதிக்கப்பட்டவன் 

எடுத்தால் 
அவன் வாழ்வே வதமாய்...






1 கருத்து: