8 ஆக., 2013

அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...



பசி வந்தால் அனைத்தும் 
பறந்து போகும் இது பழமொழி 

ரமலான் வந்தால் 
ரஹ்மான் அருளால்
பசியே பறந்து போகும் 
இது நபி வழி...

கறையை போக்க 
பிறை சொன்னது நோம்பினை 
நோற்று அறிந்தோம் 
அதன் மாண்பினை...

ஏகன் அருளிய மறையை 
அதன் கிருபையை அறிந்தோம்
நன்றி சொல்லவே 
பசியை மறந்தோம்...

புத்தாடை உடுத்தி 
உள்ளதில் கொடுத்து 
உள்ளம் மகிழ்ந்து...

பிறை கண்டு நோற்றோம் 
பிறை கண்டே பெருநாளை 
ஏற்றோம்...

இருக்கும் காலம் வரை
இருப்பதில் கொடுத்து வாழு 
இறைவனை மட்டும் வணங்கு....

அனைவருக்கும் எனது 
ரமலான் பெருநாள் நல் 
வாழ்த்துக்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக