15 ஜூலை, 2013

காமராஜ் நினைவு ...!(கவிதை)

படிக்க மறந்த 
குலத்தை 
குலத் தொழில் தான் 
செய்யனும் யென்ற 
வழக்கத்தை 

மத்திய உணவு மூலம் 
உடைத்தெறிந்த 
உத்தமன் நீ...

உதிரம் சிந்தி 
உயர்ந்தவன் நீ...
உள்ளதை உள்ளபடி 
சொன்னதும் நீ...
உள்ளதை உள்ளபடி 
பேசியவேணும் நீ...

அளவு எடுத்த 
சட்டையும் 
அளவு எடுத்த 
பேச்சும் அறியாதவன் நீ...

ஏழையின் நிஜத்தை 
அறிந்தவன் நீ...
ஏழு விழுக்காடு இருந்த 
படிப்பை...
உயர்த்தியவன் நீ...

நாங்கள் உன்னை தோற்க 
செய்தாலும் 
தோல் கொடுத்த 
தோழன் நீ...

குலத் தொழில் மறைய 
சூழுரைத்தவன் நீ...

நீ மறைந்தாலும் 
நாங்கள் மறக்கவில்லை...

உன்னையும் 
உன் செயல்களையும்...

இன்னும் ஏக்கத்தோடு 
உன் ஆட்சியியை 
எதிர்பார்க்கும்...
தமிழர்கள்....


 

2 கருத்துகள்: