1 ஆக., 2013

இணக்கமாய் மலர்...

பூக்களில் ஆனவமில்லை 
பூக்க மறுத்த செடிகளுமில்லை...
மனிதா அறிந்துக்கொள் 
பூக்களை பார்த்து புரிந்துக்கொள்...


மனமும் மணமும் 
மயக்கும் குணமும் 
ஒன்றாய் மலருக்கு...


இரவுக்கும் 
இறப்புக்கும் 
இணக்கமாய் மலர்...


உதிரிய மலர் எருவாய்
உருமாறும் 
வண்டுக்கு கொடுத்து 
தேனாய் இனிக்கும்...



வருடங்கள் உனக்கு வரலாறு 
சொல்லும் 
பூக்களோ இருக்கும் வரை 
அழகை சொல்லும் 
இல்லறத்தை வளர்க்கும் 
இருக்கும் 
இடத்தை அலங்கரிக்கும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக