17 மே, 2013

அமிலத்தில் ஆடிய அனிச்சம்
சுமை தாங்கியாய்
பாலித்தீன் பைகள்...

போக்குவரத்து
சுமையை குறைக்க
எரி வாயு  வாகனங்கள்

வீட்டை அலங்கரிக்க
சாயங்கள்...
இருட்டை போக்க
அணு மின்நிலையங்கள்...

காதலிக்க
மறுத்தாலும்
தன்னை
வெறுத்தாலும்
அமிலத்தில்
வெந்தது முகங்கள்...

வாளரும் நாடுகளின்
நாடகத்தில்
நாமும் ஒரு அங்கங்கள்


இது தானோ
நமக்கு நாமே
தோண்டிய குழிகள்...


1 கருத்து: