29 ஜூலை, 2012

பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க ...

சென்னை: பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க புதிய விதிகளை வரையறுக்க, போக்குவரத்து இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது. சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூர் அருகில், கடந்த இரு தினங்களுக்கு முன், சீயோன் பள்ளி பேருந்திற்குள் இருந்த, ஓட்டை வழியாக இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, 7, கீழே விழுந்தாள். அதில், பின் சக்கரத்தில் சிக்கி ஸ்ருதி சம்பவ இடத்திலேயே பலியானாள். இந்த சம்பவத்தில், பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
ஐந்து பேர் கைது: இது தொடர்பாக, ஸ்ருதி படித்த பள்ளியின் தாளாளர் விஜயன், பஸ் ஓட்டுனர் சீமான், கான்ட்ராக்டர் யோகேஷ், கிளீனர் சண்முகம், அந்த பஸ்சிற்கு கடந்த 20 தினங்களுக்கு முன் தகுதிச் சான்று வழங்கிய, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரனுடன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பட்டப்பச்சாமியும், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ஐகோர்ட் உத்தரவு: இது குறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச், தானே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. கல்வித் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளை ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், பள்ளி கல்விச் செயலர் சபீதா, போக்குவரத்து கமிஷனர் பிரபாகர் ராவ் தலைமையில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். முடிவில், "பள்ளி பேருந்துகளில் செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்க, வாகனங்களின் பராமரிப்பு, தகுதி குறித்து புதிதாக விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க, தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்; 15 நாட்களுக்குள் வரைவு விதிகளை கோர்ட்டில்

தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
குழு அமைப்பு: இந்த உத்தரவைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறையின் சார்பில் பள்ளி பேருந்துகளுக்கு, புதிய விதிகளை வரையறுப்பதற்கான குழுவை அமைப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில், போக்குவரத்துத் துறை விதிகள் பிரிவு இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து, போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில், போக்குவரத்து துணை கமிஷனர் (திருநெல்வேலி) பாலன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (சென்னை கிழக்கு) பாஸ்கரன், மாநில போக்குவரத்துக் குழும உதவி செயலர் பாஸ்கரன், அதே குழுமத்தின் அலுவலர் லட்சுமிபதி, பூந்தமல்லி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
விரைவில் புதிய விதிகள்: இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்த குழு, பள்ளி வாகனங்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய விதிகளை உருவாக்குவர். இதில், பள்ளி வாகனங்களின் ஆயுட்காலம், ஓட்டுனர்கள் தகுதி, வாகனங்களின்

பராமரிப்பு இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், பள்ளிகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் விதிகள் தொடர்பாகவும் பிரதான மாற்றங்கள் இருக்கும் எனவும் போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. புதிய விதிகள் உருவாக்கப்பட்டு, விரைவில் போக்குவரத்து கமிஷனர் பிரபாகர் ராவிடம், இக்குழுவினர் அளிப்பர். அதன் பின்னர் அறிக்கையை அரசு பரிசீலிக்கும். பின்னர், வரைவு விதிகள், ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, நீதிபதிகள் உத்தரவின் பேரில் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

நன்றி தினசரி 

28 ஜூலை, 2012

கவியரசு வைரமுத்து,


 
கவியரசு வைரமுத்து, தமிழுக்குப் புதுநிறம் தந்தவர். இலக்கியத்திற்கு ஈரமும் சாரமும் சேர்த்து இனிமை கூட்டியவர். கடந்த முப்பதாண்டுகளாக திரைப்படப் பாடல்களை வசீகர நடையில் எழுதிக் குவித்து தமிழை தளதளப்பாக்கிக் கொண்டிருக்கிறார். இவர் விரல்மீது காதல் கொண்ட தேசிய விருதுகள், ஆறு முறை இவரை ஆரத்தழுவி ஆராதித்திருக்கின்றன. சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதும் இவரை ஐந்து முறை தேடி வந்து அணி செய்து தன்னை அழகாக்கிக் கொண்டிருக்கிறது. கள்ளிக்காட்டு மக்களின் வாழ்க்கையை புதினங்களில் உயிர்ப்பாக பதிவு செய்த வகையிலும் இவர் சிகரம் தொட்டவர். மொத்தத்தில் தமிழின் வைகறைத் திசையாக விடிந்திருக்கிறார் வைரமுத்து. "இனிய உதய'த்திற்காக அவரைச் சந்தித்தபோது...

எப்படி இப்படியொரு தமிழ்நடை உங்களுக்கு வாய்த்தது?



நடத்தலில் ஒவ்வொருவருக்கும் ஒரு நடைஅமைவதுபோலவே, எழுத்திலும் அமைகிறது. என் எழுத்து நடையில் அமைந்தது பாதி; நான்அமைத்தது பாதி. உரைநடையின் இறுக்கம்குறைக்கக் கொஞ்சம் கவிதை பெய்துகொண்டதில் ஒரு புதிய நடை உண்டாகியிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.

உங்கள் பால்ய பருவத்தின் மறக்க முடியாதஅனுபவம்?

ஒரு கொலை பார்த்தது- ஒரு புணர்ச்சி பார்த்தது- 11 வயதில் வெறிநாய் கடித்தது- மூன்றும் அறியாத வயதின் அதிர்ச்சிகள்.

நீங்கள் எழுதிய முதல் கவிதை?

வயல்வெளியில் பிறந்தது. அது கவிதையா- கவிதைபோல் ஒரு மொழிமுனகலா என்றுஎனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. கவிதை கையில் இல்லை. அந்தப் பரவசம் மட்டும் பத்திரமாக.

திரையுலகக் காதலில் விழுந்தது எப்படி?

"டூரிங் டாக்கீஸ்' என்ற கலைக் கூடங்களே காரணம்; காற்றில் ஒலித்த பாடல்களே காரணம். கலைஞரின் வசன இலக்கியம்; எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற கந்தர்வ புருஷர்கள்; கண்ணதாசன் என்ற கலையாளுமை இவையே திரைக்காதலுக்குத் தோற்றுவாய் செய்தன. ஐம்பதுகளில் பிறந்த தமிழர்கள் பலருக்கும் இந்த நான்கு பேரின் பாதிப்பு இல்லாமல் இருக்காது.

நீங்கள் சந்தித்த முதல் திரைப் பிரபலம் யார்? அப்போதைய உங்கள் மன நிலை?

நடிகர் அசோகன். டிரஸ்ட்புரத்தில் இரண்டாம் தெருவில் அவர். நான்காம் தெருவில் நான். நடைப் பயிற்சியில் சந்தித்து நண்பர்கள் ஆனோம். படப் பிடிப்புக்கெல்லாம் அவர் காரில் என்னை அழைத்துச் செல்வார். மதுரை திருமாறன்- கே.ஆர். விஜயா இருவரையும் எனக்கு அறிமுகம் செய்தார். திரைத்துறைக்கு நான் வருவேன் என்பதை அறியாத காலத்தில் அன்பு செலுத்தினார்; அவரை அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

திரையுலகில் ஏமாற்றங்களையும் சங்கடங்களையும் சந்தித்தது உண்டா?

ஏமாற்றங்களும் சங்கடங்களும் அனுபவங்கள். அனுபவங்களே ஆசான்கள். "இதுவரை நான்' இரண்டாம் பாகத்தில் விரிவாய் எழுதுவேன்.

மரபை வசீகரமாகக் கையாளும் நீங்கள், புதுக் கவிதைக்கு ஏன் திசை திரும்பினீர்கள்?

ரயிலில் வந்தவன் விமானத்திற்கு மாறிய கதைதான் அது.

உங்கள் சாதனையாக எதை நினைக்கிறீர்கள்?

சாதனை என்று எதைக் கருதினாலும் அது இன்று அல்லது நாளை முறியடிக்கப்பட்டுவிடும். சாதனை என்பதைவிட ஒரு சந்தோஷம் இருக்கிறது. இதுவரை யாருக்கும் தீங்கு செய்யவில்லை என்பதே அது.




உங்கள் ஆதங்கம்?

எட்டுக் கோடித் தமிழர்கள் உள்ள நாட்டில், ஒரு புத்தகத்தின் ஆயிரம் பிரதிகள் கூட விலை போகாதது.

உங்கள் ஏக்கம்?

இலங்கைத் தமிழர் துயரம் எப்போது தீரும்?



உங்கள் இழப்பு?

தூக்கம்.

உங்கள் அடுத்த இலக்கு?

உங்களுக்கே தெரியும்.

உங்களை வியப்பில் ஆழ்த்திய படைப்பு?

இந்திய இதிகாசங்கள் இரண்டும்.

உங்களுக்கு யார்மீதாவது பொறாமை வந்ததுண்டா?

கோபம் வந்ததுண்டு; பொறாமை என்றால் என்ன?

உலகத் தரத்தில் தமிழிலக்கியம் இருக்கும் போது மேலைநாட்டு இலக்கியங்களைத் தூக்கிச் சுமப்பவர்கள் பற்றி?

முதலில் தன்னை மதிப்பது நல்லது; பிறகு தரணியை மதிப்பது உயர்ந்தது.

காலப்போக்கில் மரபுக் கவிதை காணாமல் போய்விடுமா?

தமிழ் காணாமல் போகுமா?

திரையுலகிற்கு முன் இருந்த வைரமுத்து, திரையுலகிற்குள் வந்த பின்னால் வைரமுத்து- ஒப்பிடுங்கள்.

முன்னவன்- நேரத்தில் பணக்காரன்.



பின்னவன்- நேரத்தில் ஏழை.

அரசியலில் கால் வைக்காமல் இருப்பது ஏன்?

என்னினும் சிறந்தவர்கள் அரசியலை ஆளுவதால்.

இலக்கியம், மொழியின் அலங்காரமா? ஆயுதமா?

துய்ப்பதற்கு அலங்காரம்; தொழிற்பட ஆயுதம்.

"மூன்றாம் உலகப் போர்' எப்போது நூலாக வெளிவரும்?

ஜூலை 13. சென்னை காமராசர் அரங்கில் வெளி யீட்டு விழா. இந்திய அரசியலின் மூத்த தலைவரும், தமிழின் மூத்த படைப்பாளியுமான கலைஞர் வெளியிடுகிறார். "மூன்றாம் உலகப்போர்' ஆங்கில மொழிபெயர்ப்பும் தயாராகி வருகிறது. அது சர்வ தேச அரங்கில் வெளியிடப் பெறும்.

சந்திப்பு: அமுதா தமிழ்நாடன்

நன்றி இனிய உதயம் 

27 ஜூலை, 2012

ரோஹித் ஷேகரின் தந்தை என்.டி.திவாரிதான்: டிஎன்ஏ அறிக்கை


32 வயதாகும் ரோஹித் ஷேகர் என்.டி. திவாரியின் மகன்தான் என்பது டிஎன்ஏ அறிக்கையில் தெளிவாகியுள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஆந்திர மாநில முன்னாள் ஆளுநருமான என்.டி.திவாரிதான் தனது தந்தை எனக் கூறி ரோகித் சேகர் என்ற இளைஞர் வழக்கு தொடர்ந்தார். திவாரி இதை மறுத்து வந்தார். 

பல்வேறு முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணைக்குப் பின்னர், திவாரிக்கு மரபணு சோதனை நடத்த டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைஎதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீடும் ரத்து செய்யப்பட்டது.


இதையடுத்து மே மாதம் திவாரியிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் அவருடைய மகன் எனக் கூறி வரும் ரோகித் சேகர் மற்றும் அவரது தாயாரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த பரிசோதனை அறிக்கை சீலிட்ட உறையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த அறிக்கை ஜூலை 27 திறக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் மரபணு சோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் திறந்து படிக்கக் கூடாது என்று திவாரி டெல்லி ஐகோர்ட்டில நேற்று மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ரேவா கேத்ரபால், சோதனை அறிக்கையை கோர்ட்டில் திறந்து படிக்க முடிவு செய்தார்.

மரபணு சோதனையின்படி, ரோஹித் ஷேகரின் மரபணுவும், என்.டி. திவாரியின் மரபணுவும் ஒத்துப் போவதாகவும், எனவே, ரோஹித் ஷேகர் திவாரியின் மகன்தான் என்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஜ்வாலா சர்மா - என்.டி.திவாரிக்கு பிறந்தவர் ரோஹித் என்றும் டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது.

பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்த மாணவி பலி

பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்த மாணவி பலி: பொதுமக்கள் பேரணியாகச் சென்று அஞ்சலி (படங்கள்)


 சுருதி தந்தை கண்ணீர்

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி. நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசுராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிகமாக அடைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் முடிச்சூர் சாலையில் வந்தபோது பஸ் லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந்த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள் கூச்சலிட்டனர். சிறுமி கீழே விழுந்து இறந்ததையறிந்த டிரைவர் சிறிது தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுருதியின் தந்தை சேதுமாதவன்,

நானும், என் மனைவியும் கடவுளைவிட மேலாக அந்தப் பள்ளி மீது நம்பிக்கை வைத்து என் மகளை படிக்க சேர்த்தோம். நானும் 10, 15 பிள்ளைகளை தனியார் பள்ளிக்கு வேனில் கொண்டுவிடுகிறேன். பின்னர் வீடுகளுக்கும் அழைத்துச் சென்று விடுகிறேன்.

என் மகள் விபத்தில் இறந்துவிட்டாள் என்ற செய்தி கேட்டு நான் அந்த பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடவில்லை. அந்த பிள்ளைகளை அவரவர் வீட்டில் விட்டதற்கு பின்னர்தான் இறந்தபோன என் மகளை பார்க்க சென்றேன். இன்னம் சொல்லப்போனால் என் மகள் படித்த பள்ளிக்கு அருகே உள்ள கடையில் வேனில் உள்ள 8 பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் என் மகள் இறந்துபோனாள் என்ற செய்தி எனக்கு வந்தது என்றார்.


நன்றி நக்கீரன் 
பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே  காரணம்.இதுக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை தரவேண்டம் 

25 ஜூலை, 2012

தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய கடிதம்

See full size image 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் கொட்டகுளம் மின் வாரியத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குள்ளம்மாள். இவர்களது மகள் பிரேமா, 22(பெயர் மாற்றப்பட்டுள்ளது, மகன் அரவிந்த், 20.ரகசிய படம்பிரேமா, செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டி ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன், பிரேமா வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்தார். அவரது உறவு முறையை சேர்ந்த வினோத்குமார் (பி.இ., படிக்கும் மாணவர்), ஜெகன், (பாலிடெக்னிக் மாணவர்) மற்றும் இவர்களது நண்பர் எழில்மாறன் (பாலிடெக்னிக் மாணவர்) ஆகிய மூவரும் சேர்ந்து மொபைல்போனில் ரகசியமாக படமெடுத்தனர்.

இந்த படத்தை பிரேமாவிடம் காட்டி, இன்டர்நெட்டில் விட்டு விடுவோம் என, மிரட்டி அவருக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்தனர். மனமுடைந்த பிரேமா, நேற்று முன்தினம் மாலை, 3 மணி அளவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனோகரன் மற்றும் அவரது உறவினர்கள் பிரேமாவின் உடலை மீட்டு, தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது தெரியாமல் முழித்தனர். பிரேமாவின் புத்தகங்களை எடுத்து பார்த்தபோது அதில், அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

கடிதத்தில், வினோத்குமார், ஜெகன், எழில்மாறன் ஆகிய மூவரும் நான் குளிக்கும் போது, மொபைல்போனில் படம் எடுத்து மிரட்டியது குறித்து எழுதியிருந்தார். இது குறித்து மனோகரன், செங்கம் போலீசில் நேற்று (ஜூலை 24) புகார் செய்தார். வினோத்குமார், ஜெகன் மற்றும் எழில்மாறன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரேமா கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர், ‘’அன்புள்ள அப்பா, அம்மா, அரவிந்த் நான் உங்களை விட்டுப் பிரிகிறேன் என, கவலைப்பட வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள். இதை தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை.

உங்களுக்கு நான் பாரமாக இருக்க விரும்பவில்லை. எனக்கு, என் உயிரை தவிர, உங்களுடைய மூவருடைய உயிரும் தான் முக்கியம். அதனால் தான் இந்த முடிவு எடுத்துக் கொண்டேன். என் சாவுக்கு காரணமானவங்க மூவர். வினோத், ஜெகன், எழில், நான் குளிக்கும்போது, மொபைல்போனில் வீடியோ எடுத்துட்டாங்க. அதை வைத்து என்னை மிரட்டினார்கள்.

யாருகிட்டனா சொன்னா, இதை இன்டர்நெட்டில விட்டு விடுவோம் என, சொன்னார்கள். அதனால், நான் அவங்க சொன்னதை செய்தேன்.

ஒரு சிலர் பெயரை சொல்லி, அவங்களையும் மாட்டி விட வேண்டும் என, அவங்க செய்யாததை எல்லாம் சொன்னாங்க. என்னை பேச வைத்து ரிக்கார்டு செய்தனர். அவங்க வச்சுருக்கிறது எல்லாம் பொய்யானது. அந்த வீடியோ மட்டும் தான் உண்மை.

என் வாழ்க்கையை அழிச்சிட்டாங்க. என்னை அன்றாடம், "டார்ச்சர்' கொடுத்தனர். நான் கல்லூரிக்கு பஸ்சில் ஏறும் போதும், பஸ்சை விட்டு கீழே இறங்கி வந்தா, என் பின்னாடியே வந்து, எனக்கு "டார்ச்சர்' கொடுத்தாங்க. அதனால் தான் நான் இந்த முடிவு எடுத்துக் கொண்டேன். நான் இதை சுய நினைவோடு எழுதுகிறேன். யாரும் என்னிடம் எழுதச் சொல்லி மிரட்டவில்லை. யாரும் இல்லாத சமயம் பார்த்து, நான் இந்த முடிவை எடுத்துக் கொள்கிறேன்.


அம்மா, அப்பா, அரவிந்த் என்னுடைய கடைசி ஆசை இது தான். இதை மட்டும் செய்யுங்க. என் வாழ்க்கையை கெடுத்தவங்கள சும்மா விடாதீங்க’’என்று எழுதப்பட்டிருந்தது.
நன்றி நக்கீரன்..
இது போன்ற செயலுக்கு கடுமையான சட்டம் வந்தால் ஒழிய அடுத்து இது போல நடக்கும் செயலை தடுக்க முடியாது 

ராம்தேவ் போராட்டம்...அடுத்து...

புதுடில்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை கொண்டுவர வலியுறுத்தி ராம்தேவ் டில்லி ராம்லீலா மைதானத்தில் நடத்த உள்ள போராட்டத்திற்கு டில்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி பிரபல யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ், டில்லி ராம்லீலா மைதானத்தில் , கறுப்பு பணத்திற்கு எதிராகவும், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தியும் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்துகிறார்.
See full size image 
இதற்காக டில்லி போலீஸ் கமிஷனர், டில்லி மாநகராட்சியிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ராம்தேவ் கூறுகையில், ஆகஸ்ட் 9-ல் நடத்த உள்ள போராட்டத்திற்கு 20 முதல் 30 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்கின்றனர். உ.பி. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் எனது ஆதரவாளர்கள் கலந்து கொள்கின்றனர். எனது உதவியாளர் பாலகிருஷ்ணன் மீது பொய் வழக்கு போட்டு கைதுசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. சி.பி.ஐ.யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்றார்.

நன்றி தினமலர்...
இவருக்கு எப்படி சொத்து வந்தது சொல்ல இல்லே ,,,,
=================================================================

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலா திருமுகம் மிஸ்ஸிங் சீரிஸ்


பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தரப்பில் கடைசியாக போட்ட வேகத் தடைக்கு இன்னமும் சில நாட்கள் ஆயுசு உள்ளது என்பதே இதன் அர்த்தம்.

முதல்வர் ஜெயலலிதா தமக்குரிய கேள்விகளுக்கு முழுமையாக பதில் கொடுத்தபின், வழக்கை விசாரிக்கும் நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனம் செய்யப்பட்டதே செல்லுபடியாகாது என மனு தாக்கல் செய்திருந்தார். சிறப்பு நீதிபதியின் நியமனத்தை முறைப்படி அரசு ஆணையாக வெளியிடவில்லை என்பது அவரது பாயின்ட்.

இதை எதிர்த்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, சிறப்பு நீதிபதி நியமனத்தில் சட்ட விதிகள் மீறப்படவில்லை என்று கடந்த 17-ம் தேதி தீர்ப்பளித்தார். விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அந்த தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை), பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு சசிகலாவும் மற்றையவர்களும் வரவே இல்லை. வழமைபோல அவர்களது வக்கீல்கள் தலையைக் காட்டினார்கள். வக்கீல்கள் குமார், கந்தசாமி, மணிசங்கர், அசோகன் ஆகியோர் அடுத்த மனுவை எடுத்து நீட்டினார்கள்.

இவர்கள் இப்படிதான் செய்வார்கள் என்று எமக்கே தெரியும்போது, அரசு வக்கீல் ஆச்சார்யாவுக்கு தெரிந்திருக்காதா? எனவே அவரும் வரவில்லை. அரசு வக்கீலாக சந்தேஷ் ஆஜரானார்.

புதிய மனு என்ன சொல்கிறது? புதிதாக ஏதுமில்லை. “எமது பழைய மனுவை நீங்கள் டிஸ்மிஸ் செய்துவிட்டீர்கள். எனவே, உயர் நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) அப்பீல் செய்துள்ளோம். இதன் மீதான விசாரணை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்பதே அதன் சாராம்சம்.

இதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா, விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதற்குள் பழைய மனு உயர் நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டால், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருப்பதாக மனுவுடன் வந்து நிற்பார்கள் வக்கீல்கள் குமார், கந்தசாமி, மணிசங்கர், அசோகன் ஆகியோர்.

நன்றி விறுவிறுப்பு...

23 ஜூலை, 2012

பிரணாப் முகர்ஜி, சங்மா...




ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து, அவரை எதிர்த்து போட்டியிட்ட பி.ஏ.சங்மா இந்த வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர், ’’ வழக்கத்துக்கு மாறாக, இந்த தேர்தல் கட்சி சார்புடனும், அரசியல் சார்புடனும் நடந்தது. பொருளாதார சலுகைகள், இதர சலுகைகள் அளிக்கப்பட்டதுடன், அச்சுறுத்தல்களும் விடப்பட்டன.

இந்த தேர்தலை எதிர்த்து நான் கோர்ட்டில் வழக்கு தொடரும் வாய்ப்பை மறுப்பதற்கு இல்லை.

பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களைப் போல, ஜனா திபதி தேர்தலுக்கும் நன்னடத்தை விதி முறைகளை அமல்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஏற்பட் டுள்ளது. பிரணாப்பின் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம்’’ என்று கூறியுள்ளார்.


குடியரசுத்தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றார். இந்தியாவின் 14வது குடியரசுத் தலை ரானார் மொத்தமுள்ள 10.5 லட்சம் வாக்கில்ஐ.மு.கூட்டணி வேட்பாளர் பிரணாப் 5.58 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார். தே.ஜ.கூட்டணி வேட்பாளர் சங்மா 2 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.

மொத்தமுள்ள 763 எம்பிக்களில் பிரணாப்புக்கு 527 எம்பிக்கள் ஆதரவு கிடைத்தது. 206 பேர் பி.ஏ.சங்மாவுக்கு வாக்களித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில், கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 எம்.எல்.ஏ.க்களில் 223 பேர் ஓட்டு போட்டனர். இதில் 3 பேரின் ஓட்டு செல்லாதது ஆகிவிட்டது.

மீதம் உள்ள 220 ஓட்டுகளில் பிரணாப் முகர்ஜிக்கு 117 ஓட்டுகளும், பி.ஏ. சங்மாவுக்கு 103 ஓட்டுகளும் கிடைத் தன. சட்டசபையில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கு 119 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆனால் அவர்களில் சிலர் கட்சி மாறி பிரணாப் முகர் ஜிக்கு வாக்கு அளித்ததால் பி.ஏ. சங்மாவுக்கு 103 ஓட்டுகள்தான் கிடைத்தன.

கர்நாடகத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 15,327 வாக்கு மதிப்பு களும், பி.ஏ. சங்மாவுக்கு 13,493 வாக்கு மதிப்புகளும் கிடைத்து இருக்கின்றன. 


பிரணாப் முகர்ஜி நேற்று அளித்த பேட்டியில், "எனக்கு, மிக உயர்ந்த பதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாட்டு மக்களுக்கு, என் இதயப்பூர்வமான நன்றி. மக்கள் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், பணியைச் செய்வேன். அரசமைப்பு சட்டத்தை பின்பற்றி நடப்பேன். நாட்டுக்கு நான் ஆற்றிய பணிகளை விட, நாட்டு மக்கள், எனக்கு மிக அதிகமான பொறுப்புகளை தந்துள்ளனர்' என, தழுதழுத்த குரலில் கூறினார்.
பிரணாப்பை எதிர்த்து போட்டியிட்ட சங்மா கூறுகையில், "வெற்றி பெற்ற பிரணாப்புக்கு, என் வாழ்த்துக்கள். இந்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்ட விதம், பாரபட்சமாகவும், அரசியல் சார்பானதாகவும் இருந்தது. ஐ.மு., கூட்டணி ஆட்சி நடக்காத மாநிலங்களின் ஓட்டுகளை பெறுவதற்காக, அந்த மாநிலங்களுக்கு, சிறப்பு நிதி உதவி அளிக்கப்பட்டது. இந்த தேர்தலை எதிர்த்து, நான் கோர்ட்டில் வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது'


ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வை வீழ்த்தி நாட்டின் 13-வது ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மா, தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதோடு, தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரணாப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து சங்மா, ’’வெற்றிபெற்ற பிரணாப்பை நான் வாழ்த்துகிறேன். நாட்டின் பழங்குடியின மக்க ளுக்கும், என்னை வேட்பாளராக முன்னிறுத்திய அ.தி.மு.க, பாரதீய ஜனதா போன்ற கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக நவீன் பட்நாயக், ஜெயலலிதா, அருண் ஜெட்லி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தலில் நான் தோற்றிருந்தாலும், பழங்குடியினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாக அடைய கிடைத்த அரிய வாய்ப்பை நமது நாடு இழந்துள்ளது. அரசியல் பாகுபாடு மற்றும் பாரபட்சங்களால்தான் நான் தோல்வியடைந்தேன்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நடத்தை விதிகள் பலப்படுத் தப்பட வேண்டும். பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலாவது நடத்தை விதிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

22 ஜூலை, 2012

ராஜ்யசபா துணை தலைவர் பதவிக்கு பி.ஜே.குரியன் பெயர் பரிசீலனை


புதுடில்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் பதவிக்கு பி.ஜே.குரியனை தேர்வு செய்வது குறித்து, காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருகிறது. ஆனால், ஐ.மு.கூட்டணி அரசில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டி வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவரான தாரிக் அன்வரை, அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகிறது. ராஜ்யசபா துணை தலைவராக இருந்த ரகுமான் கானின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, அந்தப் பதவிக்கு புதியவரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா தலைவரான, துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்தபின், துணைத் தலைவர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்தப் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்த காங்கிரஸ் தலைவர் பி.ஜே.குரியன் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், இது குறித்த இறுதி முடிவு, துணைத் தலைவர் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னரே எடுக்கப்படும் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக மிரட்டி வரும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவரான தாரிக் அன்வரை, ராஜ்யசபா துணைத் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என, விரும்புகிறது. காங்கிரஸ் சார்பில் பரிசீலிக்கப்படும் பி.ஜே.குரியன், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.

ஜெயலலிதா மட்டும் கொடநாட்டில் போய் ஓய்வெடுப்பது நியாயமா? : நாஞ்சில் சம்பத் பேச்சு


 
திருச்செந்தூரில் மதிமுகவின் 19வது ஆண்டு தொடக்க விழா, அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியபோது,

’’மதிமுக எந்தச் சலனமும் இல்லாமல் கொள்கை ரீதியாக பயணம் செய்து வருகிறது. நாணயம், தன்மானத்தை பறிகொடுத்து விட்டு ஜெயலலிதாவுடன் நாம் கை கோர்த்தோம். அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். 7 ஆண்டுகளாக கட்சியை வளர்த்தோம். தியாகம் செய்தது முழுவதும் நாங்கள். அதிகாரத்திற்கு சென்றவர்கள் அவர்கள்.

ஜெயலலிதாவுக்கு முதல்வர் பிச்சை போட்டவர் வைகோ. அதை அவர் மறந்துவிட்டார். கடந்த தேர்தலில் எங்களை எல்லாம் உதாசீனப்படுத்திவிட்டு கொல்லைப்புறத்தில் கூட்டணி பேசி 41 இடங்கள் ஒரு கட்சிக்கு கொடுத்தனர். அதன்பின்னரும் உணர்வோடும், கட்டுப்பாட்டோடும் இருக்கிறோம்.

தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. ஜூனில் மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் பாயும். விவசாயிகள் எல்லாம் ஏர் உழுது நாற்று நடும் காலம் இது. ஆனால் தஞ்சை உட்பட தமிழகமே வறண்டு கிடக்கிறது. ஆனால் ஜெயலலிதா மட்டும் கொடநாட்டில் போய் ஓய்வெடுத்து வருகிறார். இது நியாயமா?

தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. நிர்வாகம் முடங்கி கிடக்கிறது. எந்த மந்திரிக்கும் அதிகாரம் கிடையாது. மாவட்ட செயலா ளர் முதல் அமைச்சர்கள் வரை அங்கன்வாடி பணியாளர்,சத்துணவு அமைப்பாளர்கள் பணிகளை வாங்கித் தருவதாக் கூறி பல லட்சம் வாங்கியுள்ளனர். ஆனால் வேலை வாங்கித் தரமுடியவில்லை. இதை சரி பண்ணவில்லையென்றால் சறுக்கி விழுந்து விடுவீர்கள். மின்வெட்டால் கஷ்டப்பட்ட மக்கள் தற்போது மின்கட்டண உயர்வாலும் சிரமப்படுகின்றனர்.

பல போராட்டங்கள் நடத்தி முல்லைப் பெரியாறு அணையை கம்பீரமாக நிற்க வைத்தவர் வைகோ. இது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர முயற்சி எடுத்தது வைகோ.

அதை நிறைவேற்றியது அதிமுக அரசு. எங்களது பிரசாரத்தால் வருங்காலத்தில் வைகோவை முதல்வராக்குவோம்’’என்று தெரிவித்தார்.

நன்றி நக்கீரன் 

20 ஜூலை, 2012

சென்னையில் பதிவான ஓட்டுக்கள் எவ்வளவு?


சென்னை, ஜூலை. 20-

ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. சென்னை கோட்டையில் நடந்த வாக்குப் பதிவில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் 197 பேரும், அனுமதி பெற்ற 15 எம்.பி.க்களும் பங்கேற்றனர். தே.மு.தி.க., இந்திய கம்யூ னிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடந்தது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 151 பேர் வாக்களித்தனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க.கள் -23, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு -10, காங்கிரஸ் -5, பா.ம.க. -3, புதிய தமிழகம் -2, பார்வர்டு பிளாக் -1 ஆகியோரும் ஓட்டுப்போட்டனர். இதுதவிர அ.தி.மு.க. எம்.பி.க்கள் 14 பேரும், தி.மு.க. எம்.பி. ஒரு வரும் சென்னையில் நடந்த வாக்குப்பதிவில் கலந்து கொண்டனர்.

பதிவான ஓட்டு சீட்டுகள் போடப்பட்ட ஓட்டுப்பெட்டி நேற்று மாலை 5 மணிக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மேற்பார்வையில் ஜனாதிபதி துணை தேர்தல் அதிகாரியும், தமிழக சட்டமன்ற செயலாளருமான ஜமாலு தீன் அறையில் வைக்கப்பட்டது. இரவு முழுவதும் ஓட்டுப்பெட்டி இருந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பெட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுப்புடன் சென்னை விமான நிலையம் கொண்டு போகப்பட்டது. காலை 6.40 மணிக் சென்னையில் இருந்து விமானம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழக சட்டமன்ற செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் துணை அதிகாரியுமான ஜமாலுதீன், கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர். புதுச்சேரி மாநில ஓட்டுப்பெட்டியை புதுச்சேரி சட்டமன்ற செயலாளர் அன்பழகன், தேர்தல் அதிகாரி ஆகியோர் இதே விமானத்தில் டெல்லி கொண்டு சென்றனர்.

இந்த ஓட்டுப் பெட்டிகள் டெல்லியில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஒப்படைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.



சென்னையில் பதிவான ஓட்டு விவரம் வருமாறு:- 



(சங்மா பெறும் ஓட்டுக்கள்)






அ.தி.மு.க. - 148






சமத்துவ மக்கள் கட்சி -2






கொங்கு இளைஞர் பேரவை -1






மொத்தம் -151






அ.தி.மு.க. எம்.பி.க்கள் -14






(பிரணாப் முகர்ஜி பெறும் ஓட்டுக்கள்)






தி.மு.க. -23






காங்கிரஸ் -5






மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு -10






பா.ம.க. -3






மனிதநேய மக்கள் கட்சி -2






புதிய தமிழகம் -2






பார்வார்டு பிளாக் -1






மொத்தம் -46






தி.மு.க. எம்.பி. -1






புறக்கணிப்பு தே.மு.தி.க. -29






இந்திய கம்யூனிஸ்டு -8






மொத்தம் -37






(எம்.பி.க்கள் ஓட்டு மதிப்பு 708, எம்.எல்.ஏக்கள் ஓட்டு மதிப்பு 176).






நன்றி மாலைமலர்

தேர்தல் வழக்கு: விஜயகாந்த் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, ஜூலை. 20- தேர்தல் வழக்கு: விஜயகாந்த் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு 

கடந்த சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட ஜெயந்தி என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார். தனது மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஜெயந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயந்தி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது வேட்புமனு உரிய காரணம் இல்லாமல் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது. எனக்கு ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த தொகுதியில் வெற்றி பெற்ற விஜயகாந்தின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் விஜயகாந்த் ஒரு பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ஜெயந்தியின் மனுவை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும். எனது வெற்றி எந்த வகையிலும் மனுதாரருக்கு பாதிப்பை ஏற்படுத்த வில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் விஜயகாந்த் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

19 ஜூலை, 2012

"டிஸ்மிஸ்'உள்ளே வெளியே ஆட்டம் துவக்கம்...


See full size image
எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அடாவடியாக செயல்பட்டு வருவது குறித்து, எனது கவனத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. அடாவடிகளை திருத்திக் கொள்ளுங்கள். கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்களைப் பார்த்து சும்மா இருக்க மாட்டேன்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, வருவாய் துறை அமைச்சர் பதவியில் இருந்த செங்கோட்டையன் தூக்கியடிக்கப்பட்டார். அவரிடமிருந்த அ.தி.மு.க., தலைமை நிலைய செயலர் என்ற பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

புது மந்திரி:செங்கோட்டையனுக்கு பதிலாக, புதிய வருவாய் துறை அமைச்சராக, வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ., இன்று, ராஜ் பவனில், காலை 8.30 மணிக்கு, மந்திரியாக பதவியேற்கிறார்.
சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களைத் தொடர்ந்து, ஜெயலலிதா விடுத்துள்ள எச்சரிக்கையால், எம்.எல்.ஏ.,க்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். செங்கோட்டையனின் பதவி பறிப்பால், அமைச்சர்கள் மத்தியிலும் கிலி ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இந்த அதிரடியைத் தொடர்ந்து, ஆட்டம் போடும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் கொட்டம் அடங்கும் என எதிர்பார்க்கலாம்.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி.,க்கள் கூட்டம், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதற்கு, கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நடந்த இக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசினார்.அப்போது, ஜனாதிபதி தேர்தலில், கட்சியின் நிலைப்பாட்டைக் கூறி, ஜனாதிபதி வேட்பாளர் சங்மாவுக்கு ஓட்டளிக்குமாறு, எம்.எல். ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க் களை அவர் கேட்டுக் கொண்டார் என கூட்டத்தில் பங்கேற்ற

எம்.எல். ஏ.,க்கள் கூறினர்.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், அடாவடிகளில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. "கவுன்சிலர்கள், தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால், மாநகராட்சியைக் கலைத்து விடுவேன்' என, எச்சரித்தேன். ஆனால், பலர், இன்னும் திருந்தியதாகத் தெரியவில்லை. இதேபோல், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், அடாவடியாக செயல்பட்டு வருகின்றனர். இவை அனைத்தும், என் பார்வைக்குவந்து கொண்டு தான் உள்ளது; எம்.எல்.ஏ.,க்கள், தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துபவர்களைப் பார்த்துக் கொண்டு, சும்மா இருக்க மாட்டேன்; கடும் நடவடிக்கை எடுப்பேன். கருணாநிதியைப் போல அனைத்தையும் பார்த்துக் கொண்டு, அமைதியாக இருந்து விடமாட்டேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா எச்சரித்ததாக, கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்தனர்.

மந்திரிக்கு கல்தா:வெறும் எச்சரிக்கையோடு கூட்டத்தை நிறைவு செய்யாமல், "சீனியர்' அமைச்சர் என்ற நிலையில் இருந்த வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையனை அதிரடியாக, "டிஸ்மிஸ்' செய்து ஜெ., உத்தரவிட்டுள்ளார். அவர் வகித்து வந்த தலைமை நிலையச் செயலர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களில் துவங்கி, எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர்கள் வரையிலான செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையினர் முதல்வருக்கு தொடர்ந்து அறிக்கைகளை அளித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில், ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக் கவுன்சிலர்கள் கூட்டத்தைக் கூட்டி, கவுன்சிலர்களை, முதல்வர் எச்சரிக்கை செய்ததோடு, தவறு செய்யும் கவுன்சிலர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரித்தார். மேலும், ஜூலை மாதத்துக்குள்,

கவுன்சிலர்கள், தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும்; இல்லையேல், மாநகராட்சியைக் கலைத்து விட்டு, தனி அலுவலர் மூலம், மாநகராட்சியை நடத்தி விடுவேன் என, அவகாசமும் கொடுத்திருந்தார்.ஆனால், ஜெயலலிதாவின் எச்சரிக்கைக்குப் பின்னரும், கவுன்சிலர்கள் சிலர், அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்ந்து கொண்டே இருந்ததும், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும், இதேபோல் நடந்து கொண்டிருப்பதும், முதல்வரின் பார்வைக்கு சென்றதால், கோபமடைந்த அவர், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.வெறும் எச்சரிக்கையோடு நிறுத்திக் கொள்ளாமல், செங்கோட்டையனை அமைச்சர் பதவியிலிருந்து அதிரடியாக "டிஸ்மிஸ்' செய்ததன் மூலம், கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு, முதல்வர் கிலியை ஏற்படுத்தியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் இந்த எச்சரிக்கைக்குப் பின், தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாத எம்.எல்.ஏ.,க் கள் மீது, கடும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.-

நன்றி தினமலர் 

கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 6வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்த செங்கோட்டையன், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் விசுவாசிகள் படையின் தளபதியாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் செங்கோட்டையன். திட்டமிடுதலில் சிறந்தவரான இவர்தான் ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தார் அக்காலத்தில். இப்போதும் கூட ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

அடக்கமாக இருப்பார் அதேசமயம் எதை செய்தாலும் ஆணித்தரமாக செய்து ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுபவர். ஈரோடு மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் அதிமுக தொடர்ந்து பலமுடன் இருக்க செங்கோட்டையனின் தீவிரப் பணிகளும் ஒரு காரணம்.

இனி இவரின் நடவைக்கை பொறுத்திருந்து பார்ப்போம்...

17 ஜூலை, 2012

எதற்குத் தான் ஆடித் தள்ளுபடி என்றில்லை...

 

கோவை:எதற்குத் தான் ஆடித் தள்ளுபடி என்றில்லை... "மூணு பீர் வாங்கினா, ஒரு பீர்; ஒரு பிளேட் பிரியாணி இலவசம்...' என, "குடிமகன்'களையும் வசீகரம் செய்து, கவர்ந்திழுக்கத் துவங்கி விட்டனர், மது பான விற்பனையாளர்.

ஆடி மாதத்தில், சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் இருக்காது. அதனால், ஆடி மாதத்தில் ஜவுளி, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, "டல்' அடிக்கும். எனவே இம்மாதத்தில், வியாபாரத்தை இலக்காகக் கொண்டு, ஆடித் தள்ளுபடி விற்பனையை, வர்த்தகர்கள் அறிமுகம் செய்தனர்.


ஜவுளி கடைகளில் துவக்கம்:ஆடித் தள்ளுபடி விற்பனை, முதலில் ஜவுளிக் கடைகளில் துவங்கியது. துணி வகைகளுக்கு, ஐந்து முதல், 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்து, வியாபாரத்தில் அதிரடியைப் புகுத்தி வருகின்றனர். ஆடி விற்பனையை, ஆனி மாதம் துவங்கி, ஆவணி மாதம் வரை நீட்டிக்கின்றனர்.திருமண சுப காரியங்கள் நடந்த வீடுகளில், ஆடி சீர் வரிசை வாங்குவோரை கவர்ந்திழுக்க, ஜவுளி, நகை, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் தள்ளுபடி காற்று, புயலாக வீசுகிறது."ஆடித் தள்ளுபடி, இவற்றுக்கு மட்டும் தானா... "குடிமகன்'களுக்கு சரக்கு விலையில், எந்த தள்ளுபடியும் இல்லையா...' என்ற கேள்வி எழுந்து விடக் கூடாது என்பதற்காக, கோவையில் வினோதமாக, சரக்கு வகைகளுக்கும், தள்ளுபடி அறிவித்து, புதுமையைப் புகுத்தியுள்ளனர்.


கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், சாந்தி தியேட்டர் அருகேயுள்ள, தனியார் குடி மையம் ஒன்றில், "சரக்கு' வகைகளுக்கு, தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. "மூணு பீர் வாங்கினா... ஒரு பீர் இலவசம்; மூணு லார்ஜ் வாங்கினா... ஒரு லார்ஜ் இலவசம்; இந்த சலுகையில், சரக்கு வாங்குவோருக்கு, ஒரு பிளேட் பிரியாணி இனாம்' எனக் கொடுத்து அசத்துகின்றனர்."சரக்கு'க்கு அறிவித்துள்ள தள்ளுபடி விளம்பரம், கடந்த ஒரு வாரமாக, கோவை முழுக்க பிரபலமாகி விட்டது.


குடி மைய உரிமையாளர் சிவகுமார் கூறியதாவது:ஒரு மாதமாக, மது விற்பனை, மந்தமாக இருந்தது. அதனால், இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளோம். பீர் உள்ளிட்ட அனைத்து, "சரக்கு' வகைகளுக்கும், வெளிநாட்டு, "சரக்கு'களுக்கும், மூன்றுக்கு ஒன்று சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க, இந்தத் தள்ளுபடி விற்பனையை துவக்கியுள்ளோம். இங்கு வருவோருக்கு, வழக்கமாக, எட்டு வகையான நொறுக்குத் தீனிகள் வழங்கப்படுகின்றன. தள்ளுபடி திட்டத்தில், சரக்கு வாங்குவோருக்கு, கூடுதலாக சிக்கன் பிரியாணியும் இலவசமாக வழங்கப்படுகிறது.கிடைக்கும் லாபத்தில், ஒரு பகுதியை, இந்த தள்ளுபடி திட்டத்திற்கு செலவிடுகிறோம். திட்டத்தால், வருவாய் இழப்பு இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள், 20 சதவீதம் அதிகரித்துள்ளனர்.இவ்வாறு சிவகுமார் கூறினார்.


வீட்டுக்கு "டிராப்' உண்டு!ஒரு சில கடைகளில், ஆடிச் சலுகையாக, "தள்ளாடும்' வாடிக்கையாளர்களை வீட்டில் கொண்டு விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."மது குடித்தவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது' எனத் தடை இருப்பதால், சில வாடிக்கையாளர்கள், குடி மையங்களுக்கு, பஸ்சில் வருகின்றனர். மது குடித்ததும், அவர்களால் சீராக நடக்க முடியாத நிலை ஏற்படுவதால், அவர்களை வீட்டிலேயே கொண்டு விடவும், சில கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மேலும் கூடும் என, விற்பனையாளர்கள் நம்புகின்றனர்.

நன்றி தினமலர்...
இல்சவம் இதுக்குமா ?ஏற்கனவே குடிமக்கள் குடிக்கு சொல்லவா வேண்டும் 
இப்பா இலவசம் என்றால் ஐயோ....

16 ஜூலை, 2012

எனது புதிய கடை திறப்பு நிகழ்வு


நேற்று கும்பகோணம் பழைய பாலக்கரை கல்லூரி சாலையில்

இரு ,நான்கு சக்கர வாகனத்திற்கு தேவையான சாமான்களுடன்

இரு,நான்கு சக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டுக்கு

தேவையான ஸ்டிக்கர் ஒட்டவும், வாகங்களை அழகு படுத்தி பார்க்க

பலவித வண்ண ஸ்டிக்கர் மற்றும் அத்தர், வாசனை திரவியங்களும்,

ஒரே இடத்தில் கிடைக்கும் வண்ணமாய்


'ஹாஸ் ஸ்டிக்கர்' என்ற பெயரில் புதிய கடை திறந்து இருக்கிறேன் ...

உங்களுடைய வாழ்த்துகளும்,

இறைவனிடம் நான் மேலும் வளர வேண்டுதலும் வேண்டும்,,,


நன்றி நண்பர்களே
























நேற்று எனது அழைப்பை ஏற்று எனது கடை திறப்பு விழாவுக்கு வந்து சிறப்பித்த அன்பு உள்ளம் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி.....

சீன மொபைலால் சீரழியும் சிறுவர்கள்


ஈரோடு:"டச் ஸ்கிரீன்' மொபைல் போன்களில், வக்கிர உணர்வைத் தூண்டும் விதமாக, ஆபாச விளையாட்டுகள் இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்தியாவில், மொபைல் போன்கள், பட்டி தொட்டி வரை பரவ, சீன மொபைல்களே காரணம். நோகியா, சாம்சங், மோட்டரோலா உள்ளிட்ட மொபைல் போன் நிறுவனங்கள், ஒரு புதிய தயாரிப்பை உருவாக்கி, மார்க்கெட்டில் அறிமுகம் செய்தால், மறு வாரமே, அதே மாடல்களில், நெட், விளையாட்டுகள், இதர வசதிகளைக் கொண்ட, சீன மொபைல்கள் விற்பனைக்கு வந்து விடுகின்றன.இந்நிறுவனங்களின் மொபைல் போன் ஒன்றின் விலை, 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் என்றால், அதே அளவு வசதியுடன் கூடிய, சீன மொபைல், வெறும், 1,000 ரூபாயில் துவங்கி, அதிகபட்சமாக, 5,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதிகப்படியான மாடல்கள், குறைந்த விலை என்பதால், இதையே மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்."கீ பேட்' இல்லாமல், "டச் ஸ்கிரீன்' மாடலில் மொபைல் போன்கள், விற்பனைக்கு வந்துள்ளன. கம்பெனி தயாரிப்புகளைப் போல வசதியும், இளைஞர், சிறுவர்களைக் கவரும் வகையில், ஆபாச விளையாட்டுகளுடனும் விற்பனை செய்கின்றனர். பெண்களை இழிவுபடுத்தும் விதமான விளையாட்டுகள், இந்த போன்களில் உள்ளன.ஒரு பெண், முழுமையான ஆடையுடன் நிற்கும் படம் உள்ளது. "டச் ஸ்கிரீனில்' கை வைத்து சுரண்டினால், அப்பெண் போட்டுள்ள ஆடை, கொஞ்சம் கொஞ்சமாக உரிகிறது. ஒரு கட்டத்தில், "டூ பீஸ்' ஆடையுடன் பெண் இருப்பது போல படம் வருகிறது.மற்றொரு படத்தில், பெண் ஒருவர் நிற்கிறார். டச் ஸ்கிரீனில் இருந்து, நாம் காற்றை ஊதினால், அந்த பெண்ணின் ஆடை மேல் நோக்கி பறக்கிறது. வெட்கத்தில் அந்தப் பெண் கத்தும் சத்தத்தை மொபைல் வெளிப்படுத்துகிறது.
இது போன்று பல விளையாட்டுகளை, இணையதளத்தில் இருந்து, மொபைல் போனில், பதிவு இறக்கம் செய்து, விற்பனை செய்கின்றனர்.
கம்பெனி தயாரிப்புகளில், இது போன்ற ஆபாச விளையாட்டுகள் இல்லை; சீன போன்களில் மட்டுமே உள்ளது. கடைக்காரர்கள், வியாபார உத்திக்காக, இதுபோன்ற பதிவு இறக்கத்தை செய்துள்ளனர். தற்போது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் காட்டுத் தீ போல பரவி, தங்களின் சாதாரண மொபைல்களைக் கொடுத்து, இது போன்ற, "டச் ஸ்கிரீன்' மொபைல்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். சைபர் கிரைம் போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி தினமலர்...

அடபாவிகளா இப்படி ஒரு விளையாட்டா ?

14 ஜூலை, 2012

என்ன நடக்கிறது தமிழகத்தில்? கலைஞர் கேள்வி

 

தமிழகத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறும் நிலையில் அதைக் கவனிக்க முதல்வரோ அல்லது அமைச்சர்களோ தலைநகரில் இருக்கிறார்களா என தி.மு.க. தலைவர் கலைஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

அந்தக் காலத்தில் அரசர் அமைச்சரை அழைத்து “மந்திரி, மாநகர் தனில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?” என்று கேட்பாராம்.

தற்போது அரசருக்குப் பதிலாக, நமது முதல்வர், கொடைநாட்டிற்கே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து, நாட்டிலே மழை ஒழுங்காகப் பெய்கிறதா என்று விசாரித்துக் கொண் டிருக்கிறார். முதலமைச்சர் கொடநாட்டில் இத்தனை நாட்கள் தங்கவும், அவரைப் பார்ப்பதற்காக அதிகாரிகளும், அமைச்சர்களும் “யாத்திரை” செய்ய ஆகின்ற செலவு எவ்வளவு? அதெல்லாம் மக்கள் தரும் வரிப் பணம்தானே? இன்றைய அ.தி.மு.க. ஆட்சி யிலே நேற்று ஒரு நாளில் மட்டும் என்னென்ன நடைபெற்றதாக இன்று ஏடுகளில் வந்துள்ள செய்திகளை மட்டும் தொகுத்துள்ளேன்.

(ஏடுகளில் வந்துள்ள குற்றச்சம்பவங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.)

இவற்றைப் பற்றியெல்லாம் கவனிக்க முதல் அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ தலைநகரிலே இருக்கிறார்களா?

ஆனால் அன்றாடம் முதல் அமைச்சர் பெயரால் ஒரு அறிவிப்பு மட்டும், துப்புரவுப் பணியாளர் நியமனம், வருவாய்க் கிராமங்கள் உயர்வு, கவுரவ விரிவுரையாளர் நியமனம் என்று மட்டும் கொடநாட்டிலே இருந்தவாறே “பேக்ஸ்” மூலமாகவே வந்து கொண்டிருக்கின்றன. அந்த அறிவிப்புகள் எல்லாம் முறையாக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் விவாதிக்கப்பட்டு, அதன் பிறகு வெளி வர வேண்டியவை அல்லவா?

அவ்வாறு அந்த அறிவிப்புகள் வருகின்றனவா? செயல்படுத்தப் போகின்ற அறிவிப்புகள்தானே விவாதித்து முடிவெடுக்கப்பட்டு அதன் பிறகு வெளியிடப்படும். இந்த அறிவிப்புகள் எல்லாம், வெறும் அறிவிப்புக்காக மட்டும்தானே என்று கேட்கலாம். அரசு என்று ஒன்று அமைந்த பிறகு, அந்த அரசு செயல்படுகிறதோ இல்லையோ, செயல்படுவது போன்ற தோற்றமாவது இருக்க வேண்டாமா?

முதலமைச்சர் நினைத்தால் சசிகலா மீதும், அவருடைய கணவர் மீதும், அவர்களுக்கு வேண்டிய ராவணன், திவாகரன் போன்ற வர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார். அடுக்கடுக்கான வழக்குகளைப் பதிவு செய்வார்.

தற்போது அந்த வழக்கிலே குற்றம் சாட்டப்பட்ட ராவணனை கொடைநாட்டிற்கே அழைத்துப் பேசுகிறார் என்பது உண்மையென்றால் இவைகள் எல்லாம் யாரை ஏமாற்றுகின்ற செயல்கள்?

அவர்கள் மீதெல்லாம் போடப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று? நடராஜன் மீது புகார் என்றார்கள். பிறகு கொடுக்கப்பட்ட புகார்கள் திரும்பப் பெறப்பட்டன என்கிறார்கள். அப்படி யென்றால் பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? அந்தப் புகார் பொய்யானதா, மெய்யானதா என்று காவல் துறை முறையாக முதல் நிலை விசாரணை நடத்தாதது ஏன்? காவல் துறையினரின் அந்தத் தவறான நடவடிக்கைக்குக் காரணம் என்ன?

அந்த வழக்கிலே சம்பந்தப்பட்டவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும், அவரை “என்கவுண்டர்” செய்ய முயற்சி நடைபெற்ற தாக இந்த ஆட்சியினர் மீது குற்றம் சாட்டினாரே; அதற்கு இந்த அரசின் பதில் என்ன? அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை யையே அவர்தான் தயாரித்துக் கொடுத்தேன் என்றார்.

முதல் அமைச்சருக்கு பேசவே தெரியாது, நான்தான் எழுதிக் கொடுத்தேன் என்றார். அவைகள் எல்லாம் உண்மைகளா? இந்த அரசு அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் இருப்பதிலிருந்து, அவர் சொன்னதெல்லாம் உண்மை என்றுதானே மக்கள் நம்புவார்கள்.

அதன்பிறகு அவர் வாயே திறக்கவில்லையே? என்ன காரணம்? வாயைத் திறக்கக் கூடாது என்று அடக்கி வைக்கப்பட்டு விட்டாரா? இந்த அரசினால் பயமுறுத்தப்பட்டு விட்டாரா?

குற்றம் சாட்டப்பட்டு, சிறையிலே அடைக்கப்பட்ட ராவணன் முதல் அமைச்சரைச் சந்திப்பதற்காக கொடநாடு வந்தார் என்று ஏடுகளில் வந்த செய்தி உண்மையா இல்லையா? அது உண்மை என்றால், அவர் என்ன பேசுவதற்காக வந்தார்? அந்த உண்மைகள் எல்லாம் நாட்டிற்குத் தெரிய வேண்டியது இல்லையா? எதிர்க்கட்சியினரைப் பழி வாங்குவது ஒன்றுதானே முறையாக நடக்கிறது. வேறு என்ன நடக்கிறது நாட்டிலே? இதற்கு ஆட்சி என்றா பெயர்; “காட்சி”கள் தானே மாறி மாறி அரங்கேறுகின்றன என்று கலைஞர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி நக்கீரன்...

பொது மக்கள் பதில் 

வேலை அதிகமா இருக்கு எது பற்றியும் கவலை அக்கறையில்லை 
தேர்தலில் மட்டும் தான் படிப்போம் பார்ப்போம்.அப்புறம் எல்லாம் 
மறந்து போகும்...

12 ஜூலை, 2012

விருந்தில் திரிஷா,லட்சுமிராய் முன்பு மகத் தாக்கப்பட்டாரா?: போலீஸ் விசாரணை

விருந்தில் திரிஷா,லட்சுமிராய் முன்பு
மகத் தாக்கப்பட்டாரா?: போலீஸ் விசாரணைTapsi S Explanation On Actors Clash


சென்னையில் நடந்த சரக்கு பார்ட்டியில் மகத்தும் மனோஜும் முட்டி மோதி மூக்குடைந்ததற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. மனோஜ் என் சகோதரர் மாதிரி என்று விளக்கம் அளித்துள்ளார் டாப்ஸி. இந்த விளக்கத்தில் மகத்தைப் பற்றி தப்பித் தவறிக் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்!

சென்னையில் நடிகர்-நடிகைகள் பங்கேற்ற மது விருந்தில் ‘மங்காத்தா' படத்தில் நடித்த மகத் தாக்கப்பட்டார். தெலுங்கு நடிகர் மனோஜ் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து உதைத்தார்.
வயிறு, தொண்டை பகுதிகளில் குத்தியதால் மகத் நிலைகுலைந்தார்.

இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போலீசிலும் புகார் செய்தார். ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நடிகை டாப்ஸியை இருவரும் காதலித்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் இந்த அடிதடி சண்டை நடந்ததாகவும் கூறப்பட்டது. ஏராளமான நடிகர் நடிகைகள் இயக்குநர்கள் முன்னிலையில் இந்த சண்டை நடந்ததால், அவர்கள் தலையிட்டு இவர்களை விலக்கிவிட்டனர். அந்த நேரத்தில் டாப்ஸியும் அங்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் போலீஸ் கேஸாகிவிட்டது. இதையடுத்து 
டாப்ஸி
இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இரண்டு நடிகர்கள் தகராறு செய்துகொண்ட இடத்தில் நான் இருக்கவில்லை. அந்த சமயத்தில் கர்னூலில் இருந்தேன். எனவே நடிகர்கள் என் கண்முன்னே மோதிக் கொண்டார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லை.

என் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நான் சினிமா துறையில் நுழைந்ததில் இருந்தே மோகன்பாபு, லட்சுமி, விஷ்ணு, மனோஜ் ஆகியோரை நன்கு தெரியும். அவர்களது குடும்பத்தில் ஒருவராக என்னை பாவித்தும், பாதுகாத்தும் வருகின்றனர். அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

மோகன்பாபு என்னை மகளாகவே பாவிக்கிறார். லட்சுமி, மனோஜ், விஷ்ணு ஆகியோர் என்னை இளைய சகோதரியாகவே பார்க்கின்றனர். மலிவான விளம்பரத்துக்காக என்னையும், மனோஜையும இணைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.


விருந்து நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் ஒருவர் ஏற்பாடு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொழில் அதிபர் வீட்டின் காவலானி கைது செய்யப்பட்டு உள்ளார். மனோஜிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் தேடினர். ஆனால் அவர் மலேசியாவுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்பட்டது.

மனோஜ் கைதாகலாம் என்ற பரபரப்பு நிலவுவதால் இரு தரப்புக்கும் இடையே சமரச முயற்சியும் நடக்கிறது. நடிகர் சிம்பு சமரசப்படுத்தும் வேலையில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மனோஜ், மகத் இருவருக்குமே சிம்பு நெருக்கமான நண்பராக இருக்கிறார். இன்னொரு புறம் போலீஸ் விசாரணையும் விறுவிறுப்பாக நடக்கிறது.

தொழில் அதிபரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் தேடுகின்றனர். விருந்தில் யார்-யார் பங்கேற்றனர் என்ற பட்டியலையும் போலீசார் தயாரிக்கிறார்கள்.

முன்னணி நடிகர்கள் இருவர் இதில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நடிகைகள் திரிஷா, லட்சுமிராய் போன்றோரும் கலந்து கொண்டதாக தகவல் பரவியுள்ளது. இது உண்மைதானா என்று போலீசார் விசாரிக்கின்றனர். இரு நடிகைகளும் விருந்தில் பங்கேற்றது உறுதியானால் அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திரிஷா, லட்சுமிராய் முன்னிலையில் இந்த அடிதடி சண்டை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். டாப்சியை மனோஜ், மகத் காதலித்ததாகவும் இதுவே சண்டைக்கு காரணம் எனவும் கூறப்பட்டது. ஆனால் அவர்களுடன் தனக்கு தொடர்பு இல்லை என்று டாப்சி மறுத்து விட்டார்.

நன்றி தினசரிகள் 

மது விருந்து எனபது இப்பொழுது  எல்லாம் சினிமாகார்கள் விருந்தில் 
ரொம்ப சாதாரணமாய் போய்விட்டது,,மது விருந்துக்கு பின் சண்டைகள் கலாட்டாக்கள் பிரச்சனைகள் என்று தொடர்வது வாடிக்கையாய் உள்ளது..
மங்காத்தா வெற்றி கொண்டாத்தில் இதே போல் மது விருந்தில் பிரச்சனை ஏற்ப்பட்ட செய்திகள் தினசரிகளில் கொஞ்ச நாள் பேசப்பட்டது நாம் அறிந்த ஒன்று...

கலைஞரை சுற்றிதான் தமிழக அரசியல் உள்ளது :

 
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு  
ஈரோடு நகராட்சி மண்டபத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 7 பேருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘’தமிழக அரசியலை பொறுத்தவரை தி.மு.க. தலைவர் கருணாநிதியை தொடாமல் யாரும் அரசியல் பண்ண முடியாது. அவரை சுற்றிதான் தமிழக அரசியல் உள்ளது. மற்றவர்களை காட்டிலும் கருணாநிதி மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உள்ளது.
காங்கிரஸ் கட்சியை நான் உயிர் மூச்சாக நினைக்கிறேன். காங்கிரஸ் கட்சி தமிழ்நாடடில் ஆட்சி க்கு வரவேண்டும் என்று எங்களுக்கும் ஆசை உள்ளது. எனவேதான் நான் கருணாநிதி பற்றி விமர்சனம் செய்தேன். இது தவிர்க்க முடியாதது.
1967-ம் ஆண்டுக்கு முன் காங்கிரசை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்தார்கள். அதன் பிறகு காமராஜர் இறந்தபிறகு அவருக்கு மணிமண்டபம் கட்டியவர் கருணாநிதி.

கடந்த தேர்தலில் நான் கோபியில் போட்டியிட்டு இருந்தால் இன்னும் கூடுதல் ஒட்டுகள் பெற்றிருக்க முடியும். ஆனால் நான் பிறந்த ஊருக்கு எதாவது நல்லது செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில்தான் ஈரோட்டில் போட்டியிட்டேன்.
தி.மு.க.வினர் நடத்திய சிறை நிரப்பும் போராட்டத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான பேர் கலந்து கொண்டனர். இருப்பினும் இந்த போராட்டத்தை அவர்கள் சிதைத்துவிட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது. ஏன் என்றால் மின்சாரம் கட்டணம் உயர்வு பற்றி அவர்கள் முழுமையாக மக்களிடம் எடுத்து சொல்லவில்லை. 


மின்சார கட்டணம் இப்போது 2 மடங்கு உயர்ந்து உள்ளது. இதுபோல் முன்பு மீட்டர் கணக்கெடுத்த பின்னர் பணம் கட்டுவதற்கு போதிய அவகாசம் கொடுப்பார்கள். ஆனால் அப்போது மீட்டர் கணக்கெடுத்து 10 நாட்களுக்குள் பணம் கட்டவில்லை என்றால் அபராதம் போடுகிறார்கள். இதனால் பல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சங்மா அந்த பதவிக்கு தகுதியற்றவர். அ.தி.மு.க-தி.மு.க.வுக்கு அடுத்து 3 வது பெரிய கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. கடந்த தேர்தலில் அதிக இடங்களை பெற்ற தே.மு.தி.க. பெரிய கட்சி அல்ல’’என்று பேசினார்.
நன்றி நக்கீரன்...
இது என்ன புது கலாட்டா...

10 ஜூலை, 2012

புதுவையில் முழு அடைப்பு: தனியார் பஸ்கள் ஓடவில்லை

புதுச்சேரி, ஜுலை. 10- புதுவையில் முழு அடைப்பு: தனியார் பஸ்கள் ஓடவில்லை 

புதுவை மாநிலத்தில் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப உயர்கல்வி பயில பிற பிராந்தியங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அமலில் உள்ளது. காரைக்காலுக்கு 18 சதவீதமும், மாகிக்கு 4 சதவீதமும், ஏனாமுக்கு 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பிராந்திய இடஒதுக்கீடான 25 சதவீதம் போக மீதமுள்ள 75 சதவீத இடங்களில் அனைத்து பிராந்திய மாணவர்களும் போட்டியிடலாம்.

இதனால் அதிக மதிப்பெண் எடுத்தும் புதுவை மாணவர்களுக்கு உயர் கல்வியில் இடம் கிடைப்பதில்லை. எனவே புதுவை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பிராந்திய இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதோடு பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று, பல்வேறு போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிராந்திய இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து பிராந்திய இடஒதுக்கீடு போராட்டக்குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் சார்பில் பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை 3 நாட்கள் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன.

இதற்கிடையே முதல் அமைச்சர் ரங்கசாமி போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இருப்பினும் முதல்- அமைச்சர் ரங்கசாமியின் வேண்டுகோளுக்கு இணங்கி 3 நாள் பந்த் போராட்டத்தை ஒரு நாளாக குறைத்து கொள்வதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர்.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணிக்கு போராட்டம் தொடங்கியது. போராட்டத்தையொட்டி தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடியது.

இருப்பினும் புதுவையை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள். தமிழகத்தில் இருந்து புதுவைக்கு வரும் அரசு பஸ்கள் எல்லை பகுதியிலேயே பயணிகளை இறக்கி விட்டு சென்றன. புதுவை வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் அரசு பஸ்கள் புதுவை பஸ் நிலையம் வரை வந்து சென்றன.

பெரும்பாலான டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை. இருப்பினும் ஒரு சில ஆட்டோக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓடின. நகர பகுதியில் பந்த் போராட்டத்திற்கு வணிகர் சங்கம் ஆதரவு அளித்திருந்ததால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட்ட உள்ளிட்டவை இயங்கின.

போராட்டத்தையொட்டி பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், பஞ்சாலைகள் இயங்கின. தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளும் வழக்கம்போல் இயங்கின.

பந்த்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் நகர பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.


நன்றி தினசரி 

9 ஜூலை, 2012

காதல் படுத்தும் பாடு....

திருவட்டார், ஜூலை. 8-
திருமண ஆசை காட்டி செக்ஸ்:  காதலன் வீடு முன்பு விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட கல்லூரி மாணவி 
மேல்புறத்தை சேர்ந்ததவர் கலைராஜ். இவரது மகள் அனிதா (வயது 21). மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பிளஸ்-1 படித்த போது அதே பகுதியை சேர்ந்த சாஜன் (25) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது பெற் றோருக்கு தெரியாமல் பல இடங்களுக்கும் சென்று வந்தனர்.

இந்த நிலையில் சாஜனுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. இதனால் அவர் வெளியூர் சென்று விட்டார். விடுமுறையில் ஊருக்கு வரும் போதெல்லாம் காதலி அனிதாவை சந்தித்து பேசுவார். அப்போது அடுத்த முறை ஊருக்கு வரும்போது திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுவார். அதன்பின்பு அனிதாவிடம் சொல்லாமல் வேலைக்கு சென்று விடுவார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாஜன் மீண்டும் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது காதலி அனிதாவை சந்தித்து சமரசம் செய்தார். இம்முறை எப்படியும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதை நம்பிய அனிதா நேற்று முன்தினம் சாஜனுடன் வெளியே சென்றார். அவர் அனிதாவை அழைத்துக் கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றார்.

இருவரும் அங்கு உல்லாசமாக இருந்தனர். பின்னர் மீண்டும் அனிதாவை அழைத்துக் கொண்டு மேல்புறம் திரும்பினார். மார்தாண்டம் பஸ் நிலையத்தில் அவரை இறக்கி விட்டபோது அங்கு நின்ற அனிதாவின் பெற்றோர் அவரை பார்த்துவிட்டனர். மகள் காதலனுடன் ஊர் சுற்றி வந்ததை அறிந்த அனிதாவின் தந்தை கலைராஜன் இதுபற்றி இருவரையும் பிடித்து சத்தம் போட்டதோடு இப்பிரச்சினை பற்றி அருமனை போலீசிலும் புகார் செய்தார்.

போலீசார் சாஜனின் பெற்றோர் மற்றும் உறவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நேற்று அனிதாவுக்கும் சாஜனுக்கும் நிச்சயதார்த்தம் நடத்துவது என்றும், திருமணத்தை சில மாதங்கள் கழித்து வைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று அனிதா வீட்டில் திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் நேற்று மாலை வரை மாப்பிள்ளை சாஜன் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. சந்தேகம் அடைந்த அனிதாவின் பெற்றோர் சாஜன் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு வீடு பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது சாஜனும் அவரது பெற்றோரும் தலைமறைவானது தெரிய வந்தது.

இதுபற்றி அறிந்ததும் அனிதா அதிர்ச்சி அடைந்தார். திருமண ஆசை காட்டி தன்னை ஏமாற்றிய சாஜனை தேடி அவரது வீட்டுக்கு வந்தார். அங்கு திடீர் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் அனிதாவின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

இரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் திடீர் என நடத்திய போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கடம்சி பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும் அங்கு திரண்டனர். அவர்கள் அனிதாவின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண ஏற்பாடு செய்தனர். ஆனால் சாஜன் வீட்டார் அங்கு வராததால் இப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. விடிய விடிய நடந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது.

இன்று மாலைக்குள் இப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண அப்பகுதி பிரமுகர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட அனிதாவிடம் கேட்டபோது என்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சாஜன் ஜாலியாக இருந்தார். இப்போது திருமணத்திற்கு மறுக்கிறார். எனக்கு நீதி கிடைக்கும் வரை, சாஜனை மணமுடிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றார்.
நன்றி மாலைமலர் 

ஒபாமா பெருமிதம்...

வாஷிங்டன், ஜுலை.9- 
லிபியா தேர்தல் ஒரு மைல் கல் - ஒபாமா பெருமிதம் 
சர்வாதிகாரி கடாபி வீழ்த்தப்பட்ட நிலையில், லிபியாவில், கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக நியாயமான பொதுத் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில்:

இந்த தேர்தல், லிபிய ஜனநாயகத்தில் ஒரு மைல் கல். லிபியாவின் எதிர்காலம், லிபிய மக்களிடம்தான் என்பதை இந்த தேர்தல் உணர்த்துகிறது.மேலும், தேர்ந்தெடுக்கப்படும் புதிய லிபிய அரசுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளிக்கும் என்று கூறியுள்ளார்.

நன்றி தினசரி 
நல்லா இருந்த நாட்டை ஆயிலுக்கு வேண்டி சண்டைய உருவாக்கி அதில் தலையிடுவது போல் சேர்ந்து கூட்டாய் கொலைகள் நடத்திவிட்டு பேச்சு இவர்களுக்கு...


ஏன் இது போல தமிழர்களுக்கு தனி ஈழம் உருவாக்க வரவில்லை இவர்கள் பொருள் வேண்டி நடத்தும் போர் கூட்டு கொலையாளிகள் இவர்கள்...இறைவன் தான் தண்டிக்கணும் 

8 ஜூலை, 2012

சாலையோர மரங்கள...








புறவழிச் சாலை அமைக்க
காவ கொடுக்கப்பட்டன
மரங்கள்...


=========================
வெட்டிக் கொலை
செய்யப்பட்டன
சாலையோர மரங்கள...



==========================
வாகன நெருசலை சமாளிக்க
பாதையாய்  மாறியது 
சாலையோரத்து  மரங்கள...

==========================

பெரியார்.தி.க. பிரமுகர் கொலை:போலீசார் நடவடிக்கை...


ராயக்கோட்டை, ஜூலை. 6-
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியை அடுத்த அலேசீபம் ஊராட்சி பாலே குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (வயது47). இவர் பெரியார் திராவிடர் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளராக இருந்தார்.

நேற்று காலை இவர் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருந்தபோது துப்பாக்கியால் சுட்டும், தலை துண்டித்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 3 கார்களில் வந்த கும்பல் இவர்களை கொன்று விட்டு தலைமறைவானது.

இந்தக்கொலை குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீட்சித் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவரது உடல் நேற்று இரவு 8 மணிக்கு பாலே குளம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு பெரியார். திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று காலை அவரது உடல் அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.

இதையொட்டி பாலேகுளம் மற்றும் சந்தூர் கிராமத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதுபோல பழனிசாமியின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்துக்கு முன்னும், பின்னும் பாதுகாப்பாக போலீசார் சென்றனர்.

இந்தகொலை குறித்து பழனிசாமியின் மகன் வாஞ்சிநாதன் உத்தனப் பள்ளி போலீசில் புகார் செய்து உள்ளார். அந்த புகாரில் தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனின் ஆட்கள் வந்து தனது தந்தையை கொன்றதாக கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், அவரது அண்ணன் வரதராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் லகுமய்யா, கெல மங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கேசவன், பெரியசாமி, சப்படி முனிராஜ், சாதப்பா மற்றும் அடையாளம் தெரிந்த 15 பேர் உள்பட 22 பேர் மீது உத்தனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

இவர்கள் மீது 147 (சட்ட விரேதமாக கூடுதல்), 148 (சட்ட விரோதமாக கலகம் விளைவிக்கும் வகையில் எண்ணத்தில் கூடுதல்), 341 (சட்ட விரோதமாக தடுத்து நிறுத்துதல்), 307 (கொலை முயற்சி), 129(பி)-(கூட்டு சதி, கொலையுடன் இணைந்த வெடிபொருட்கள் உபயோகப்படுத்துதல் சட்டம் மற்றும் படைக்கலன் சட்டம்-லைசென்சு இன்றி துப்பாக்கி பயன்படுத்துதல்) உள்பட 11 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

தளி தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வீடு தளி அருகே உள்ள வரகானப் பள்ளி கிராமத்தில் உள்ளது. அங்கு போலீசார் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. அவர் மட்டுமல்ல இந்தக்கொலை வழக்கில் தேடப்படும் 22 பேரும் தற்போது தலை மறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க 3 தனிப் படை அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய கோர்ட்டுகளில் சரண் அடையலாம் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள். இதனால் கோர்ட்டுகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சரண் அடைய வரும் 22 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பழனிசாமி மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2002-ம் ஆண்டு தளி ஒன்றிய சேர்மன் வெங்கடேசன் (தி.மு.க.) கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளது. அதேபோல கடந்த 1993-ம் ஆண்டு ராயக்கோட்டை அருகே மொல்லம்பட்டியில் முனியம்மாள் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கிலும் இவர் குற்றவாளியாக சேர்க்கப் பட்டு இருந்தார். இது தவிர வேறு சில வழக்குகளும் இவர் மீது நிலுவையில் உள்ளது.

இந்தக் கொலை குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ ராமச்சந்திரன். அவரது அண்ணன் வரதராசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் லகுமய்யா, கெலமங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கேசவன், பெரியசாமி, சப்படி முனிராஜ், சாதப்பா உள்பட 22 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இன்று 4-வது நாளாக அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் பிடிக்க பெங்களுர், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர். ஆனாலும் அவர்களை பிடிக்க முடியவில்லை. அவர்கள் யாரும் அவர்களது குடும்பத்தினருடன் செல்போனில் தொடர்பு கொள்கிறார்களா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை நடந்த பிறகு போலீசாரால் தேடப்படும் 7 முக்கிய பிரமுகர்கள் சிலருடன் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அவர்கள் பேசிய நபர்களையும் போலீசார் வரவழைத்து விசாரித்து வருகிறார்கள்.

எம்.எல்.ஏ.வின் மனைவி, மாமியார் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். எம்.எல்.ஏவின் உதவியாளர் கஜேந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.வின் உறவினர்கள் நடத்தும் கல்குவாரியில் வேலை பார்க்கும் ஊழியர்கள், எம்.எல்.ஏக்களுடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள் ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

2-வது நாளாக எம்எல்.ஏ உதவியாளரிடம் விசாரணை நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கிருண்னப்பாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதுதவிர எம்எல.ஏ.வின் சொந்த ஊரான கெலமங்கலத்தை அடுத்த வரகானப்பள்ளியிலும் போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனாலும் போலீசாருக்கு எம்.எல்.ஏ உள்பட 22 பேரும் தலைமறைவாக உள்ள இடம் தெரியவில்லை. கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீட்சித் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட டி.எஸ்.பிக்கள்-20-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 4-வது நாளாக ஓசூர் மற்றும் தளியில் முகாமிட்டு உள்ளனர்.

இந்தக் கொலையில் பரபரப்பு திருப்பமாக இன்னொரு முக்கிய தகவல் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அந்தத் தகவலை போலீசார் வெளியிடாமல் ரகசியமாக விசாரித்து வருகிறார்கள். இதனால் இன்னும் ஓரிரு நாளில் இந்தக் கொலையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தளி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் இன்று காலை பெங்களுரில் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறிதது ஓசூரில் முகாமிட்டு இருந்த சேலம் சரக டி.ஐ.ஜி சஞ்சய் குமாரிடம் நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:

பெரியார் தி.க. பிரமுகர் கொலை மற்றும் நாங்கள் தேடும் குற்றவாளிகள் பற்றிய பிரச்சினை மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பிரச்சினை ஆகும். இதில் நாங்கள் அவசரப்பட்டு எதுவும் கூற முடியாது. இன்று மாலை அல்லது இரவுக்குள் முக்கியமான தகவல் ஒன்று உங்களுக்கு கூறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அபிஷேக் தீட்சித்(கிருஷ்ணகிரி), அமீத்குமார் சிங் (தர்மபுரி), அஸ்வின் கோட்னீஸ் (சேலம்) ஆகியோர் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட டி.எஸ்.பிக்கள், 20-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ஓசூர் மற்றும் தளியில் முகாமிட்டு உள்ளனர்.

நன்றி தினசரிகள் 

அன்புமணிக்கு எதிராக வாரன்ட்


புதுடில்லி : இந்தூரைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில், மாணவர்களைச் சேர்க்க, சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், ஆஜராகத் தவறிய மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு, டில்லி கோர்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ளது, இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம். இங்கு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மாணவர்களைச் சேர்க்க, கடந்த 2008ம் ஆண்டில், சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த சி.பி.ஐ., மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இரண்டு அரசு உயர் அதிகாரிகள் உட்பட, பலர் மீது, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், பல முறை சம்மன் அனுப்பியது. இருந்தாலும், அன்புமணி ராமதாஸ் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கை, நேற்று விசாரித்த டில்லி சிறப்பு கோர்ட் நீதிபதி தல்வந்த் சிங், முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக, ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்க உத்தரவிட்டார்.

நீதிபதி மேலும் கூறுகையில், ""அன்புமணி ராமதாஸ் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என விரும்புகிறேன். தனக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை, அவர் வேண்டுமென்றே தவிர்ப்பது போல தெரிகிறது. அதனால், 10 ஆயிரம் ரூபாய் ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கிறேன்,'' என்றார்.
நன்றி தினமலர் 
சட்டம் எல்லோருக்கும் சமம் 

ஓராண்டை பூர்த்தி செய்வதற்காக 30 நாட்கள் பதவியில் நீடிக்க விரும்பும் சதானந்த கவுடா

புதுடெல்லி, ஜூலை. 8- ஓராண்டை பூர்த்தி செய்வதற்காக 30 நாட்கள் பதவியில் நீடிக்க விரும்பும் சதானந்த கவுடா 
கர்நாடகாவில் சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சதானந்த கவுடா பதவி ஏற்றார். 

எடியூரப்பாவின் ஆதரவாளராக இருந்து வந்த சதானந்த கவுடா, முதல்- மந்திரி ஆன பிறகு தனி கோஷ்டியை தொடங்கி விட்டார். இதனால் அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து விரட்டி விட்டு தன் லிங்காயத் இனத்தை சேர்ந்த ஜெகதீஷ்ஷெட்டரை முதல்-மந்திரியாக்க எடியூரப்பா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். சதானந்த கவுடாவை மாற்றாவிட்டால், தன் ஆதரவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைக்கப்போவதாகவும் மிரட்டினார். 

இதையடுத்து இரு கோஷ்டிகளையும் டெல்லிக்கு வரவழைத்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பேசினார்கள். அப்போது முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சதானந்த கவுடா சம்மதித்தார். எனவே கர்நாடக புதிய முதல்-மந்திரியாக ஜெகதீஷ் ஷெட்டர் விரைவில் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் சதானந்த கவுடா முதல்-மந்திரி பதவியில் இன்னும் 30 நாட்களுக்கு நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் பதவியேற்று வருகிற ஆகஸ்டு 4-ந்தேதியுடன் ஓராண்டு பூர்த்தி ஆகிறது. எனவே ஓராண்டு பதவியில் இருந்த திருப்தியுடன் பதவி விலக விரும்புவதாக பா.ஜ.க. மூத்த தலைவர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

அவரது இந்த கோரிக்கையை எடியூரப்பா ஏற்றுக் கொள்வாரா? என்று தெரியவில்லை. இதனால் சதானந்த கவுடா விரக்தி அடைந்துள்ளார். 

நேற்றிரவு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது இதுதொடர்பாக சதானந்த கவுடா கூறியதாவது:- 

பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரியை இன்று சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். அப்போது ஆட்சியை ஓராண்டு பூர்த்தி செய்ய அனுமதிக்கும்படி கேட்டுக் கொள்வேன். முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவதால் நான் ஏமாற்றம் அடையவில்லை. ஆனால் நான் ராஜினாமா செய்வதால் அடுத்த ஆண்டு தேர்தலுக்குள் கர்நாடக பா.ஜ.க.வுக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி சண்டை முடிவுக்கு வந்து விடும் என்று நம்புகிறேன். 

கர்நாடகாவில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. பா.ஜ.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் வறட்சி நிவாரணம் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக விவசாயி யாராவது உயிரிழந்தால் பெரும் பிரச்சினையாகிவிடும். 

அடுத்த ஆண்டு தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கடந்த 11 மாத ஆட்சியில் நான் ஊழலற்ற நிர்வாகத்தை கொடுத்துள்ளேன். எனது நிர்வாகம் எனக்கு முழு திருப்தியைக் கொடுத்துள்ளது. பதவி விலகினாலும் நான் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவேன். 

ஜெகதீஷ் ஷெட்டருக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அவர் அனுபவம் வாய்ந்த நல்ல மனிதர். அவர் முதல்-மந்திரி பதவியேற்ற பிறகு நல்ல நிர்வாகத்தை கொடுப்பார் என்று நம்புகிறேன். 

அரசியல் என்பது கபடி ஆட்டம் மாதிரிதான். கபடி ஆட்டத்தில் ஒருவர் காலை பிடித்து வாரிவிட இன்னொருவர் எப்போதும் தயாராக இருப்பார். இன்று நான் கபடி ஆட்டத்தில் அவுட் ஆக்கப்பட்டுள்ளேன். இதற்காக நான் வருந்தவில்லை. 

இந்த பிரச்சினையால் வறட்சி நிவாரண பணிகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கவலை தருகிறது. எனவே வறட்சி நிவாரண பணியை புதிய முதல்வர் முடுக்கி விடவேண்டும். 

இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.

நன்றி தினசரி
ஓராண்டு சாதனையாய் பி ஜே பி கொண்டாடட்டும் 

7 ஜூலை, 2012

இருந்தோம்...


மனதை மட்டும் 
நேசித்த போது 
நானும் நீயும் 
நண்பர்களாய் 
இருந்தோம்...


மதத்தை 
ஜாதியை 
பார்த்தபோது 
பாதை மாறி
போனோம் 

மனிதத்தை 
கொன்ற மிருகங்களாய்

செக்ஸ் புகார் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி பிரமாண பத்திரம்

புதுடெல்லி, ஜூலை.7- 

செக்ஸ் புகார் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி பிரமாண பத்திரம் 

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே. இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது செக்ஸ் புகார் கூறி உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பெண்ணையும், அவளது பெற்றோரையும் ராகுல் காந்தி சட்ட விரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக அதில் அவர் கூறி இருந்தார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கிஷோர் சம்ரிதேவுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. அத்துடன் கிஷோர் சம்ரிதே மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவில் தனது புகார் மீது ஐகோர்ட்டு உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறி இருந்தார். அவரது அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், டி.எஸ்.தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்தி, உத்தரபிரதேச அரசு மற்றும் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் ராகுல் காந்தியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், தன் மீது மனுதாரர் கூறியுள்ள புகார் முற்றிலும் தவறானது மட்டுமின்றி கெட்ட நோக்கம் கொண்டது என்றும், தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புகார் கூறப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

நன்றி மாலைமலர் ...

இது ஒரு தவறனா செய்தியை இருக்கும் பச்சத்தில் வழக்கு தொடர்ந்த 
நபருக்கு கடுமையான தண்டனை தரனும் 

அன்புமணிக்கு `பிடிவாரண்டு' 20-ந்தேதி ஆஜராக சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு

மருத்துவ கல்லூரிக்கு அனுமதி வழக்கு: அன்புமணிக்கு `பிடிவாரண்டு' 20-ந்தேதி ஆஜராக சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு
மத்திய சுகாதார துறை முன்னாள் மந்திரி அன்புமணி. இவர் மீது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தகுதியற்ற தனியார் மருத்துவ கல்லூரிக்கு அதிகார துஷ்பிரயோகம் செய்து அனுமதி அளித்ததாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கில் அன்புமணி, தற்போது மத்திய அமைச்சரவை செயலகத்தில் துணை செயலாளராக இருக்கும் 

கே.வி.எஸ்.ராவ் (அன்புமணி பதவியில் இருந்த போது மத்திய சுகாதார துறை துணை செயலாளராக இருந்தார்), சுகாதார அமைச் சகத்தின் பிரிவு அலுவலர் சுதர்ஷனகுமார், சப்தர் ஜிங் மருத்துவமனை மருத்துவர்கள் ஜே.எஸ்.தூபியா, திபேந்திரகுமார், இந்தூர் இன்டெக்கில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைவர் சுரேஷ்சிங் பதோ ரியா, கல்லூரியின் முன்னாள் டீன் டோங்கியா, மருத்துவ கல்லூரி இயக்குனர் சக்சேனா, நிதின் கோத்வால், டாக்டர் பவன் பம்பானி ஆகியோருக்கு எதிராக கடந்த ஏப்ரல் 27-ந்தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கே.வி.எஸ்.ராவ் அரசு உயர் பொறுப்பில் உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கடந்த மே மாதம் 16-ந்தேதி கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு அனுமதி அளித்து சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி தலவந்த்சிங் இந்த வழக்கு விசாரணையை ஜுலை 7-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார்.

குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட அனைவரும் இன்று நடைபெறும் விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று அன்புமணி உள்பட 10 பேருக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு இன்று சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அன்புமணி கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து நீதிபதி தலவந்த்சிங் அன்புமணிக்கு ஜாமீனில் வெளியே வரக் கூடிய பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். அதோடு வருகிற 20-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 
மதுக்கடைகளுக்கு 11ந் தேதி பா.ம.க. சார்பில் பூட்டுப் போடும் போராட்டத்தை விளக்கி கூடுவாஞ்சேரி கூட்டுரோடு பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

இளைஞர்களை கெடுக்கும், இளம் விதவைகளை உருவாக்கும், விபத்துக்களை ஏற்படுத்தும், உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும் குடி மக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு வருகிற 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.

நாங்கள் மக்களை பற்றி கவலைபடுகிறோம். சாராயம் குடிக்க கூடாது என்று மக்கள் மத்தியில் சொல்கிறோம். இளைஞர்களிடத்தில் சொல்கிறோம். சாராய கடைகளை மூடு என்று சொல்கிறோம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம். 

சமூக பிரச்சினைகளுக்கான கூட்டம், வாழ்கின்ற சமூகத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலை கரிசனம் நமக்கு மட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் இருக்காது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி, அடுத்த வருடத்திற்கு ஒரு இலக்கு வைத்துள்ளனர். 2013 ல் ரூ. 21 ஆயிரம் கோடி கிடைக்கும்.

தெரு தெருவாக சாராய கடைகளை திறந்து குடி மக்களாக ஆக்கி விட்டார்கள். தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள். தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால் பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் மது வெள்ளமாக ஓட அரசியல்வாதிகள் பணத்தில் மிதக்கிறார்கள். இந்த பிரச்சினையை தமிழ் நாட்டில் பா.ம.க. மட்டும்தான் எடுத்து சொல்கிறது. பா.ம.க. 1989 ல் உதயமானது. 2 மாதம் கழித்து அக்டோபர் 2 ந்தேதி காந்தி பிறந்த நாளன்று பெண்களை கொண்டு தமிழ்நாடு முழுவதும் மது ஒழிப்பு போராட்டம் நடத்தினோம். நமது கட்சிக்கு சமூகத்தை பற்றிய கவலை இருக்கிறது.

பா.ம.க. சமூக இயக்கம். இளைஞர்களுக்கு வழி காட்டுவது தொடர்ந்து 22 வருடமாக செய்து கொண்டிருக்கிறது. 13 வயது சிறுவன் கூட குடிக்கின்றான். சாராய கடைகளை இவர்கள் மூட மாட்டார்கள். நாம்தான் மூட வேண்டும். இளைஞர்களை கெடுக்கும் உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும், குடிமக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் அறவழியில் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும்:

சென்னை, ஜுலை.7- 
பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும்: அரசு உத்தரவு 

பள்ளிக்கல்வி இயக்குனர் பி.மணி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் சமுதாயத்தின் பல்வேறு நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் ஒருங்கே சமநிலையில் கல்வி பயில்கிறார்கள். பள்ளிகளில் அந்த மாணவ-மாணவிகள் இடையே எவ்விதமான ஏற்றத்தாழ்வு உருவாகும் நிலையைத் தவிர்க்கவும், அனைவரும் சமநிலையில் உள்ளவர்கள் என்ற சமத்துவ மனநிலையை அவர்கள் உள்ளங்களில் உருவாக்கவும் அனைத்து நிலையில் உள்ள மாணவ-மாணவிகளுக்கும் ஒரேமாதிரியான சீருடை வழங்கப்பட்டு, அவர்கள் சீருடையில் வரும் முறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்லதோர் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய உன்னதமான பணியில் உள்ள ஆசிரியர்களும், ஆசிரியைகளும், பள்ளிக்கு வரும்போது தங்களது ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்துவரும் முறையில் பதவிக்குரிய கண்ணியமும், நமது பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உகந்த நாகரிகமும் இருப்பது அவசியம்.

ஆசிரியர்கள், ஆசிரியைகள் கண்ணியக்குறைவாகவும், மாணவ-மாணவிகள் இடையே ஏற்றத்தாழ்வையும், மனச்சலனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், மரியாதை குறைவையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

இதை எல்லாம் வலியுறுத்தி ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டபோதிலும் சமீப காலமாக இந்த அறிவுரைகள் ஆங்காங்கே சில ஆசிரியர்களால் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த நிலை மிகவும் வருந்தத்தக்கது.

பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாதிப்பையும், சமுதாயத்தில் பொது மக்களிடையே அதிருப்தியையும், ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நிலை வருங்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளிக்கு வரும்போது பதவிக்குரிய கண்ணியத்திற்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையில் ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்து வருமாறும் அநாகரீகமான முறையில் உடை அணிந்து பள்ளிக்கு வருவதை தவிர்க்குமாறும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றுவதில் தவறுகளோ, குறைபாடுகளோ சிறிதும் ஏற்படா வண்ணம் ஆசிரியர்களின் நடவடிக்கைகள் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல், மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகனும் ஆடை கட்டுப்பாடு குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்...

நல்ல உத்தரவு...

உண்மையை தவிர..


வாதங்கள் 

பிரதிவாதங்கள் 
தள்ளுமுல்லுயில் 
சிலசமயம் 
தில்லுமுல்லாகி போனது 
உண்மை...


கீழ் கோர்ட்டில் 
தண்டனை 
மேல் கோர்ட்டில் 
விடுதலை 
யாரை 
குறைச்சொல்லுவது 





உண்மையை தவிர...