20 ஜூலை, 2012

சென்னையில் பதிவான ஓட்டுக்கள் எவ்வளவு?


சென்னை, ஜூலை. 20-

ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. சென்னை கோட்டையில் நடந்த வாக்குப் பதிவில் தமிழக எம்.எல்.ஏ.க்கள் 197 பேரும், அனுமதி பெற்ற 15 எம்.பி.க்களும் பங்கேற்றனர். தே.மு.தி.க., இந்திய கம்யூ னிஸ்டு எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடந்தது. இதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 151 பேர் வாக்களித்தனர்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க.கள் -23, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு -10, காங்கிரஸ் -5, பா.ம.க. -3, புதிய தமிழகம் -2, பார்வர்டு பிளாக் -1 ஆகியோரும் ஓட்டுப்போட்டனர். இதுதவிர அ.தி.மு.க. எம்.பி.க்கள் 14 பேரும், தி.மு.க. எம்.பி. ஒரு வரும் சென்னையில் நடந்த வாக்குப்பதிவில் கலந்து கொண்டனர்.

பதிவான ஓட்டு சீட்டுகள் போடப்பட்ட ஓட்டுப்பெட்டி நேற்று மாலை 5 மணிக்கு அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மேற்பார்வையில் ஜனாதிபதி துணை தேர்தல் அதிகாரியும், தமிழக சட்டமன்ற செயலாளருமான ஜமாலு தீன் அறையில் வைக்கப்பட்டது. இரவு முழுவதும் ஓட்டுப்பெட்டி இருந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி தேர்தல் ஓட்டுப்பெட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுப்புடன் சென்னை விமான நிலையம் கொண்டு போகப்பட்டது. காலை 6.40 மணிக் சென்னையில் இருந்து விமானம் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

தமிழக சட்டமன்ற செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் துணை அதிகாரியுமான ஜமாலுதீன், கூடுதல் தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர். புதுச்சேரி மாநில ஓட்டுப்பெட்டியை புதுச்சேரி சட்டமன்ற செயலாளர் அன்பழகன், தேர்தல் அதிகாரி ஆகியோர் இதே விமானத்தில் டெல்லி கொண்டு சென்றனர்.

இந்த ஓட்டுப் பெட்டிகள் டெல்லியில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஒப்படைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.



சென்னையில் பதிவான ஓட்டு விவரம் வருமாறு:- 



(சங்மா பெறும் ஓட்டுக்கள்)






அ.தி.மு.க. - 148






சமத்துவ மக்கள் கட்சி -2






கொங்கு இளைஞர் பேரவை -1






மொத்தம் -151






அ.தி.மு.க. எம்.பி.க்கள் -14






(பிரணாப் முகர்ஜி பெறும் ஓட்டுக்கள்)






தி.மு.க. -23






காங்கிரஸ் -5






மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு -10






பா.ம.க. -3






மனிதநேய மக்கள் கட்சி -2






புதிய தமிழகம் -2






பார்வார்டு பிளாக் -1






மொத்தம் -46






தி.மு.க. எம்.பி. -1






புறக்கணிப்பு தே.மு.தி.க. -29






இந்திய கம்யூனிஸ்டு -8






மொத்தம் -37






(எம்.பி.க்கள் ஓட்டு மதிப்பு 708, எம்.எல்.ஏக்கள் ஓட்டு மதிப்பு 176).






நன்றி மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக