சென்னையில் நடந்த சரக்கு பார்ட்டியில் மகத்தும் மனோஜும் முட்டி மோதி மூக்குடைந்ததற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. மனோஜ் என் சகோதரர் மாதிரி என்று விளக்கம் அளித்துள்ளார் டாப்ஸி. இந்த விளக்கத்தில் மகத்தைப் பற்றி தப்பித் தவறிக் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்!
சென்னையில் நடிகர்-நடிகைகள் பங்கேற்ற மது விருந்தில் ‘மங்காத்தா' படத்தில் நடித்த மகத் தாக்கப்பட்டார். தெலுங்கு நடிகர் மனோஜ் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து உதைத்தார். வயிறு, தொண்டை பகுதிகளில் குத்தியதால் மகத் நிலைகுலைந்தார்.
இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போலீசிலும் புகார் செய்தார். ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகை டாப்ஸியை இருவரும் காதலித்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் இந்த அடிதடி சண்டை நடந்ததாகவும் கூறப்பட்டது. ஏராளமான நடிகர் நடிகைகள் இயக்குநர்கள் முன்னிலையில் இந்த சண்டை நடந்ததால், அவர்கள் தலையிட்டு இவர்களை விலக்கிவிட்டனர். அந்த நேரத்தில் டாப்ஸியும் அங்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் போலீஸ் கேஸாகிவிட்டது. இதையடுத்து டாப்ஸி
இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இரண்டு நடிகர்கள் தகராறு செய்துகொண்ட இடத்தில் நான் இருக்கவில்லை. அந்த சமயத்தில் கர்னூலில் இருந்தேன். எனவே நடிகர்கள் என் கண்முன்னே மோதிக் கொண்டார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லை.
என் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நான் சினிமா துறையில் நுழைந்ததில் இருந்தே மோகன்பாபு, லட்சுமி, விஷ்ணு, மனோஜ் ஆகியோரை நன்கு தெரியும். அவர்களது குடும்பத்தில் ஒருவராக என்னை பாவித்தும், பாதுகாத்தும் வருகின்றனர். அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
மோகன்பாபு என்னை மகளாகவே பாவிக்கிறார். லட்சுமி, மனோஜ், விஷ்ணு ஆகியோர் என்னை இளைய சகோதரியாகவே பார்க்கின்றனர். மலிவான விளம்பரத்துக்காக என்னையும், மனோஜையும இணைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
விருந்து நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் ஒருவர் ஏற்பாடு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொழில் அதிபர் வீட்டின் காவலானி கைது செய்யப்பட்டு உள்ளார். மனோஜிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் தேடினர். ஆனால் அவர் மலேசியாவுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்பட்டது.
மனோஜ் கைதாகலாம் என்ற பரபரப்பு நிலவுவதால் இரு தரப்புக்கும் இடையே சமரச முயற்சியும் நடக்கிறது. நடிகர் சிம்பு சமரசப்படுத்தும் வேலையில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மனோஜ், மகத் இருவருக்குமே சிம்பு நெருக்கமான நண்பராக இருக்கிறார். இன்னொரு புறம் போலீஸ் விசாரணையும் விறுவிறுப்பாக நடக்கிறது.
தொழில் அதிபரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் தேடுகின்றனர். விருந்தில் யார்-யார் பங்கேற்றனர் என்ற பட்டியலையும் போலீசார் தயாரிக்கிறார்கள்.
முன்னணி நடிகர்கள் இருவர் இதில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நடிகைகள் திரிஷா, லட்சுமிராய் போன்றோரும் கலந்து கொண்டதாக தகவல் பரவியுள்ளது. இது உண்மைதானா என்று போலீசார் விசாரிக்கின்றனர். இரு நடிகைகளும் விருந்தில் பங்கேற்றது உறுதியானால் அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
திரிஷா, லட்சுமிராய் முன்னிலையில் இந்த அடிதடி சண்டை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். டாப்சியை மனோஜ், மகத் காதலித்ததாகவும் இதுவே சண்டைக்கு காரணம் எனவும் கூறப்பட்டது. ஆனால் அவர்களுடன் தனக்கு தொடர்பு இல்லை என்று டாப்சி மறுத்து விட்டார்.
நன்றி தினசரிகள்
மது விருந்து எனபது இப்பொழுது எல்லாம் சினிமாகார்கள் விருந்தில்
ரொம்ப சாதாரணமாய் போய்விட்டது,,மது விருந்துக்கு பின் சண்டைகள் கலாட்டாக்கள் பிரச்சனைகள் என்று தொடர்வது வாடிக்கையாய் உள்ளது..
மங்காத்தா வெற்றி கொண்டாத்தில் இதே போல் மது விருந்தில் பிரச்சனை ஏற்ப்பட்ட செய்திகள் தினசரிகளில் கொஞ்ச நாள் பேசப்பட்டது நாம் அறிந்த ஒன்று...
ஒரிஜினல் மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் ----- http://puthuputhuthagavalgal.blogspot.in/2012/06/download-original-softwares.html
பதிலளிநீக்கு