27 ஜூலை, 2012

பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்த மாணவி பலி

பள்ளிப் பேருந்தின் ஓட்டையில் விழுந்த மாணவி பலி: பொதுமக்கள் பேரணியாகச் சென்று அஞ்சலி (படங்கள்)


 சுருதி தந்தை கண்ணீர்

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி. நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசுராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட்டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிகமாக அடைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் முடிச்சூர் சாலையில் வந்தபோது பஸ் லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந்த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள் கூச்சலிட்டனர். சிறுமி கீழே விழுந்து இறந்ததையறிந்த டிரைவர் சிறிது தூரம் பேருந்தை ஓட்டிச் சென்று சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுருதியின் தந்தை சேதுமாதவன்,

நானும், என் மனைவியும் கடவுளைவிட மேலாக அந்தப் பள்ளி மீது நம்பிக்கை வைத்து என் மகளை படிக்க சேர்த்தோம். நானும் 10, 15 பிள்ளைகளை தனியார் பள்ளிக்கு வேனில் கொண்டுவிடுகிறேன். பின்னர் வீடுகளுக்கும் அழைத்துச் சென்று விடுகிறேன்.

என் மகள் விபத்தில் இறந்துவிட்டாள் என்ற செய்தி கேட்டு நான் அந்த பிள்ளைகளை விட்டுவிட்டு ஓடவில்லை. அந்த பிள்ளைகளை அவரவர் வீட்டில் விட்டதற்கு பின்னர்தான் இறந்தபோன என் மகளை பார்க்க சென்றேன். இன்னம் சொல்லப்போனால் என் மகள் படித்த பள்ளிக்கு அருகே உள்ள கடையில் வேனில் உள்ள 8 பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்தான் என் மகள் இறந்துபோனாள் என்ற செய்தி எனக்கு வந்தது என்றார்.


நன்றி நக்கீரன் 
பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே  காரணம்.இதுக்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை தரவேண்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக