25 ஜூலை, 2012

தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய கடிதம்

See full size image 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவர் கொட்டகுளம் மின் வாரியத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குள்ளம்மாள். இவர்களது மகள் பிரேமா, 22(பெயர் மாற்றப்பட்டுள்ளது, மகன் அரவிந்த், 20.ரகசிய படம்பிரேமா, செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டி ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன், பிரேமா வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்தார். அவரது உறவு முறையை சேர்ந்த வினோத்குமார் (பி.இ., படிக்கும் மாணவர்), ஜெகன், (பாலிடெக்னிக் மாணவர்) மற்றும் இவர்களது நண்பர் எழில்மாறன் (பாலிடெக்னிக் மாணவர்) ஆகிய மூவரும் சேர்ந்து மொபைல்போனில் ரகசியமாக படமெடுத்தனர்.

இந்த படத்தை பிரேமாவிடம் காட்டி, இன்டர்நெட்டில் விட்டு விடுவோம் என, மிரட்டி அவருக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்தனர். மனமுடைந்த பிரேமா, நேற்று முன்தினம் மாலை, 3 மணி அளவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனோகரன் மற்றும் அவரது உறவினர்கள் பிரேமாவின் உடலை மீட்டு, தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது தெரியாமல் முழித்தனர். பிரேமாவின் புத்தகங்களை எடுத்து பார்த்தபோது அதில், அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது.

கடிதத்தில், வினோத்குமார், ஜெகன், எழில்மாறன் ஆகிய மூவரும் நான் குளிக்கும் போது, மொபைல்போனில் படம் எடுத்து மிரட்டியது குறித்து எழுதியிருந்தார். இது குறித்து மனோகரன், செங்கம் போலீசில் நேற்று (ஜூலை 24) புகார் செய்தார். வினோத்குமார், ஜெகன் மற்றும் எழில்மாறன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பிரேமா கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர், ‘’அன்புள்ள அப்பா, அம்மா, அரவிந்த் நான் உங்களை விட்டுப் பிரிகிறேன் என, கவலைப்பட வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள். இதை தவிர வேறு வழி எனக்கு தெரியவில்லை.

உங்களுக்கு நான் பாரமாக இருக்க விரும்பவில்லை. எனக்கு, என் உயிரை தவிர, உங்களுடைய மூவருடைய உயிரும் தான் முக்கியம். அதனால் தான் இந்த முடிவு எடுத்துக் கொண்டேன். என் சாவுக்கு காரணமானவங்க மூவர். வினோத், ஜெகன், எழில், நான் குளிக்கும்போது, மொபைல்போனில் வீடியோ எடுத்துட்டாங்க. அதை வைத்து என்னை மிரட்டினார்கள்.

யாருகிட்டனா சொன்னா, இதை இன்டர்நெட்டில விட்டு விடுவோம் என, சொன்னார்கள். அதனால், நான் அவங்க சொன்னதை செய்தேன்.

ஒரு சிலர் பெயரை சொல்லி, அவங்களையும் மாட்டி விட வேண்டும் என, அவங்க செய்யாததை எல்லாம் சொன்னாங்க. என்னை பேச வைத்து ரிக்கார்டு செய்தனர். அவங்க வச்சுருக்கிறது எல்லாம் பொய்யானது. அந்த வீடியோ மட்டும் தான் உண்மை.

என் வாழ்க்கையை அழிச்சிட்டாங்க. என்னை அன்றாடம், "டார்ச்சர்' கொடுத்தனர். நான் கல்லூரிக்கு பஸ்சில் ஏறும் போதும், பஸ்சை விட்டு கீழே இறங்கி வந்தா, என் பின்னாடியே வந்து, எனக்கு "டார்ச்சர்' கொடுத்தாங்க. அதனால் தான் நான் இந்த முடிவு எடுத்துக் கொண்டேன். நான் இதை சுய நினைவோடு எழுதுகிறேன். யாரும் என்னிடம் எழுதச் சொல்லி மிரட்டவில்லை. யாரும் இல்லாத சமயம் பார்த்து, நான் இந்த முடிவை எடுத்துக் கொள்கிறேன்.


அம்மா, அப்பா, அரவிந்த் என்னுடைய கடைசி ஆசை இது தான். இதை மட்டும் செய்யுங்க. என் வாழ்க்கையை கெடுத்தவங்கள சும்மா விடாதீங்க’’என்று எழுதப்பட்டிருந்தது.
நன்றி நக்கீரன்..
இது போன்ற செயலுக்கு கடுமையான சட்டம் வந்தால் ஒழிய அடுத்து இது போல நடக்கும் செயலை தடுக்க முடியாது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக