25 ஜூலை, 2012

ராம்தேவ் போராட்டம்...அடுத்து...

புதுடில்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை கொண்டுவர வலியுறுத்தி ராம்தேவ் டில்லி ராம்லீலா மைதானத்தில் நடத்த உள்ள போராட்டத்திற்கு டில்லி போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி பிரபல யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ், டில்லி ராம்லீலா மைதானத்தில் , கறுப்பு பணத்திற்கு எதிராகவும், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தியும் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்துகிறார்.
See full size image 
இதற்காக டில்லி போலீஸ் கமிஷனர், டில்லி மாநகராட்சியிடம் அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ராம்தேவ் கூறுகையில், ஆகஸ்ட் 9-ல் நடத்த உள்ள போராட்டத்திற்கு 20 முதல் 30 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்கின்றனர். உ.பி. பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் எனது ஆதரவாளர்கள் கலந்து கொள்கின்றனர். எனது உதவியாளர் பாலகிருஷ்ணன் மீது பொய் வழக்கு போட்டு கைதுசெய்திருப்பது கண்டனத்திற்குரியது. சி.பி.ஐ.யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என்றார்.

நன்றி தினமலர்...
இவருக்கு எப்படி சொத்து வந்தது சொல்ல இல்லே ,,,,
=================================================================

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலா திருமுகம் மிஸ்ஸிங் சீரிஸ்


பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தரப்பில் கடைசியாக போட்ட வேகத் தடைக்கு இன்னமும் சில நாட்கள் ஆயுசு உள்ளது என்பதே இதன் அர்த்தம்.

முதல்வர் ஜெயலலிதா தமக்குரிய கேள்விகளுக்கு முழுமையாக பதில் கொடுத்தபின், வழக்கை விசாரிக்கும் நீதிபதி மல்லிகார்ஜுனையா நியமனம் செய்யப்பட்டதே செல்லுபடியாகாது என மனு தாக்கல் செய்திருந்தார். சிறப்பு நீதிபதியின் நியமனத்தை முறைப்படி அரசு ஆணையாக வெளியிடவில்லை என்பது அவரது பாயின்ட்.

இதை எதிர்த்து அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, சிறப்பு நீதிபதி நியமனத்தில் சட்ட விதிகள் மீறப்படவில்லை என்று கடந்த 17-ம் தேதி தீர்ப்பளித்தார். விசாரணையை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அந்த தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை), பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு சசிகலாவும் மற்றையவர்களும் வரவே இல்லை. வழமைபோல அவர்களது வக்கீல்கள் தலையைக் காட்டினார்கள். வக்கீல்கள் குமார், கந்தசாமி, மணிசங்கர், அசோகன் ஆகியோர் அடுத்த மனுவை எடுத்து நீட்டினார்கள்.

இவர்கள் இப்படிதான் செய்வார்கள் என்று எமக்கே தெரியும்போது, அரசு வக்கீல் ஆச்சார்யாவுக்கு தெரிந்திருக்காதா? எனவே அவரும் வரவில்லை. அரசு வக்கீலாக சந்தேஷ் ஆஜரானார்.

புதிய மனு என்ன சொல்கிறது? புதிதாக ஏதுமில்லை. “எமது பழைய மனுவை நீங்கள் டிஸ்மிஸ் செய்துவிட்டீர்கள். எனவே, உயர் நீதிமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) அப்பீல் செய்துள்ளோம். இதன் மீதான விசாரணை இன்னும் ஒரு வார காலத்திற்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்பதே அதன் சாராம்சம்.

இதையடுத்து நீதிபதி மல்லிகார்ஜுனையா, விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதற்குள் பழைய மனு உயர் நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டால், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருப்பதாக மனுவுடன் வந்து நிற்பார்கள் வக்கீல்கள் குமார், கந்தசாமி, மணிசங்கர், அசோகன் ஆகியோர்.

நன்றி விறுவிறுப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக