30 நவ., 2012

பொம்மைகளும் அழுகிறது...


பொம்மைகளும் அழுகிறது 
வீட்டில் குழந்தைகள் 
இல்லாததை எண்ணி...


பள்ளிக்கு போகும் 
குழந்தைகள் பை பை 
காட்டவில்லை என்று 
பொம்மைகளுக்கு கோபம்...

பிள்ளைகள் வந்த பின்னும் 
இன்னும் பேசவில்லையாம் 
குழந்தைகள் புகார்....

28 நவ., 2012

காலமாற்றம்....













மகனை சுமக்க 
சுமையில்லை 
அந்த அம்மாக்கு 
வீட்டில் இடமில்லை....
======================
பிள்ளைகள் பெறவில்லை 
மலடி என்றார்கள் 
பிள்ளை பெற்றதால் 
போடி என்றார்கள் 
முதியோர் இல்லத்துக்கு...
=========================
அம்மா இறந்தாதால் 
வீட்டில்  அப்பா 
அனாதை.....
==========================

25 நவ., 2012

தினம் தினம்...


சிவந்தது வானம்
மலர துடித்தது
அல்லி...
நிலவின் வருகைக்கு
முன்னும்

அள்ளிக்கொள்ள
மனமும்
தூக்கத்தின் துக்கத்தில்
கண்களும்
நிலவின் வருகைக்கு
பின்னும்...

தினம் தினம்
மாறாத குணம்....

24 நவ., 2012

குடைகள்....



அழுக்கும் 
சுத்தம் செய்கிறது 
வேலைக்காரி...
==================
எங்கோ பெய்த மழையை 
காட்டிக்கொடுத்தது 
மண்வாசனை...
====================
மழைக்காலத்தில் 
நடக்கும் காளான்கள் 
குடைகள்...
=======================
மழையில் பூத்தது 
கறுப்பு பூக்கள் 
குடைகள்...
=======================

23 நவ., 2012

மலரை வைத்து...

















மலரை வைத்து 
வாசனை உணரலாம் 
எதனை வைத்து 
உன் மனதை அறியலாம் ?
=======================
மல்லிகையும் 
ரோஜாவும் அழகானது 
நீ சூடிய பின்தான்....
========================
கட்டிய மாலை 
அருகில் நீ நின்றால் 
மலரும் பொறாமை 
படுகிறது உன் 
அழகை கண்டு....
===========================

22 நவ., 2012

பனி...











புல்லுக்குள் 
வைரங்கள் 
பனித்துளிகள்....
================
மழை மறந்து போனாலும் 
மறக்கமால் இறங்கியது 
பனி....
=========================
வெள்ளை சுவருக்குள் 
என்னை மறைத்தது 
பனி...
==========================
காலை நடைப்பயணம் 
மறைத்துக்கொண்டது 
நண்பனை பனி...
==========================
இலைகளின் 
இலவச குளியல் 
பனித்துளி...
==========================

21 நவ., 2012

நிழல்...



ஒளிக்கு மட்டுமே 
உறவு 
நிழல்...
===================
தண்ணீரிலும் 
நடக்கலாம் 
நிழலாய்...
===================
என்னை கைப்பிடித்து 
அழைத்துவந்தது 
நிலா..
===================
சூரியன் சந்திரன் 
பிம்பத்தில் 
ஓவியம்...
===================

நானே...













மழையோடு சிலகாலம் 
பழகி ரசிக்கலாம்...

குடைப்பிடித்து 
நடந்தாலும்...

அந்த தூறலில் 
உன்னை நனைத்து 
எல்லை மீறலாம்...

அந்த பலிக்கு 
நானே பலியாகலாம்...

  


19 நவ., 2012

ஆதிக்கம்....












கல்லுக்குள் ஈரம் 
சொல்லுக்குள் நெருப்பு 
இயற்கை...
=====================
கைக்குள் ஈரம் 
கொடுப்பதால் வாழும் 
மனித நேயம்...
===================
மேல் துண்டு 
கால் செருப்பு 
இடுப்புக்கும் கைக்கும்...
=====================
இயற்கையின் விளையாட்டு 
எனது கால்களில் 
அலைகளாய்....
=======================

17 நவ., 2012

குழந்தையின் குமறல் ...


















இரக்கமே இல்லாத 
இதயத்திடம் 
இருக்கவா முடியும்?


இரக்கமில்லா மிருகத்திடம் 
இறக்கதான் பிறந்தேன்...

இன்று நான் 
நாளை நீ 

வன்முறை முன் 
உன் வருகை 
வராமலா போகும்....



16 நவ., 2012

பின்னோக்கி பயணம்...














பின்னோக்கி பயணம் 
தொடர்கிறது
ஆதிவாசியாய்...

மின்சாரமில்லாமலும் 
விலைவாசி உயர்வாலும் 
பொய்க் கொண்டு எழுதும்
மனிதர்களாலும்...

ஜாதி மத 
இன 
வேற்றுமைகளாலும்...

மனித நேயத்தை
தேடிய வண்ணமாய்...

15 நவ., 2012

ஒரு கேள்வி...?




















மலரை தாங்கும்
இதயம்
இன்னல்கள் பல
வந்தாலும் உன்னை
நினைத்தே வாழும்


ரோஜாவை தாலாட்டி
முள்ளாய் மாறிய
இதயம்...



இதை அறிந்தால்
உன் உள்ளம்
குறைந்தாய் போகும்...?

விளம்பரம் மாயாஜாலங்கள் ...


இன்றைய விடுமுறை நாளில் தொலைக்காட்சி தான் நமக்கு பொழுது 
போக்கு... வேலையை விட்டு நிகழ்ச்சிகளை பார்த்தால் எல்லாம் 
தொழில் தான்...விளம்பரம் விளம்பரம் தான்...

போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது விளம்பரங்கள் மூலம் அவர்கள் பொருட்களை வாங்க அல்லது திணிக்க பார்க்கும் நிலை...

அதை எப்படி எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள்...
நமக்கு பிடித்த நடிகர், நடிகை மூலம்...

இதுக்கு இந்த மீடியாக்கள்  போட்டிபோட்டுக்கொண்டு வித விதமாய் ஒவ்வொரு நிகழ்சிகளுக்கு பலமணி நேரம்  போட்டவண்ணமாய் இருப்பதை பார்க்கலாம்...

எப்படி நாம் பிழைக்க வேண்டும் என்று எண்ணும்  அளவுக்கு...
விடுமுறையின் போது தொலைக்காட்சிகள் நமக்கு விளம்பரங்கள் மூலம் சொல்லித்தருகிறது...

அடுத்து எல்லா விளம்பரத்திலும் 99%விழுக்காடு தூமையாக்கலாம்  
நன்றாக இருக்கும் என்ற முன் எச்சரிக்கை வேறு...

விளம்பரம்இங்கு  
வாங்கி விற்கப்படும்    
தொலைக்காட்சிகள்...

12 நவ., 2012

தீபத் திருநாளில்...



தீபத்தின் ஒளியில் 
வறுமை மறையட்டும் 

பட்டாசு சத்தத்தில் 
சாதி மதச்சண்டைகள் 
ஓடட்டும்...

அறியாமை விலகி 
அன்பு வளரட்டும் 

இல்லாமை இல்லாமல் 
இல்லங்கள் நிறையட்டும் 

மனித நேயத்தில் 
மனசுகள் மலரட்டும்...

இத்தனையும் 
இந்த தீபத் திருநாளில் 
கிடைக்க
எனது உள்ளம் கனிந்த 
வாழ்த்துக்கள்....

11 நவ., 2012

ஏன் ?


ஏன் ? என்ற  கேள்விகள் நமக்குள் கேட்க்கும் தினம் தினம் 
அதை தான் இன்று பார்வையில்...
நாம் பேருந்துகளில் பயணிக்கும் போது சில்லரை பாக்கி தராமல் இருக்கும் நடத்துனர்,அதை கேட்டால் நாம் என்னமோ அவரிடம் இனமாய் கேட்பது போன்ற பார்வை...நம்மிடம் இருக்கும் பொருளுக்கு சரியான அனுமதி சீட்டு தராமல் மேற்கொண்டு பணம் பெறுகின்ற நிலை...

நமது வீட்டு தொலைபேசி இணைப்பு பெறும்போதும் இல்லை சரிவர வேலை செய்யாத நிலையில் அழைக்கும் போதும்,அரசாங்க ஊழியர்கள் நம்மிடம் பணத்தை கேட்டு பெறுகின்ற நிலையை என்ன சொல்லுவது?

இவர்கள் அரசாங்கத்திடம் சம்பளம் பெறாமல் வேலை செய்கிறார்களா?
ஏன் நம்மிடனம் சிலர் இப்படி நடக்கிறார்கள்...
இப்படி கிடைக்கிற பணத்தை என்ன சொல்லுவது இனமாய் பெறுவதா ?
இல்லை லஞ்சமா இல்லை தானமா ?  

ஏன் ?நல்ல வேலையில் இருந்துக்கொண்டு இப்படி சிலர் நடக்கிறார்கள்?
ஏன் ஏன் என்று நமக்குள் இப்படி தோன்றும் கேள்விகள் ஏராளாம்...

அதில் இதுவும் ஒன்று...திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை 
ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டை எழுத்து போலதான் இவர்களும் 
தன்னை தானே உணராமல் போக்கும் வரை இது ஒரு தொடர்கதை....

8 நவ., 2012

யாரங்கே















யாரங்கே 
உலகத்தை 
மாசுபடாமல் 
சுற்ற விடுங்களே...

அதுவரை...?

5 நவ., 2012

யாருக்கு கேட்கிறது ?

தவறிப்போன நிலையில் 
யார் செய்த தவறு 
ஒத்த செருப்பு கேட்டதும் 

இன்னும் ஏன் 
நாங்கள் முதிர்கன்னிகளாய் 
இருக்கிறோம்...

என்று கேட்பது...


3 நவ., 2012

எனது ஆயிரமாவது பதிவு....



















எண்ணத்தை 
எடைப்போட்டு 
அதை வரிக்குள் 
அள்ளிப்போட்டு...

வெட்டு ஒன்னு 
துண்டு இரண்டு 
வெட்டிபோட்டு...

ஒவ்வொரு 
தலைப்பாய் 
கூறுப்போட்டு...

சிரிக்க
சிந்திக்க 
தந்த   நிலையில் 
படித்தது 
உங்கள் மனம்...

வளர்ந்தது எனது 
தளம் 

வண்ண வண்ணமாய் 
படங்களும் 
ஆயிரத்தில் அடங்கும்....

சொந்த எண்ணத்தோடு 
சில 
காப்பி பேஸ்டும் 
இதில் அடங்கும் ...

நனறிகள் நன்றிகள் 
சொல்லும் 
எனது உள்ளம் 

மழலை வாழை...,


















மழலையை 
தாலாட்டும் 
வாழை...
======================
சிரித்து 
மகிந்தன  
மழலை. வாழை...
======================
வாழையை 
வளைத்து பார்த்தான் 
வீரன்...
======================
மழலை 
வாலை சொன்னது 
வாழை...
========================

தீபாவளி



















வறுமைக்கு ஒரு நாள் 
விடுமுறை 
தீபாவளி...
---------------------------------------
தலைமுறை கதையை 
வரைமுறையோடு சொன்னது 
தீபாவளி...
---------------------------------------------
தலைமுறையாய் 
செய்முறை சொல்லும் 
தீபாவளி...
============================

1 நவ., 2012

மரமாய்....




















நன்றி மறந்த 
மனிதர்களை 
பார்த்தாலும்...

இன்னும் நிழலை 
தந்த நிலையில்
மரமாய் மனம்...