ஏன் ? என்ற கேள்விகள் நமக்குள் கேட்க்கும் தினம் தினம்
அதை தான் இன்று பார்வையில்...
நாம் பேருந்துகளில் பயணிக்கும் போது சில்லரை பாக்கி தராமல் இருக்கும் நடத்துனர்,அதை கேட்டால் நாம் என்னமோ அவரிடம் இனமாய் கேட்பது போன்ற பார்வை...நம்மிடம் இருக்கும் பொருளுக்கு சரியான அனுமதி சீட்டு தராமல் மேற்கொண்டு பணம் பெறுகின்ற நிலை...
நமது வீட்டு தொலைபேசி இணைப்பு பெறும்போதும் இல்லை சரிவர வேலை செய்யாத நிலையில் அழைக்கும் போதும்,அரசாங்க ஊழியர்கள் நம்மிடம் பணத்தை கேட்டு பெறுகின்ற நிலையை என்ன சொல்லுவது?
இவர்கள் அரசாங்கத்திடம் சம்பளம் பெறாமல் வேலை செய்கிறார்களா?
ஏன் நம்மிடனம் சிலர் இப்படி நடக்கிறார்கள்...
இப்படி கிடைக்கிற பணத்தை என்ன சொல்லுவது இனமாய் பெறுவதா ?
இல்லை லஞ்சமா இல்லை தானமா ?
ஏன் ?நல்ல வேலையில் இருந்துக்கொண்டு இப்படி சிலர் நடக்கிறார்கள்?
ஏன் ஏன் என்று நமக்குள் இப்படி தோன்றும் கேள்விகள் ஏராளாம்...
அதில் இதுவும் ஒன்று...திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை
ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டை எழுத்து போலதான் இவர்களும்
தன்னை தானே உணராமல் போக்கும் வரை இது ஒரு தொடர்கதை....
நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு