30 ஜூன், 2012

8 ஆண்டுக்கு பிறகு பலத்த மழை: அசாம் வெள்ளத்தில் மிதக்கிறது

8 ஆண்டுக்கு பிறகு பலத்த மழை:  அசாம் வெள்ளத்தில் மிதக்கிறது

கவுகாத்தி, ஜூன்.30-

அசாம் மாநிலத்தில் கடந்த ஒருவாரமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரம்ம புத்ரா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அசாமில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மழை தொடர்ந்து பெய்வதால் அசாம் மாநிலத்தின் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த 23 மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏராளமான வீடுகள், குடிசைகள், கால்நடைகள் வெள்ளத் தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

வெள்ளத்தில் வீடு மற்றும் உடமைகளை இழந்து சுமார் 40 லட்சம் பேர் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். எல்லா கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் மக்கள் எங்கு செல்வது என்று தவித்தப்படி உள்ளனர்.

அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் 3 நேரமும் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் எல்லாவற்றையும் இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்க ராணுவமும், தேசிய பேரிடர் குழுவும் அழைக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுடன் விமானப்படை வீரர்களும் ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

8 ஆண்டுகளுக்கு பிறகு அசாம் மாநிலத்தில் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்து விட்டனர். ஏராளமானவர்களை காணவில்லை. எனவே சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதத்தை பார்வையிட பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா இருவரும் விரைவில் அசாம் செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது...
மழை இல்லை என்றாலும் கவலை வந்தாலும் கவலை இது தான் இன்றைய நிலை ....இயற்கையின் சதியில் சில சமயம் விடுபடமுடியாயது தான் 

ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 17 பேர் காயம்

ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 17 பேர் காயம்


ஸ்ரீகாகுளம், ஜூன் 30-

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் நாகர்ஜூனா ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள சிலிண்டர் வெடித்ததைத் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டது. தீ தொடர்ந்து எரிந்த நிலையில் 5வது மாடியில் இருந்த ரசாயன கலவை சாதனங்கள் வெடித்து சிதறின.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 வண்டிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்வம் நடந்த இந்த தொழிற்சாலையில் 200 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை தொழிற்சாலையில் பணியில் இருந்த 17 பேர் மட்டுமே காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேரின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. முதல் கட்ட தகவல்களின்படி சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது என ஸ்ரீகாகுளம் துணை போலீஸ் அதிகாரி அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த முழு தகவல்கள் கிடைக்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கையாக இந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அப்பகுதி கலெக்டர் ஜி. வெங்கட்ராம் ரெட்டி, துணை கலெக்டர் பி. பாஸ்கர் மற்றும் சில உயர் அதிகாரிகள் ஆகியோர் தீ விபத்து நடந்த இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணிக்கின்றனர்
.

மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்: பிரதமருக்கு சிங்களர் கட்சி கடிதம்


தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள்: பிரதமருக்கு சிங்களர் கட்சி கடிதம்

கொழும்பு, ஜூன்.30-

தி.மு.க. சார்பில் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி “டெசோ” மாநாடு விழுப்புரத்தில் நடக்கிறது. இதுதொடர்பாக இலங்கையில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜே.எச்.யூ. (ஜதீகா ஹீலா உருமையா) கட்சி தலைவர் ஒமல்பெ ஷோபிதா தெரோ பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க. நடத்த உள்ள “டெசோ” அமைப்பின் மாநாட்டை தடுத்து நிறுத்துங்கள். ஏனெனில் சுதந்திரமான தனி ஈழம் கோரிக்கை விடுப்பதன் மூலம் அது இலங்கையில் இறையாண்மைக்கும், ஒரு மைப்பாட்டுக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமையும்.

மேலும் தனிஈழம் கோரிக்கையின் மூலம் இறுதிகட்ட போருக்கு பின்பு உருவான நல்லெண்ணம், நல்லுறவு போன்றவை அழிந்து மீண்டும் மோசமான விளைவுகள் ஏற்படும்.

1976-ம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த தனிஈழம் தீர்மானத்தினால் இலங்கையில் 30 ஆண்டுகளாக தீவிரவாதமும், போரும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் இந்தியாவுக்குள் எதிர்ப்பு சக்திகள் ஊடுருவ இலங்கை ஒருபோதும் அனுமதித்த தில்லை என்பதை தங்களுக்கு (மன்மோகன்சிங்குக்கு) நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும் எதிர்காலத்திலும் அந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.அழகிரி பத்திரிகை ஆசிரியருக்கு அதிமுக அமைச்சர், எம்எல்ஏக்கள் விருது வழங்கி பாராட்டு!


திருச்சியில் தமிழ் அறிஞர்களுக்கு 2011க்கான விருது வழங்கும் விழா மற்றும் சித்திரை கலை விழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி 2012 அன்று திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், கலைஞரின் மு.க.அழகிரி என்ற பெயரில் மாத இதழ் நடத்தி வரும் அதன் ஆசிரியர் 'மானோஸ் எழுதிய ஜெருசலேம் என்ற நூல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி விருதை வழங்கினார். அப்போது அதிமுக திருச்சி எம்பி குமார், அதிமுக எம்எல்ஏக்கள் மனோகரன், பரஞ்சோதி, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் ஆசிரியர் மானோஸ்க்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்த விழா நடந்தபோதே ஆச்சரியமான விஷயம் இதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று திருச்சி திமுகவினர் தெரிவித்தனர். ஆனால் இந்த விழா நடந்து இரு மாதங்களுக்குப் பிறகு, கலைஞரின் மு.க.அழகிரி மாத இதழின் ஆசிரியர் குழுவினர், விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்து திருச்சி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுக்கு அவரை (மானோஸ்) எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்றும், விழா ஏற்பாட்டு செய்யும்போது கூட கவனிக்கவில்லையா என்றும் அதிமுக மந்திரியும், எம்எல்ஏக்களும் விழா ஏற்பாடு செய்தவர்களிடம் தங்களின் கோபத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

விழா ஏற்பாடு செய்தவர்களை விடுங்க, விருது கொடுக்கும்போது போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கு முன்னாடி நீங்க யோசிச்சீங்களா என்று மேலிடத்தில் கேட்பாங்களே அதற்கு என்ன பதில் சொல்லப்போறீங்க என்று மந்திரியிடமும், எம்எல்ஏக்களிடமும் சொல்லி திருச்சி அதிமுகவினரே கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நன்றி நக்கீரன்

விருது கொடுத்தது ஒரு குற்றமா ?என்ன ஒரு கொடுமை சார் ?

29 ஜூன், 2012

சீருடை அணியாததால் வகுப்பறையில் மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை:

கொல்கத்தா, ஜூன். 29-
சீருடை அணியாததால்
 வகுப்பறையில் மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை: விசாரணைக்கு உத்தரவு 
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கைகட்டா என்ற ஊரில் பெரிகோபால்பூர் ஆதர்ஷா உயர்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இங்கு 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூன்று பேர் சீருடை அணியாமல் வகுப்புக்கு வந்தனர். மற்ற ஆசிரியைகள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பாடம் நடத்தி விட்டு சென்றனர்.

ஆனால் புவியியல் ஆசிரியை பிபாஷா தாக்கூர், சீருடை அணியாத மாணவிகள் 3 பேரையும் வகுப்பறையில் இருந்து வெளியேற்றினார். அவர்களில் ஒரு மாணவி தான் இரண்டு நாட்களாக விடுமுறையில் இருந்தேன். எனவே இன்று எந்த சீருடை என்று தெரியாததால் சாதாரண உடையில் வந்தேன். இனி முறையான சீருடை அணிந்து வருகிறேன் என்று விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கம் ஆசிரியை பிபாஷா தாக்கூருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அந்த மாணவியை மட்டும் வகுப்பறைக்குள் அழைத்தார். அந்த பள்ளி இருபாலரும் பயிலும் பள்ளி ஆகும். சக மாணவ-மாணவிகள் முன்பு அந்த மாணவியின் கால் சட்டையை கிழித்து எறிந்தார். மேல் சட்டையுடன் அரை நிர்வாண நிலையில், வகுப்பு முடியும் வரை அங்கேயே அந்த மாணவியை நிற்க வைத்தார்.

பள்ளி முடிந்த உடன் அரை நிர்வாண நிலையிலேயே அழுதபடி அந்த மாணவி வீட்டுக்குச் சென்றாள். நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் விளக்கினாள். அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த தகவல் மற்ற மாணவிகளின் பெற்றோருக்கும் தெரிய வரவே அனைவரும் சேர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியையை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களை பள்ளி நிர்வாகம் சமாதானம் செய்து அனுப்பி வைத்தது.

இந்த விவகாரம் மாநில கல்வி அலுவலகம் வரை சென்றதால் இது பற்றி விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு கல்வி மந்திரி பிரத்யா பாசு உத்தரவிட்டுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


நேற்று ஹைத்தராபாத் இருக்கும் ஒரு பள்ளியில் பேசியதற்கு 
வாயில் டேப் ஒட்டி வாயாடி என்று கூறி வெளியே நிற்க வைத்த 
சம்பவம்..அடுத்து இன்று இதுபோல்...

இது என்ன கொடுமை...
ஆசிரியர்கள் முன்மாதிரியாய் இருக்காமல் இபப்டி இருந்தால்....

28 ஜூன், 2012

புரட்சிகர மாணவர்கள் 100 பேர் கைது-

பள்ளி கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை: புரட்சிகர மாணவர்கள்
 100 பேர் கைது- போலீசாருடன் மோதல்-கைகலப்பு

சென்னை, ஜூன். 28-

அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடமையாக்க வலியுறுத்தியும் இலவச கட்டாய கல்வி வழங்க கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். பகல் 11 மணி அளவில் ஆங்காங்கே நின்றிருந்த மாணவர்களும் பெண்களும் திடீரென ஊர்வலமாக புறப்பட்டு பள்ளி கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் கல்லூரி சாலையில் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது போலீசாருக்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றபோது அனைவரும் கை கோர்த்தபடி தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். இதனால் அவர்களை வேனில் ஏற்ற சிரமம் ஏற்பட்டது.

ஒவ்வொருவரையும் குண்டு கட்டாக தூக்கி வேனுக்குள் ஏற்றினார்கள். முரண்டு பிடித்த வாலிபர்களை தரதரவென இழுத்து சென்று வேனில் கொண்டு சென்றனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு நடந்தது. வேனில் ஏற்றப்பட்ட வாலிபர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் வேனுக்குள் அவர்கள் தாக்கப்பட்டனர்.

கைக்குழந்தையுடன் மறியலில் ஈடுபட்ட பெண்களையும் போலீசார் வேனில் ஏற்றினார்கள். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைதானர்கள். வாலிபர்களையும் பெண்களையும் இழுத்துச் சென்றதால் ஆங்காங்கே செருப்புகள் சிதறிக் கிடந்தன. சுமார் 30 நிமிட நேரம் அந்த பகுதியே போர்க்களமாக காணப்பட்டது.

திருமாவளவனுக்கு பிடிவாரண்டு....

 

கொலை முயற்சி வழக்கில் திருமாவளவனுக்கு பிடிவாரண்டு

கொலை முயற்சி, பஸ் கொளுத்திய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்பட 4 பேருக்கு பிடி வாரண்டை பிறப்பித்து விழுப்புரம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

கடந்த
1-6-2008-ம் ஆண்டு புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு போக்குவரத்துக்கழக பஸ் சென்று கொண்டிருந்தது.
பஸ் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வரும் வழியில் திருபுவனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கினர். அப்போது சுமார் 20 பேர் பஸ்சின் முன் பக்க, பின் பக்க படிக்கட்டு வழியாக ஏறினர்.
விழுப்புரம்-புதுச்சேரி ரோட்டில் எல்.ஆர். பாளையம் அருகில் பஸ் வரும்போது பஸ்சில் ஏறிய திருபுவனையை சேர்ந்த மணிபாலன், பத்மநாபன், சந்திரசேகர், திருமாஇளங்கோ, எட்டியான் என்கிற வேங்கையன், விஜயன், விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர், சுப்பிரமணி, பாசறை பாலு, சண்முகம், விஜி, தேவநாதன், பார்த்தசாரதி, வடிவேலன், சவுந்திரராஜன், பெருமாள், மகேந்திரன் ஆகியோர் பஸ் டிரைவர் மோகனை தாக்கி பஸ்சை நிறுத்தக்கூறினர்.
பின்னர் படிக்கட்டுகளில் வழியை விடாமல் நமது சமுதாயத்தை சேர்ந்தவரை கடலூர் மாவட்டத்தில் வெட்டிக்கொலை செய்து விட்டார்கள். அதனால் நமது தலைவர் திருமாவளவன் கூறியதுபோல் பஸ்சில் உள்ளவர்களை அடித்து, உதைத்து, வெட்டி கொலை செய்யுங்கள், பஸ்சை கொளுத்துங்கள் என்று கூறினார்கள்.

இதை தடுக்க முயன்ற பஸ் கண்டக்டர் ஆறுமுகத்தை தலையில் வெட்டினர். டிரைவர் மோகனை தடியால் தாக்கினர். மேலும் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு தீ வைத்து கொளுத்திவிட்டு ஆறுமுகத்திடம் இருந்த ரூ.5,500-ஐ பறித்துக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து வளவனூர் போலீசார் மணிபாலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-2ல் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்த விழுப்புரம் சுரேந்திரன், சித்தாமூர் சுப்ரமணி, பாசறை பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகிய 4 பேருக்கு நேற்று மாஜிஸ்திரேட்டு எல்.கலைவாணி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

27 ஜூன், 2012

அஜீத் புதிய படமும் பில்லா 2 ம்...




அஜித்தின், பில்லா-2 சூட்டிங் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதால் ரிலீஸ்க்கான பரபரப்பு ஆரம்பமாகி இருக்கிறது.
பில்லா 2 தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக உலகளவில் 1200 திரையில் திரையிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பில்லா 2 படத்தில் ஆறாவதாக ஒரு பாடல் இருக்கிறதாம்.

அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி இருக்கிறது. தூத்துக்குடியில் சாதாரண டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக உருவாகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்ட்டி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி சூட்டிங் அனைத்தும் ரஷ்யா, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து விட்டதால், இப்போது ரிலீஸ்க்கான பரபரப்பு துவங்கி இருக்கிறது.

மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதற்கு பில்லா-2 படத்தின் மிரட்டலான படக்காட்சிகளே சான்று.


 பில்லா 2 படம் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ள பில்லா 2 படம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. சென்சாருக்கு போன இடத்தில் பல இடங்களில் கை வைக்கப்பட்டது. மேலும் 'ஏ' சான்றிதழ் கிடைத்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போகிறது. ஜூன் 22ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கார்த்தியின் சகுனி அதே நாளி்ல் ரிலீஸானதால் படத்தின் வியாபாரத்தை கணக்கில் கொண்டு ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூன் 29ம் தேதியும் படம் ரிலீஸ் இல்லையாம். மாறாக வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமையன்று படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

ஜூலை 13லாவது ரிலீஸ் செய்துவிடுவார்களா என்று அஜீத் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.


அடுத்ததாக அஜித்குமார் நடிக்கும் விஷ்ணுவர்தன் படத்தை பற்றிய செய்திகள் ரசிகர்களை பரபரப்பாக்குகின்றன. விஷ்ணுவர்தன் இந்த படத்தை துவங்கும் போதே ஆர்யா, நயன்தாரா என பல முக்கிய நடிகர்களை படத்தில் சேர்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பல விபத்துகளில் சிக்கி தனது உடலில் பல அறுவை சிகிச்சைகளை செய்துள்ள அஜித்துக்கு மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறை கூறியுள்ளனர். ஆனால் அஜித் தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து ரிஸ்கான காட்சிகளில் நடித்துவருகிறார்.

விஷ்ணுவர்தன் படத்திற்காக அஜித் கடந்த ஏழு நாட்களாக தினமும் ஐந்தரை மணிநேரம் உடற்பயிற்சி செய்துள்ளார். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பு இருக்க வேண்டுமென்பதற்காக கவனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார் அஜித்.

அஜித் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் அவரை மேலும் ஸ்டைலாக காட்ட வேண்டும் என்பதற்காக பிரத்யேகமான ஏற்பாடுகளை விஷ்ணுவர்தன் செய்திருக்கிறாராம்.



கட்டாயக் கல்வியாய்...




இணையத்தில்  பார்த்தேன் 
எல்லாம் காதல் பட்ட 
காயங்களாய் காட்சி...


வயதுக்கு வருமுன்னே 
வந்து போன காதலை 
சொல்லும் சாலைகளாய்...


சட்டம் சொல்லாத 
கட்டாயக் கல்வியாய்...


வலியும் வேதனையும் 
வந்தால் தானே தெரியும் 
என்று சொல்லும் வாலிபம் 


நம்பிக்கை என்னும் வழியை 
வாழ்க்கை என்னும் பாடத்தை 
பார்க்க,படிக்க 
விருப்பமில்லாமலே 
இன்னும் இங்கு 

'விஸ்வரூபம்'கதையின் ஓட்டம்...



 



இந்திய திரையுலகில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'விஸ்வரூபம்'. கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்க, கமல் இயக்கி வருகிறார். ஷங்கர்-இஷான்-லாய் இசையமைத்து வருகிறார்கள்.

'விஸ்வரூபம்' ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை. இதுவரை கமல் நடித்த படங்கள் எல்லாவற்றையும் விட அதிக பொருட்செலவில் தயாராகும் படம் 'விஸ்வரூபம்'.

'விஸ்வரூபம்' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் LEE WHITTAKER. இவர் மைக்கேல் பே இயக்கிய 'PEARL HARBOUR' படத்திற்கு ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்தவர். அர்னால்ட், ஜார்ஜ் க்ளூனி, ப்ரூஸ் வில்லிஸ் போன்றோருடன் பணியாற்றியிருக்கிறார். இவர் பணியாற்றும் முதல் இந்திய திரைப்படம் இது தான்.

முதலில் இப்படத்தில் பணியாற்ற படக்குழு LEE WHITTAKER-ரிடம் கேட்ட போது, முடியாது என்று தவிர்த்து விட்டாராம். பின்னர் கமல் நடித்த படங்களில் இருந்து சண்டைகாட்சிகளை போட்டு காண்பித்து இருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளில் கமலின் ஈடுபாட்டை பார்த்ததும் ஒப்புக் கொண்டுள்ளார்.

கமல் மற்றும் ராகுல் போஸ் இருவரும் மோதும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியை வடிவமைத்து வருகிறார் LEE WHITTAKER.கமல் ரிஸ்க்கான சண்டைக்காட்சியில் எல்லாம் டூப் இல்லாமல் தானாகவே நடித்து கொண்டு இருக்கிறார். கமலுக்கு சினிமாவின் மீதுள்ள ஈடுபாட்டைக் கண்டு அசந்து போனாராம் லீ.

சண்டைக்காட்சியில் கமலின் விஸ்வரூபத்தை பார்த்து மெய் சிலிர்த்து நிற்கிறதாம் படக்குழு.இப்படி ஒரு போக்குடன் போகும் இந்த படத்துக்கு

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருதப் பெயர், எனவே அதை கமல்ஹாசன் மாற்ற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து கமல்ஹாசனுக்கு கடிதமும் அனுப்பியுள்ளது.

கமல்ஹாசனின் புதிய படங்களுக்கு ஏதாவது பிரச்சினை கிளம்புவது வாடிக்கையாகி விட்டது. சண்டியர் படத் தலைப்புக்கு புதிய தமிழகம் கட்சியினர் பிரச்சினை எழுப்பினர். இதையடுத்து படத் தலைப்பை விருமாண்டி என மாற்றினார் கமல். அந்தத் தலைப்புக்கும், படத்துக்கும் அபாரமான வரவேற்பு கிடைத்தது.

தொடர்ந்து தசாவதாரம் படத்துக்கும், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்துக்கும் கூட சிக்கல்கள் வந்தன. இந்த நிலையில் விஸ்வரூபம் படத்துக்கும் ஒரு சின்னப் பிரச்சினை கிளம்பியுள்ளது.

இந்து மக்கள் கட்சதியின் தலைவரான கண்ணன் இதுதொடர்பாக சர்ச்சையை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

நீங்கள் தமிழகத்தில் வாழ்கிறீர்கள். பேரும் புகழும் தமிழ் படங்கள் மூலமே உங்களுக்கு கிடைத்துள்ளது. பிறகு தமிழ் மொழியை கண்டுகொள்ளாதது ஏன்?

விஸ்வரூபம் என்பது சமஸ்கிருத வார்த்தை. அதை மாற்றி நல்ல தமிழ் பெயராக வைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

எங்களது எண்ணங்களை கமல் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழ் மொழி மீதான அக்கறையால் இதை தெரிவிக்கிறோம். தமிழில் பெயர் வைக்காத நிலையில் அதற்கு அரசின் கேளிக்கை வரி சலுகையும் கிடைக்க வாய்ப்பில்லை என்றார் அவர்.

நன்றி யாழ்


முன்பு மும்பை எக்ஸ்பிராஸ்,அடுத்து சண்டியர் ,விரும்பான்டியாய் மாறியதும் இப்ப இதுக்குமா ?ஹாஹா...

அடுத்து இப்படிதான் கதை என்று...ஒரு முன்னோட்டம்...அட நான் சொல்லவில்லை வந்த செய்திதாங்க 


அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடிக்க நினைத்த ஒரு நடுத்தர வர்கத் தமிழ்ப் பெண், காதலின்றி கடிமணம் புரிகிறாள்.

விஸ் என்கிற விஸ்வநாதனுக்கும், நிரு என்கிற நிருபமாவிற்கும் திருமணம் நடந்தேறி 3 வருட காதல் ஊடல் கூடலின்றி இல்லறம் நடத்தி, பி.எச்.டி.யும் முடித்து வேலைக்கும் செல்கிறாள் டாக்டர். நிருபமா விஸ்வநாத். விஸ்வநாத்திற்கும் இந்த ஏற்பாடு சௌகரியமாக இருக்கிறது. தனது கதக் நடனப் பள்ளியை சம்சார இடைஞ்சல்களின்றி நளினமாக நடத்தி வருகிறார் விஸ்வநாத், எனினும் ஆசை யாரை விட்டு வைத்தது. டாக்டர் நிருபமா வேறு புதுக்கனவுகள் காணத்துவங்குகிறாள். அப்போது படிப்புக்காக போட்டுக் கொண்ட கால்கட்டு இடறுகிறது. தன் திருமணத்தில் திரு தன்மை குறைவாக உள்ளதை உணர்ந்து நிருபமா அந்த திருமணத்தை துறக்க விரும்புகிறாள்.

மணமுறிவிற்கு என்ன காரணம் சொல்லுவதெனக் குழம்புகிறாள். குறை சொல்லக் காரணங்களே இல்லாத விஸ்வநாதின் ஒழுக்கத்தில் ஏதாவது களங்கம் இல்லாமலா போய்விடும்? என்ற நம்பிக்கையில் விஸ்வநாத்திடம் ஏதாவது ஒழுக்கக்கேடுகள் உள்ளதா என்பதை துப்பறிய ஒரு ஆளை அமர்த்துகிறாள் டாக்டர். நிருபமா.

கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது.எழுதி, இயக்கி, தயாரித்தவர் கமல்ஹாசன்.

கதை இப்படிதானா ?இல்லை இது வழக்கம் போல விடும்  விஸ்வரூபம் கதையா...படம் வந்தால் தான் தெரியும்....

26 ஜூன், 2012

கார்த்தி! அரசியலுக்கு வாங்க... கூவி கூவி அழைப்பது

அரசியல் படத்தில் நடித்தது ஏன்?: நடிகர் கார்த்தி

கார்த்தி நடித்த 'சகுனி' படம் கடந்த 22-ந்தேதி ரிலீசானது. மொத்தம் 1,154 தியேட்டர்களில் 'சகுனி' திரையிடப்பட்டு 'சிறுத்தை' படத்தின் வசூலை 3 நாட்களில் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 'சகுனி' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் கமலா தியேட்டர் அதிபர் வள்ளியப்பன் பேசும்போது, சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் கார்த்தி அரசியலுக்கு வர வேண்டும் என்றார். அதற்கு முன்னோட்டமாக அரசியல் படமான 'சகுனி'யில் நடித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் பேசும்போது, கார்த்தி தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வருகிறார். அதற்காக அவர் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. கார்த்தி அரசியலுக்கு வரக்கூடாது என்றார். நடிகர் நாசர் பேசும்போது, கார்த்தியை அரசியலுக்கு அழைக்க வேண்டாம் என்றார்.
பின்னர் கார்த்தி பேசிய தாவது:-

'சகுனி' படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சிரித்து ரசித்து பார்க்கிறார்கள். வசூலில் எனது முந்தைய படத்தை விட பெரிய அளவில் சகுனி போய் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சகுனி அரசியல் கதையாக இருந்தாலும் வலுவாக அரசியலுக்குள் செல்லாமல் காமெடியாக நகர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த உணர்வில்தான் இந்த படத்தில் நடிக்கவும் செய்தேன்.

படத்தில் ரஜினி, கமல் என பெயர் சொல்லி அழைப்பது ரசிக்கும்படி இருந்தது. ராதிகா, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக அமைந்தன. ஆக்ஷன் இல்லாமல் ஜாலியாக இருக்க ஆசைப்பட்டோம். அப்படியே கதை அமைந்தது. வெற்றியும் பெற்றுள்ளது.
இவ்வாறு கார்த்தி பேசினார்.

படத்தில் நடித்த அனுபவம் போதும் அரசியலுக்கு வாங்க...
கூவி கூவி அழைப்பது இவர் மார்கெட் இழக்கவா ?

இது ரொம்ப ஓவருங்க.....இப்படி ஒரு ஆசை இருந்தால் வந்த நடிகரை 
கார்த்தி பாருங்க இல்லே உங்கள் பெயரை க் வைத்து பாருங்க புரிங்க...

ஒரு இனிய உதயத்துக்கு தயாராகுது தழுவாத "கை'கள்!

 

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக வீராவேசம் பேசிய தே.மு.தி.க., அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது. தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களில், விஜயகாந்த்தை தவிர்த்து, மற்றவர்கள் அனைவரும், முதன் முறையாக ஜனாதிபதி தேர்தலை சந்திக்கின்றனர். எனவே, இதில் தங்களுக்குள்ள அதிகாரத்தை விட்டுத்தர, அவர்கள் முன்வரவில்லை. இதனால், தலைமையின் முடிவை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

புறக்கணிப்பு:தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க்களுடன், 5,104 ஓட்டுக்களை வைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக, சமீபத்தில் அறிவித்தது. இதற்கு, அக்கட்சி சொன்ன காரணம், "நதிநீர் பிரச்னை, மீனவர் பிரச்னை உள்ளிட்டவற்றில், மத்திய அரசால், தமிழக மக்களுக்கு, எந்த தீர்வும் கிடைக்கவில்லை' என்பது தான்.இதைக் கேட்டதும், காங்கிரஸ் நிர்வாகிகள், "தே.மு.தி.க., தேர்தலை புறக்கணிக்கக் கூடாது' என்று, கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் சிலர், தே.மு.தி.க., நிர்வாகிகளை சந்தித்து, இதுகுறித்து ரகசிய பேச்சும் நடத்தி வருகின்றனர். தி.மு.க., தரப்பிலும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. சங்மாவிற்கு ஆதரவாக, விஜயகாந்திடம் பேசப்படும் என்று அறிவித்த பா.ஜ., நிர்வாகிகளும், இது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தலை கால் புரியலை...:அ.தி.மு.க.,வை தவிர்த்து, முக்கிய தேசிய கட்சிகள் தங்களை தொடர்பு கொண்டதும், தே.மு.தி.க., தரப்பில், குறிப்பாக எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில், "நம்ம மவுசு நமக்கே தெரியலை' என்று பேசிக் கொண்டனர். நமக்கு கிடைக்கும் கொஞ்ச அந்தஸ்தையும், இழக்கக் கூடாது என, ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை, நாமும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் நீர்த்துப் போகாமல் இருக்க வேண்டும் என்பது, அவர்கள் எண்ணமாக உள்ளது.இதனால், தே.மு.தி.க., தலைமைக்கு, நெருக்கடி கொடுக்கத் துவங்கியுள்ளனர். தேசிய அரசியலில் கால் வைக்க வேண்டும் என்றால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், கட்சித் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தழுவாத "கை'களாக இருந்து என்ன பயன், ஒரு இனிய உதயத்துக்கு வழி வகுப்போம் என, குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

உசுப்பேத்தி, உசுப்பேத்தி...:தே.மு.தி.க., தலைமை, ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அதற்கு,"பல்ஸ்' பார்த்துள்ளது என்பதே உண்மை என, கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். புறக்கணிப்பை வாபஸ் பெறுவது குறித்து, நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து முடிவு எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டு, எதிர்காலத்தில், தங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில், குறிப்பாக, ஜெயிக்கிற பக்கம் தாவுவதற்கு, இப்பவே தயாராகி விட்டனர் என்பதே உண்மை.மாநிலத்தில், ஆளுங்கட்சிக்கு வேண்டாதவர்களாகி, பிரயோஜனமில்லை என்றாகி விட்டது. மத்தியிலாவது, கிடைக்கிற வாய்ப்பை வளைச்சுப் போடுங்கோ என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை, சிலர் உசுப்பி விட்டுள்ளனர்.
நன்றி தினமலர்:
இது கட்சியை குழப்பும் நிலையா இல்லையா எட்டப்பர்கள் சதியா 
வதந்தியா ?பொறுத்திருந்து பார்க்கலாம் ...அரசியல் களம் கலை கட்ட துவங்கிவிட்டது......

"இடமாறுதல் செய்தாலும் எனக்கு கவலையில்லை': கலெக்டர் ஆவேசம்


 
சேலம்:சேலம் அங்கம்மாள் காலனி பிரச்னையில், அங்கு வாழும் மக்களை, தமிழக அரசு ஆதரிக்கும் போது, கலெக்டர் ஏற்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு, ""அரசே இடமாற்றம் செய்தாலும், அதைப் பற்றி எனக்கு கவலையில்லை,'' என, மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் ஆவேசமாக கூறினார்.
சேலம் மாநகரின் தலையாய பிரச்னைகளுள் ஒன்றாகி விட்டது, அங்கம்மாள் காலனி. தி.மு.க., ஆட்சியில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அங்கிருந்த, 30 குடும்பத்தினரை வெளியேற்றி விட்டு, அந்த நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்பட்டது.நிலத்தை மீட்டுத் தருமாறு, அங்கம்மாள் காலனி மக்கள், பல்வேறு போராட்டங்களை நடத்தினர். முதல்வர் ஜெயலலிதாவும், தேர்தல் பிரசாரத்தின் போது, நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், அங்கம்மாள் காலனி பிரச்னை தொடர்பாக, வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கைது செய்யப்பட்டனர். அதன்பின், அந்த இடத்தில், வெளியேற்றப்பட்ட மக்கள், குடிசை போட்டு அமர்ந்தனர்.கடந்த 3ம் தேதி நள்ளிரவில், மர்ம நபர்கள், அங்குள்ள குடிசைகளை தீயிட்டு கொளுத்தினர். இந்த வழக்கில், வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட, 30 பேர் மீது, வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, வீரபாண்டி ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.அங்கம்மாள் காலனி வழக்கில், அலட்சியமாக செயல்பட்டதாக, போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்ளிட்டோரை அதிரடியாக இடமாற்றம் செய்து, அரசு உத்தரவிட்டது.

குடிசைகளை இழந்த அங்கம்மாள் காலனி மக்கள், தங்களுக்கு மீண்டும் அதே இடத்தில் வசிப்பதற்கான வாய்ப்பை, மாவட்ட கலெக்டர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்; முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி, முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக கொடுத்த அறிக்கையை, ரத்து செய்ய வேண்டும்; கலெக்டர் நேரடியாக இடத்தை பார்வையிட்டு, அந்த இடத்தில் வீடு கட்டி அமர்வதற்கு, வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளோடு, சேலம் கலெக்டர் மகரபூஷணத்தை சந்தித்து மனு அளித்தனர். இதற்கு, நிலத்துக்கு உரிய மூலப்பத்திரத்தை, முதலில் கொண்டு வாருங்கள்; பின், பேசிக் கொள்ளலாம் என கூறி, அவர்களை மாவட்ட கலெக்டர் வெளியில் அனுப்பியுள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த மக்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில், வெயிலில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாயம் கிடைக்கும் வரை, இந்த இடத்தில் இருந்து போகமாட்டோம் என, தலையில் முக்காடு போட்டபடி, நீண்ட நேரம் இருந்தனர்.அங்கம்மாள் காலனி மக்களால், பிரச்னை எழுந்து விடக்கூடாது என்பதற்காக, உதவி கமிஷனர் ரவி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இப்பிரச்னை குறித்து, கலெக்டர் மகரபூஷணத்தை, நிருபர்கள் சந்தித்த போது, அவர் கூறியதாவது:இது, பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது. அந்த பிரச்னையை, டி.ஆர்.ஓ., கூறுவார். ஆர்.டி.ஓ., போட்ட உத்தரவை ரத்து செய்ய, எங்களுக்கு அதிகாரமில்லை. உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் வெளியில் காத்திருந்தால் இருக்கட்டும்; ஒரு நிலம் என்று இருந்தால், அதற்கு மூலப்பத்திரம் ஒன்று இருக்கும். அதைத் தான் நான் கேட்டேன் என்றார்."அங்கம்மாள் காலனி பிரச்னை நீண்டு கொண்டே போகிறதே, இதற்கு ஒரு முடிவு ஏற்படாதா, தமிழக அரசு அங்குள்ள மக்களை ஆதரிக்கும்போது, கலெக்டர் ஏன் ஆதரிக்க மறுக்கிறார்' என, நிருபர்கள் கேட்டபோது, ""இந்த பிரச்னையில், அரசு என்னை இடமாற்றம் செய்தாலும், எந்த கவலையுமில்லை. இதைவிட்டு, வேறு ஒரு பணிக்கு தான் செல்லப் போகிறேன்,'' என, ஆவேசத்துடனும், சற்று குழப்பத்துடனும் பதில் அளித்தார்.

அங்கம்மாள் காலனி விவகாரத்தில், கலெக்டர் அதிரடியாக இடமாற்றம் குறித்து பேசியது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினமலர் 

25 ஜூன், 2012

சொத்துகுவிப்பு வழக்கு: நீதிபதிக்கு எதிராக புது மனு


 
பெங்களூரு: சொத்துகுவிப்பு வழக்‌கை விசாரித்து வரும் நீதிபதி இனி விசாரிக்க கூடாது என தமிழக முதல்வர் ஜெ., மற்றும் சசிகலா தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று நடந்த விசாரணையில் ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை.

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்டில் நடந்து வருகிறது. சிறப்பு கோர்ட் நீதிபதி மல்லிகார்ஜூனையா விசாரித்து வருகிறார். இந்த வழக்கி்ல் ஏற்கனவே முதல்வர் ஜெ. ஆஜராகி , பல கேள்விகளுக்கு நீதிபதி மல்லிகார்ஜூனையா முன்பதில் அளித்துள்ளார். சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்குமுன் கோர்ட்டில் சசிகலா தாக்கல் செய்த மனுவில் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் ஓய்வு கோரியும், கோர்ட்டில் ஆஜராவாதிலிருந்து விலக்கு கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

புது மனு தாக்கல்: இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் ஜெயலலிதா , சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து 4 ‌பேர் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நீதிபதியாக உள்ள மல்லிகார்ஜூனையா நியமனம் செல்லாது எனவும், அவரிடம் அளித்துள்ள பதில்கள் அனைத்தும் செல்லாதது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நீதிபதி மல்லிகார்ஜூனையாவுக்கு முன்பு பட்சாபுரா என்பவர் நீதிபதியாக இருந்தார். அவர் ஓய்வு பெற்றப்பின் பதவி உயர்வுமூலம் மல்லிகார்ஜூனையா நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. ‌ அவர் சிறப்பு கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டதாக இதுவரை உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜூனையா, விசாரணையை ஜூலை 3-ம் தேதி தள்ளி வைத்தார்.



நன்றி தினமலர் 

ராகுல் காந்தியை இழிவுபடுத்தி காட்சி: நடிகர் கார்த்தி வீட்டு முன்பு போராட்டம்


கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அருண்பிரசாத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

’’கடந்த வெள்ளியன்று (22-ந்தேதி) வெளியான சகுனி படத்தில் இந்திய தேசிய காங்கிரசின் இளம் தலைவர் ராகுல் காந்தியை இழிவு படுத்தும் முறையில் அவரின் பெயரை குறிப்பிட்டு பேசுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த படத்தில் அரசியல் சம்பவங்களை மையப்படுத்தி படம் எடுத்துள்ளனர். ஆனால் தேவையில் லாமல் ராகுல் காந்தியின் பெயரை இழுத்து அவரை இழிவுபடுத்துவது போல் காட்சி அமைத்துள்ளது உள்நோக்கத்துடன் யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்துள்ளனர் என தோன்றுகிறது.

எனவே இதில் எங்கள் கட்சி தலைவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி வருத்தம் தெரிவிக் கவில்லை எனில் படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

மேலும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கார்த்தி, சந்தானம் ஆகியோர் வீடுகள் முன்பும் போராட்டம் நடத்துவோம் என்றும், படத்தை திரையிடவிடமாட்டோம் என்றும் தெரிவித்துக் கொள் கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

நன்றி நக்கீரன் 

கார்த்தி நடித்த சகுனி - ”கார்த்தியின் முதல் சறுக்கல்”என்று சொல்லும் நேரம் 
இப்படி செய்தால் படம் ஹிட்டாகிவிடுமே,படத்துக்கு இது ஒரு விளம்பரம் தான் 

24 ஜூன், 2012

பழகிவிட்டால்...சிரிக்க மட்டும்,


என்னாப்பா நம்ம கட்சி ஆபிஸ், சிறைசாலை மாற்றி விட்டார் தலைவர் 

இப்படி இருந்து பழகிவிட்டால் பயப்பட தேவையில்லை அல்லவா அதுக்கு தான்...

===============================================
என்ன நம்ம கட்சி மாநாட்டு பந்தல் சிறைசாலை போல செய்து விட்டார்கள் ஏன் ?

சிறை சென்று வந்த தலைவருக்கும் . தொண்டர்களுக்கு பாராட்டும் மாநாடு தானே இது! இருந்த இடத்தை மறக்காமல் இருக்கத்தான் 
இந்த ஏற்ப்பாடு =================================================

ஷங்கரின் புதிய படம் ஐ! கதாநாயகன் விக்ரம்!

இளையதளபதி விஜய் நடித்த நண்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கப்போகும் புதிய படங்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில் அவர் இயக்கும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீயான் விக்ரம் நாயகனாக நடிக்கும் அந்த படத்திற்கு ஐ என தலைப்பிடப்பட்டுள்ளது.

வெற்றிப்பட தயாரிப்பாளர் ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதல்முறையாக ஷங்கருடன் இணைகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சமந்தாவும், முக்கிய வேடத்தில் மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபி, சிவாஜி கணேசனின் மூத்த மகனும் நடிகர் பிரபுவின் அண்ணனுமான ஜி.ராம்குமார், சந்தானம் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐ என்பதற்கு அழகு, அரசன், ஆசான், வியப்பு, மேன்மை, எழுத்து, எசமானன், நுண்மை, அம்பு, ஐயம் என பல பொருள்கள் உள்ளன. இவற்றின் கலவையாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜுலை 15ல் சென்னையில் தொடங்க உள்ளது. சண்டைக் காட்சிகளை அனல் அரசுவும், சீனாவை சேர்ந்த பீட்டர் மிங்கும் இணைந்து அமைக்கிறார்கள். இந்த ரொமான்ட்டிக் த்ரில்லர் படத்தின் படத்தொகுப்புப் பணியை ஆண்டனி ஏற்றுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கபிலன் எழுதி விஜய்பிரகாஷ் பாடிய பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Director Shankars next film titled as I
ஷங்கரின் கைவண்ணம் இது வரை தோற்றது இல்லை boys உட்பட 
படம் வெற்றி அடைய வாழ்த்துவோம் 

டாஸ்மாக் "சரக்கு' விற்பனை: ஒரே மாதத்தில் ரூ.2,000 கோடிக்கு மேல் வசூல்

 
என்ன கொடுமை சார் 

தமிழகம் முழுவதும், கடந்த மாதத்தில் மட்டும் 48 லட்சம் பெட்டி மதுபானம் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம், முதல் முறையாக, ஒரு மாத மது விற்பனை 2,000 கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது.

தமிழகத்தில் தற்போது மொத்தம் 6,696 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. மதுக்கடைகளுடன் இணைந்த 4,730 மதுக்கூடங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில், ஐ.எம்.எப்.எல்., எனப்படும் உள்நாட்டுத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களும் (ஹாட்), பீர் மற்றும் ஒயின் வகைகளும் விற்பனைசெய்யப்படுகின்றன.

அதிகரிப்பு:கடந்த முறை அ.தி.மு.க., தமிழகத்தில் ஆட்சியை பிடித்த நிலையில், மதுபான விற்பனையானது தனியார் கையில் இருந்தது. இம்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, 2003ம் ஆண்டு மதுவிற்பனை அரசுடைமை ஆக்கப்பட்டது. இதன் மூலம், தனியார் செய்துவந்த தீர்வை செலுத்தப்படாத, மதுபான விற்பனை தடுக்கப்பட்டதுடன், அரசிற்கும் வருவாய் தொடர்ந்து அதிகளவில் கிடைத்து வருகிறது. தமிழக அரசின் நலத்திட்டங்களுக்கு, "டாஸ்மாக்' மூலம் பெறப்படும் நிதியும் பேருதவி புரிந்து வருகிறது. மது அருந்துவதன் தீமைகள், விழிப்புணர்வுமுகாம்கள், பேரணிகள் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி, மதுப்பழக்கத்தை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதே நேரத்தில் மறு புறம், கள்ளச்சாராயம், போலி மது மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் மதுபானங்களும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது, இதனால், ஆயத்தீர்வை செலுத்தப்படாத மதுவகை விற்பனை தடுக்கப்பட்டு வருகிறது. அரசுடைமையாக்கப்பட்ட 2003ம் ஆண்டில் மதுவிற்பனையால் அரசிற்கு கிடைத்த வருவாய் 3,639.93 கோடி ரூபாய். இது 2007-08ம் ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்து 7,473 கோடி ரூபாயை எட்டியது.

மைல்கல்:இவ்வாறாக ஆண்டு தோறும் சராசரியாக, 20 சதவீதம் அளவிற்கு அதிகரித்து வருகிறது. 2009-10ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மூலம், 12ஆயிரத்து 498 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. 2010-11ம் ஆண்டில் இந்த விற்பனை, 15 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது. 2011-12ம் ஆண்டு விற்பனை, 19 ஆயிரம் கோடியை எட்டியது.இதன் மூலம், ஆண்டுதோறும் சரக்கு விற்பனை, 4,000 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்து, புதிய எல்லைகளைத் தொட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மேமாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும், மதுபான விற்பனையானது ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. கடந்த மாதம் மட்டும், ஐ.எம்.எப்.எல்., மதுபானம் 48 லட்சத்து 300 பெட்டிகளும் (கேஸ்), பீர் வகைகள் 36 லட்சத்து 25 ஆயிரம் பெட்டிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இதன் மூலம், ஒரு மாத சரக்கு விற்பனை, முதல் முறையாக 2,025 கோடி ரூபாயை எட்டியுள்ளது.மேலும், இந்த மாதம் இதுவரை, ஐ.எம்.எப்.எல்., மதுபானம் 38 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள் 25 லட்சம் பெட்டிகளும் விற்பனையாகி, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் கிடைத்துள்ளது. சமீபத்தில், மதுபான வகைகளின் விலை கணிசமான அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, தற்போதைய கோடை வெப்பத்தின் விளைவாக பீர் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வரும் மாதங்களில் விற்பனையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

காரணம்:மதுபான விற்பனையின் அளவு உயர்வு குறித்து அதிகாரி, மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும் போது,"" மதுபான விற்பனையை அதிகரிக்க, தமிழக அரசு எந்த பிரசார திட்டத்தையும் மேற்கொள்வதில்லை. கள்ளச்சாராயம் எவ்வளவு வேகமாக அழிக்கப்படுகிறதோ, அவ்வளவு வேகமாக மது விற்பனை அதிகரிக்கிறது. தற்போது, தமிழகத்தில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த அளவுக்கு மது விற்பனை கூடியிருக்கிறது,'' என்றார்.

எங்கே செல்கிறது நாடு 
குடிக்கு அடிமையாய் 
குடிமக்கள் 

23 ஜூன், 2012

குப்பையில் சுக்குநூறாகக் கிடந்த ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள்! திருச்சி மக்கள் அதிர்ச்சி!










திருச்சி உறையூரில் இன்று (23.06.2012) காலை குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பையை எடுத்து அப்புறப் படுத்தச் சென்ற துப்புரவுப் பணியாளருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

வெறும் பிளாஸ்டிக், பேப்பர் குப்பைகளை அகற்றுவதற்காக வழக்கம் போல் எதிர்பார்த்துச் சென்றவர், அங்கே ரூபாய் நோட்டுகள் சுக்கல் சுக்கலாகக் கிழிக்கப்பட்டு பரவிக் கிடந்ததைப் பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அந்த நோட்டுகள் எதுவுமே எடுத்து ஒட்டி பயன்படுத்த இயலாத நிலையில் சிதைக்கப்பட்டிருந்தன.

பணியாளர் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தந்தார். அதற்குள் பொதுமக்களுக்கு இந்தத் தகவல் பரவியது. கூட்டம்கூட்டமாக குப்பைத் தொட்டியைப் பார்வையிட பொதுமக்கள் திரண்டனர். அதிகாரிகள் அதற்குள் அந்த இடத்துக்கு வந்து கிழிசல் நோட்டுகளைக் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் என்பது தெரியவந்தது. இவை எப்படி இங்கு வந்தன, இவற்றின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 5 கிராம், 500 ரூபாய் நோட்டுகள் 550 கிராம், 100 ரூபாய் நோட்டுகள் 569 கிராம், 50 ரூபாய் நோட்டு 20 கிராம் என மொத்தம் 1103 கிராம் உள்ளதாகவும், சுமார் 50 ஆயிரம் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடபாவிகளா 

சின்னச்சின்ன கவிதைகள் (எனது 800 வது பதிப்பு )



சேலை கட்டும் சோலைக்குள்
வாசம் கண்டு இன்றோ
நான் அவள் வசம்

சாய்ந்த நிலையில்
கொடி இடை
படர்ந்து ஈர்த்தது

முத்தமிட்ட நேரமெல்லாம்
உன் சிரிப்புதான்
முத்தத்தின் அர்த்தம் சொன்னது

மெல்லிய ரப்பராய்
மொழி பெயர்த்தது
உன் நடன அசைவு

ஆயுதமாய்
உன் இரு
விழிகள்...

மனதை மயக்கும்
மழலை மொழியில்
மங்கை

பூக்களும் சுடுகிறது
என் எண்ணத்தை
புரிந்து...

மலரும் நினைவுகள்
மனதில் வந்து போகும் போது
வாலிபம் திரும்புகிறது...

பூக்கள் தந்த
புதிய
பூவிது

இட கை வல கை இடமாற
இணைத்து நடந்தால்
மனசு தடுமாற...

22 ஜூன், 2012

அகிலேஷ் யாதவின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்: முலாயம்சிங்

லக்னோ,ஜூன்.22-அகிலேஷ் யாதவின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்: முலாயம்சிங் 
உத்தரபிரதேசத்தில் நடைபெறும் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்குவதாக அகிலேஷின் தந்தையும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான முலாயம்சிங் யாதவ் கூறியுள்ளார்.

இதுபற்றி பேசும்போது, ‘முந்தைய ஆட்சியைப் போல் ஊழல்கள் இல்லாமல், சமாஜ்வாடி ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகின்றன.

மேலும் சட்டம், ஒழுங்கும் கட்டுப்பாடில் உள்ளது. எனவே சமாஜ்வாடி கட்சியின் 100 நாள் ஆட்சிக்கு நான் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்குவேன்’ என முலாயம் கூறியுள்ளார்.

2014-ல் நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பது பற்றி பேசிய முலாயம், ‘மூன்றாவது அணி பற்றிய முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்படும்’ என்றார். மேலும் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு தங்கள் கட்சி ஆதரவளிப்பது உறுதி எனவும் முலாயம் கூறினார்.

அரசியலும் ,சினிமாவை போல் நாட்கள் பார்த்து தங்களது சாதனைகளை சொல்லிக்கொள்கிறார்கள்...

இந்த ஆட்சி நூறு நாட்களை கடந்து வெற்றிநடை போடுகிறது எனபது போல 

தமிழக முதல் அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்



தமிழக முதல் அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி ஏற்றார்
14 பேர் கொண்ட மந்திரிசபை தமிழக முதல் அமைச்சராக அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர். 1977 ஜுன் 30 ந்தேதி பதவி ஏற்றார். 1977 சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. அதைத்தொடர்ந்து, மந்திரிசபை அமைக்க எம்.ஜி.ஆருக்கு கவர்னர் பட்வாரி அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, கவர்னரை எம்.ஜி.ஆர். சந்தித்து, அமைச்சர்களின் பட்டியலை கொடுத்தார். அமைச்சர்களின் பெயர்களும், இலாகா விவரமும் வருமாறு:-

1. எம்.ஜி.ஆர் முதல் அமைச்சர்.
2. நாஞ்சில் மனோகரன் நிதி.
3. நாராயணசாமி முதலியார் சட்டம்.
4. எட்மண்ட் உணவு
5. பண்ருட்டி ராமச்சந்திரன் பொதுப்பணி.
6. ஆர்.எம்.வீரப்பன் செய்தி, பொதுமக்கள் தொடர்பு
7. அரங்கநாயகம் கல்வி.
8. பெ.சவுந்தரபாண்டியன் அரிஜன நலம்.
9. காளிமுத்து ஊராட்சி.
10. ராகவானந்தம் தொழிலாளர் நலம்.
11. பொன்னையன் போக்குவரத்து.
12. பி.டி.சரசுவதி சமூக நலம்.
13. ஜி.குழந்தைவேலு விவசாயம்.
14. கே.ராஜா முகமது கைத்தறி.

(எம்.ஜி.ஆரிடம், பொது நிர்வாகம், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ், மாவட்ட ரெவின்யூ அதிகாரிகள், உதவி கலெக்டர்கள், போலீஸ், தேர்தல், பாஸ்போர்ட், மதுவிலக்கு, சுகாதாரம், மருந்து, அறநிலையத்துறை, லஞ்ச ஒழிப்பு, தொழிற்சாலை ஆகிய இலாகாக்கள் இருந்தன.)

பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது. காலை 8.15 மணிக்கு எம்.ஜி.ஆரும், மற்ற அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்துக்கு வந்தார்கள். கூடியிருந்தவர்கள் "எம்.ஜி.ஆர். வாழ்க" என்று குரல் எழுப்பினர். 9.15 மணிக்கு கவர்னர் பட்வாரி வந்தார். அவரை தமிழக அரசு தலைமைச் செயலாளர் வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்றார்.

கவர்னர் வந்ததும், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்ற மந்திரிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். கவர்னர் பட்வாரி, எம்.ஜி.ஆருடன் கை குலுக்கினார். அதைத்தொடர்ந்து கவர்னருக்கு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தினார். அமைச்சர்களுடன் கவர்னர் கை குலுக்கினார். காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பு விழா தொடங்கியது.

கவர்னர் பட்வாரி, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார்.

அதன் பிறகு பதவி ஏற்பு உறுதி மொழி, ரகசிய காப்பு உறுதிமொழி பத்திரங்களில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போட்டார். பின்னர், அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்றனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும், கவர்னர் பட்வாரி அமைச்சர்களுடன் "போட்டோ" படம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு கவர்னர் புறப்பட்டுச் சென்றார்.

பதவி ஏற்பு விழாவுக்கு எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் வந்திருந்தார். மற்றும் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், கலை உலகத்தினரும் வந்திருந்தார்கள். ராஜாஜி மண்டபத்திலிருந்து திறந்த வேனில் அண்ணா சிலைக்கு எம்.ஜி.ஆர். சென்றார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

அங்கு பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மீது நின்று எம்.ஜி.ஆர். கைகூப்பி வணங்கினார். அப்போது, கூடியிருந்தவர்கள் "புரட்சித் தலைவர் வாழ்க" என்று குரல் எழுப்பினர். அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்ட மேடையில் இருந்து எம்.ஜி.ஆர். பேசினார். அவர் கூறியதாவது:-

அன்புக்குரிய தாய்மார்களே, மரியாதைக்குரிய பெரியவர்களே, ரத்தத்தின் ரத்தமான அன்புக்குரிய உடன் பிறப்புக்களே! நமது இதய தெய்வமான பேரறிஞர் அண்ணா மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். அங்கே நடந்தது அரசாங்க விழா. அது தவிர்க்க முடியாதது. இங்கு உங்களின் கட்டளையை எதிர்பார்த்து "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று அண்ணா சொன்னது போல் உங்கள் முன்பு நாங்கள் அமைச்சர் பொறுப்பினை ஏற்றிருக்கிறோம்.

அமைச்சர்கள் சார்பாகவும், அண்ணா தி.மு.க. சார்பாக வும் தமிழ் மக்களுக்கும் பல நாடுகளில் பல மாநிலங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும், நமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் நான் இங்கு ஒரு செய்தியை குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

மக்களின் எண்ணத்தையும், விருப்பத்தையும் சட்டமாக்கவும், தேவையை நிறைவேற்றவும்தான் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுத்து அனுப்பப்படுகிறார்கள் என்பதை பேரறிஞர் அண்ணா உணர்த்தி இருக்கிறார். ஆகவே, லஞ்சமற்ற, ஊழலற்ற, நிர்வாக தலையீடு இல்லாத, நீதிமன்றத்தில் குறுக்கீடு இல்லாத "உழைப்பவர்களே உயர்ந்தவர்கள்" என்ற லட்சியங்களில் உயிரை கொடுத்தாலும் , வசதியை இழந்தாகிலும், எதிர்ப்புகளை எதிர்த்து நின்று கடமைகளை நிறைவேற்றுவோம் என்பதை அண்ணா மீது ஆணையிட்டு கூறுகிறேன். எங்களது பணி தொடர உங்கள் நல்லாசியை வழங்குங்கள். அண்ணா வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ்நாடு வாழ்க!

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறினார்.

முதல் அமைச்சர் அறையில்... பின்னர், அரசு தலைமைச் செயலகம் உள்ள கோட்டைக்கு எம்.ஜி.ஆர். காரில் சென்றார். 11.15 மணிக்கு, முதல் அமைச்சருக்கான அறைக்குச் சென்றார். அங்கு தலைமைச் செயலாளர் கார்த்திகேயன் அவரை வரவேற்றார். அந்த அறையில் உள்ள காந்தி, அண்ணா படங்களை வணங்கிவிட்டு, தமது இருக்கையில் எம்.ஜி.ஆர். அமர்ந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவித்து வணக்கம் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அரசு உயர் அதிகாரிகள் எம்.ஜி.ஆருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பிறகு, மற்ற அமைச்சர்களை எம்.ஜி.ஆர். அவரவர் அறைக்கு அழைத்துச்சென்று உட்கார வைத்தார்.

எம்.ஜி.ஆர். தனது சிறப்பு பிரதிநிதியாக ஜேப்பியாரை நியமித்தார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, கட்சிப்பணிகளை கவனித்து, கட்சியை பலப்படுத்துவதற்கு அவ்வப்போது எம்.ஜி.ஆருக்கு ஆலோசனைகள் கூறுவது ஜேப்பியாரின் பணியாகும். ஜேப்பியார் "நெருக்கடி நிலை"யின்போது, அதாவது தி.மு.க. ஆட்சியின்போது "மிசா"வில் கைது செய்யப்பட்டார்.

மொத்தம் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது பல சித்திரவதைகளை அனுபவித்தார். சிறையில் இருந்து விடுதலையானபோது, அவரை எம்.ஜி.ஆர். வரவேற்றது குறிப்பிடத்தக்கது. 1977 தேர்தலின்போது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அ.தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஜேப்பியார் பெரும் பணி ஆற்றினார்.




அந்த நாள் திரைவுலகம் மறக்கமுடியாத நாள் 


நன்றி மாலை மலர் 

மருத்துவமனையில் விஜய் :தள்ளுமுள்ளு






மருத்துவமனையில் விஜய் :தள்ளுமுள்ளு -

நடிகர் விஜய் பிறந்த நாள் விழா இன்று ( 22.6.2012) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு விஜய் சென்றார். அங்கு இன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் அணிவித்தார்.

இதே ஆஸ்பத்திரியில்தான் விஜய் பிறந்தார் என்பதால் அவரே நேரில் வந்து மோதிரம் அணிவித்தார்.

காலை 10.30 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 11 மணிக்கு மேல்தான் விஜய் மருத்துவமனைக்கு வந்தார்.

அவரின் வருகைக்காக பொதுமக்களுடன் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் காத்தி ருந்தனர். மருத்துவர்களூம், மருத்துவமனை ஊழியர்களூம் வேலையை கவனிக்காமல் விஜய்யின் வருகைக்காக காத்திருந்ததால் சிகிச்சைக்காகவந்திருந்தவர்கள் அவதியுற்றனர்.

பிரசவம் ஆன தாய்மார்கள் வலியில் படுத்திருந்தார்கள். அவர்களை விஜய் வருகிறார் என்று கூறி படுக்க விடாமல் 1 மணி நேரமாக உட்காரவைத்திருந்தனர். பிரசவம் ஆகி ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த ஒரு பெண்ணை, விஜய் அங்கே வருகிறார் இங்கே வருகிறார் என்று ஸ்டெச்சரில் வைத்தே அங்கெ இங்கே நெடு நேரத்திற்கு அலையவிட்டனர்.

விஜய் வந்ததும் பொதுமக்களாலும், ஊழியர்களாலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மருத்துவமனை கண்ணாடிகள் உடைந்தன. இதனால் போலீசாருக்கு ரத்தக்காயங்கள் ஏற்பட்டன.

http://www.nakkheeran.in/Users/frmGalleryList.aspx?GV=1317&GSS=4

படங்கள் : ஸ்டாலின்

நன்றி நக்கீரன்

நடிகர் விஜய் பிறந்த நாள் விழா



 

நடிகர் விஜய் பிறந்தநாள்: ஏழைகளுக்கு
இலவச உணவு -குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

நடிகர் விஜய் பிறந்த நாள் விழா இன்று ( 22.6.2012) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று  காலை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு விஜய் செல்கிறார். அங்கு நாளை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் விஜய் தங்க மோதிரம் அணிவிக்கிறார்.

இதே ஆஸ்பத்திரியில்தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நீலாங்கரையில் இ.சி.ஆர். சரவணன் தலைமையில் ரசிகர்களின் ரத்தான முகாம் நடக்கிறது. இலவச மருத்துவ முகாமும் நடக்கிறது. எஸ்.ஏ. சந்திரசேகரன் தொடங்கி வைக்கிறார்.

வேளச்சேரி பகுதி விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தாமு தலைமையில் திருவான்மியூர் அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

சின்மயாநகர் குழந்தை ஏசு கோவிலில் பூக்கடை குமார் தலைமையில் முதியோருக்கு அன்னதானம், வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன.

சைதாப்பேட்டையில் கார்த்திக் தலைமையில் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் இலவச உணவு வழங்கப்படுகிறது. கொருக்குப் பேட்டையில் ரசிகர் மன்ற நிர்வாகி விஜய் தலைமையில் ஆஸ்பத் திரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

புரசைவாக்கம் பகுதியில் ஓட்டேரி நந்தா தலைமையிலும், கோடம்பாக்கத்தில் அப்புனு தலைமையிலும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

திருவேற்காட்டில் 1500 பேருக்கு மேற்கு சென்னை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவர் கருவாயன் தலைமையில் உணவு மற்றும் மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிகழ்ச்சிகளில் எஸ்.ஏ. சந்திரசேகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் ஆனந்த், செயலாளர் ரவிராஜா, துணை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் எல்.குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

விஜய் பிறந்தநாளையொட்டி திருவள்ளூரில் கடம்பத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜயகுமார், கடம்பத்தூர் மணி ஆகியோர் 5 ஜோடிகளுக்கு 38 வகை சீர் வரிசை வழங்கி இலவச திருமணத்தை நடத்தி வைத்தனர்.


நமது சார்பாக விஜய் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

அ.தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Photo Gallery
ஓய்வு  எடுக்க வந்த கோத்தகிரி, கொடநாடு பங்களாவுக்கு 
நேற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 
அ.தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Photo Gallery
கோல்கட்டாவில் இஸ்கான் கோவில் சார்பில் 
நடைபெற்ற ஜெகன்நாதர் யாத்ரையில் கலந்து 
கொண்டு வடம்பிடித்து தேர் இழுத்த மேற்கு வங்க 
மாநில முதல்வர் மமதா பானர்ஜி.
Photo Gallery
குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க தமக்கு ஆதரவு 
அளிப்பதாக தெரிவித்த மகிழ்ச்சியை பத்திரிகையாளர்களுடன் ப
கிர்ந்து கொண்ட பி.ஏ.சங்மா.

தி.மு.க.,வினர் மீது வழக்கு போடுவது அ.தி.மு.க.,வின் சாதனை: கனிமொழி

 

வேலூர்: ""தி.மு.க., தலைவர்கள் மீது வழக்கு போடுவது குறித்து ஆராய்ச்சி செய்து வருவது தான், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனையாக உள்ளது,'' என, வேலூர் சிறை வாசலில் எம்.பி., கனிமொழி கூறினார்.

சேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகத்தை, எம்.பி., கனிமொழி, அவரது தாய் ராசாத்தி ஆகியோர் நேற்று பகல் 12.10 மணிக்கு சந்தித்து பேசினர். 12. 50க்கு சிறையில் இருந்து இருவரும் வெளியே வந்தனர்.

சிறை வாசலில் கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., தலைவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்வது தொடர்கிறது. மூன்றாவது முறையாக வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட உடன், கருணாநிதி பெரிதும் கவலைப்பட்டார். அவரது உடல் நிலை மோசம் என்று தெரிந்தும் கவலைப்படாமல் மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்து, சேலம், சென்னை என ஒவ்வொரு சிறையாக மாற்றி அலைகழித்து கடைசியில் வேலூர் சிறையில் அடைத்துள்ளனர். அவருடைய உடல் நிலையை பற்றி கவலைப்படாமல் மிக மோசமாக நடத்துகின்றனர். இது பற்றி வீரபாண்டி ஆறுமுகம் கவலைப்படவில்லை. அவர் எதற்கும் அஞ்சாதவர். அஞ்சா நெஞ்சத்துடன் தைரியமாக, வீராதி, வீரனாக இருக்கிறார்.

வீரபாண்டி ஆறுமுகம் பதவியில் இருந்த போதும் தற்போது, சிறையில் இருக்கும் போதும் ஒரே மன நிலையில் தான் உள்ளார். வீரபாண்டி ஆறுமுகத்தை தைரியமாக இருக்கும்படி கருணாநிதி கூறினார். தி.மு.க., தலைவர்கள் மீது வழக்கு போடுவது குறித்து, ஆராய்ச்சி செய்து வருவது தான், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனையாக உள்ளது. மக்களை பற்றி சிந்திக்காமல் ஓய்வெடுக்க முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடநாடு செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி: நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம் நடக்கிறது. இது குறித்து சிறையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்திடம் ஆலோசனை நடத்தினீர்களா?

பதில்: செயற் குழு கூட்டம் குறித்து பேசவில்லை. அது குறித்து கருணாநிதி தான் முடிவு செய்வார்.

கேள்வி: வீரபாண்டி ஆறுமுகத்தை கருணாநிதி வந்து பார்ப்பாரா?

பதில்: கருணாநிதி வந்து பார்க்க கூடாது என்பதற்காக தானே அவரை வேலூர் சிறைக்கு மாற்றினர்.

கேள்வி: அ.தி.மு.க., அரசின் ஓராண்டு சாதனை பற்றி?

பதில்: தி.மு.க., வினரை தொடர்ந்து கைது செய்வது தான் இந்த அரசின் ஓராண்டு சாதனை. இவ்வாறு அவர் கூறினார்.

21 ஜூன், 2012

இன்னும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்



குடிபோதையில் வாடகை தரமறுத்தும் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த டிரைவர்


குடிபோதையில் வாடகை தரமறுத்தும் ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.95 ஆயிரத்தை ஒப்படைத்த டிரைவர்

தனக்கு ஒரு ரூபாய் இழப்பை ஏற்படுத்தியவனுக்கு 10 ரூபாய் இழப்பை ஏற்படுத்த துடிக்கும் இந்த காலக்கட்டத்தில் வாடகை தரமறுத்த பயணி தவறவிட்ட பணத்தை ஒப்படைத்து போலீசாரையே மெய்சிலிர்க்க வைத்துள்ளார் ஒரு ஆட்டோ டிரைவர்.


ஆட்டோ டிரைவர் என்றாலே சண்டைகார்கள் என்றும் தவறனா நபர்கள் என்றும் சிலரை வைத்து எடைப்போடும் நமக்கு,இது போன்ற மனிதர்களும் ஆட்டோ டிரைவர் போர்வையில் இருக்கிறார்கள் என்பதை நமக்கு அடையாளம் காட்டிய .சென்னை போரூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலாஜி தோழருக்கு ஒரு வாழ்த்து சொல்லுவோம்..

சென்னை போரூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலாஜி (54). நேற்று இரவு ராயப்பேட்டையில் சவாரிக்காக காத்திருந்தார். நள்ளிரவில் 50 வயதை கடந்த ஒரு பயணி யானைக்கவுனிக்கு செல்ல ஆட்டோவை வாடகை பேசினார். ரூ.80 கட்டணம் பேசி பாலாஜி அவரை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். ஆட்டோ யானைக்கவுனியை சென்றடைந்ததும் நன்றாக போதையில் இருந்த அந்த நபர் வாடகை தரமறுத்து தகராறு செய்தார்.

சில நிமிடங்கள் வாக்குவாதம் செய்தும் அந்த நபர் பணம் தருவதாக இல்லை. வயோதிகராக இருந்ததால் வேறு வழியின்றி கட்டணம் வாங்காமலேயே பாலாஜி திரும்பி சென்றார்.

ஸ்டாண்டுக்கு சென்றபிறகு ஆட்டோவில் ஒரு மஞ்சள் பையை பார்த்தார். அந்த பையில் ரூ.95 ஆயிரம் பணம் இருந்தது. பணத்தை குடிகார பயணி தவறவிட்டு சென்றதை யூகித்து கொண்ட பாலாஜி வாடகை தரமறுத்ததால் பணத்தை அமுக்க முயலவில்லை.

இன்று காலையில் பணத்தை யானைக்கவுனி போலீசில் ஒப்படைத்து நடந்த விவரங்களை கூறினார். ஆட்டோ டிரைவரின் நேர்மையை நினைத்து மெய்சிலிர்த்த போலீசார் அந்த பயணியை அவர் இறக்கி விட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தேடி கண்டுபிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தான் போதையில் நடந்து கொண்ட விதத்துக்கு மன்னிப்பு கோரிய அந்த நபர் ஆட்டோ டிரைவருக்கு சன்மானம் தரவும் முன்வந்தார். ஆனால் டிரைவர் பாலாஜி தனக்கு வாடகை பணம் ரூ.80 மட்டும் போதும் என்று வாங்கி சென்றார்.