30 ஜூன், 2012

மு.க.அழகிரி பத்திரிகை ஆசிரியருக்கு அதிமுக அமைச்சர், எம்எல்ஏக்கள் விருது வழங்கி பாராட்டு!


திருச்சியில் தமிழ் அறிஞர்களுக்கு 2011க்கான விருது வழங்கும் விழா மற்றும் சித்திரை கலை விழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி 2012 அன்று திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், கலைஞரின் மு.க.அழகிரி என்ற பெயரில் மாத இதழ் நடத்தி வரும் அதன் ஆசிரியர் 'மானோஸ் எழுதிய ஜெருசலேம் என்ற நூல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி விருதை வழங்கினார். அப்போது அதிமுக திருச்சி எம்பி குமார், அதிமுக எம்எல்ஏக்கள் மனோகரன், பரஞ்சோதி, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் ஆசிரியர் மானோஸ்க்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்த விழா நடந்தபோதே ஆச்சரியமான விஷயம் இதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று திருச்சி திமுகவினர் தெரிவித்தனர். ஆனால் இந்த விழா நடந்து இரு மாதங்களுக்குப் பிறகு, கலைஞரின் மு.க.அழகிரி மாத இதழின் ஆசிரியர் குழுவினர், விருது வழங்கியதற்கு நன்றி தெரிவித்து திருச்சி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுக்கு அவரை (மானோஸ்) எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்றும், விழா ஏற்பாட்டு செய்யும்போது கூட கவனிக்கவில்லையா என்றும் அதிமுக மந்திரியும், எம்எல்ஏக்களும் விழா ஏற்பாடு செய்தவர்களிடம் தங்களின் கோபத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

விழா ஏற்பாடு செய்தவர்களை விடுங்க, விருது கொடுக்கும்போது போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கு முன்னாடி நீங்க யோசிச்சீங்களா என்று மேலிடத்தில் கேட்பாங்களே அதற்கு என்ன பதில் சொல்லப்போறீங்க என்று மந்திரியிடமும், எம்எல்ஏக்களிடமும் சொல்லி திருச்சி அதிமுகவினரே கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நன்றி நக்கீரன்

விருது கொடுத்தது ஒரு குற்றமா ?என்ன ஒரு கொடுமை சார் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக